| 24-02-2025 |
காலைமுரளி
ஓம்சாந்தி
பாப்தாதா
|
மதுபன் |
| சாராம்சம்: | இனிய குழந்தைகளே இந்த ஆன்மிக வைத்தியசாலை அரைக் கல்பத்திற்கு உங்களை என்றென்றும் ஆரோக்கியமானவர் ஆக்குகின்றது. இங்கே ஆத்ம உணர்வில் அமர்ந்திருங்கள். |
| கேள்வி: | உங்கள் வியாபாரம் போன்றவற்றைச் செய்யும் போதும் உங்கள் புத்தி எந்த வழிகாட்டலை நினைவுசெய்ய வேண்டும்? |
| பதில்: | தந்தையின் வழிகாட்டல்: நீங்கள் சரீர அல்லது சூட்சுமதாரிகள் எவரையும் நினைவுசெய்யக் கூடாது. ஒரேயொரு தந்தையை மாத்திரம் நினைவுசெய்யும் போதே உங்கள் பாவங்கள் அழிகின்றன. இதற்கு உங்களுக்கு நேரம் இல்லை என நீங்கள் எவருமே கூற முடியாது. அனைத்தையும் செய்யும் போதும் நினைவில் நிலைத்திருங்கள். |
ஓம்சாந்தி. தந்தை காலை வந்தனங்கள் என இனிமையிலும் இனிமையான ஆன்மிகக் குழந்தைகளுக்குக் கூறுகின்றார். காலை வந்தனங்கள் எனக் கூறிய பின்னர் குழந்தைகளாகிய நீங்கள் தந்தையை நினைவுசெய்யுமாறு கேட்கப்படுகிறீர்கள். நீங்கள் அழைக்கிறீர்கள்: ஓ தூய்மையாக்குபவரே எங்களை வந்து தூய்மை ஆக்குங்கள்! எனவே அனைத்திற்கும் முதலில் தந்தை கூறுகின்றார்: ஆன்மிகத் தந்தையை நினைவுசெய்யுங்கள். அனைவரதும் ஆன்மிகத் தந்தை ஒருவரே ஆவார். ஒரு தந்தை என்றுமே சர்வவியாபி எனக் கருதப்படுவதில்லை. எனவே இயன்றளவு குழந்தைகள் அனைத்திற்கும் முதலில் தந்தையை நினைவுசெய்யுங்கள். தந்தையை தவிர வேறு எந்த சரீர அல்லது சூட்சுமதாரிகளை நினைவு செய்யாதீர்கள். இது மிகவும் இலகுவானது. மக்கள் தாம் மும்முரமாக இருப்பதாகவும் தமக்கு நேரம் இல்லை என்றும் கூறுகிறார்கள். எவ்வாறாயினும் இதற்கு எப்பொழுதுமே உங்களுக்கு நேரம் உள்ளது. தந்தை உங்களுக்கு வழியைக் காட்டுகின்றார். தந்தையை நினைவுசெய்தால் மாத்திரமே உங்கள் பாவங்கள் அழியும் என்பதை நீங்களும் அறிவீர்கள். இதுவே பிரதான விடயமாகும். எவருமே நீங்கள் வியாபாரம் செய்வதில் இருந்து உங்களைத் தடுப்பதில்லை. அவை அனைத்தையும் செய்யும் போதும் தந்தையை நீங்கள் நினைவுசெய்யுங்கள். அப்பொழுதே உங்கள் பாவங்கள் அழிய முடியும். நீங்கள் தூய்மையற்றவர்கள் என்பதை நீங்கள் புரிந்திருக்கிறீர்கள். சாதுக்கள் புனிதர்கள் ரிஷிகள் மற்றும் முனிவர்கள் போன்ற அனைவரும் ஆன்மிக முயற்சியைச் செய்கிறார்கள். கடவுளைச் சந்திப்பதற்காகவே ஒருவர் ஆன்மிக முயற்சி செய்கின்றார். அவரின் அறிமுகம் கிடைக்கின்ற வரையில் அவரை உங்களால் சந்திக்க முடியாது. உலகில் உள்ள எவருக்கும் தந்தையின் அறிமுகம் இல்லை என்பதை நீங்கள் அறிவீர்கள். அனைவரும் சரீரங்களின் அறிமுகத்தையே கொண்டிருக்கிறார்கள். பெரிதான ஒன்றினது அறிமுகத்தை ஒருவர் விரைவில் பெற்றுக் கொள்கின்றார். தந்தை வரும் போதே அவர் ஆத்மாக்களின் அறிமுகத்தைக் கொடுத்து உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். இரு விடயங்கள் உள்ளன: ஆத்மாவும் சரீரமும். ஓர் ஆத்மா நட்சத்திரம் என்பதுடன் மிகவும் சூட்சுமானவர் என்பதால் எவராலும் பார்க்க முடியாது. நீங்கள் இங்கே வந்து அமரும் போது நீங்கள் ஆத்ம உணர்வில் அமர வேண்டும். இது ஒரு வைத்தியசாலையும் ஆகும். இது உங்களை அரைக்கல்பத்திற்கு என்றென்றும் ஆரோக்கியமானவர் ஆக்குகின்ற வைத்தியசாலையாகும். ஆத்மாக்கள் அழியாதவர்கள். அவர்கள் ஒருபோதுமே அழிவதில்லை. ஒவ்வோர் ஆத்மாவிலும் முழுப் பாகமும் உள்ளது. ஆத்மா கூறுகின்றார்: நான் என்றுமே அழிக்கப்பட முடியாதவன். இந்த ஆத்மாக்கள் அனைவருமே அழியாதவர்கள். சரீரங்கள் அழியக்கூடியன. நீங்கள் ஆத்மாக்கள் என்பதும் நீங்கள் அழியாதவர்கள் என்பதும் நீங்கள் 84 பிறவிகளை எடுக்கிறீர்கள் என்பதும் இது நாடகத்தில் உள்ளது என்பதும் இப்பொழுது உங்கள் புத்தியில் உள்ளது. எந்த நேரத்தில் எந்தச் சமய ஸ்தாபகர்கள் எப்போது வருகின்றார்கள் என்பதும் அவர்கள் எத்தனை பிறவிகள் எடுக்கிறார்கள் என்பதையும் நீங்கள் அறிவீர்கள். நினைவுகூரப்பட்ட 84 பிறவிகள் நிச்சயமாக ஒரு சமயத்திற்கு உரியதாகவே இருக்க வேண்டும். அவை அனைத்திற்குமானதாக இருக்க முடியாது. அனைத்து சமயங்களும் ஒரே நேரத்தில் வருவதில்லை. மற்றவர்களைப் பற்றிய எந்தவொரு விடயத்தையும் நாம் ஏன் கணக்கிட்டுக் கொண்டிருக்க வேண்டும்? இன்ன இன்னார் இன்ன இன்ன நேரத்தில் ஒரு சமயத்தை ஸ்தாபிக்க வருகின்றார் என்பதை நாங்கள் அறிவோம். அதன் பின்னர் அதன் விரிவாக்கம் உள்ளது. அனைவருமே தமோபிரதானில் இருந்து சதோபிரதான் ஆக வேண்டும். இந்த உலகம் தமோபிரதானாக இருக்கின்ற போதே தந்தை வந்து அதனை சதோபிரதானான சத்தியயுகமாக ஆக்குகின்றார். பாரதமக்களாகிய நீங்களே புதிய உலகிற்கு வந்து அதனை ஆட்சி செய்வீர்கள் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது அறிந்திருக்கிறீர்கள். அங்கே வேறு எந்த சமயங்களும் இருப்பதில்லை. குழந்தைகளாகிய உங்கள் மத்தியிலும் உயர்ந்த அந்தஸ்தை கோர இருப்பவர்களே நினைவில் நிலைத்திருப்பதற்கு அதிகளவு முயற்சி செய்வதுடன் அவர்களே தமது செய்திகளையும் எழுதுவார்கள்: பாபா நான் இந்தளவு நேரம் நினைவில் நிலைத்திருக்கின்றேன். வெட்கத்தின் காரணமாக சிலர் முற்றாகவே தமது செய்திகளை எழுதுவதில்லை. அவர்கள் யோசிக்கிறார்கள்: பாபா என்ன சொல்வார்? எவ்வாறாயினும் பாபாவிற்கு எப்படியும் தெரியும். பாடசாலையில் ஓர் ஆசிரியர் மாணவர்களிடம் கூறுவார்: நீங்கள் கற்காது விட்டால் சித்தியடைய மாட்டீர்கள். லௌகீகப் பெற்றோரும் தமது குழந்தைகள் எவ்வளவு கற்கிறார்கள் என்பதிலிருந்து இதனைப் புரிந்து கொள்கிறார்கள். இது மிகப் பெரிய பாடசாலை ஆகும். இங்கே நீங்கள் வரிசைக்கிரமமாக அமர வைக்கப்படுவதில்லை. உங்கள் புத்தி இது வரிசைக்கிரமம் என்பதை புரிந்து கொண்டுள்ளது. பாபா இப்பொழுது நல்ல குழந்தைகளை வேறு இடங்களுக்கு அனுப்புகின்றார். அவர்கள் வேறு இடங்களுக்குச் செல்கின்ற போது பிறர் எழுதுகிறார்கள்: எங்களுக்கு ஒரு மகாராத்தி வேண்டும். எனவே அவர்கள் திறமைசாலிகள் என்பதையும் தம்மைவிட நன்றாக அறியப்பட்டவர்கள் என்பதையும் நிச்சயமாகப் புரிந்து கொள்கிறார்கள். இது வரிசைக்கிரமமானது. கண்காட்சிகளில் பல வகையான மக்கள் வருகிறார்கள். எனவே அவர்களைச் சோதித்து பார்ப்பற்கு அங்கே வழிகாட்டிகளும் நிற்க வேண்டும். மக்களை வரவேற்பவர்களுக்கு எவ்வகையான மக்கள் வந்திருக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ள முடியும். எனவே விளங்கப்படுத்துபவர்களுக்கு அவர் சமிக்கை கொடுக்க வேண்டும்: இம் மக்களுக்கு நீங்கள் விளங்கப்படுத்தலாம். முதற்தரமானவர்கள் இரண்டாம் தரமானவர்கள் மூன்றாம் தரமானவர்கள் உள்ளனர் என்பதை உங்களால் புரிந்து கொள்ள முடியும். அங்கே நீங்கள் அனைவருக்கும் சேவை செய்ய வேண்டும். முக்கியஸ்தர் வரும் போது அனைவரும் அவருக்கு அதிகளவு விருந்தோம்பல் வழங்குவார்கள். இது நியதியாகும். தந்தை அல்லது ஆசிரியர் வகுப்பில் உள்ள மாணவர்களைப் புகழ்வார்கள். இதுவும் விசேட கவனிப்பு ஆகும். பெயரைப் பெருமைப்படுத்தும் குழந்தைகள் மீது விசேட கவனம் செலுத்தப்படுவதுடன் அவர்கள் புகழப்படுகிறார்கள். இன்ன இன்னார் செல்வந்தர் என்றும் சமயவாதி என்றும் கூறுவது அவரைப் புகழ்வதே ஆகும். அதிமேலானவர் கடவுள் என்பதை நீங்கள் இப்பொழுது அறிவீர்கள். அவர் உண்மையில் அதிமேலானவரே என மக்கள் கூறுகிறார்கள். ஆனால் அவர்களிடம் அவரின் வரலாற்றை கூறுமாறு கேட்கும் போது அவர் சர்வவியாபி எனக் கூறுகிறார்கள். அவர்கள் அவரை முற்றாக கீழே வீழ்த்தி விடுகிறார்கள். அதிமேலானவர் கடவுள் என்றும் அவர் பரந்தாமவாசி என்றும் அந்த தேவதைகளோ சூட்சும உலகில் இருப்பவர்கள் என்பதையும் நீங்கள் இப்பொழுது அவர்களுக்கு விளங்கப்படுத்தலாம். இங்கே மனிதர்கள் வாழ்கிறார்கள். எனவே அசரீரியான அதிமேலானவரே கடவுள் ஆவார். நீங்கள் வைரம் போன்றவர்களாக இருந்தீர்கள் என்பதையும் இப்பொழுது சிப்பிகளைப் போல் ஆகி விட்டீர்கள் என்பதையும் ஆதலால் கடவுளையும் நீங்கள் உங்களையும் விடத் தாழ்ந்தவராகக் காட்டியுள்ளீர்கள் என்பதும் இப்பொழுது உங்களுக்குத் தெரியும். நீங்கள் அவரை இனங்காணாமல் இருக்கிறீர்கள். பாரதமக்களாகிய நீங்கள் அந்த அங்கீகாரத்தைப் பெறுகிறீர்கள். பின்னர் அந்த அங்கீகாரம் குறைந்து செல்கின்றது. இப்பொழுது நீங்கள் தொடர்ந்தும் தந்தையின் அறிமுகத்தை அனைவருக்கும் கொடுக்கிறீர்கள். பலரும் தந்தையின் அறிமுகத்தைப் பெறுவார்கள். திரிமூர்த்தியும் சக்கரமும் விருட்சமுமே உங்களுடைய பிரதான படங்கள் ஆகும். அவற்றில் அதிகளவு ஞானோதயம் உள்ளது. இலக்ஷ்மியும் நாராயணனுமே சத்தியயுகத்தின் அதிபதிகள் என எவருமே கூறுவார்கள். ஓகே சத்தியயுகத்தின் முன்னர் என்ன இருந்தது? இந்த நேரத்தில் மாத்திரமே உங்களுக்கு இது தெரியும். இப்பொழுது இது கலியுகக் கடைசி என்பதால் இப்பொழுது மக்கள் மக்களை ஆட்சி செய்கிறார்கள். இப்பொழுது இராச்சியங்கள் எதுவும் இல்லை அதிகளவு வேறுபாடு உள்ளது. சத்தியயுக ஆரம்பத்தில் அரசர்கள் இருந்தார்கள். இப்பொழுதும் கலியுகத்திலும் அரசர்கள் இருக்கிறார்கள். இருப்பினும் அவர்கள் எவருமே தூய்மையாக இருப்பதில்லை. சிலர் வெறுமனே அப்பட்டங்களை வாங்கிக் கொள்கிறார்கள். எவருமே உண்மையான மகாராஜாக்கள் இல்லை. அவர்கள் பட்டங்களை வாங்கிக் கொள்கிறார்கள். உதாரணமாக பட்டியாலா, ஜோத்பூர், பிக்கனீர் போன்றவற்றில் மகாராஜாக்கள் உள்ளார்கள். அவர்கள் அப்பெயர்களைக் குறிப்பிடுகிறார்கள். அந்தப் பெயர்கள் அநாதியாக தொடர்கின்றன. முதலில் தூய சக்கரவர்த்திகள் இருந்தனர். இப்பொழுது தூய்மையற்றவர்கள் இருக்கிறார்கள். அரசர்கள் சக்கரவர்த்திகள் என்ற பெயர்கள் தொடர்கின்றன. இலக்ஷ்மி நாராயணனை இராச்சியத்தை கோரிய சத்தியயுகத்தின் அதிபதிகள் என நீங்கள் கூறுவீர்கள். இப்பொழுது எவ்வாறு இராச்சியம் ஸ்தாபிக்கப்படுகின்றது என்பதை நீங்கள் அறிவீர்கள். தந்தை கூறுகின்றார்: நான் இப்பொழுது உங்களுக்கு 21 பிறவிகளுக்காகக் கற்பிக்கின்றேன். அம்மக்கள் ஒரே பிறவியில் கற்று சட்டநிபுணர்கள் போன்றோர் ஆகின்றார்கள். நீங்கள் இந்த நேரத்தில் கற்று எதிர்காலத்தில் சக்கரவர்த்தி சக்கரவர்த்தினிகள் ஆகுகிறீர்கள். நாடகத்திட்டத்திற்கு ஏற்ப புதிய உலகம் ஸ்தாபிக்கப்படுகின்றது. இப்பொழுது இது பழைய உலகமாகும். மிக நல்ல பெரிய மாளிகைகள் இருந்த போதிலும் வைரங்கள் இரத்தினங்கள் பதித்த மாளிகைகளைக் கட்டும் சக்தி எவரிடமும் இல்லை. சத்தியயுகத்தில் அந்த மாளிகைகள் போன்ற அனைத்தையும் வைரங்களும் இரத்தினங்களும் பதித்தே கட்டுகிறார்கள். அவற்றைக் கட்டுவதற்கு நீண்ட காலம் எடுப்பதில்லை. இங்கேயும் ஒரு பூமி அதிர்ச்சி போன்றன இடம்பெறும் போது அவர்கள் பல ஒப்பந்தக்காரர்களை நியமித்து முழு நகரத்தையும் ஓரிரு வருடங்களுக்குள் மீளக்கட்டி விடுகிறார்கள். புதிய டெல்கியைக் கட்டுவதற்கு அவர்களுக்கு 8 முதல் 10 வருடங்கள் எடுத்தன. ஆனால் அங்குள்ள பணியாட்களுக்கும் இங்குள்ள பணியாட்களுக்கும் இடையில் வேறுபாடு உள்ளது. இக்காலத்தில் அவர்கள் தொடர்ந்தும் புதிய பொருட்களைக் கண்டுபிடிக்கிறார்கள். விஞ்ஞானக் கட்டுமானத்தில் அதிகளவு வலிமை உள்ளது. அனைத்திற்கும் உதிரிப்பாகங்களைப் பெற முடிவதால் தொடர்மாடிக் கட்டடங்கள் விரைவில் கட்டப்படுகின்றன. அவற்றை அவர்கள் இங்கே மிக விரைவில் கட்டுவதால் இவை அனைத்தும் அங்கே மிகவும் பயனளிக்கும். இவை அனைத்தும் உங்களுடன் செல்கின்றன அந்த சம்ஸ்காரங்கள் இன்னமும் இருக்கிறது. விஞ்ஞான சம்ஸ்காரங்கள் உங்களுடன் செல்லும். எனவே தந்தை இப்பொழுது தொடர்ந்தும் உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார்: நீங்கள் தூய்மை ஆக வேண்டுமாயின் தந்தையை நினைவு செய்யுங்கள். தந்தை காலை வந்தனம் கூறுகின்றார். அதன் பின்னர் உங்களுக்குக் கற்பிக்கின்றார்: குழந்தைகளே நீங்கள் தந்தையின் நினைவில் அமர்ந்திருக்கிறீர்களா? நடந்து திரியும் போதும் தந்தையை நினைவுசெய்யுங்கள். ஏனெனில் உங்கள் தலைகளில் பல பிறவிகளின் சுமைகள் உள்ளன. நீங்கள் ஏணியில் கீழே இறங்கும் போது 84 பிறவிகளை எடுக்கிறீர்கள். இப்பொழுது ஏறும் ஸ்திதியானது ஒரேயொரு பிறவியே ஆகும். நீங்கள் தந்தையை எந்தளவிற்கு அதிகளவு நினைவு செய்கிறீர்களோ அந்தளவிற்கு அதிகளவு சந்தோஷம் இருப்பதுடன் நீங்கள் சக்தியையும் பெறுகிறீர்கள். பல குழந்தைகளுக்கு முன்னிலையில் ஓர் இலக்கம் கொடுக்கப்பட்ட போதிலும் அவர்கள் முற்றாக நினைவில் நிலைத்திருப்பதில்லை. இந்த ஞானத்தில் அவர்கள் திறமைசாலிகளாக இருப்பினும் அவர்கள் நினைவு யாத்திரையில் இருப்பதில்லை. தந்தை குழந்தைகளாகிய உங்களை புகழ்கின்றார். இவரும் முதல் இலக்கத்தவர் என்பதால் இவர் நிச்சயமாக முயற்சி செய்வார். சிவபாபாவே உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார் என்றே எப்பொழுதும் நினைக்க வேண்டும். அப்பொழுதே உங்கள் புத்தி யோகத்தில் அங்கே இணைக்கப்பட்டிருக்கும். இவரும் கற்றுக் கொண்டிருக்கின்றார். இருப்பினும் இவர் கூறுகின்றார்: பாபாவை நினைவுசெய்யுங்கள். இப்படங்களை எவருக்குமே விளங்கப்படுத்த முடியும். அசரீரியானவரே கடவுள் என அழைக்கப்படுகின்றார். அவர் வந்து ஒரு சரீரத்தை எடுக்கின்றார். ஒரேயொரு கடவுளின் குழந்தைகள் சகோதரர்களான ஆத்மாக்கள். அவர்கள் இப்பொழுது சரீரத்தில் பிரவேசம் செய்திருக்கின்றார்கள். அனைவருமே அமரத்துவமான ரூபங்கள் ஆவார்கள். இந்தச் சரீரமே இந்த அமரத்துவ ரூபத்தின் (ஆத்மாவின்) சிம்மாசனமாகும். அமரத்துவ சிம்மாசனம் குறித்த ஒன்றல்ல. இதுவே இந்த அமரத்துவ ரூபத்தின் சிம்மாசனமாகும். ஒவ்வோர் ஆத்மாவும் ஒரு நெற்றியின் மத்தியில் இருக்கின்றார். ஒவ்வொருவரும் அமரத்துவ சிம்மாசனம் என அழைக்கப்படுகின்றார்கள். இது அந்த அமரத்துவ ரூபத்தின் அமரத்துவ சிம்மாசனமாகும். ஆத்மாக்கள் அனைவரும் அமரத்துவமானவர்கள். அவர்கள் மிகவும் சூட்சுமமானவர்கள். தந்தை அசரீரியானவர். அவர் எங்கிருந்து தனது சிம்மாசனத்தை எடுத்து வருவார்? தந்தை கூறுகின்றார்: இது எனது சிம்மாசனமும் ஆகும். நான் வந்து இந்த சிம்மாசனத்தை வாடகைக்கு எடுக்கின்றேன். நான் இந்த பிரம்மாவின் சாதாரண பழைய சரீரத்தில் வந்து அமர்கின்றேன். இதுவே ஒவ்வோர் ஆத்மாவினதும் சிம்மாசனம் என்பதை இப்பொழுது நீங்கள் அறிவீர்கள். இது மனிதர்களை மாத்திரமே குறிக்கின்றது. இது மிருகங்களுக்குப் பொருந்தாது. மிருகங்களை விடச் சீரழிந்துள்ள மனிதர்கள் குறைந்தபட்சம் முதலில் தம்மை சீராக்கிக் கொள்ள வேண்டும். மக்கள் உங்களிடம் மிருகங்களைப் பற்றி வினவினால் அவர்களிடம் கூறுங்கள்: அனைத்திற்கும் முதலில் குறைந்தபட்சம் உங்களை சீராக்கிக் கொள்ளுங்கள். சத்தியயுகத்தில் மிருகங்களுமே மிகவும் நன்றாக முதற்தரமாக உள்ளன. அங்கே குப்பை போன்ற எதுவும் இருக்க மாட்டாது. ஓர் அரசரின் மாளிகையில் புறாக்கள் தமது எச்சத்தை இடுமாயின் அபராதம் விதிக்கப்படும். அங்கே எந்தக் குப்பையுமே இருக்க மாட்டாது. அங்கே அவர்கள் மிகவும் அவதானமாக இருக்கின்றனர். எந்த மிருகங்களும் உட்புகாதவாறு காவல் காக்கப்படுகின்றது. அங்கே அதிகளவு சுத்தம் காணப்படும். இலக்ஷ்மி நாராயணன் ஆலயமும் அதிகளவு சுத்தமாக உள்ளது. சங்கரர் பார்வதி ஆலயத்திலுமே அவர்கள் ஒரு புறாவைக் காட்டுகின்றார்கள். எனவே அவை ஆலயத்தையும் நிச்சயமாக அசுத்தம் செய்கின்றன. அவர்கள் அத்தகைய பல கதைகளை சமயநூல்களில் எழுதியுள்ளார்கள். தந்தை இப்பொழுது குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். ஆனால் அதனை வெகு சிலரே கிரகிக்கின்றார்கள். ஏனையோருக்கு எதுவுமே புரிவதில்லை. தந்தை குழந்தைகளாகிய உங்களுக்கு அதிகளவு அன்புடன் விளங்கப்படுத்துகின்றார்: குழந்தைகளே மிக மிக இனிமையானவர் ஆகுங்கள். உங்கள் உதடுகளில் சதா இரத்தினங்களே வெளிப்படட்டும். நீங்கள் ரூப்பும் பசாண்ட்டும் ஆவீர்கள். கற்கள் உங்களிடமிருந்து வெளிவரக்கூடாது. ஆத்மாக்கள் புகழப்படுகிறார்கள். ஓர் ஆத்மா கூறுகின்றார்: நான் ஜனாதிபதி. நான் இன்ன இன்னார். இது எனது சரீரத்தின் பெயராகும். நல்லது ஆத்மாக்கள் யாருடைய குழந்தைகள்? ஒரேயொரு பரமாத்மாவினதாகும். எனவே நிச்சயமாக நீங்கள் அவரிடமிருந்து ஆஸ்தியை பெற வேண்டும். எனவே அவர் எவ்வாறு சர்வவியாபியாக இருக்க முடியும்? உங்களுக்கும் முன்னர் எதுவும் தெரிந்திருக்கவில்லை என்பதை நீங்கள் இப்பொழுது புரிந்து கொண்டிருக்கின்றீர்கள். உங்கள் புத்தி இப்பொழுது அதிகளவு திறந்திருக்கின்றது. இப்பொழுது நீங்கள் எந்த ஆலயத்திற்குச் சென்றாலும் அந்தப் படங்கள் அனைத்தும் பிழையானவை என்பதைப் புரிந்து கொள்கிறீர்கள். படங்களில் உள்ளதைப் போன்று பத்துக் கரங்கள் அல்லது யானையின் தும்பிக்கையுடன் யாராவது இருக்க முடியுமா? அவை அனைத்தும் பக்தி மார்க்கத்தின் சம்பிரதாயங்கள் ஆகும். உண்மையில் ஒரேயொரு சிவபாபாவிற்கான பக்தி மாத்திரமே இருக்க வேண்டும். அவரே அனைவருக்கும் சற்கதி அருள்பவர் ஆவார். இலக்ஷ்மியும் நாராயணனும் 84 பிறவிகளை எடுக்கிறார்கள் என்பது உங்கள் புத்தியில் உள்ளது. அதன் பின்னர் அதிமேலான தந்தை வந்து அனைவருக்கும் சத்கதி அருள்கின்றார். அவரைவிட மேலானவர்கள் எவரும் இல்லை. உங்கள் மத்தியிலும் இந்த ஞான விடயங்களை வரிசைக்கிரமமாகவே உங்களால் கிரகிக்க முடிகின்றது. அவற்றை ஒருவரால் கிரகிக்க முடியாதிருந்தால் அவரால் என்ன பலன்? குருடர்களுக்கு ஊன்றுகோலாக ஆகுவதற்கு பதிலாக சிலர் தாமே குருடர்கள் ஆகுகின்றார்கள். ஒரு பசு பால் தராது விட்டால் அவர்கள் அதனை மாட்டுத் தொழுவத்திலேயே பூட்டி வைத்து விடுகிறார்கள். இங்கும் சிலரால் இந்த ஞானம் என்ற பாலை கொடுக்க முடியாதுள்ளது. சற்றேனும் எந்த முயற்சியுமே செய்யாத பலரும் இருக்கின்றார்கள். யாரோ ஒருவருக்கேனும் தாம் நன்மை செய்ய வேண்டும் என்றேனும் அவர்கள் புரிந்து கொள்வதில்லை. தமது சொந்தப் பாக்கியத்தை இட்டு அவர்கள் எந்த அக்கறையும் கொண்டிருப்பதில்லை. அவர்கள் தாம் பெற்றுக் கொள்வது போதும் என்ற சந்தோஷத்தில் இருக்கின்றார்கள். தந்தை கூறுவார்: அது அவரின் பாக்கியத்தில் இல்லை. சத்கதி பெறுவதற்கு ஒருவர் முயற்சி செய்ய வேண்டும். நீங்கள் ஆத்ம உணர்வுடையவர் ஆக வேண்டும். தந்தையே அதிமேலானவர். எனினும் அவர் இந்தத் தூய்மையற்ற உலகிற்கு ஒரு தூய்மையற்ற சரீரத்தில் வருவதைப் பாருங்கள்! அவர் இந்தத் தூய்மையற்ற உலகிற்கு வருமாறு அழைக்கப்படுகின்றார். இராவணன் அனைவரையும் முற்றாகச் சீரழித்த பின்னர் தந்தை வந்து உங்களை மேன்மையானவர் ஆக்குகின்றார். நன்றாக முயற்சி செய்பவர்கள் அரசர்களாகவும் அரசிகளாகவும் ஆகுகின்றார்கள். ஆனால் எந்த முயற்சியையும் செய்யாதவர்கள் ஏழைகள் ஆகுகிறார்கள். அவர்களின் பாக்கியத்தில் அது இல்லாததால் அவர்களால் முயற்சி செய்ய முடிவதில்லை. சிலர் தமது பாக்கியத்தை மிகச் சிறப்பாக ஆக்கிக் கொள்கிறார்கள். நீங்கள் ஒவ்வொருவரும் உங்களைப் பரீட்சித்துப் பார்க்கலாம்: நான் என்ன சேவை செய்கின்றேன்? அச்சா.
இனிமையிலும் இனிமையான அன்புக்குரிய எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய் தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
- ரூப்பும் பசாண்ட்டும் ஆகுங்கள். உங்கள் உதடுகளிலிருந்து சதா இரத்தினங்கள் வெளிப்படட்டும். மிக மிக இனிமையானவர் ஆகுங்கள். என்றுமே உங்கள் உதடுகளில் இருந்து கற்கள் (தீய வார்த்தைகள்) வெளிப்படாதிருக்க வேண்டும்.
- இந்த ஞானத்திலும் யோகத்திலும் திறமைசாலி ஆகி உங்களுக்கும் பிறருக்கும் நன்மை அளியுங்கள். உங்கள் பாக்கியத்தை மேன்மையானதாக ஆக்குங்கள். குருடர்களுக்கு ஊன்றுகோல் ஆகுங்கள்.
| ஆசீர்வாதம்: |
உங்கள் திருப்தியின் ஊடாக நீங்கள் சதா சந்தோஷமாக இருந்து அனைவராலும் புகழப்படுவீர்களாக. நடைமுறையில் உங்கள் சந்தோஷம் தென்படுவதே நீங்கள் திருப்தியாக இருப்பதன் அடையாளமாகும். சதா திருப்தியாகவும் சந்தோஷமாகவும் இருப்பவர்கள் நிச்சயமாக அனைவராலும் புகழப்படுவார்கள். உங்கள் சந்தோஷத்தினூடாக மாத்திரமே நீங்கள் புகழப்பட முடியும். எனவே சதா திருப்தியாகவும் சந்தோஷமாகவும் இருந்து பிறருக்கும் அவற்றை வழங்குகின்ற விசேட ஆசீர்வாதத்தைப் பெறுங்கள். பிராமணர்களாகிய உங்கள் அனைவரதும் நிலையான சந்தோஷமே நீங்கள் இந்த யாகத்தில் இடுகின்ற இறுதி ஆகுதியாகும். நீங்கள் அனைவரும் சதா சந்தோஷமாக இருக்கின்ற போது வெளிப்பாட்டின் ஓசை எதிரொலிக்கும். அதாவது வெற்றி கொடி ஏற்றப்படும். |
| சுலோகம்: | வைரமாக இருந்து ஒரு வைரமாகுவதன் செய்தியைக் கொடுப்பதே வைர விழாக் கொண்டாட்டம் ஆகும். |
ஏகாந்தத்தின் மீது அன்பு வைத்து ஒற்றுமையையும் ஒருமுகப்படுத்தலையும் கிரகியுங்கள்.
ஏகாந்தமாக இருப்பது என்றால் எங்குமுள்ள அனைத்து அதிர்வுகளுக்கும் அப்பால் செல்வது என்று அர்த்தமாகும். ஏகாந்தத்தை விரும்பாத பலர் இருக்கிறார்கள். அவர்கள் ஓர் ஒன்றுகூடலில் அதிகளவு சிரித்து கொண்டும் மகிழ்ச்சியாக இருப்பதற்குமே விரும்புகிறார்கள். எவ்வாறாயினும் அது புறநோக்குடன் இருப்பது என்று அர்த்தம். இப்பொழுது நீங்கள் ஏகாந்தமாக இருந்து அதாவது சகல கவர்ச்சிகளின் அதிர்வுகளுக்கும் அப்பால் சென்று அகநோக்கில் இருங்கள். இந்தப் பயிற்சி மாத்திரமே பயன் தரக்கூடிய காலம் வரவுள்ளது. புறக் கவர்ச்சிகளில் ஆதிக்கம் செலுத்தப்படுகின்ற பழக்கம் இருந்தால் ஏதோ ஒரு நேரத்தில் நீங்கள் ஏமாற்றம் அடைவீர்கள்.