தமிழ் முரளி · Brahma Kumaris

இன்றைய முரளி · 21 மார்ச், 2026

ஓம் சாந்தி · BapDada · 21 மார்ச், 2026

இன்றைய முரளி — தினமும் காலையில் புதியது.

18
பதிவிறக்கு PDF
0:00--:--

உரையைத் தேர்ந்தெடுக்கவும் → ஹைலைட் / பெட்டி / அடிக்கோடு

21-03-2026
காலைமுரளி
ஓம்சாந்தி
பாப்தாதா
மதுபன்

சாராம்சம்: இனிய குழந்தைகளே, ஸ்ரீமத்தைப் பின்பற்றி உபகாரி ஆகுங்கள். அனைவருக்கும் சந்தோஷத்துக்கான பாதையைக் காட்டுங்கள்.
கேள்வி: சில குழந்தைகள் ஏதேனும் தவறுகள் செய்வதற்கான முக்கிய காரணம் என்ன?
பதில்: சரீர உணர்வே ஆகும். சரீர உணர்வினாலேயே குழந்தைகள் பல தவறுகளைச் செய்கின்றார்கள்; அவர்களால் சேவை செய்யவும் முடிவதில்லை. அனைவரும் அவர்களை வெறுக்கக்கூடிய அத்தகைய செயல்களை அவர்கள் செய்கின்றனர். பாபா கூறுகின்றார்: குழந்தைகளே, ஆத்ம உணர்வு உடையவர்கள் ஆகுங்கள்! தவறான செயல்கள் எதையும் செய்யாதீர்கள்! பாலும் சீனியும் போலாகி, சேவைக்காக மிக நல்ல திட்டங்களைத் தீட்டுங்கள். முரளியைச் செவிமடுத்து அதனைக் கிரகியுங்கள். இதில் கவனயீனமாக இருக்காதீர்கள்.
பாடல்: உங்கள் ஆகாய சிம்மாசனத்தை விட்டுக் கீழே பூமிக்கு இறங்கி வாருங்கள்!

ஓம்சாந்தி. ஆன்மீகக் குழந்தைகளான உங்களுக்காக, ஆன்மீகத் தந்தையிடம் இருந்து ஸ்ரீமத் வருகின்றது. பாபா இப்பொழுது அனைத்து நிலையங்களிலும் உள்ள குழந்தைகளான எங்களுடன் பேசுகின்றார். திரிமூர்த்தி, சக்கரம்,கல்ப விருட்சம், ஏணிப் படம், இலக்ஷ்மி, நாராயணன், ஸ்ரீகிருஷ்ணர் என்பனவே ஆறு பிரதான படங்கள். இது ஒரு முழுமையான கண்காட்சி போன்றது; முழுச் சாராம்சமும் இதில் அடங்கியுள்ளது. ஒரு சினிமாப் படத்திற்கான அல்லது நாடகம் போன்றவற்றின் விளம்பரத்துக்காக அவர்கள் செய்கின்ற விளம்பரப் பலகைகள் ஒருபொழுதும் மழையினால் சேதம் அடைவதில்லை. இந்தப் பிரதான படங்களும் அவ்வாறான பலகைகளில் வர்ணம் தீட்டப்பட வேண்டும். குழந்தைகளாகிய நீங்கள் ஆன்மீகச் சேவையை அதிகரித்து, பாரத மக்களுக்கு நன்மை பயப்பதற்காகவே ஸ்ரீமத்தைப் பெறுகின்றீர்கள். எல்லையற்ற தந்தை நன்மை பயப்பவர் என நினைவு கூரப்படுகின்றது, அவ்வாறாயின், நிச்சயமாக இழப்பை ஏற்படுத்தும் யாரோ ஒருவர் இருக்க வேண்டும், ஆகையாலேயே தந்தை வந்து அனைவருக்கும் நன்மை செய்ய வேண்டியுள்ளது. நன்மை அடைகின்ற ஆன்மீகக் குழந்தைகளால் இந்த விடயங்களைப் புரிந்துகொள்ள முடியும். நாங்கள் நன்மை அடைந்ததைப் போல், மற்றவர்களுக்கு நாம் நன்மை செய்ய வேண்டும். தந்தையும் அனைவருக்கும் எவ்வாறு நன்மை பயக்கலாம் என்ற எண்ணங்களைக் கொண்டிருக்கின்றார். அவர் இதற்காக உங்களுக்கு வெவ்வேறு வழிமுறைகளைக் காட்டுகின்றார். படங்கள் 6அடி x 9அடி பலகைகளில் செய்யப்பட வேண்டும் பொதுவாக, அரசாங்கம் சந்திப்புகளை நடத்துகின்ற டெல்லி போன்ற நகரங்களுக்கு மக்கள் செல்கின்றார்கள். பலர் அரசாங்க செயலகங்களுக்கும் செல்கின்றார்கள். இந்தப் படங்கள் அங்கே வைக்கப்பட வேண்டும். தந்தை மக்கள் பலரும் நன்மை அடைவதற்கான வழிகாட்டல்களை உங்களுக்குக் கொடுக்கின்றார். தகரங்களிலும் பல படங்களை உருவாக்கலாம். ஆத்ம உணர்வு உடையவராகி, தந்தையின் சேவையில் உங்களை ஈடுபடுத்திக் கொள்ளுங்கள். இந்தப் படங்கள் இந்தியிலும், ஆங்கிலத்திலும் செய்யப்பட வேண்டும் எனத் தந்தை உங்களுக்கு அறிவுரை வழங்குகிறார். இந்த ஆறு படங்களும் பிரதான இடங்களில் வைக்கப்பட வேண்டும். அவை அவ்வாறான பிரதான இடங்களில் வைக்கப்பட்டால், நூற்றுக் கணக்கான மக்கள் புரிந்து கொள்வதற்கு உங்களிடம் வருவார்கள். எவ்வாறாயினும், குழந்தைகளுக்குச் சரீர உணர்வு உள்ளதால் பல தவறுகளைச் செய்கின்றனர். நீங்கள் முழுமையாக ஆத்ம உணர்வு உடையவர்கள் என உங்களில் எவருமே எண்ணக்கூடாது. சிலர் பல தவறுகளைச் செய்கின்றார்கள், அவர்கள் உண்மையைக் கூறுவதில்லை. பிறர் உங்களை வெறுத்து, நீங்கள் சரீர உணர்வு உடையவர் எனச் சுட்டிக் காட்டக்கூடிய வகையில் தவறான செயல்கள் எதையும் நீங்கள் செய்யக்கூடாதென விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. நீங்கள் சதா ஒரு யுத்த களத்தில் உள்ளீர்கள். ஏனைய இடங்களில் ஒரு யுத்தம் 10 இலிருந்து 20 வருடங்கள் வரை நீடிக்கக்கூடும். மாயையுடனான உங்கள் யுத்தம் இறுதி வரை நீடிக்கும். ஆயினும் இது மறைமுகமானது, எவருமே இது பற்றி அறியார். கீதையில் காட்டப்பட்டுள்ள மகாபாரத யுத்தம் பௌதீகமானது, ஆனால் இந்த யுத்தம் ஆன்மீகமானது. இது பாண்டவர்களின் ஆன்மீக யுத்தமாகும். பரமாத்மா பரமதந்தை மீது அன்பற்ற புத்தியைக் கொண்டவர்களினதே அந்தப் பௌதீக யுத்தம் ஆகும். பிராமணக் குலத்தின் அலங்காரங்களான நீங்கள் அன்பான புத்தியைக் கொண்டவர்கள். நீங்கள் ஏனைய அனைவரிடம் இருந்தும் உங்களைத் துண்டித்து, ஒரேயொரு தந்தையுடன் உங்களை இணைத்துள்ளீர்கள். பல தடவைகள் சரீர உணர்வு உடையவர் ஆகுவதால், நீங்கள் மறந்து விடுவதுடன், பின்னர் உங்கள் சொந்த அந்தஸ்தையும் அழிக்கின்றீர்கள். பின்னர் இறுதியில் அதிக வருந்துதல் இருக்கும். அந்நேரத்தில் எதுவுமே செய்ய முடியாதிருக்கும். இதுவே ஒவ்வொரு கல்பத்திற்குமான ஒரு பேரமாகும். இந்நேரத்தில் தவறான செயல்கள் செய்யப்பட்டால், கல்பம் கல்பமாக அந்தஸ்து அழிக்கப்படும். பெருமளவு இழப்பு ஏற்படுகின்றது. தந்தை விளங்கப்படுத்துகின்றார்: முன்னர் நீங்கள் 100 சதவீத இழப்பில் இருந்தீர்கள். தந்தை உங்களை இப்பொழுது 100 சதவீத இலாபத்துக்குள் இட்டுச் செல்கின்றார். எனவே நீங்கள் ஸ்ரீமத்தைப் பின்பற்ற வேண்டும். குழந்தைகளாகிய நீங்கள் ஒவ்வொருவரும் உபகாரிகள் ஆக வேண்டும். அனைவருக்கும் சந்தோஷத்துக்கான பாதையைக் காட்டுங்கள்! சுவர்க்கத்தில் சந்தோஷமும், நரகத்தில் துன்பமும் உள்ளன. ஏன்? இது விகாரமான உலகம். அந்த உலகம் விகாரமற்று இருந்தது, ஆனால் அது இப்பொழுது விகாரமானதாகி விட்டது. தந்தை மீண்டும் ஒருமுறை அதை விகாரம் அற்றதாக ஆக்குகின்றார். உலகிலுள்ள எவரும் இந்த விடயங்களைப் பற்றி அறியார். இந்தப் பிரதானமான படங்கள் நிரந்தரமான இடங்களில் இடப்பட வேண்டும். முதலாம் இலக்கப் பிரதான இடம் டெல்கியாகும், பின்னர் மும்பாயும், கல்கத்தாவும் இருக்கின்றன. அவற்றைத் தகரத்தகடுகளில் வர்ணம் தீட்டுமாறு நீங்கள் ஒரு கட்டளையை எவருக்கும் கொடுக்க முடியும். பல உல்லாசப் பயணிகள் ஆக்ராவுக்குச் செல்கின்றார்கள். குழந்தைகளாகிய நீங்கள் மிக நல்ல சேவை செய்கின்றீர்கள், ஆனால் இப்பொழுது சிலவற்றைச் செய்து, அதை பாபாவுக்குக் காட்ட வேண்டும். இந்தப் படங்களைச் செய்வதில் எவ்விதச் சிரமமும் இல்லை. இதற்கு அனுபவமே தேவைப்படுகின்றது! மக்கள் தொலைவில் இருந்தே வாசிக்கக் கூடியதாக மிக நல்ல பெரிய படங்கள் இருக்க வேண்டும். சக்கரத்தின் மிகப் பெரிய படத்தையும் உருவாக்கலாம். எவருமே அவற்றைச் சேதம் செய்யாமல் இருக்கும் வகையில் அவை பாதுகாப்பாக வைக்கப்பட வேண்டும். யாகத்தில் அசுரர்கள் தடைகளை உருவாக்குகின்றார்கள், ஏனெனில் இது புதியதொன்றாகும். அவர்கள் கூறுகின்றனர்: நீங்கள் உங்கள் சொந்த வியாபாரத்தை ஆரம்பித்து விட்டீர்கள். இறுதியில் தாங்கள் கீழிறங்கி விட்டார்கள் எனவும், நிச்சயமாக ஏதோ தவறுள்ளது எனவும் அவர்கள் புரிந்து கொள்வார்கள். தந்தையே நன்மைபயப்பவர். அவரால் மாத்திரமே பாரதம் எப்பொழுது, எவ்வாறு உபகாரி ஆகியது எனக் கூறமுடியும். பாரதத்தைத் தமோபிரதான் ஆக்குகியது யார் என்றோ பின்னர் அதனைச் சதோபிரதான் ஆக்குகியது யார் என்றோ எவ்வாறு சக்கரம் சுழல்கின்றது என்பதையோ எவருமே அறியாதிருக்கிறார்கள். சங்கமயுகம் பற்றியும் எவரும் அறிய மாட்டார்கள். கடவுள் ஒவ்வொரு யுகத்திலும் வருகின்றார் என அவர்கள் நம்புகின்றார்கள். சிலநேரங்களில் கடவுள் பெயருக்கும், ரூபத்துக்கும் அப்பாற்பட்டவர் என அவர்கள் கூறுகின்றனர். பாரதம் புராதன சுவர்க்கமாக இருந்தது. கிறிஸ்துவுக்கு 3000 ஆண்டுகளுக்கு முன்னர் தேவர்களின் இராச்சியம் இருந்தது எனவும் மக்கள் கூறுகின்றனர். ஆயினும் அவர்கள் சக்கரத்தின் கால எல்லையை நீடித்து விட்டார்கள். எனவே குழந்தைகளே, நீங்கள் ஆத்ம உணர்வு உடையவர் ஆகுவதற்குப் பெருமளவு முயற்சி செய்ய வேண்டும். அரைக் கல்பமாகச் சத்திய, திரேதா யுகங்களில் நீங்கள் ஆத்ம உணர்வு உடையவர்களாக இருந்தீர்கள், ஆனால் நீங்கள் இறையுணர்வு உடையவர்களாக இருக்கவில்லை. இங்கே நீங்கள் சரீர உணர்வு உடையவர்கள் ஆகிவிட்டீர்கள். நீங்கள் இப்பொழுது மீண்டும் ஆத்ம உணர்வு உடையவர் ஆகவேண்டும். அவர்கள் “யாத்திரை” என்ற வார்த்தையைப் பயன்படுத்துகின்றனர், ஆனால் அவர்கள் அதன் அர்த்தத்தைப் புரிந்து கொள்வதில்லை. “மன்மனாபவ” என்பதன் அர்த்தமானது: ஆன்மீக யாத்திரையில் நிலைத்திருங்கள். ஓ ஆத்மாக்களே, உங்கள் தந்தையாகிய என்னை நினைவு செய்யுங்கள்! ஸ்ரீகிருஷ்ணரால் இதைக் கூறமுடியாது. எவ்வாறு அவர் கீதையின் கடவுளாக இருக்க முடியும்? எவரும் அவரை அவமரியாதை செய்ய முடியாது. நீங்கள் ஏணியில் கீழிறங்கி வந்தபொழுது, அரைக்கல்பத்துக்குக் காமச்சிதையில் அமர்ந்து அவலட்சணமானவர்கள் ஆகினீர்கள் எனத் தந்தையும் விளங்கப்படுத்தி உள்ளார். இப்பொழுது இது கலியுகம். இங்கேயுள்ள முழுச் சமுதாயமும் அவலட்சணமானது, ஆனால் எவ்வாறு அனைவரதும் அவலட்சண ரூபத்தைக் காட்ட முடியும்? அவர்கள் எதையும் புரிந்து கொள்ளாமலே படங்கள் அனைத்தையும் உருவாக்கி உள்ளார்கள் அவர்கள் காட்டி உள்ளவாறு, ஒருவர் மாத்திரமே அவலட்சணமாகவும், அழகாகவும் இருப்பது எவ்வாறு சாத்தியம்? அவர்கள் குருட்டு நம்பிக்கையுடன் பொம்மைகளைப் பூஜிப்பவர்கள் என்று அழைக்கப்படுகின்றனர். பொம்மைகளுக்குப் பெயர், ரூபம் அல்லது தொழில் எதுவும் இருக்க முடியாது. முன்னர் நீங்களும் பொம்மைகளைப் பூஜிப்பவர்களாக இருந்தீர்கள். நீங்களும் எதன் அர்த்தத்தையும் புரிந்து கொள்ளவில்லை. எனவே எவ்வாறு கண்காட்சியின் பிரதான படங்கள் உருவாக்கப்பட வேண்டுமென பாபா விளங்கப்படுத்தி உள்ளார். கண்காட்சியைத் தொடர்ந்தும் நடாத்தக்கூடிய செயற்குழு ஒன்றும் இருக்க வேண்டும். பந்தனத்தில் இருந்து விடுபட்ட பலர் இருக்கின்றனர். குமாரிகள் பந்தனத்தில் இருந்து விடுபட்டவர்கள். ஓய்வு ஸ்திதியில் உள்ளவர்களும் பந்தனத்தில் இருந்து விடுபட்டவர்கள். எனவே குழந்தைகளாகிய நீங்கள் இந்த வழிகாட்டல்களைப் பயிற்சியில் இடவேண்டும். நீங்கள் மறைமுகமான பாண்டவர்கள். எவராலும் உங்களை இனங்காண முடியாது. தந்தை மறைமுகமானவர், இந்த ஞானமும் மறைமுகமானது. அங்கே மனிதர்களே மனிதர்களுக்கு ஞானம் கொடுக்கின்றார்கள். இங்கே, பரமாத்மாவாகிய தந்தையே ஆத்மாக்களுக்கு இந்த ஞானத்தைக் கொடுக்கின்றார். ஆயினும் ஆத்மாக்களே இந்த ஞானத்தை எடுக்கின்றார்கள் என்பதை அவர்கள் புரிந்து கொள்வதில்லை, ஏனெனில் அவர்கள் ஆத்மாக்கள் செயல்களின் தாக்கத்துக்கு அப்பாற்பட்டவர்கள் எனக் கருதுகின்றார்கள். உண்மையில் ஆத்மாக்களே அனைத்தையும் செய்கின்றனர். ஆத்மாக்களே தங்கள் செயல்களுக்கு ஏற்றவாறு மறுபிறவி எடுக்கின்றனர். தந்தை இந்தக் கருத்துக்கள் அனைத்தையும் உங்கள் புத்தியில் மிக நன்றாகப் பதியச் செய்கின்றார். சகல நிலையங்களிலும், ஆத்ம உணர்வுடைய குழந்தைகளே வரிசைக்கிரமமாக மிக நன்றாகப் புரிந்துகொண்டு, பின்னர் மற்றவர்களுக்கு விளங்கப்படுத்துகின்றார்கள். சரீர உணர்வு உடையவர்களால், எதையும் புரிந்து கொள்ளவோ அல்லது பிறருக்கு விளங்கப்படுத்தவோ முடியாது. “என்னால் எதையும் புரிந்துகொள்ள முடியவில்லை” எனக் கூறுவதும் சரீர உணர்வாகும். ஓ, நீங்கள் ஓர் ஆத்மா! தந்தை இங்கே இருந்து ஆத்மாக்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். உங்கள் புத்தி திறக்கப்பட வேண்டும். அது உங்கள் பாக்கியத்தில் இல்லையெனில் புத்தி திறக்க மாட்டாது. தந்தை உங்களை முயற்சி செய்யுமாறு தூண்டுகின்றார், ஆனால் உங்கள் பாக்கியத்தில் அது இல்லை எனில், நீங்கள் முயற்சி செய்ய மாட்டீர்கள். அல்பாவையும், பீற்றாவையும் புரிந்து கொள்வது மிக இலகுவானது. நீங்கள் எல்லையற்ற தந்தையிடம் இருந்து ஆஸ்தியைப் பெறுகின்றீர்கள். பாரத மக்களாகிய நீங்கள் அனைவரும், தேவ, தேவியராக இருந்தீர்கள். பிரஜைகளும் அவ்வாறே இருந்தார்கள். இந்நேரத்தில் அவர்கள் தூய்மை அற்றவர்கள் ஆகிவிட்டார்கள். உங்களுக்குப் பல தடவைகள் உங்களை ஆத்மாக்களாகக் கருதித் தந்தையை நினைவு செய்யுமாறு கூறப்படுகின்றது. தந்தை கூறுகின்றார்: குழந்தைகளே, நான் உங்களைத் தேவ, தேவியர்கள் ஆக்கினேன். இப்பொழுது நீங்கள் என்னவாக ஆகியுள்ளீர்கள்? இது ஆழ் நரகமாகும். அவர்கள் மனிதர்கள், மிருகங்கள், பறவைகள் அனைத்தையும் விகாரங்கள் எனும் நஞ்சுள்ள ஒரே ஆற்றிலே காட்டுகின்றார்கள். இங்கே மனிதர்கள் மிருகங்களை விடவும் மோசமானவர்களாக ஆகிவிட்டார்கள். மனிதர்களிடம் அதிகளவு கோபம் உள்ளது. அவர்கள் நூறாயிரக் கணக்கானவர்களைக் கொல்கின்றார்கள். விபச்சார விடுதியாகி விட்ட, பாரதத்தைச் சிவபாபாவே சிவாலயமாக ஆக்குகின்றார். தந்தை மிக நன்றாக விளங்கப்படுத்துகின்றார். அவர் இதையும், அதையும் செய்யுமாறு உங்களுக்கு வழிகாட்டல்களைக் கொடுக்கின்றார். படங்களை உருவாக்கி, பின்னர் அவற்றை முக்கியஸ்தர்களுக்கு விளங்கப்படுத்துங்கள். இதுவே அதே புராதன யோகமாகும். இந்தப் புராதன ஞானத்தை அனைவரும் செவிமடுக்க வேண்டும். ஒரு மண்டபத்தை வாடகைக்கு எடுத்துக் கண்காட்சியை நடாத்துங்கள். அவர்கள் உங்களிடம் இருந்து பணம் போன்றவற்றை அறிவிடக்கூடாது. இல்லையெனில், அவர்களிடம் கூறுங்கள்: நீங்கள் எவ்வளவு கொடுக்கலாம் என நினைக்கிறீர்களோ, அந்தக் கட்டணத்தை எங்களிடம் இருந்து அறவிடுங்கள். முதலில் படங்களைப் பாருங்கள்! அவர்கள் படங்களைப் பார்க்கும் பொழுது, விரைவாக உங்கள் பணத்தை உங்களிடமே திருப்பித் தந்துவிடுவார்கள். நீங்கள் சாதுரியமாக விளங்கப்படுத்த வேண்டியதே அவசியமானது. உங்கள் கைகளில் அதிகாரம் உள்ளது. நீங்கள் விரும்பினால் அனைத்தையும் செய்ய முடியும். அவர்கள் எதையும் புரிந்து கொள்வதில்லை. விநாச காலத்தில் அன்பற்ற புத்தியைக் கொண்டவர்கள், அழிவுக்கு இட்டுச் செல்லப்படுவர். ஆயினும், பாண்டவர்களோ தங்களது எதிர்கால அந்தஸ்தைக் கோரினார்கள். அந்த இராச்சியம் எதிர்காலத்தில் இருக்கும். அது இப்பொழுது இல்லை. அந்தக் கட்டடங்கள் அனைத்தும் அழிக்கப்படும். நீங்கள் கண்காட்சிகளை நடத்த வேண்டுமெனத் தந்தை விளங்கப்படுத்தி உள்ளார். மக்களுக்கு மிக அழகான அழைப்பிதழ்களை அனுப்புங்கள். செல்வாக்குள்ள மக்களுக்கு முதலில் விளங்கப்படுத்துங்கள், நீங்கள் உதவியையும் பெறுவீர்கள். உறங்கிக் கொண்டிருக்காதீர்கள்; சில குழந்தைகள் சரீர உணர்வினால் உறங்கிக் கொண்டிருக்கின்றனர். ஒரு செயற்குழுவை உருவாக்குங்கள். பாலும், சீனியும் போன்றாகித் திட்டங்களைத் தீட்டுங்கள்! நீங்கள் முரளியைக் கற்கவில்லை என்றால், எவ்வாறு உங்களால் எதையும் கிரகிக்க முடியும்? மிகவும் கவனயீனமானவர்கள் பலர் இருக்கின்றனர். அச்சா.

இனிமையிலும் இனிமையான அன்புக்குரிய எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:

  1. ஆத்ம உணர்வு உடையவராகி, சேவை செய்வதற்குப் பல்வேறு வழிமுறைகளை உருவாக்குங்கள். ஒருவரோடொருவர் பாலும், சீனியும் போலாகி, சேவை செய்யுங்கள். உபகாரியான தந்தையைப் போன்று உபகாரி ஆகுங்கள்.
  2. அன்பான புத்தியைக் கொண்டிருந்து, ஏனைய அனைவரிடமும் இருந்து உங்களைத் துண்டித்து, ஒரேயொருவருடன் உங்களை இணைத்துக் கொள்ளுங்கள். கல்பம் கல்பமாக இழப்பை ஏற்படுத்தக்கூடிய தவறான செயல்கள் எதையும் செய்யாதீர்கள்.
ஆசீர்வாதம்: பற்றை வென்றவர்களாகவும் நினைவு சொரூபமாகவும் ஆகுவதற்கு ஆட்ட அசைக்க முடியாதவராகி, எல்லையற்ற ஆர்வமின்மையின் மனோபாவத்தை கொண்டிருப்பீர்களாக.
சதா எல்லையற்ற ஆர்வமின்மையின் மனோபாவத்தைக் கொண்டிருப்பவர்கள், எந்தவொரு காட்சியைக் காணும் போதும், எப்பொழுதுமே பயமற்றவர்களாக அல்லது அசைக்க முடியாதவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் சதா ஆட்ட, அசைக்க முடியாதவர்களாக இருக்கிறார்கள். அவர்களின் எல்லையற்ற ஆர்வமின்மையின் மனோபாவத்தினால் அவர்கள் பற்றை வென்றவர்களாகவும் நினைவு சொரூபமாகவும் ஆகுகிறார்கள். நீங்கள் ஏதாவது ஒன்றைப் பார்க்கின்ற போது, சற்று அசைந்தாலோ அல்லது உங்களுக்கு பற்று இருந்தாலோ நீங்கள் அங்கதனைப் போன்று ஆட்ட அசைக்க முடியாதவர் என்று அழைக்கப்பட மாட்டீர்கள். உங்களுடைய எல்லையற்ற ஆர்வமின்மையின் மனோபாவத்துடன் நீங்கள் முதிர்ச்சி உடையவராவும் இருப்பதுடன் சுவாரஸ்யமான சுபாவத்தையும் கொண்டிருங்கள்.
சுலோகம்: சுயராச்சியம் உடையவராக இருப்பதுடன் எல்லையற்ற ஆர்வமின்மையின் மனோபாவத்தை கொண்டிருப்பது ராஜரிஷியாக இருப்பதன் அடையாளமாகும்.
 
---ஓம் சாந்தி---

அவ்யக்த சமிக்ஞை: உங்கள் நம்பிக்கை என்ற அத்திவாரத்தை பலப்படுத்தி, சதா பயமற்றவராகவும் கவலையற்றவராகவும் இருங்கள்.

வீணான எண்ணங்கள் அல்லது சந்தேகம் கொண்டிருப்பதற்கான வாய்ப்பு இருக்கும்போது, தந்தை சதா உங்களின் பாதுகாவலர் மற்றும் உங்களின் உபகாரி என்ற சக்திவாய்ந்த எண்ணத்தை நீங்கள் சதா கொண்டிருக்க வேண்டும். இந்த நம்பிக்கையைக் கொண்டிருப்பதனால் நிச்சயமாக வெற்றி ஏற்படும். எனவே, கேள்விக்குறி என்ற கோணலான பாதையை எடுக்காதீர்கள், ஆனால், சதா நன்மைக்கான புள்ளியை இடுங்கள்: முற்றுப்புள்ளி! இந்த வழிமுறையைப் பயன்படுத்துவதன் மூலம், அனைத்தும் உங்களுக்கு இலகுவாக இருக்கும். நீங்கள் வெற்றி பெறுவீர்கள்.

மாதேஷ்வரிஜியின் மேன்மையான பெறுமதிமிக்க வாசகங்கள்

ஓர் ஆத்மாவினால் என்றுமே பரமாத்மாவின் பாகமாக முடியாது.

ஆத்மாக்களாகிய நாங்கள் பரமாத்மாவின் பாகம் என்று பல மக்கள் எண்ணுகின்றார்கள். அவரது பாகமாக இருப்பது எனில், அவரின் ஒரு துண்டாக இருப்பது என்று அர்த்தம் ஆகும். ஒருபுறம் அவர்கள் கடவுள் அநாதியானவரும், அழிவற்றவரும் என்று கூறுவதால், எவ்வாறு அழிவற்ற பரமாத்மாவினால் துண்டுகளாக இருக்க முடியும்? பரமாத்மாவை எவ்வாறு துண்டுகளாக வெட்ட முடியும்? ஒவ்வோர் ஆத்மாவும் அழிவற்றவரும், அமரத்துவமானவரும் என்பதால், ஆத்மாக்களை உருவாக்குபவரும் நிச்சயமாக அமரத்துவமானவர் ஆவார். அத்தகைய அமரத்துவமான பரமாத்மாவைத் துண்டுகள் ஆக்குவது எனில், அவரை அழியக்கூடியவர் ஆக்குவதாகும். ஆனால் ஆத்மாக்களாகிய நாங்கள் பரமாத்மாவின் குழந்தைகள் என்பதை நாங்கள் அறிவோம். ஆகவே நாங்கள் அவருடைய சந்ததியினர், அதாவது, நாங்கள் அவருடைய குழந்தைகள், எனவே நாங்கள் எவ்வாறு அவருடைய பாகமாக இருக்க முடியும்? இதனாலேயே கடவுளின் மேன்மையான வாசகங்கள் கூறுகின்றன: குழந்தைகளே, நான் அமரத்துவமானவரும், நான் உயிருள்ள, எரியும் ஜோதியும் ஆவேன். நானே தீபம். என்னை என்றுமே அணைக்க முடியாது. மனித ஆத்மாக்கள் அனைவரினதும் தீபங்கள் ஏற்றப்பட்டு, அணைந்து போகின்றன. அப்பொழுது நான் அவர்கள் அனைவரையும் விழித்தெழச் செய்கின்றேன், ஏனெனில் நானே ஒளியையும், சக்தியையும் கொடுப்பவன். எவ்வாறாயினும், நிச்சயமாகக் கடவுளின் ஒளிக்கும், ஆத்மாக்களின் ஒளிக்கும் இடையில் வேறுபாடு உள்ளது. உதாரணத்திற்கு, மின்குமிழ்களில் சில பெரும் சக்தியையும், ஏனையவை குறைந்தளவு சக்தியையும் கொண்டுள்ளன. அதேபோன்று, சில ஆத்மாக்களுக்குப் பெரும் சக்தியும், ஏனைய ஆத்மாக்களுக்குக் குறைந்தளவு சக்தியும் உள்ளன. எவ்வாறாயினும், கடவுளின் சக்தி கூடியதோ, குறைந்ததோ அல்ல. இதனாலேயே கடவுளையிட்டு, அவர் சர்வசக்திவான், அதாவது, ஆத்மாக்கள் அனைவரை விடவும் பெரும் சக்தி உடையவர் எனக் கூறப்பட்டுள்ளது. அவர் சக்கரத்தின் இறுதியில் வருகின்றார். அவர் சக்கரத்தின் மத்தியில் வருவதாக, அவர் ஒவ்வொரு யுகத்திலும் வருவதாகச் சிலர் நம்பினால், அப்பொழுது கடவுள் மத்திய காலப் பகுதியில் வருவதாக நீங்கள் கூறும்பொழுது, எவ்வாறு கடவுள் அனைவரிலும் அதிமேன்மையானவராக இருக்க முடியும்? கடவுள் ஒவ்வொரு யுகத்திலும் வருவதாக நீங்கள் கூறுவதானால், கடவுள் தனது சக்தியை அடிக்கடி பயன்படுத்துவதாக நீங்கள் கூற முடியுமா? சர்வசக்திவானின் சக்தி இவ்வளவு தானா? மத்திய காலப் பகுதியில் அவர் தனது சக்தி மூலம் பிறருக்குச் சக்தியை அல்லது சற்கதியைக் கொடுக்க முடியுமாயின், அவரது சக்தியானது சதாகாலமும் இருக்க வேண்டும். ஆகவே பின்னர் ஏன் மக்கள் சீரழிவினுள் செல்கின்றார்கள்? கடவுள் ஒவ்வொரு யுகத்திலும் வருவதில்லை, அதாவது, அவர் சக்கரத்தின் மத்தியில் வருவதில்லை என்பதையே இது நிரூபிக்கின்றது. அவர் சக்கரத்தின் இறுதியில் வந்து, ஒருமுறை மாத்திரமே தனது சொந்தச் சக்தி மூலம் அனைவருக்கும் சற்கதியை அருள்கின்றார். இப் பாரிய சேவையைக் கடவுள் செய்த பின்னரே அவரது ஞாபகார்த்தமாக ஒரு பெரிய சிவலிங்கம் உருவாக்கப்பட்டு, அதிகளவு வழிபடப்படுகின்றது. நிச்சயமாக, கடவுள் சத்தியமானவரும், உயிருள்ளவரும், பேரானந்த சொரூபமும் ஆவார். அச்சா. ஓம்சாந்தி.

முரளி என்றால் என்ன?

முரளி என்பது பிரம்மா குமாரிகளின் தினசரி ஆன்மீக போதனை; இது ஒவ்வொரு காலையும் மதுபனில் இருந்து வெளியிடப்படுகிறது. இங்கே நீங்கள் இன்றைய முரளியைத் தமிழில் படிக்கலாம், ஆடியோ கேட்கலாம், PDF பதிவிறக்கலாம். படிப்புக்கு உதவியாக உரையை ஹைலைட் செய்யலாம் — உங்கள் குறிகள் இந்த உலாவியிலேயே பாதுகாப்பாக இருக்கும்.

28 மொழிகளில் முரளி

Daily Murli · Madhuban மூலம்: மதுபன் முரளி பிரிவு இது ஒரு தனிப்பட்ட வாசிப்புச் செயலி, அதிகாரப்பூர்வ இணையதளம் அல்ல.