| 29-12-2024 |
ஓம் சாந்தி
அவ்யக்த பாப்தாதா
மதுவனம்
|
31/12/2002 |
இந்தப் புது வருடத்தில், உங்களின் பொக்கிஷங்கள் அனைத்தையும் தகுதிவாய்ந்த முறையில் பயன்படுத்தி, வெற்றி ரூபம் ஆகுகின்ற சிறப்பியல்பைக் காட்டுங்கள்.
இன்று, புதிய உலகைப் படைப்பவரும் புதிய வாழ்க்கையை அருள்பவருமான பாப்தாதா, புது வருடத்தைக் கொண்டாடுவதற்காக வந்துள்ளார். நீங்கள் எல்லோரும் புது வருடத்தைக் கொண்டாட வந்துள்ளீர்களா அல்லது புதிய யுகத்தைக் கொண்டாட வந்துள்ளீர்களா? எல்லோரும் புது வருடத்தைக் கொண்டாடுகிறார்கள். ஆனால், நீங்கள் எல்லோரும் இவை மூன்றையும் கொண்டாடுகிறீர்கள்: புதிய வாழ்க்கை, புதிய யுகம், புது வருடம். பாப்தாதா திரிமூர்த்தி வாழ்த்துக்களை வழங்குகிறார். மக்கள் புது வருடத்திற்காக ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறார்கள். அத்துடன் அவர்கள் ஒருவருக்கொருவர் பரிசுகளையும் வழங்குகிறார்கள். அவர்கள் பரிசுகளை வழங்குகிறார்கள்தானே? எவ்வாறாயினும், பாப்தாதா உங்கள் எல்லோருக்கும் என்ன பரிசை வழங்கியுள்ளார்? அவர் பொன்னுலகம் என்ற பரிசை உங்களுக்கு வழங்கியுள்ளார். நீங்கள் எல்லோரும் பொன்னுலகம் என்ற பரிசைப் பெற்றுள்ளீர்கள்தானே? பொன்னுலகில், புதிய யுகத்திலேயே சகல பேறுகளும் இருக்கும். உங்களின் இராச்சியம் உங்களுக்கு நினைவிருக்கிறதா? எந்தவொரு பேறும் குறைவாக இருக்கும் என்ற பெயரோ சுவடோ இருக்காது. வேறெவரும் அன்றி, பாப்தாதாவால் மட்டுமே இத்தகைய பரிசை வழங்க முடியும். முழு உலகிலும், யாராவது உங்களுக்கு அனைத்திலும் மகத்தான பரிசைக் கொடுத்தாலும், அவர்களால் எதை உங்களுக்குக் கொடுக்க முடியும்? அவர்களால் உங்களுக்கு மிகப்பெரிய கிரீடத்தை அல்லது சிம்மாசனத்தைக் கொடுக்க முடியும். ஸ்தாபனை இடம்பெற்றபோது, (ஸ்தாபனையின் ஆரம்பத்தில் இருந்த அனைவரும் முன்னால் அமர்ந்திருந்தார்கள்) அப்போதும் தந்தை பிரம்மா குழந்தைகளிடம் கேட்பதுண்டு: இன்றுள்ள ராணி உங்களுக்கு கிரீடத்தையும் சிம்மாசனத்தையும் கொடுத்தால், நீங்கள் அங்கே செல்வீர்களா? உங்களுக்கு அது நினைவிருக்கிறதா? குழந்தைகள் பதில் அளிப்பார்கள்: ‘நாம் தந்தையையே கண்டு அடைந்திருக்கும்போது, அந்தக் கிரீடத்தையும் சிம்மாசனத்தையும் வைத்து என்ன செய்யப் போகிறோம்?’ இதனுடன் ஒப்பிடும்போது அது எம்மாத்திரம்? பொன்னுலகம் என்ற பரிசை விட மகத்தான பரிசு எதுவுமே இல்லை. குழந்தைகள் பலர் கேட்கிறார்கள்: அங்கே என்ன பேறுகள் இருக்கும்? பாப்தாதா கூறுகிறார்: பேறுகளின் பட்டியல் நீண்டது. ஆனால் சுருக்கமாக அதை நீங்கள் என்னவென்று சொல்வீர்கள்? அங்கே எதிலும் குறைவில்லை. உங்களுக்கு வாழ்க்கையில் எது தேவையோ, அதை நீங்கள் பெறுவீர்கள். ஆகவே, நீங்கள் இத்தகைய பொன்னான பரிசுக்கான உரிமையுள்ள ஆத்மாக்கள். உங்களுக்கு உரிமை உள்ளதல்லவா? நீங்கள் உரிமையுள்ள இரட்டை வெளிநாட்டவர்களா? (அவர்கள் தமது கைகளை அசைக்கிறார்கள்) நீங்கள் எல்லோரும் அரசர்கள் ஆகுவீர்களா? அப்படியாயின், சிம்மாசனங்கள் பல தயாரிக்கப்பட வேண்டும். பாப்தாதா கூறுகிறார்: அந்தச் சிம்மாசனம் ஒரு சிம்மாசனம். உங்களிடம் சகல பேறுகளும் உள்ளன. ஆனால், சங்கமயுகத்தின் சுயஇராச்சிய அதிகாரம், அதை விடக் குறைந்ததல்ல. நீங்கள் இப்போதும் அரசர்கள், அப்படித்தானே? நீங்கள் பிரஜைகளா அல்லது இராஜ குடும்பத்தைச் சேர்ந்தவர்களா? நீங்கள் யார்? ஒரேயொரு தந்தை மட்டுமே, தனது ஒவ்வொரு குழந்தையும் அரசர் ஆகப் போகிறார் எனப் பெருமையுடன் சொல்கிறார். நீங்கள் அரசர்கள்தானே? நீங்கள் இராஜயோகிகளா அல்லது பிரஜா யோகிகளா (பிரஜைகள் ஆகப் போகும் யோகிகள்). இந்த வேளையில், எல்லோரும் இதய சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கிறார்கள். நீங்கள் எல்லோரும் சுய இராச்சிய உரிமையுள்ளவர்கள். அரசர்கள் ஆகப் போகும் குழந்தைகள். இத்தகைய ஆன்மீக போதை உங்களுக்கு இருக்கிறதல்லவா? இந்த வேளையில் உங்களின் சுய இராச்சிய அதிகாரத்தால் மட்டுமே, நீங்கள் எதிர்கால இராச்சியத்தைப் பெறுவீர்கள். இந்த சங்கமயுகம், மிக, மிக, மிகப் பெறுமதிவாய்ந்தது, அத்துடன் மேன்மையானது. பாப்தாதாவும் குழந்தைகள் எல்லோரும் சங்கமயுகத்தை அறிவார்கள். சங்கமயுகத்திற்கு நீங்கள் சந்தோஷமாக என்ன பெயர் வைத்துள்ளீர்கள்? களிப்பூட்டும் யுகம். ஏன்? சங்கமயுகத்தின் குதூகலத்தை வேறெந்த யுகத்திலும் உங்களால் பெற முடியாது. அதற்கான காரணம் என்ன? கல்பம் முழுவதிலும், இப்போது மட்டுமே நீங்கள் இறைவனைச் சந்திக்கும் களிப்பைப் பெறுகிறீர்கள். சங்கமயுகத்தில் ஒவ்வொரு நாளும் எத்தகைய நாள்? மகிழ்ச்சி, மகிழ்ச்சி மட்டுமே உள்ள நாள். மகிழ்ச்சி மட்டுமே உள்ளது, அப்படித்தானே? மகிழ்ச்சி உள்ளது. நீங்கள் குழப்பத்திற்கு உள்ளாகுவதில்லையே? ஒவ்வொரு நாளும் ஒரு திருவிழா. ஏனென்றால் உங்களிடம் உற்சாகம் உள்ளது. உங்களின் சகோதர, சகோதரிகள் அனைவரையும் தந்தையான இறைவனுக்குச் சொந்தமாக்குகின்ற ஊக்கமும் உற்சாகமும் உங்களிடம் உள்ளன. சேவை செய்வதற்கான ஊக்கமும் உற்சாகமும் உங்களிடம் உள்ளதல்லவா? நாம் இதைச் செய்வோம், நாம் இதைச் செய்வோம், நாம் இதைச் செய்வோம்....! நீங்கள் இத்தகைய திட்டங்களைச் செய்கிறீர்கள்தானே? இது ஏனென்றால், உங்களிடம் மேன்மையான பேறு உள்ளபோது, உங்களால் அதைப் பற்றி மற்றவர்களிடம் சொல்லாமல் இருக்க முடியாது என்பதனாலேயே ஆகும். நீங்கள் இந்தச் சங்கமயுகத்தின் பேறுகளைப் பொன்னுலகத்திலும் கொண்டிருப்பீர்கள். இந்த வேளையில் நீங்கள் செய்யும் முயற்சிகளின் பெறுபேறு, எதிர்காலப் பொன்னுலகம் ஆகும். எனவே, நீங்கள் சங்கமயுகத்தை விரும்புகிறீர்களா அல்லது சத்தியயுகத்தை விரும்புகிறீர்களா? இரண்டில் எதை நீங்கள் விரும்புகிறீர்கள்? சங்கமயுகம் நல்லதுதானே? என்னவென்றால், மாயை இடையில் வந்துவிடுகிறாள். நீங்கள் சிலவேளைகளில் சிறிது குழப்பத்திற்கு உள்ளாகுகிறீர்கள். சில குழந்தைகள், இலகு யோகத்தைக் கஷ்டமான யோகமாக ஆக்கிவிடுகிறார்கள். இது கஷ்டமில்லை. ஆனால், நீங்கள் அதைச் சிரமமானதாக ஆக்கிவிடுகிறீர்கள். உண்மையில், அது மிகவும் இலகுவானது. உங்களுக்கு அது சிரமமாக உள்ளதா? அதைச் சிரமம் என்று நினைப்பவர்கள், உங்களின் கைகளை உயர்த்துங்கள். எப்போதும் இல்லை, ஆனால் அது சிலவேளைகளில் சிரமமாக உள்ளதா? அல்லது அது இலகுவாக உள்ளதா? கஷ்டப்படுகின்ற யோகிகள் (அதைச் சிரமம் என உணர்கின்ற யோகிகள்), உங்களின் கைகளை உயர்த்துங்கள்! தாய்மார்களே, நீங்கள் சிரமப்படுகின்ற யோகிகளா அல்லது இலகு யோகிகளா? யாராவது சிரமப்படுகின்ற யோகி இருக்கிறாரா? உங்களில் எவரும் கைகளை உயர்த்துகிறீர்கள் இல்லை. இந்த ஒன்றுகூடலில் எப்படி நீங்கள் அதைச் செய்வீர்கள்?
ழந்தைகளான நீங்கள் எல்லோரும், ‘எனது பாபா’ எனப் பெருமையாகவும் போதையுடனும் சொல்கிறீர்கள். ‘எனது பாபா’ என நீங்கள் சொல்கிறீர்களா? எனது பாபாவா அல்லது தாதிகளின் பாபாவா? ‘எனது பாபா’ அப்படித்தானே? நீங்கள் ஒவ்வொருவரும் முதலில், ‘எனது பாபா’ எனச் சொல்ல வேண்டும். அப்படித்தானே? சிந்திகள் எல்லோரும் இங்கே அமர்ந்திருக்கிறார்கள். எனது பாபாவா அல்லது தாதி ஜான்கியின் பாபாவா? அல்லது, தாதி பிரகாஷ்மணியின் பாபாவா? அவர் யார்? அவர் என்னுடையவரா? நாள் முழுவதும் நீங்கள் என்ன வார்த்தையை நினைக்கிறீர்கள்? ‘எனது’ என்ற வார்த்தையை. தந்தை உங்களுக்கு மிக இலகுவான யுக்தியைக் கூறுகிறார்: நீங்கள் எத்தனை தடவைகள் ‘எனது’ என்ற வார்த்தையைக் கூறுகிறீர்கள்? எத்தனை தடவைகள் இந்த வார்த்தையை நீங்கள் நாள் முழுவதும் பயன்படுத்துகிறீர்கள்? நீங்கள் கணக்கிடுவீர்களாக இருந்தால், ‘எனது’ என்ற வார்த்தையைப் பல தடவைகள் நீங்கள் பயன்படுத்துகிறீர்கள். ‘எனது’ என்ற வார்த்தையை நீங்கள் கூறும்போது, ‘எனது’ என்பவர் யார்? அது, எனது பாபாவே. இது சிரமமா? நீங்கள் சிலவேளைகளில் அதை மறந்துவிடுகிறீர்களா? பாப்தாதா உங்களுக்கு ஒரு புதிய வார்த்தையைக் கொடுக்கவில்லை. நீங்கள் எப்போதும் ‘நான்’ மற்றும் ‘எனது’ என்ற இந்த வார்த்தைகளைப் பயன்படுத்துகிறீர்கள். எனவே, ‘நான்’ யார்? என்னுடையவர் யார்? ஏன் சில குழந்தைகள் முயற்சியைச் சிரமம் ஆக்குகிறார்கள்? புள்ளி (பிந்து) தமக்கு முன்னால் வரவேண்டும் என அவர்கள் நினைக்கிறார்கள். பிந்து, பிந்து, பிந்து….. அந்த பிந்து நழுவிப் போகிறது. நீங்கள் ஒரு பிந்து. ஆனால், என்ன வகையான பிந்து? நீங்கள் யார் என்ற சுயமரியாதையின் விழிப்புணர்வில் வைத்திருங்கள். அப்போது முயற்சி மிகவும் சுவாரசியமாக இருக்கும். ஜோதி பிந்துவைப் (ஒளிப்புள்ளி) பற்றி மட்டும் நீங்கள் பேசும்போது, அது சிரமம் ஆகுகிறது. அதை இலகு முயற்சியாக, களிப்பூட்டும் முயற்சியாக ஆக்குங்கள்.
இந்தப் புது வருடத்தில், உங்களின் முயற்சிகள் மேன்மையானவையாக இருக்க வேண்டும். எவ்வாறாயினும், மேன்மையானவையாக இருப்பதுடன்கூடவே, முதலில் அவை இலகுவாக இருக்க வேண்டும். அவை மேன்மையானவையாக இருக்க வேண்டும். அத்துடன் இலகுவாகவும் இருக்க வேண்டும். இது சாத்தியமா? இரண்டு வகையான முயற்சிகளும் ஒரே வேளையில் சாத்தியமா? இரட்டை வெளிநாட்டவர்களே, பேசுங்கள்! இது சாத்தியமா? பின்னர் பாப்தாதா அதைப் பார்ப்பார். யார் சிரமப்படுகின்ற யோகிகள் ஆகுகிறார்கள் என்பதை பாப்தாதா தொடர்ந்து சோதிக்கிறார். இலகு யோகி ஆகுதல் என்றால், உங்களின் முயற்சிகள் கவனயீனம் ஆகுதல் என்று அர்த்தமல்ல. அவை மேன்மையானவையாக இருக்க வேண்டும். அத்துடன் இலகுவானவையாகவும் இருக்க வேண்டும். எனவே, பாண்டவர்கள் இலகு யோகிகளா? இலகு யோகிகளாக இருப்பவர்கள், உங்களின் கைகளை உயர்த்துங்கள்! கவனமாக இருங்கள். இவை அனைத்தும் தொலைக்காட்சியில் பதிவு செய்யப்படுகின்றன. பாராட்டுக்கள்! எனவே, இந்த வருடம், எவருக்கும் எந்தவிதமான சிரமங்களும் இருக்காது. ஏனென்றால், நீங்கள் இலகு யோகிகள். கவனயீனம் அடையாதீர்கள்.
காலத்திற்கேற்ப, இந்தப் புது வருடத்தில், உங்களிடம் என்ன பொக்கிஷங்கள் இருக்கின்றனவோ – காலம், எண்ணங்கள், நற்குணங்கள், ஞானம், சக்திகள் - மிகப்பெரிய பொக்கிஷம் எண்ணங்களின் பொக்கிஷம் - மேன்மையான எண்ணங்களும் தூய எண்ணங்களும், நீங்கள் இந்தப் பொக்கிஷங்கள் அனைத்தையும் ஒவ்வொரு நாளும் தகுதிவாய்ந்த முறையில் பயன்படுத்த வேண்டும். அதாவது, நீங்கள் வெற்றி பெற வேண்டும். அவற்றை அதிகளவில் பகிர்ந்தளியுங்கள். அருள்பவரின் குழந்தைகளான, மாஸ்ரர் அருள்பவர்கள் ஆகுங்கள். அதிகளவில் அவற்றைப் பகிர்ந்து அளியுங்கள். ஏன்? அவற்றைத் தகுதிவாய்ந்த முறையில் பயன்படுத்துவது என்றால், வெற்றி பெறுதல் என்று அர்த்தம். ஆகவே, புது வருடத்தின் இந்தச் சிறப்பியல்பை சதா எல்லா வேளையும் உங்களுடன் வைத்திருங்கள். நீங்கள் எல்லாவற்றையும் தகுதிவாய்ந்த முறையில் பயன்படுத்த வேண்டும். அப்போது வெற்றிக்கு உத்தரவாதம் உள்ளது. வெற்றி உங்களின் பிறப்புரிமை என நீங்கள் எல்லோரும் சொல்கிறீர்கள். உங்களுக்கு இந்த உரிமை உள்ளதா? எனவே, அதைத் தகுதிவாய்ந்த முறையில் பயன்படுத்தி, தொடர்ந்து வெற்றி பெறுங்கள். நீங்கள் என்ன செயலைச் செய்தாலும், தொடர்ந்து ஏதாவதொரு பொக்கிஷத்தைத் தகுதிவாய்ந்த முறையில் பயன்படுத்தித் தொடர்ந்து வெற்றியை அனுபவம் செய்யுங்கள். அதைப் பற்றிச் சிந்தித்துப் பாருங்கள்: பிராமண ஆத்மாக்களான உங்களைத் தவிர வேறு எவருக்காவது வெற்றியின் உரிமை உள்ளதா? ஏன்? ஏனென்றால், தந்தை உங்கள் எல்லோருக்கும் வெற்றிநிறைந்தவர் ஆகுவதற்கான ஆசீர்வாதத்தை வழங்கியுள்ளார். ஒவ்வொரு பிராமணக் குழந்தையும் ஒரு வெற்றி நட்சத்திரம், வெற்றி சொரூபம் என பாப்தாதா சதா கூறுகிறார். நீங்கள் வெற்றி நட்சத்திரமா அல்லது முயற்சி நட்சத்திரமா? பாப்தாதா உங்கள் எல்லோரையும் வெற்றி நட்சத்திரங்களாகவே பார்க்கிறார். ஆரம்பத்தில் பிரம்மாபாபா எல்லாவற்றையும் தகுதிவாய்ந்த முறையில் பயன்படுத்துவதற்காக எவ்வளவு நேரத்தைச் செலவிட்டார் என உங்களுக்கு நினைவிருக்கிறதா? அவர் இறுதிவரைத் தனது நேரத்தைத் தகுதிவாய்ந்த முறையிலேயே பயன்படுத்தினார். அவர் கர்மாதீத் ஆகியிருந்தாலும், அப்போதும் பல கடிதங்களை எழுதினார். அவர் தனது நேரத்தைத் தகுதிவாய்ந்த முறையில் பயன்படுத்தினார். தனது கடைசி நாளிலும் அவர் மேன்மையான வாசகங்களைப் பேசினார். கடைசி நாள்வரை அவர் எல்லாவற்றையும் தகுதிவாய்ந்த முறையில் பயன்படுத்தினார். இதனாலேயே அவர் வெற்றி பெற்றார். ஆகவே, தந்தையைப் பின்பற்றுங்கள். உண்மையில், ஒவ்வோர் எண்ணத்தையும் ஒவ்வொரு விநாடியையும் தகுதிவாய்ந்த முறையில் பயன்படுத்துவது என்றால், வெற்றி சொரூபம் ஆகுவதாகும். உங்களுக்குத் தந்தை பிரம்மாவிடம் மிகுந்த அன்பு உள்ளது என நீங்கள் எல்லோரும் நம்பிக்கையுடன் சொல்கிறீர்கள். எனவே, அன்பின் அடையாளம், தந்தை எதை நேசிக்கிறாரோ, குழந்தைகளும் அதையே நேசிப்பார்கள். உங்களின் நேரம், எண்ணங்கள், பொக்கிஷங்கள் அனைத்தும் தகுதிவாய்ந்த முறையில் பயன்படுத்தப்பட வேண்டும். அவை வீணாகிப் போகக்கூடாது. அன்பின் அடையாளம் என்னவென்றால், தந்தையைப் பின்பற்றுங்கள். தந்தை பிரம்மா என்ன சிறப்பியல்பைக் காட்டினார்? அவருக்கு என்ன எண்ணம் இருந்ததோ, அதை அவர் ஒரு விநாடியில் பயிற்சி செய்தார். அவர் அதைப் பற்றி நினைப்பதுடன் திட்டங்களைச் செய்தது மட்டுமன்றி, அதை நடைமுறையில் கடைப்பிடித்து, செய்தும் காட்டினார். எனவே, அது இப்படி இருக்கிறதா? நீங்கள் அவரைப் பின்பற்றுபவர்களா? நல்லது.
இன்று, பலர் புது வருடத்தைக் கொண்டாட வந்துள்ளார்கள். நல்லது. மண்டபம் சிறியதாக ஆகினாலும், உங்களிடம் பெரிய இதயங்கள் உள்ளன. பாருங்கள், உங்களிடம் பெரிய இதயங்கள் இருப்பதனால், எல்லோரையும் இதில் இருத்த முடிகிறது. (18000 இலிருந்து 19000 சகோதர, சகோதரிகள் மண்டபத்தில் அமர்ந்திருந்தார்கள்.) வெளியில் அமர்ந்திருப்பவர்களும் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்தானே? வெளியில் அமர்ந்திருப்பவர்களும் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்களைப் பார்க்க முடியவில்லை. வெளிநாட்டில், அவுஸ்திரேலியாவில் இருப்பவர்கள், நேரடியாக ஒளிபரப்பாகும் முரளியைக் கேட்பதற்காக நள்ளிரவு 12 மணிக்கு விழித்திருந்து கேட்பார்கள் என பாப்தாதா கேள்விப்பட்டிருக்கிறார். அவர்கள் நள்ளிரவில் முரளி கேட்க அமர்ந்து, அமிர்தவேளை 4 மணியின் பின்னரே எழுந்திருப்பார்கள். எனவே, பாப்தாதாவும் அவுஸ்திரேலியாவைச் சேர்ந்தவர்களை இன்று நினைவு செய்கிறார். அவர்கள் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். இங்கே சாந்திவானில் அவுஸ்திரேலியாவைச் சேர்ந்தவர்கள் இருந்தால், உங்களின் கைகளை உயர்த்துங்கள்! அனைவருக்கும் முதலில் அவுஸ்திரேலியாவைச் சேர்ந்தவர்களுக்கும் பின்னர் மற்றவர்களுக்கும் திரிமூர்த்தி வாழ்த்துக்கள்.
இந்த வருடத்தின் இலட்சியம் என்னவென்று பாபா உங்களுக்குக் கூறியுள்ளார். எல்லாவற்றையும் தகுதிவாய்ந்த முறையில் பயன்படுத்துங்கள். வெற்றிக்கு உத்தரவாதம் உள்ளது. நீங்கள் எல்லோரும் இதை உறுதியாக்கிக் கொண்டீர்களா? நீங்கள் எல்லாவற்றையும் தகுதிவாய்ந்த முறையில் பயன்படுத்த வேண்டும். எதையும் வீணாக்கக்கூடாது. சங்கமயுகம், சக்திவாய்ந்த யுகமாகும். இது வெற்றிக்கான யுகமாகும். இது எதையும் வீணாக்குவதற்கான யுகம் இல்லை. 63 பிறவிகளாக வீணாக்கியது இப்போது முடிவிற்கு வந்துள்ளது. இந்தச் சிறிய யுகம், இப்போது எல்லாவற்றையும் தகுதிவாய்ந்த முறையில் பயன்படுத்துவதற்கான யுகமாகும். நீங்கள் நேரத்தைத் தகுதிவாய்ந்த முறையில் பயன்படுத்தினால், அரைக்கல்பம் முழுவதற்கும் எதிர்கால இராச்சியத்திற்கான உரிமையை நீங்கள் பெறுவீர்கள். நீங்கள் அதைச் சிலவேளைகளில் மட்டும் தகுதிவாய்ந்த முறையில் பயன்படுத்தினால், சிலவேளைகளில் மட்டுமே இராச்சிய உரிமையையும் நீங்கள் கோரிக் கொள்வீர்கள். இது உங்களின் நேரத்தைத் தகுதிவாய்ந்த முறையில் பயன்படுத்துவதற்கான வெகுமதி ஆகும். உங்களின் மூச்சைத் தகுதிவாய்ந்த முறையில் பயன்படுத்தினால், 21 பிறவிகளுக்கு நீங்கள் ஆரோக்கியமாக இருப்பீர்கள். தொடர்ந்து முன்னேறும்போது உங்களுக்கு இதய வழுவல் ஏற்படாது. சில மக்களின் இதயங்கள் அடிப்பதை நிறுத்தி விடுகின்றன. சிலருக்கு இரத்தக்குழாய்களில் அடைப்பு ஏற்படுகிறது. அங்கே அவற்றில் எதுவும் நடைபெறாது.
இந்த ஞானத்தின் பொக்கிஷங்களைத் தகுதிவாய்ந்த முறையில் பயன்படுத்துங்கள். ஞானம் என்றால் புரிந்துணர்வு என்று அர்த்தம். அங்கே, நீங்கள் மிகவும் விவேகியாகி விடுவதனால், ஓர் அமைச்சரின் தேவை இருக்காது. தற்காலத்தில், அவர்கள் சத்தியப்பிரமாணம் எடுக்கும்போது, முதலில் அமைச்சரவை ஒன்றை உருவாக்குகிறார்கள். அங்கே, உங்களுக்குச் சகபாடிகளே இருப்பார்கள். அமைச்சர்கள் அல்ல. சபையில் அமர்ந்திருக்கும் அரச குடும்பத்தின் சகல உறுப்பினர்களுக்கும் கிரீடம் சூட்டப்படும். அரச குடும்பமும் எதிலும் குறைந்தவர்கள் அல்ல. அவர்கள் சிம்மாசனத்தில் அமராவிட்டாலும், சமமான அந்தஸ்தை அவர்கள் கொண்டிருப்பார்கள். ஆகவே, வெகு சிலரே சிம்மாசனத்தில் அமர்ந்திருப்பார்கள் என்று நினைக்காதீர்கள். ஏனென்றால், இராச்சிய உரிமையுள்ள நீங்கள் எல்லோரும் அரச சபையில் வீற்றிருப்பீர்கள். உங்கள் ஒவ்வொருவரின் தலையிலும் ஒரு கிரீடம் இருக்கும். அத்துடன் உங்களுக்கு முழு உரிமைகளும் இருக்கும். எனவே, நீங்கள் என்னவாகுவீர்கள்? முதலாம் இலக்கத்தவரா அல்லது வரிசைக்கிரமமா? நீங்கள் என்னவாகுவீர்கள்? முதலாம் இலக்கத்தவரா அல்லது வரிசைக்கிரமமா? அப்படியென்றால், நீங்கள் என்ன செய்ய வேண்டும் என உங்களுக்குத் தெரியுமா? நீங்கள் தைரியத்தைக் காட்டியிருப்பது மிகவும் நல்லதே. எவ்வாறாயினும், முதலாம் இலக்கத்தவர் ஆகுவதற்கு, நீங்கள் அனைத்திற்கும் முதலில் வெற்றி அடைய வேண்டும். நீங்கள் அதைச் செய்கிறீர்கள்தானே? நீங்கள் அதைச் செய்வீர்கள் எனச் சொல்லாதீர்கள், ஆனால் நீங்கள் அதைச் செய்கிறீர்கள் எனச் சொல்லுங்கள். மற்றவர்களும் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். இன்று, பழைய சிந்தில் இருந்து பிரம்மாபாபாவின் நண்பர்கள் பலர் வந்துள்ளார்கள் என பாபா கேள்விப்பட்டார். உங்களின் கைகளை உயர்த்துங்கள்! ஹிந்தி அல்ல. சிந்திக் குழந்தைகள், எழுந்து நில்லுங்கள்! (சிந்தி குடும்பங்களின் குழந்தைகள்). முழுக் குடும்பங்களும் வந்துள்ளார்கள். அச்சா. நீங்கள் அற்புதங்களைச் செய்து காட்டுவீர்கள்தானே? நீங்கள் என்ன அற்புதங்களைச் செய்வீர்கள்? (நாம் பாபாவின் செய்தியைக் கொடுப்போம்). நீங்கள் அதை எப்படியும் செய்கிறீர்கள். அச்சா. 38 பேர் வந்துள்ளனர். எனவே, நீங்கள் என்ன அற்புதங்களைச் செய்வீர்கள்? அதிகளவில் செய்யுங்கள் என பாபா உங்களுக்குச் சொல்லவில்லை. மிகச் சிறிதளவில் எதையாவது செய்யும்படி மட்டுமே பாபா உங்களுக்குச் சொல்கிறார். நீங்கள் அதைச் செய்வதற்குத் தயாரா? குழந்தைகளான நீங்களும் இந்த அற்புதத்தைச் செய்வீர்களா? (நாங்கள் 3.8 மில்லியன் பேரை உருவாக்குவோம்) பலமில்லியன் மடங்கு வாழ்த்துக்கள்! நீங்கள் மிகப் பெரியதொன்றைப் பற்றிக் கூறியுள்ளீர்கள். ஆனால் பாபா உங்களை மிகச் சிறிய ஒன்றைச் செய்யும்படியே கூறுகிறார். அதாவது, நீங்கள் ஒவ்வொருவரும் இன்னொருவரைக் கொண்டு வரவேண்டும். நீங்கள் இன்னொருவரைக் கொண்டு வருவீர்களா? ஒருவர் இன்னொருவரைக் கொண்டு வரவேண்டும். சிறுவர்கள் சிறுவர்களைக் கொண்டு வரவேண்டும். தாய்மார்கள், தமது கணவரை அல்லது தமது சகோதரிகளைக் கொண்டு வரவேண்டும். எப்படியும் ஒருவர், இன்னொருவரை அழைத்து வரவேண்டும். இந்தக் குழுவைப் பாருங்கள். நீங்கள் அவர்களுக்கு வழிகாட்டுங்கள். அடுத்தவருடம், நீங்கள் அவர்களை அழைத்து வரவேண்டும். இரட்டை மடங்கான குழுவொன்றுடன் வாருங்கள். ஆரம்பம் ஆகிய இடத்தில் வெளிப்படுத்தல் இடம்பெற வேண்டும் என பாப்தாதா விரும்புகிறார். நீங்கள் கருணை கொள்கிறீர்கள்தானே? நீங்கள் தந்தை பிரம்மாவின் இடத்துவாசிகள். எனவே, அதே நாட்டைச் சேர்ந்தவர்களின் மீது உங்களுக்கு உரியவர்கள் என்ற அன்பு இருக்கும்.
உங்களிடம் பல பொக்கிஷங்கள் உள்ளன. நற்குணங்களின் பொக்கிஷம் மிகப் பெரியது. சகல சக்திகளின் பொக்கிஷம் மிகப் பெரியது. ஆகவே, நற்குணங்களையும் சக்திகளையும் தானம் செய்யும் மாஸ்ரர் அருள்பவர்கள் ஆகுங்கள். உங்களுடன் தொடர்பில் வருகின்ற அல்லது ஓர் உறவுமுறையை ஏற்படுத்துகின்ற எல்லோருக்கும் நீங்கள் நிச்சயமாக ஏதாவதொரு நற்குணத்தை அல்லது சக்தியைப் பரிசாகக் கொடுக்க வேண்டும். எவருமே வெறுங்கையுடன் செல்லக்கூடாது. வேறு எதுவும் இல்லாவிட்டாலும், அவர்களுக்குத் தந்தையின் இனிய வார்த்தைகள் என்ற பரிசைக் கொடுங்கள். உலகிலுள்ள மக்கள் ஒரு பண்டிகையைக் கொண்டாடும்போது, அவர்கள் நிச்சயமாக மற்றவர்களின் வாய்களை இனிப்பானது ஆக்குகிறார்கள். பாப்தாதா கூறுகிறார்: நீங்கள் அவர்களின் வாய்களை இனிப்பாக்கி உள்ளீர்கள். ஆனால் நீங்கள் உங்களின் இனிய முகங்களையும் காட்ட வேண்டும். அது உங்களின் இனிய வாய்களாக மட்டுமல்லாது, உங்களின் முகங்களும் இனிப்பானது ஆகவேண்டும். நீங்கள் இந்தளவு இனிமையைச் சேகரித்துள்ளீர்கள்தானே? எந்தளவிற்கு நீங்கள் பகிர்ந்தளித்தாலும், நீங்கள் அப்போதும் நிரம்பி இருக்கிறீர்கள்தானே? உண்மையில், எந்தளவிற்கு அதிகமாக நீங்கள் இந்தப் பொக்கிஷத்தைப் பகிர்ந்தளிக்கிறீர்களோ, அந்தளவிற்கு அது அதிகரிக்கும். அது ஒருபோதும் குறைவடையாது. எனவே, இந்த வருடம், உங்களுக்கு முன்னால் வருகின்ற ஆத்மாக்களுக்கு எதையாவது கொடுத்தீர்களா என்பதைக் குறித்துக் கொள்ளுங்கள். அவர்கள் அதைக் கேட்காவிட்டால், அவர்களுக்கு இனிமையான, சக்திவாய்ந்த திருஷ்டியை வழங்குங்கள். எவ்வாறாயினும், நீங்கள் நிச்சயமாக அவர்களுக்கு எதையாவது கொடுக்க வேண்டும். எவரும் வெறுங்கையுடன் திரும்பிச் செல்லக்கூடாது. இது இலகுவானதுதானே? அல்லது, இது சிரமமா?
அச்சா. மனதின் ஒரு விநாடிக்குரிய அப்பியாசம் உங்களுக்கு நினைவிருக்கிறதா? நாள் முழுவதும் நீங்கள் ஒவ்வொருவரும் எத்தனை தடவைகள் இந்த அப்பியாசத்தைச் செய்கிறீர்கள்? இதைக் குறித்துக் கொள்ளுங்கள். எந்தளவிற்கு அதிகமாக நீங்கள் இந்த அப்பியாசத்தைச் செய்கிறீர்களோ, அந்தளவிற்கு அதிகமாக நீங்கள் ஓர் இலகு யோகியாகவும் இயல்பான யோகியாகவும் ஆகுவீர்கள். ஒருபுறம், உங்களின் மனங்களால் சேவை செய்யுங்கள். மறுபுறம், உங்களின் மனங்களுக்கு அப்பியாசத்தைக் கொடுங்கள். ஒருகணம், அசரீரி ஆகுங்கள். அடுத்தகணம், தேவதை ஆகுங்கள். தேவதைகளான உங்களைத் தந்தை பிரம்மா வரும்படி அழைக்கிறார். தேவதைகள் ஆகிய பின்னர், நீங்கள் அசரீரி வடிவில் தந்தை பிரம்மாவுடன் உங்களின் வீட்டுக்குத் திரும்பிச் செல்ல வேண்டும். அதன்பின்னர் நீங்கள் தேவதேவியர் ஆகவேண்டும். அச்சா.
பாப்தாதா சகல திசைகளில் இருந்தும் வாழ்த்து மடல்கள் மற்றும் கடிதங்களின் மூலம் அதிகளவு அன்பையும் நினைவுகளையும் பெற்றுள்ளார். ஒவ்வொரு குழந்தையும் தனது அன்பும் நினைவும் பாபாவிற்குக் கொடுக்கப்பட வேண்டும் என உணர்வதை பாப்தாதா அறிவார். ஆனால், பாபா ஏற்கனவே அதைப் பெற்றுவிட்டார். மிகவும் விசேடமான, அதியன்பிற்குரிய குழந்தைகள், தமது அன்பையும் நினைவுகளையும் கொடுப்பதற்காக பாப்தாதாவின் முன்னால் இருக்கிறார்கள். இதனாலேயே, பாப்தாதா கூறுகிறார்: ஒவ்வொரு குழந்தையும் தனிப்பட்ட முறையில் அவரின் பெயரால் பாப்தாதாவின் இதயபூர்வமான வாழ்த்துக்களையும் ஆசீர்வாதங்களையும் ஏற்றுக் கொள்ள வேண்டும். உங்கள் எல்லோருக்கும் மிக, மிக, பற்பல மில்லியன் மடங்கு இதயபூர்வமான வாழ்த்துக்களும் ஆசீர்வாதங்களும் உரித்தாகட்டும். அன்பும் நினைவும் நமஸ்தேயும்.
2002 டிசம்பர் 31 ஆம் திகதி நள்ளிரவில், புது வருடத்தின் மங்களகரமான ஆரம்பத்தின்போது, பாப்தாதா குழந்தைகள் எல்லோருக்கும் புது வருடத்திற்கான வாழ்த்துக்களை வழங்கினார்.
எங்கும் உள்ள மிக இனிமையான, மிகவும் அன்பான குழந்தைகள் எல்லோருக்கும் புது வருடத்திற்காகப் பலமில்லியன் மடங்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் உரித்தாகட்டும். இப்போது கடந்து சென்ற இந்தக் கணம், விடைபெறுவதற்கும் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் கொடுப்பதற்கான கணமாகும். ஒரு புறம், நீங்கள் விடைபெற வேண்டும். நீங்கள் சம்பூரணம் ஆகுவதற்கு எது உங்களுக்குள் தேவை இல்லை என நீங்கள் கருதுவதற்கு விடை கொடுங்கள். அதற்கு எல்லா வேளைக்குமாக விடைகொடுங்கள். முன்னால் பறப்பதற்கு வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்! அச்சா.
| ஆசீர்வாதம்: |
நீங்கள் முதலாம் இலக்க விசேட ஆத்மாவாக ஆகும் ஸ்திதியில் இருக்கும் உங்களின் அனுபவத்தில் உங்களை ஸ்திரப்படுத்திக் கொள்வீர்களாக. பிராமண ஆத்மாக்கள் எல்லோருக்கும் தாம் விசேடமான, முதலாம் இலக்க ஆத்மாக்கள் ஆகவேண்டும் என்ற எண்ணம் அவர்களுக்குள்ளே இருக்கிறது. எவ்வாறாயினும், அந்த எண்ணத்திற்கும் அதன் நிஜத்திற்கும் இடையில் உள்ள வேறுபாட்டை முடிப்பதற்கு, நீங்கள் அந்த விழிப்புணர்வை அனுபவம் செய்ய வேண்டும். நீங்கள் கேட்டவற்றையும் அறிந்தவற்றையும் நீங்கள் நினைப்பதைப் போல், அந்த ஸ்திதியின் அனுபவத்தை உங்களுக்குள் ஏற்படுத்துங்கள்.இதற்கு, உங்களினதும் காலத்தினதும் முக்கியத்துவத்தை அறிந்து, ஏதாவதோர் அனுபவத்தின் ஆசனத்தில் உங்களின் மனதையும் புத்தியையும் நிலைநிறுத்துங்கள். அப்போது நீங்கள் முதலாம் இலக்க விசேடமான ஆத்மா ஆகுவீர்கள். |
| சுலோகம்: | பிழையான விடயங்களுக்காகப் போட்டி போடுவதை விட்டுவிடுங்கள். எது நல்லதோ அதற்கான ஓட்டப்பந்தயத்தில் ஓடுங்கள். |