தமிழ் முரளி · Brahma Kumaris

தமிழ் முரளி · 27 நவம்பர், 2024

ஓம் சாந்தி · BapDada ·

இன்றைய முரளி — today Tamil murli, daily murli in Tamil.

18
முரளி27 நவம்பர், 2024 · தமிழ் (இலங்கை)
0:00--:--

உரையைத் தேர்ந்தெடுக்கவும் → ஹைலைட் / பெட்டி / அடிக்கோடு

27-11-2024
காலைமுரளி
ஓம்சாந்தி
பாப்தாதா
மதுபன்

சாராம்சம்: இனிய குழந்தைகளே, இந்த எல்லைக்குட்பட்ட உலகில் பயனற்ற விடயங்களில் உங்களின் நேரத்தை வீணாக்காதீர்கள். உங்களின் புத்திகளில் சதா இராஜரீகமான எண்ணங்களே இருக்க வேண்டும்.
கேள்வி: தந்தை வழங்கும் ஒவ்வொரு வழிகாட்டலையும் பயிற்சியில் போடக்கூடிய குழந்தைகள் யார்?
பதில்: அகநோக்கில் இருப்பதுடன், எந்தவிதமான புறப் பகட்டும் இல்லாதவர்கள், ஆனால் ஆன்மீக போதையில் இருப்பவர்களால் தந்தையின் ஒவ்வொரு வழிகாட்டலையும் நடைமுறையில் போட முடியும். குழந்தைகளான உங்களுக்குள் எந்தவிதமான போலிப் பெருமையும் இருக்கக்கூடாது. உங்களுக்குள் முழுமையான சுத்தம் இருக்க வேண்டும். ஆத்மாக்களான நீங்கள் மிகவும் நல்லவர்களாக இருப்பதுடன், ஒரேயொரு தந்தையின் மீது உண்மையான அன்பைக் கொண்டிருக்க வேண்டும். உப்புநீர் போன்ற எந்தவிதமான சம்ஸ்காரங்களும் இருக்க அனுமதிக்காதீர்கள். அப்போது மட்டுமே உங்களால் தந்தையின் ஒவ்வொரு வழிகாட்டலையும் நடைமுறையில் போட முடியும்.

ஓம் சாந்தி. குழந்தைகளான நீங்கள் அமர்ந்திருந்து நினைவு யாத்திரையில் இருப்பது மட்டுமன்றி, ஸ்ரீமத்தைப் பின்பற்றுவதன் மூலம் உங்களின் தேவதைகளின் உலகை (பரிஸ்தான்) ஸ்தாபிக்கிறீர்கள் என்ற ஆன்மீக போதையும் உங்களுக்கு உள்ளது. உங்களுக்குள் அதிகளவு சந்தோஷமும் உற்சாகமும் இருக்க வேண்டும். இப்போது சகல பயனற்ற விடயங்களும் குப்பைகளும் நீக்கப்பட்டிருக்க வேண்டும். எல்லையற்ற தந்தையைப் பார்க்கும்போது, உங்களிடம் மகத்தான உற்சாகம் ஏற்பட வேண்டும். எவ்வளவு அதிகமாக நீங்கள் நினைவு யாத்திரையில் இருக்கிறீர்களோ, அந்தளவு அதிகமாக முன்னேற்றம் ஏற்படும். குழந்தைகளான உங்களுக்காக ஓர் ஆன்மீகப் பல்கலைக்கழகம் இருக்க வேண்டும் எனத் தந்தை கூறுகிறார். உங்களுடையது, உலக ஆன்மீகப் பல்கலைக்கழகம். எனவே, இந்தப் பல்கலைக்கழகம் எங்கே உள்ளது? ஒரு பல்கலைக்கழகம் விசேடமாக உங்களுக்காக உருவாக்கப்பட்டுள்ளது. அத்துடன்கூடவே, மிக இராஜரீகமான விடுதியும் இருக்க வேண்டும். உங்களின் எண்ணங்கள் இராஜரீகமானதாக இருக்க வேண்டும். உங்களை அதியுயர் பரீட்சைகளில் சித்தி அடையச் செய்து, அதனூடாக உங்களை உலக அதிபதிகள் ஆக்குவதற்காக எப்படிக் குழந்தைகளான உங்களுக்குக் கற்பிக்கலாம் எனத் தந்தை இரவு பகலாகச் சிந்திக்கிறார். ஆதியில் ஆத்மாக்களாகிய நீங்கள் முற்றிலும் தூய்மையாக இருந்தீர்கள். எனவே, உங்கள் சரீரங்களும் முற்றிலும் தூய்மையாகவும் அழகாகவும் இருந்தன. உங்களிடம் மிகவும் மேன்மையான இராச்சியம் இருந்தது! இந்த எல்லைக்குட்பட்ட உலகின் பயனற்ற விடயங்களில் உங்கள் நேரம் அதிகளவு வீணாக்கப்படுகிறது. மாணவர்களாகிய உங்களிடம் எந்த அழுக்கான எண்ணங்களும் இருக்கக்கூடாது. நீங்கள் பல நல்ல நிர்வாகக் குழுக்களை நியமிக்கின்றீர்கள். ஆனால், அங்கு யோக சக்தி இருப்பதில்லை. இதைச் செய்வேன், அதைச் செய்வேன் என நீங்கள் ஒருவருக்கொருவர் பொய்க் கதைகளைக் கூறிக் கொண்டிருக்கிறீர்கள். மாயையும் கூறுகின்றாள்: நான் அவர்களை அவர்களின் மூக்கிலும் காதிலும் பிடிப்பேன். அவர்களுக்குத் தந்தையின் மீது அன்பில்லை. ‘மனிதன் ஒன்றை நினைக்க, வேறொன்று நடக்கிறது’ என்றொரு கூற்று உள்ளது. எனவே, மாயை உங்களை எதுவும் செய்ய அனுமதிப்பதில்லை. மாயை உங்களை அதிகளவு ஏமாற்றி விடுகின்றாள். அவள் உங்கள் காதுகளையும் அறுத்து விடுகின்றாள். குழந்தைகளாகிய உங்களைத் தந்தை மிகவும் மேன்மையானவர்கள் ஆக்குகிறார். இதைச் செய்யுங்கள், அதைச் செய்யுங்கள், வேறொன்றைச் செய்யங்கள் என அவர் உங்களுக்கு வழிகாட்டல்கள் கொடுக்கின்றார். இராஜரீகமான புத்திரிகளைச் சேவை செய்வதற்காக பாபா வெளியில் அனுப்புகிறார். சில குழந்தைகள் பாபாவிடம் கேட்கிறார்கள்: பாபா, நாங்கள் பயிற்சிக்காகச் செல்லலாமா? பாபா கூறுகின்றார்: குழந்தைகளே, முதலில் உங்களின் சொந்தப் பலவீனங்களை அகற்றுங்கள். உங்களையே சோதித்துப் பாருங்கள்: என்னிடம் எத்தனை குறைபாடுகள் உள்ளன? பெரிய மகாராத்திகளைக் கூட மாயை உவர்நீர் போல் ஆக்கி விடுகின்றாள். என்றுமே தந்தையை நினைவு செய்யாத, அத்தகைய உவர்ப்பான குழந்தைகளும் உள்ளனர். அவர்களுக்கு இன்னமும் இந்த ஞானத்தில் அ, ஆ, இ கூடத் தெரியாதுள்ளது. அவர்கள் அதிகளவு வெளிப்பகட்டைக் காட்டுகிறார்கள். இங்கு நீங்கள் மிகவும் அகநோக்குடையவர்களாக இருக்க வேண்டும். கல்வி அறிவற்றவர்களைப் போன்று, குழந்தைகளாகிய உங்களில் சிலர் நடந்து கொள்கிறீர்கள். சிறிதளவு பணம் இருந்து விட்டாலே மக்கள் மிகவும் போதையுடையவர்களாக இருக்கிறார்கள். தாங்கள் முற்றாகக் கடனாளிகளாக உள்ளோம் என்பதை அவர்கள் புரிந்து கொள்ளாதிருக்கிறார்கள். அவர்கள் இதனைப் புரிந்து கொள்ள மாயை அனுமதிப்பதில்லை. மாயை மிகவும் சக்திவாய்ந்தவள். பாபா அவர்களைச் சிறிதளவு புகழ்ந்து விட்டாலும் அதனையிட்டு அவர்கள் அதிகளவு சந்தோஷம் அடைகிறார்கள். குழந்தைகளாகிய நீங்கள் மிகவும் நன்றாகக் கற்பதற்கு ஏற்றதொரு முதற்தரமான பல்கலைக்கழகம் இருக்க வேண்டும் என பாபா இரவு பகலாகச் சிந்திக்கின்றார். நீங்கள் சுவர்க்கத்திற்குச் செல்கிறீர்கள் என்பதை நீங்கள் அறிவதால், உங்களுக்குள் சந்தோஷத்தின் அளவு உயர்வாக இருக்க வேண்டும். நீங்கள் தொடர்ந்தும் போதையுடையவர்களாக இருக்க வேண்டும் என்பதற்காக பாபா வெவ்வேறு வகையான மருந்துகளைக் கொடுக்கின்றார். கடனாளி ஒருவர் மதுபானம் அருந்தும்போது, தான் ஓர் அரசன் என எண்ணுகின்றான். ஆனால் மதுபானத்தின் தாக்கம் குறைவடையும்போது, தனது முன்னைய நிலையை அவன் அடைகிறான். எவ்வாறாயினும், இங்கு நீங்கள் ஆன்மீகப் போதையில் இருக்கின்றீர்கள். எல்லையற்ற தந்தையே உங்களின் ஆசிரியராகி உங்களுக்குக் கற்பித்து, இதைச் செய்யுங்கள், அதைச் செய்யுங்கள் என உங்களுக்கு வழிகாட்டல்களைக் கொடுக்கின்றார். உங்களில் சிலர் சிலநேரங்களில் போலியான பெருமையைக் கொண்டிருக்கின்றீர்கள். மாயை இருக்கின்றாள், அல்லவா! நீங்கள் அத்தகைய கற்பனைக் கதைகளைக் கூறுகின்றீர்கள். கேட்கவும் வேண்டாம்! அத்தகைய குழந்தைகளால் இங்கு தொடர்ந்து இருக்க முடியாது என்பதைத் தந்தை புரிந்து கொள்கின்றார். உங்களுக்குள் நீங்கள் முற்றாகச் சுத்தத்தைப் பேண வேண்டும். ஆத்மாக்களாகிய நீங்கள் மிகவும் நல்லவர்களாக இருக்க வேண்டும். நீங்கள் காதல் திருமணம் செய்துள்ளீர்கள். காதல் திருமணத்தில் அதிகளவு அன்புள்ளது. அந்த ஒருவரே கணவருக்கெல்லாம் கணவர் ஆவார். எனவே, ஒருவர் மாத்திரமல்ல, உங்களில் பலரும் காதல் திருமணம் செய்துள்ளீர்கள். நீங்கள் அனைவருமே சிவபாபாவுடன் உங்களுக்கு நிச்சயதார்த்தம் செய்யப்பட்டுள்ளது என்று கூறுகின்றீர்கள். நீங்கள் சுவர்க்கத்தில் இருக்கப் போகின்றீர்கள். இது மிகவும் சந்தோஷத்திற்குரிய விடயமாகும். பாபா உங்களை எவ்வளவு அலங்கரிக்கின்றார் என்பதைப் பற்றி நீங்கள் உள்ளார்த்தமாக சிந்திக்க வேண்டும். சிவபாபா இவர்(பிரம்மா) மூலமாக உங்களை அலங்கரிக்கின்றார். பாபாவை நினைவு செய்வதன் மூலம், நீங்கள் சதோபிரதான் ஆகுகின்றீர்கள் என்பதை உங்கள் புத்தி அறிந்துள்ளது. எவருக்குமே இந்த ஞானத்தைப் பற்றித் தெரியாது. இதனையிட்டுப் பெரும் போதை இருக்க வேண்டும். தற்பொழுது, இருக்க வேண்டிய அளவு போதை இல்லாதுள்ளது. ‘அதீந்திரிய சுகத்தைப் பற்றி அறிய வேண்டுமாயின், கோப, கோபிகைகளைக் கேளுங்கள்’ என்று கூறப்படுகிறது. ஆத்மாக்களாகிய உங்களில் சிலர் மிகவும் அழுக்காக இருக்கின்றீர்கள்! நீங்கள் குப்பை மேட்டில் இருப்பதைப் போன்றுள்ளது. தந்தை வந்து உங்களை மாற்றுகின்றார். அவர் உங்களைப் புதுப்பிக்கின்றார். மக்கள் தமது சுரப்பிகளை மாற்றும்போது, அவர்கள் அதனையிட்டு அதிகளவு சந்தோஷப்படுவதுண்டு. நீங்கள் இப்போது தந்தையை அறிந்துள்ளீர்கள். அது உங்கள் படகு கரையேறி விட்டதைப் போன்றதாகும். இப்பொழுது நீங்கள் எல்லையற்ற தந்தைக்குரியவர் ஆகிவிட்டதால், உங்களை நீங்கள் மிக விரைவில் சீர்திருத்திக் கொள்ள வேண்டும் என்பதை நீங்கள் புரிந்து கொள்கின்றீர்கள். நீங்கள் மிகவும் சந்தோஷமடைவதுடன், இரவுபகலாக இதையிட்டு அக்கறைப்படவும் வேண்டும். உங்கள் தளபதியாக நீங்கள் யாரை ஏற்றுக் கொண்டுள்ளீர்கள் என்று பாருங்கள்! இரவும் பகலும் நீங்கள் இந்த எண்ணங்களுடன் மும்முரமாக இருக்க வேண்டும். பாபாவை மிகவும் தெளிவாக இனங்கண்டு புரிந்து கொண்டிருப்பவர்கள், பறக்க ஆரம்பிப்பார்கள். குழந்தைகளாகிய நீங்கள், இப்பொழுது சங்கமயுகத்தில் இருக்கின்றீர்கள். ஆனால் ஏனைய அனைவரும் அழுக்கின் மீதே உள்ளனர். அவர்கள் குப்பை மேட்டிற்கு அருகே குடிசையில் வாழ்வதைப் போன்றே உள்ளனர். அவ்வாறான பல சிறு குடிசைகள் உள்ளன. இது ஓர் எல்லையற்ற விடயமாகும். அதிலிருந்து உங்களை அகற்றிக் கொள்வதற்கு, சிவபாபா மிகவும் இலகுவான வழியொன்றைக் காட்டுகின்றார்: இனிமையிலும் இனிமையான குழந்தைகளே, இந்த நேரத்தில், ஆத்மாக்களாகிய நீங்களும் உங்கள் சரீரங்களுமாகிய இரண்டுமே தூய்மை அற்றுள்ளன. நீங்கள் இப்பொழுது அந்த உலகில் இருந்து விலகி வந்துள்ளீர்கள். அந்த உலகில் இருந்து விலகி வந்தவர்கள், இப்பொழுது ஞானோதயம் பெற்றுள்ளார்கள். நீங்கள் தந்தையை இனங்கண்டுள்ளீர்கள். எனவே, இன்னும் என்ன வேண்டும்? உங்களுக்கு இந்தப் போதை இருக்கும்போது மாத்திரமே, நீங்கள் பிறருக்கு விளங்கப்படுத்துவீர்கள். தந்தை வந்துவிட்டார். அவர் ஆத்மாக்களாகிய எங்களைத் தூய்மை ஆக்குகின்றார். ஆத்மா தூய்மையாகும்போது, அவர் முதல்தரமான சரீரத்தைப் பெறுகின்றார். ஆத்மாக்களாகிய நீங்கள் இப்பொழுது எங்கு அமர்ந்திருக்கிறீர்கள் எனப் பாருங்கள். நீங்கள் உங்களின் சரீரங்கள் என்ற குடிசைகளில் அமர்ந்திருக்கின்றீர்கள். இந்த உலகம் தமோபிரதானாக (முற்றிலும் தூய்மையற்றது) உள்ளது. நீங்கள் குப்பை மேட்டிற்கு அருகில் அமர்ந்திருக்கிறீர்கள். நீங்கள் எங்கிருந்து வந்திருக்கின்றீர்கள் எனப் பாருங்கள்! தந்தை உங்களைச் சாக்கடையில் இருந்து அகற்றி உள்ளார். எனவே, இனிமேல் ஆத்மாக்களாகிய நீங்கள் சுத்தமாகிவிடுவீர்கள். அதன்பின்னர் நீங்கள் வாழ்வதற்கு முதல் தரமான மாளிகைகள் கட்டப்படும். தந்தை ஆத்மாக்களாகிய உங்களை அதிகளவு அலங்கரித்து, உங்களைச் சுவர்க்கத்திற்கு அழைத்துச் செல்கின்றார். குழந்தைகளாகிய நீங்கள் இத்தகைய எண்ணங்களை உங்களுக்குள் கொண்டிருக்க வேண்டும். தந்தை உங்களை அதிகளவு போதையுடையவர்கள் ஆக்குகின்றார். முன்னொரு காலத்தில் நீங்கள் மிகவும் மேன்மையானவர்களாக இருந்தீர்கள். பின்னர் இன்றுவரை, நீங்கள் படிப்படியாக அடித்தளம்வரை விழ ஆரம்பித்தீர்கள். ஆத்மாக்களாகிய நீங்கள் சிவாலயத்தின் இருக்கும்போது, மிகவும் தூய்மையாக இருந்தீர்கள். ஆகையால், நீங்கள் இப்பொழுது ஒன்றாக இணைந்து, சிவாலயத்திற்குத் திரும்பிச் செல்வதற்கு விரைந்து முயற்சி செய்ய வேண்டும். அதனைச் செய்வதற்கு குழந்தைகளாகிய உங்களுக்குப் போதியளவு மூளை இல்லாதுள்ளதை இட்டு பாபா மிகவும் வியப்படைகின்றார். எங்கிருந்து பாபா உங்களை அகற்றியுள்ளார்? தந்தையே இந்தப் பாண்டவ அரசாங்கத்தை ஸ்தாபித்துள்ளார். ஒரு காலத்தில் சுவர்க்கமாக இருந்த பாரதம், இப்பொழுது நரகம் ஆகிவிட்டது. இவை அனைத்தும் ஆத்மாக்களையே குறிக்கின்றன. பாபாவிற்கு ஆத்மாக்களின் மீது அதிகளவு கருணை உள்ளது. இப்பொழுது நீங்கள் வாழுகின்ற உலகம் முற்றிலும் தமோபிரதானாக உள்ளது. இதனாலேயே, நீங்கள் தந்தையை நினைவு செய்து, ‘பாபா, வந்து எங்களை மீண்டும் வீட்டிற்கு அழைத்துச் செல்லுங்கள்!’ என்று கூறுகின்றீர்கள். இங்கு அமர்ந்திருக்கும்போதும் இவ்வாறான எண்ணங்களே உங்களுக்குள் இருக்க வேண்டும். ஆகையினாலேயே பாபா கூறுகின்றார்: குழந்தைகளாகிய உங்களுக்காக முதல் தரமான பல்கலைக்கழகம் கட்டப்பட வேண்டும். அது ஒவ்வொரு கல்பத்திலும் கட்டப்படுகின்றது. உங்கள் எண்ணங்கள் மிகவும் இராஜரீகமாக இருக்க வேண்டும். தற்பொழுது, உங்களிடம் அந்தளவிற்குப் போதை இல்லை. உங்களுக்கு அந்தளவிற்குப் போதை இருக்குமாயின், நீங்கள் அதிகளவு அற்புதங்களை நிகழ்த்திக் காட்டுவீர்கள். குழந்தைகளாகிய நீங்கள் ‘பல்கலைக்கழகம்’ என்பதன் அர்த்தத்தைப் புரிந்து கொள்வதில்லை. அந்த இராஜரீகமான போதையை நீங்கள் பேணுவதில்லை. மாயை உங்களை அடக்குகின்றாள். பாபா விளங்கப்படுத்துகின்றார்: குழந்தைகளே, உங்களுக்குள் எந்தவிதமான பிழையான போதையும் இருக்கக்கூடாது. நீங்கள் எவ்வளவு தகைமை பெற்றிருக்கின்றீர்கள் என்பதையும் நீங்கள் எவ்வளவு கற்கின்றீர்கள் என்பதையும் எவ்வளவு உதவி செய்கின்றீர்கள் என்பதையும் நீங்கள் சோதித்துப் பார்க்க வேண்டும். நீங்கள் வெறுமனே கட்டுக் கதைகளைக் கூறக்கூடாது: நீங்கள் கூறுவதைப் பயிற்சியில் இடவேண்டும். நீங்கள் வெறுமனே கட்டுக்கதைகளைக் கூறக்கூடாது. இன்று நீங்கள், இதைச் செய்யப் போகின்றேன் என்று கூறுகின்றீர்கள். நாளையே மரணம் ஏற்பட்டால் உங்களுக்கான அனைத்தும் முடிவடைந்துவிடும். இவ்வாறாக நீங்கள் சுவர்க்கத்தில் கூற மாட்டீர்கள். சுவர்க்கத்தில் அகால மரணம் ஏற்படுவதில்லை. அங்கு மரணம் வர முடியாது. அது சந்தோஷ உலகமாகும். சந்தோஷ உலகிற்குள் பிரவேசிக்கும் உரிமை மரணத்திற்கு இல்லை. இராவண இராச்சியம், இராம இராச்சியம் என்பவற்றின் அர்த்தத்தை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். உங்கள் யுத்தம் இப்பொழுது இராவணனுடனேயே ஆகும். சரீர உணர்வு அதிகளவு அற்புதங்களை நிகழ்த்துகின்றது. அது உங்களை முற்றிலும் தூய்மையற்றவர்கள் ஆக்குகின்றது. ஆத்ம உணர்விற்கு வருவதால் ஆத்மாக்களாகிய நீங்கள் சுத்தமானவர்கள் ஆகுகின்றீர்கள். அங்கே எத்தகைய மாளிகைகள் உங்களுக்கு இருக்கும் என்பதை நீங்கள் புரிந்து கொள்கின்றீர்கள். நீங்கள் இப்பொழுது சங்கமயுகத்தில் இருக்கின்றீர்கள். நீங்கள் இப்பொழுது வரிசைக்கிரமமாக முன்னேற்றம் அடைந்து, உங்களைத் தகுதியானவர் ஆக்குகின்றீர்கள். ஆத்மாக்களாகிய நீங்கள் தூய்மையற்றவர் ஆகியதால், தூய்மையற்ற சரீரத்தைப் பெற்றீர்கள். நான் இப்பொழுது உங்களைச் சுவர்க்கவாசி ஆக்கவே வந்துள்ளேன். நினைவு செய்வதுடன், உங்களுக்குத் தெய்வீகக் குணங்களும் இருக்க வேண்டும். அது உங்களின் மாமியார் வீட்டிற்குப் போவதைப் போன்றில்லை! உங்களை மனிதர்களில் இருந்து நாராயணன் ஆக்குவதற்காகவே பாபா வந்துள்ளார் என்பதை நீங்கள் புரிந்து கொள்கின்றீர்கள். எவ்வாறாயினும், மாயை உங்கள்மீது போர் தொடுக்கின்றாள். உங்கள் யுத்தம் மறைமுகமானதாகும். ஆகையால் நீங்கள் ‘எவரும் அறியாப் போர்வீரர்கள்’ என்று அழைக்கப்படுகிறீர்கள். ‘எவரும் அறியாப் போர்வீரர்கள்’ என்று வேறு எவரும் இல்லை. நீங்கள் போர்வீரர்கள் என்றே அழைக்கப்படுகின்றீர்கள். ஏனைய அனைவரின் பெயர்களும் பதிவேட்டில் பதிவு செய்யப்படுகின்றன. அவர்கள் எவரும் அறியாத போர்வீரர்களாகிய உங்களின் சின்னத்தை எடுத்துக் கொண்டுள்ளார்கள். உங்களை எவருமே அறியாதிருக்கின்ற அளவிற்கு நீங்கள் மிகவும் மறைமுகமாக இருக்கின்றீர்கள். மாயையைக் கட்டுப்படுத்துவதற்காக நீங்கள் முழு உலகையும் வெற்றி கொள்கின்றீர்கள். நீங்கள் தந்தையை நினைக்க முயற்சிக்கும்போது, மாயை உங்களை மறக்கச் செய்கின்றாள். உங்கள் சொந்த இராச்சியத்தை நீங்கள் ஒவ்வொரு கல்பத்திலும் ஸ்தாபிக்கின்றீர்கள். நீங்களே தந்தையை மாத்திரம் நினைவு செய்கின்ற எவரும் அறியாப் போர்வீரர்கள். இதற்கு உங்கள் கைகளையோ அல்லது கால்களையோ நீங்கள் அசைக்க வேண்டியது இல்லை. நினைவு செய்வதற்கு பாபா பல வழிகளை உங்களுக்குக் காட்டுகின்றார். நடந்து உலாவித் திரியும்போதெல்லாம், நினைவு யாத்திரையில் நிலைத்திருங்கள். நீங்கள் இந்த ஞானத்தையும் கற்க வேண்டும். நீங்கள் என்னவாக இருந்தீர்கள் என்பதையும் நீங்கள் இப்பொழுது என்னவாகி உள்ளீர்கள் என்பதையும் புரிந்து கொள்கின்றீர்கள். ஆத்மாக்களாகிய நீங்கள் எங்கே வாழ்ந்தாலும், தந்தையை நினைவு செய்தால், அப்பொழுது உங்களுக்குள் உள்ள துரு அகற்றப்ட முடியும். அவர் உங்களுக்கு இதற்கான வழிமுறையை ஒவ்வொரு கல்பத்திலும் காட்டுகின்றார். உங்களை ஓர் ஆத்மா எனக் கருதி, தந்தையை நினைவு செய்தால், நீங்கள் சதோபிரதான் ஆகுவீர்கள். உங்களுக்கு இதைவிட வேறெந்த பந்தனமும் இல்லை. நீங்கள் பாத்ரூமுக்குச் செல்ல வேண்டியிருந்தாலும், உங்களை ஓர் ஆத்மா எனக் கருதி, தந்தையை நினைவு செய்யுங்கள். அப்போது ஆத்மாக்களான உங்களின் மீதுள்ள அழுக்கு அகற்றப்படும். ஆத்மாவிற்கு நீங்கள் திலகம் இட வேண்டும் என்றில்லை. அவை அனைத்தும் பக்தி மார்க்கத்தின் அடையாளங்கள் ஆகும். ஞான மார்க்கத்திற்கு அவை எவையும் தேவையில்லை. ஒரு சதச் செலவேனும் உங்களுக்கு இல்லை. வீட்டில் இருக்கும்போதும் தொடர்ந்தும் நினைவில் நிலைத்திருங்கள். அது மிகவும் இலகுவானது! பாபா எங்கள் தந்தையும் எங்கள் ஆசிரியரும் எங்கள் குருவும் ஆவார். முதலில் உங்கள் லௌகீகத் தந்தையினதும் பின்னர் உங்கள் ஆசிரியரினதும் அதன்பின்னர் உங்களின் குருவின் நினைவும் இருக்க வேண்டும் என்ற பொது நியதி உள்ளது. நீங்கள் நிச்சயமாக உங்கள் ஆசிரியரை நினைவு செய்கின்றீர்கள். ஏனெனில், நீங்கள் கற்றலுக்கான ஆஸ்தியை அவரிடமிருந்தே பெறுகின்றீர்கள். அதன்பின்னர் ஓய்வுக்கான வயதை அடையும்போது, ஒரு குருவை ஏற்றுக் கொள்கின்றீர்கள். இந்தத் தந்தை உங்களுக்கு அனைத்தையும் ஒட்டுமொத்தமாகவே கொடுக்கின்றார். பாபா 21 பிறவிகளுக்கான இராச்சியத்தையும் ஒட்டு மொத்தமாகவே கொடுக்கின்றார். ஒரு பெண் திருமணம் செய்யும்போது, அவளுக்கு மறைமுகமாகச் சீதனம் கொடுக்கப்படுகிறது. அதனையிட்டு அவர்கள் வெளிப்படையாக எதையும் காட்டிக் கொள்வதில்லை. ‘மறைமுகத் தானம்’ என்பதும் நினைவுகூரப்படுகின்றது. சிவபாபாவும் மறைமுகமானவரே. இதில் ஆணவம் என்ற கேள்விக்கே இடமில்லை. சிலருக்கு அதிகளவு ஆணவம் இருப்பதனால், தாங்கள் கொடுப்பதை அனைவரும் பார்க்க வேண்டும் என விரும்புகின்றார்கள். இங்கே அனைத்தும் மறைமுகமானதாகும். தந்தை முழு உலக இராச்சியத்தையும் உங்களுக்குச் சீதனமாக வழங்குகிறார். நீங்கள் மிகவும் மறைமுகமாக அலங்கரிக்கப்படுகின்றீர்கள். நீங்கள் மிகப் பெரிய சீதனத்தைப் பெறுகின்றீர்கள். எவருமே அறியாத வகையிலேயே தந்தை அதனை உங்களுக்குக் கொடுக்கின்றார். இங்கே, நீங்கள் பிச்சைக்காரர்கள். ஆனால் உங்களின் அடுத்த பிறவியில், உங்கள் வாயில் தங்கக்கரண்டியை வைத்திருப்பீர்கள். நீங்கள் தங்கயுக உலகிற்குச் செல்கின்றீர்கள். அங்கே அனைத்தும் தங்கத்தால் செய்யப்பட்டிருக்கும். செல்வந்தர்கள் தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட அரண்மனை போன்ற பெரிய வீடுகளை வைத்திருப்பார்கள். நிச்சயமாக வித்தியாசம் இருக்கும். மக்கள் இப்போது வெளவாலைப் போன்று தலைகீழாகத் தொங்கிக் கொண்டிருக்கிறார்கள் என நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். மாயை அவர்களைத் தலைகீழாகத் தொங்க வைக்கின்றாள். தந்தை இப்பொழுது வந்துள்ளார், எனவே உங்களுக்குள் அதிகளவு உற்சாகம் இருக்க வேண்டும். எவ்வாறாயினும், இவை தந்தையின் வழிகாட்டல்களா அல்லது பிரம்மாவின் வழிகாட்டல்களா, அவை தந்தையின் வழிகாட்டல்களா அல்லது சகோதரரின் வழிகாட்டல்களா என்பதை மாயை மறக்கச் செய்கிறாள். அவர்கள் இதையிட்டுக் குழப்பம் அடைகிறார்கள். தந்தை கூறுகிறார்: வழிகாட்டல்கள் நல்லவையோ கெட்டவையோ நீங்கள் அவற்றைத் தந்தையின் வழிகாட்டல்களாகவே கருத வேண்டும். நீங்கள் அவற்றைப் பின்பற்ற வேண்டும். அவற்றில் ஏதாவது தவறு இருந்தாலும், பாபா அந்தத் தவறைச் சரிசெய்வார். ஏனென்றால், அவருக்கு அந்தச் சக்தி உள்ளது. இவர் எல்லாவற்றையும் பின்பற்றுவதை உங்களால் காண முடிகிறது. அவரின் தலையில் அமர்ந்திருப்பவர் யார்? அவர் (சிவபாபா) இவருக்கு (பிரம்மாபாபா) அருகில் அமர்ந்திருக்கிறார். குருமாரும் உங்களுக்குக் கற்பிக்கும்போது, உங்களைத் தமக்கருகில் இருத்திக் கொள்வார்கள். எவ்வாறாயினும், இவரும் முயற்சி செய்ய வேண்டியுள்ளது. அவர் தமோபிரதானில் இருந்து சதோபிரதான் ஆகுவதற்காக முயற்சி செய்ய வேண்டியுள்ளது. தந்தை கூறுகிறார்: உணவைத் தயாரிக்கும்போது என்னை நினைவு செய்யுங்கள். வேறு எவராலும் சிவபாபாவின் நினைவில் உணவைத் தயாரிக்க முடியாது. புகழப்படுகின்ற பிரம்மாபோஜன் இந்த நேரத்திற்கே உரியது. உலகியல் பிராமணர்கள் அந்த உணவின் புகழைப் பாடினாலும், அவர்கள் அதன் அர்த்தம் என்னவென்பதைப் புரிந்து கொள்வதில்லை. வெறுமனே புகழைப் பாடுபவர்கள், எதையும் புரிந்து கொள்வதில்லை. எவ்வாறாயினும், ஒருவர் பக்தராக இருக்கும்போது அவர் சமய எண்ணம் கொண்டவர் என்பதை உங்களால் புரிந்து கொள்ள முடியும். அங்கே, சத்தியயுகத்தில், மத எண்ணத்தைக் கொண்டவர் என்ற கேள்வியே இல்லை. ஏனென்றால் அங்கே பக்தியே இருக்காது. பக்தி என்றால் என்னவென்றே எவருக்கும் தெரியாது. மக்கள் ஞானம், பக்தி, விருப்பமின்மை (வைராக்கியம்) என்பதைப் பற்றிப் பேசுகிறார்கள். இந்தச் சொற்கள் முதல் தரமானவை. இந்த ஞானம் பகலும் பக்தி இரவும் ஆகும். உங்களுக்கு இரவின் மீது விருப்பமின்மை ஏற்படும்போது, உங்களால் பகலுக்குள் செல்ல முடியும். இது மிகவும் தெளிவானது. நீங்கள் இப்போது புரிந்து கொண்டுள்ளீர்கள். அதனால் நீங்கள் இனிமேலும் தளம்ப வேண்டியதில்லை. தந்தை கூறுகிறார்: என்னை நினைவு செய்யுங்கள்! நான் உங்களை உலகின் அதிபதிகள் ஆக்குகிறேன். நான் உங்களின் எல்லையற்ற தந்தை ஆவேன். உலகச்சக்கரத்தைப் பற்றிய இந்த ஞானத்தைக் கற்றுக் கொள்வது மிகவும் இலகுவானது. விதையையும் மரத்தையும் நினைவு செய்யுங்கள். இப்போது கலியுகக் கடைசி என்பதனால், சத்தியயுகம் வரவிருக்கிறது. நீங்கள் இப்போது சங்கமயுகத்தில் இருக்கிறீர்கள். அத்துடன் அழகான மலர்கள் ஆகுகிறீர்கள். ஆத்மாக்களான நீங்கள் சதோபிரதான் ஆகுவீர்கள். எனவே, நீங்கள் வசிப்பதற்காக சதோபிரதான் மாளிகைகளைப் பெறுவீர்கள். முழு உலகமும் புதியதாகுகின்றது. ஆகவே, குழந்தைகளான நீங்கள் அதிகளவு சந்தோஷத்தை அனுபவம் செய்ய வேண்டும். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:

  1. நீங்கள் ஸ்ரீமத்தைப் பின்பற்றுவதன் மூலம் உங்களின் தேவதைகளின் பூமியை (பரிஸ்தான்) ஸ்தாபிக்கிறீர்கள் என்ற போதையை சதா கொண்டிருங்கள். வீணான விடயங்கள் மற்றும் குப்பை அனைத்தையும் அகற்றி, மகத்தான போதையைப் பேணுங்கள்.
  2. மிக இராஜரீகமான எண்ணங்களைக் கொண்டிருங்கள். மிக நல்ல, இராஜரீகமான பல்கலைக்கழகத்தையும் விடுதியையும் திறப்பதற்கான ஆயத்தங்களைச் செய்யுங்கள். தந்தையின் மறைமுகமான உதவியாளர்கள் ஆகுங்கள். புறப்பகட்டு வேண்டியதில்லை.
ஆசீர்வாதம்: எந்தவொரு சேவையையும் எல்லையற்ற சேவையாளராகச் செய்வதன் மூலம் உங்களின் எல்லையற்ற மனோபாவத்தால் அதிர்வலைகளைப் பரப்புவீர்களாக.
இப்போது, எல்லையற்ற மாற்றத்திற்கான சேவையில் தீவிரத்தன்மையை ஏற்படுத்துங்கள். நான் எப்படியோ செய்கிறேன்தானே, நான் மிகவும் பிஸியாக இருக்கிறேன். எனக்கு நேரமே இல்லை என்பதாக இருக்கக்கூடாது. எந்த வகையான சேவையைச் செய்வதற்குக் கருவியாக இருக்கும்போதும், உங்களால் எல்லையற்ற முறையில் ஒத்துழைக்க முடியும். உங்களின் மனோபாவத்தை எல்லையற்றதாக வைத்திருங்கள். அந்த அதிர்வலைகள் தொடர்ந்து பரவும். எந்தளவிற்கு நீங்கள் எல்லையற்றதில் மும்முரமாக இருக்கிறீர்களோ, அந்தளவிற்கு உங்களின் கடமை இலகுவானதாகும். ஒவ்வொரு விநாடியும் உங்களின் ஒவ்வோர் எண்ணத்தாலும் மேன்மையான அதிர்வலைகளைப் பரப்பும் சேவையைச் செய்வதெனில், எல்லையற்ற சேவையாளராக இருப்பதாகும்.
சுலோகம்: இந்த ஞானத்தின் ஆயுதங்கள், தந்தை சிவனுடன் ஒன்றிணைந்திருக்கும் சிவசக்திகளின் அலங்காரம் ஆகும்.
 
---ஓம் சாந்தி---

முரளி என்றால் என்ன?

முரளி என்பது பிரம்மா குமாரிகளின் தினசரி ஆன்மீக போதனை; இது ஒவ்வொரு காலையும் மதுபனில் இருந்து வெளியிடப்படுகிறது. இங்கே நீங்கள் இன்றைய முரளியைத் தமிழில் படிக்கலாம், ஆடியோ கேட்கலாம், PDF பதிவிறக்கலாம். படிப்புக்கு உதவியாக உரையை ஹைலைட் செய்யலாம் — உங்கள் குறிகள் இந்த உலாவியிலேயே பாதுகாப்பாக இருக்கும்.

28 மொழிகளில் முரளி

Daily Murli · Madhuban மூலம்: மதுபன் முரளி பிரிவு இது ஒரு தனிப்பட்ட வாசிப்புச் செயலி, அதிகாரப்பூர்வ இணையதளம் அல்ல.