முரளி ஆடியோ (MP3)
· Madhuban
ஓம் சாந்தி. இது பக்தி மார்க்கத்தின் பாட்டு பாடப்பட்டிருக்கிறது. கடைசியில் இது அனைத்தும் நின்று விடும். இதற்கு அவசியம் ஏற்படாது. ஒரு நொடியில் தந்தையிடமிருந்து ஆஸ்தி கிடைக் கிறது என பாடப்பட்டிருக்கிறது. எல்லையற்ற தந்தையிடமிருந்து ஜீவன் முக்தியின் ஆஸ்தி கிடைக்கிறது என நீங்கள் அறிகிறீர்கள். ஜீவன் முக்தி என்றால் இந்த துக்க உலகத்திலிருந்து விடுபட்டு கீழான நிலையிலிருந்து விடுபடுதல் ஆகும். பிறகு எப்படி மாறுவீர்கள்? அதற்காக குறிக்கோளை மிகவும் நன்றாகப் புரிய வைக்க வேண்டும். பாபா இரவில் கூட யார் வந்தாலும் முதலில் உயர்ந்ததிலும் உயர்ந்த பகவானின் அறிமுகத்தைக் கொடுங்கள் என புரிய வைத்தார். இவ்விடத்தின் குறிக்கோள் என்ன என கேட்கிறார்கள். எனவே முதன் முதலில் எல்லையற்ற தந்தையின் அறிமுகத்தை அளிக்க வேண்டும். என்னை நினைவு செய்தால் நீங்கள் தூய்மை யாகி விடுவீர்கள் என இப்போது பாபா கூறுகின்றார். பதீத பாவனா வாருங்கள் என பாடுகிறார் கள். எனவே பாபாவிற்கு நிச்சயம் அத்தாரிட்டி இருக்கும் அல்லவா? ஏதாவது பாகம் கிடைத் திருக்கும் அல்லவா? உயர்ந்ததிலும் உயர்ந்த தந்தை என அவரைக் கூறுகிறார்கள். அவர் பாரதத்தில் தான் வருகிறார். பாரதத்தில் தான் வந்து உயர்ந்ததிலும் உயர்ந்ததாக மாற்றுகிறார். வைகுண்டத்தின் பரிசை எடுத்து வருகிறார். மனித சிருஷ்டியில் உயர்ந்ததிலும் உயர்ந்த தேவி தேவதைகள், சூரிய வம்ச குலத்தினரே சத்யுத்தில் ராஜ்ஜியம் செய்தனர். சத்யுகத்தினை ஸ்தாபனை செய்யக் கூடியவர் பகவான் ஆவார். அவரைத் தான் சொர்க்கத்தை ஸ்தாபனை செய்யக் கூடியவர், சொர்க்கத்தின் இறை தந்தை என கூறுகிறார்கள். அவர் தந்தையாக இருக் கிறார். தந்தை சர்வ வியாபி என்று ஒரு போதும் கூற முடியாது. சர்வ வியாபி என்று கூறுவ தால் பாபாவின் சொத்து கிடைக்காது போய் விடுகிறது. அப்பா என்றாலே ஆஸ்தி ! எவ்வளவு இனிமையான விஷயமிது ! நிச்சயமாக தன்னுடைய குழந்தைகளுக்குத் தான் ஆஸ்தியை அளிப்பார். அனைத்து குழந்தைகளுக்கும் தந்தை ஒருவரே ஆவார். அவர் வந்து சுகம் சாந்தியின் ஆஸ்தியினை அளிக்கிறார். இராஜயோகத்தைக் கற்பிக்கிறார். மற்ற ஆத்மாக்கள் அனைவரும் கணக்கு வழக்கை முடித்து விட்டு திரும்பிப் போய் விடுவார்கள். இப்போது பழைய உலகம் முடியப்போகிறது. அதற்காகத் தான் இந்த மகாபாரத போர் ! பல தர்மங்களின் அழிவு, ஒரு தர்மத்தின் ஸ்தாபனை நடக்க வேண்டும். நிச்சயமாக கலியுகத்திற்குப் பிறகு சத்யுகம் வர வேண்டும் என புத்தி கூறுகிறது. தேவி தேவதைகளின் வரலாறு மீண்டும் நடக்கும். பிரம்மா மூலமாக ஸ்தாபனை செய்கிறார் என பாடப்பட்டிருக்கிறது உயர்ந்ததிலும் உயர்ந்த பதவியை அடைய வைக்கின்றார்.
முரளி என்றால் என்ன?
முரளி என்பது பிரம்மா குமாரிகளின் தினசரி ஆன்மீக போதனை; இது ஒவ்வொரு காலையும் மதுபனில் இருந்து வெளியிடப்படுகிறது. இங்கே நீங்கள் இன்றைய முரளியைத் தமிழில் படிக்கலாம், ஆடியோ கேட்கலாம், PDF பதிவிறக்கலாம். படிப்புக்கு உதவியாக உரையை ஹைலைட் செய்யலாம் — உங்கள் குறிகள் இந்த உலாவியிலேயே பாதுகாப்பாக இருக்கும்.
28 மொழிகளில் முரளி
28 மொழி- অসমীয়া Assamese
- বাংলা Bengali
- Deutsch German
- Ελληνικά Greek
- English English
- Español Spanish
- Français French
- ગુજરાતી Gujarati
- हिंदी Hindi
- Magyar Hungarian
- Indonesia Indonesian
- Italiano Italian
- ಕನ್ನಡ Kannada
- 한국어 Korean
- മലയാളം Malayalam
- मराठी Marathi
- नेपाली Nepali
- Nederlands Dutch
- ଓଡ଼ିଆ Odia
- Polskie Polish
- Português Portuguese
- ਪੰਜਾਬੀ Punjabi
- Română Romanian
- සිංහල Sinhala
- தமிழ் (சென்னை) Tamil (Chennai)
- தமிழ் (இலங்கை) Tamil (Sri Lanka)
- తెలుగు Telugu
- ภาษาไทย Thai