தமிழ் முரளி · Brahma Kumaris

இன்றைய முரளி · 22 ஜூலை, 2026

ஓம் சாந்தி · BapDada · 22 ஜூலை, 2026

இன்றைய முரளி — தினமும் காலையில் புதியது.

18
பதிவிறக்கு PDF
0:00--:--

உரையைத் தேர்ந்தெடுக்கவும் → ஹைலைட் / பெட்டி / அடிக்கோடு

22-07-2026
காலைமுரளி
ஓம்சாந்தி
பாப்தாதா
மதுபன்

சாராம்சம்: இனிய குழந்தைகளே, நீங்கள் இப்பொழுது புதிய உலகத்திற்குச் செல்ல வேண்டும். இந்தத் துன்ப நாட்கள் ஒரு முடிவிற்கு வருகின்றன. எனவே, கடந்த காலத்துப் பழைய விடயங்களை மறந்துவிடுங்கள்.
கேள்வி: கர்ம யோகிக் குழந்தைகளாகிய நீங்கள் சதா பயிற்சி செய்ய வேண்டியது என்ன?
பதில்: ஒரு நொடியில் உங்களுடைய சரீரத்தின் வாழ்வாதாரத்துக்காக சரீரத்தில் இருங்கள், அடுத்த நொடியில் ஆத்ம உணர்வு உடையவர் ஆகுங்கள். உங்கள் சரீரத்தின் விழிப்புணர்வு இல்லாது செயல்கள் செய்யப்பட முடியாது. எனவே சரீரத்தின் விழிப்புணர்வில் இல்லாமல் செயல்களைச் செய்வதற்கும் பின்னர் ஆத்ம உணர்வு உடையவர் ஆகுவதற்கும் பயிற்சி செய்யுங்கள். குழந்தைகளாகிய உங்களைத் தவிர, உலகிலுள்ள வேறு எவராலுமே இதைப் பயிற்சி செய்ய முடியாது.
பாடல்: விழித்தெழுங்கள், ஓ மணவாட்டிகளே விழித்தெழுங்கள்! புதிய யுகம் வரப்போகின்றது!

ஓம் சாந்தி. ஆன்மீகத் தந்தை கூறுகின்றார், இனிமையிலும், இனிமையான ஆத்மாக்கள், அதாவது குழந்தைகள் இந்தப்பாடலைக் கேட்டீர்கள். இது ஞானப்பாடல் என்று அழைக்கப்படுகின்றது. இந்தப் பாடல் மிகவும் நல்லது. ஆத்மாக்களாகிய நீங்கள் இப்பொழுது விழிப்படைந்து விட்டீர்கள், அத்துடன் நாடகத்தின் இரகசியத்தையும் அறிந்துள்ளீர்கள். நீங்கள் பக்தி மார்க்கத்தின் ஆடம்பரத்தையும் பார்த்தீர்கள். கடந்த காலத்தில் நடந்தவை எல்லாம் உங்கள் புத்தியில் உள்ளது. உங்களுடைய கடந்தகால 84 பிறவிகளின் வரலாற்றையும் நீங்கள் அறிவீர்கள். உங்கள் 84 பிறவிகளின் கதையைத் தந்தை உங்களுக்கு கூறியுள்ளார். இவை புதிய உலகிற்கான புதிய விடயங்களாகும். நீங்கள் தந்தையிடம் இருந்து புதிய விடயங்களைச் செவிமடுக்கின்றீர்கள். அவர் குழந்தைகளாகிய உங்களுக்குப் பொறுமையைக் கொடுக்கின்றார். அவர் கூறுகின்றார்: குழந்தைகளே, நீங்கள் இப்பொழுது புதிய உலகத்திற்குச் செல்லவேண்டும். எனவே பழைய விடயங்களை மறந்து விடுங்கள்! பக்தி மார்க்கத்தின் ஆடம்பரமாக விளங்கும் அந்த வேதங்கள், சமயநூல்கள் போன்ற அனைத்தும் அழியப்;போகின்றன. அங்கே பக்தி மார்க்கத்தின் எந்த அடையாளமும் இல்லை. அங்கே, நீங்கள் பக்தியின் பலனைப் பெறுகின்றீர்கள். தந்தை வந்து பக்தர்களுக்கும் பலனைக் கொடுக்கின்றார். எவ்வாறு தந்தை வந்து உங்களுக்கு பக்தியின் பலனைக் கொடுக்கின்றார் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது அறிவீர்கள். அதிகளவு பக்தி செய்தவர்கள் நிச்சயமாக அதிகளவு பலனைப் பெறுவார்கள். அவர்கள் இந்த ஞானத்தை எடுப்பதிலும் அதிகளவு முயற்சி செய்வார்கள். எந்த ஆத்மாக்கள் அதிகளவு பக்தி செய்துள்ளார்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள். அவர்களே நிச்சயமாக இந்த ஞானத்தில் முன்னேறிச் செல்வார்கள், அப்பொழுதே அவர்களால் இலக்ஷ்மி, நாராயணன் போன்று உயர்ந்த அந்தஸ்தை அடையமுடியும். நீங்கள் இப்பொழுது இந்த ஞானத்திலும் யோகத்திலும் முயற்சி செய்கின்றீர்கள். ஆத்ம உணர்வில் நிலைத்திருங்கள், அத்துடன் நீங்கள் சரீரத்தில் இருக்கும் விழிப்புணர்வுடனும் இருக்கவேண்டும். அனைத்தையும் செய்கின்ற போது தந்தையை நினைவு செய்யுங்கள். நாங்கள் சரீரமில்லாது செயல்களைச் செய்யமுடியாது. நீங்கள் பாபாவை நினைவு செய்ய வேண்டுமென்பது சரியானது. ஆனால் நீங்கள் உங்களை ஆத்மாவாகவும் கருதிக்கொள்ள வேண்டும். சரீரத்தை மறப்பதனால் எதையும் அடைய முடியாது, ஏனெனில் நீங்கள் செயல்கள் செய்தேயாக வேண்டும். தந்தையை நினைவு செய்வதில் அதிகளவு சந்தோஷம் உள்ளது. இருக்கும் போதும் நடக்கும்போதும் சுற்றிவரும்போதும் தந்தையை நினைவு செய்யுங்கள். இருந்த போதிலும் உங்களின் வயிற்றுக்கு உணவு தேவை. ஆத்ம உணர்வில் நிலைத்திருங்கள்! இந்நேரத்தில் குழந்தைகளாகிய உங்களைத்தவிர வேறு எவரும் ஆத்ம உணர்வில் இல்லை. அவர்கள் தங்களை ஆத்மாவாகக் கருதியபோதும், கடவுளின் அறிமுகம் அவர்களுக்கு இல்லை. ஆத்மா அழியாதது, சரீரங்கள் அழியக்கூடியவை என்று அவர்கள் புரிந்து கொண்ட போதிலும், அவர்களது பாவங்கள் அதன் மூலம் அழியப் போவதில்லை. கூறப்பட்டுள்ளது: புண்ணியாத்மா, தூய்மையற்ற ஆத்மா. நான் ஓர் ஆத்மா, இது எனது சரீரமாகும். அது ஒரு பொதுவான விடயமாகும். தந்தை விளங்கப்படுத்துகின்ற பிரதான விடயமானது: என்னை நினைவு செய்யுங்கள்! உங்களின் சரீரத்தின் வாழ்வாதாரத்திற்காக, நீங்கள் சரீரத்தின் விழிப்புணர்வையும் கொண்டிருக்க வேண்டும். சரீரத்திற்கு உணவு கொடுக்கப்பட வேண்டும். நீங்கள் சரீரமில்லாது எதையும் செய்ய முடியாது. நீங்கள் ஒவ்வொரு பிறவியிலும் சரீரத்தின் வாழ்வாதாரத்திற்காக எதையாவது செய்கின்றீர்கள். செயல்களைச் செய்கின்ற போதும் உங்களின் அன்பிற்கினியவரை நீங்கள் நினைவு செய்யவேண்டும். அந்த அன்பிற்கினியவரை எவருமே முழுமையாக அறியமாட்டார்கள். நாங்கள் அந்த அன்பிற்கினியவரிடம் இருந்து, அந்தத் தந்தையிடம் இருந்து ஆஸ்தியைப் பெற இருக்கிறோம் எனவும், அவரது நினைவின் மூலம் எங்களின் பாவங்கள் அழிக்கப்படும் எனவும் வேறு எவருமே விளங்கப்படுத்த முடியாது. குழந்தைகளாகிய நீங்கள் புதிய விடயங்களைச் செவிமடுக்கின்றீர்கள். நீங்கள் வீட்டுக்குச் செல்வதற்கான பாதையைக் கண்டு கொண்டீர்கள் என்பதை அறிவீர்கள். நீங்கள் வீட்டுக்குத் திரும்பிப் பின்னர் உங்கள் இராச்சியத்திற்குச் செல்வீர்கள். பாபா புதிய வீட்டைக் கட்டுகின்றார். எனவே நீங்கள் நிச்சயமாக அங்கே சென்று வசிப்பதற்கான ஆசையைக் கொண்டிருக்கின்றீர்கள். வேறு எவருமே அறியாத பாதையை நாங்கள் இப்பொழுது கண்டுள்ளோம். அவர்கள் எத்தனை யாகங்களை உருவாக்கினாலும் அல்லது தபஸ்யா போன்றவற்றை செய்தாலும், அல்லது எவ்வளவிற்குப் பிரயத்தனம் செய்தாலும் அவர்களால் சற்கதி அடையமுடியாது. அவர்களால் இவ்வுலகிலிருந்து அவ்வுலகிற்குச் செல்லமுடியாது. இதுவும் விளங்கிக் கொள்ளப்பட வேண்டும். அவர்கள் சமயநூல்களிலே சக்கரத்தில் கால எல்லையை நூறாயிரக்கணக்கான ஆண்டுகள் என்று எழுதியுள்ளார்கள். இதனாலேயே மக்களின் புத்திகள் செயற்படுவதில்லை. பாரதம் சுவர்க்கமாக இருந்தபோது, நாங்கள் ஆதிசனாதன தேவிதேவதா தர்மத்திற்குச் சொந்தமாக இருந்தோம் என்பது நேற்றைய விடயம் என உங்களால் மிகத்தெளிவாகப் புரிந்துகொள்ள முடிகிறது. தேவதர்மமே அதிகளவு சந்தோஷத்தைக் கொடுத்தது. பாரதத்தின் சந்தோஷத்தைப் போன்று வேறு எவருமே அடைய முடியாது. ஏனைய மதத்தவர்கள் சுவர்க்கத்துக்குச் செல்லமுடியாது. அவர்கள் எந்தளவு முயற்சி செய்தாலும் நீங்கள் கொண்டிருக்கும் சந்தோஷம் போன்று வேறு எவருமே கொண்டிருக்க முடியாது. அவர்கள் பணத்தைச் செலவு செய்தாலும், சுவர்க்கத்தில் இருக்கும் சந்தோஷத்தை அவர்களால் கண்டுகொள்ள முடியாது. ஒருவர் ஆரோக்கியமாக இருக்கலாம், ஆனால் செல்வம் இருக்கமாட்டாது. இன்னொருவர் செல்வத்தைக் கொண்டிருக்கலாம், ஆனால் ஆரோக்கியம் இருக்கமாட்டாது. இது துன்ப உலகம் ஆகும். எனவே தந்தை கூறுகின்றார்: எழுந்திருங்கள், ஓ, ஆத்மாக்களே! நீங்கள் இப்பொழுது மூன்றாவது ஞானக்கண்ணைப் பெற்றுள்ளீர்கள். நீங்கள் அதிகளவு விழிப்படைந்துள்ளீர்கள். நீங்கள் முழு உலகின் வரலாற்றையும், புவியிலையும் அறிவீர்கள். தந்தை உள்ளேயிருக்கும் இரகசியங்கள் அனைத்தையும் அறிந்தவர் (ஜனிஜனன்கார்). அவர் ஒவ்வொருவரின் இதயத்திலும் இருப்பதை அறிந்தவர் என்பது இதன் அர்த்தமில்லை. இவர் யார்? இவர் எவ்வளவு விளங்கப்படுத்துகின்றார்? எந்தளவிற்கு இவர் தூய்மையாக இருக்கின்றார்? எந்தளவிற்கு அவர் பாபாவை நினைவு செய்கின்றார்? நான் ஏன் அமர்ந்திருந்து, ஒவ்வொருவரைப் பற்றிய இந்த விடயங்களை நினைவுசெய்ய வேண்டும்? நான் ஆத்மாக்களாகிய உங்களுக்குப் பாதையைக் காட்டுகின்றேன். நீங்கள் உங்களுடைய பரமதந்தை, பரமாத்மாவை நினைவு செய்யவேண்டும். இந்த உலகச்சக்கரத்தை உங்கள் புத்தியில் வைத்திருங்கள். நீங்கள் நிச்சயமாக ஆத்ம உணர்வு உடையவர்கள் ஆகவேண்டும். நீங்கள் சரீர உணர்வு உடையவர்கள் ஆகியதால், அந்த முறையில் சீரழிந்தவர்கள் ஆகிவிட்டீர்கள். நீங்கள் இப்பொழுது தந்தையை நினைவு செய்யவேண்டும். வீட்டில் வாழ்கின்றபோதும், தாமரை மலர் போன்றவர்கள் ஆகுங்கள். நீங்கள் சுயதரிசன சக்கரதாரிகள். தேவர்களிடம் சங்கு போன்ற அலங்காரம் எதுவுமில்லை. பிராமணர்களாகிய நீங்களே இந்த ஞானம் எனும் சங்கை கொண்டுள்ளீர்கள். சீக்கியர்கள் சங்கை ஊதும்போது அதிகளவு சத்தத்துடன் ஊதுகின்றார்கள். நீங்கள் பெரிய கூட்டத்தினருக்கு இந்த ஞானத்தைக் கொடுக்கும்போது ஒலிபெருக்கி போன்றவற்றைப் பயன்படுத்துகின்றீர்கள். நீங்கள் இங்கே ஒலிபெருக்கி போடவேண்டிய அவசியமில்லை. ஓர் ஆசிரியர் ஒலிபெருக்கியை பயன்படுத்திக் கற்பிப்பாரா? இங்கே நீங்கள் சிவபாபாவை நினைவு செய்ய வேண்டும். அதனால் உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். நானே சர்வசக்திவான். நீங்கள் ஒலிபெருக்கியைப் பயன்படுத்துகின்றீர்கள், அதனால் தொலைவிலுள்ள மக்களும் கேட்கமுடியும். நீங்கள் மேலும் முன்னேறும் போது அவை பயன்படும். மரணம் முன்னால் நிற்கின்றது என்று நீங்கள் அவர்களுக்குக் கூறவேண்டும். இப்பொழுது அனைவரும் வீடு திரும்ப வேண்டும். மகாபாரத யுத்தமும் உங்களின் முன்னால் உள்ளது. மகாபாரதயுத்தம் இடம்பெற்றபோது விநாசமும் இடம் பெற்றது என்று கீதையில் எழுதப்பட்டுள்ளது. அச்சா. பின்னர் என்ன நடந்தது? பாண்டவர்களும் உருகிவிட்டார்கள். தந்தை விளங்கப்படுத்துகின்றார்: விநாசம் முதலில் இடம்பெற்றிருந்தால், அப்பொழுது பாரததேசமும் வெறுமையாகி இருக்கும். பாரதம் ஆழியாத தேசம், அது ஒருபோதும் வெறுமை ஆகுவதில்லை. முழுமையான பிரளயம் ஒருபோதும் இடம்பெறாது என்பதை நீங்கள் இப்பொழுது அறிவீர்கள். பாபா அழிவில்லாதவர், அவரது பிறப்பிடமும் அழிவில்லாதது. குழந்தைகளாகிய நீங்கள் சந்தோஷமாக இருக்கவேண்டும். பாபாவே அனைவருக்கும் சற்கதி அருள்பவரும், அமைதி, சந்தோஷத்தைக் கொடுப்பவரும் ஆவார். இங்கு வருகின்ற எவரும் அமைதியை வேண்டுவதாகவே கூறுகின்றனர். ஆத்மாக்கள் ஏன் அமைதியை அதிகளவு நினைவு செய்கின்றனர்? அமைதிதாமமே ஆத்மாக்களின் வீடாகும். யார் அவர்களுடைய வீட்டை நினைவு செய்ய மாட்டார்கள்? ஒருவர் வெளிநாட்டில் மரணித்தால், அவர்கள் அவரது சரீரத்தை அவரது பிறந்த இடத்திற்கு எடுத்துச் செல்லவே விரும்புவார்கள். அனைவருக்கும் சற்கதி அருள்பவரும், உங்களைத் துன்பத்தில் இருந்து விடுவிப்பவருமான சிவபாபாவின் பிறந்த இடம் பாரதம் என்று அனைவரும் அறிந்திருப்பார்களே ஆனால் அவர்கள் அதற்கு அதிகளவு மதிப்பு கொடுத்திருப்பார்கள். அவர்கள் வந்து சிவபாபாவுக்கு மாத்திரமே மலர்களை அர்ப்பணம் செய்திருப்பார்கள். இப்பொழுது அவர்கள் பலருக்கு மலர்களை அர்ப்பணிக்கின்றார்கள். அனைவருக்கும் அமைதியையும், சந்தோஷத்தையும் கொடுத்த ஒருவரின் பெயரையும், அடையாளத்தையும் அவர்கள் முற்றிலும் மறந்து விட்டார்கள். தந்தையை மிக நன்றாக அறிந்தவர்களே, தங்களுடைய ஆஸ்தியைக் கோரமுயற்சி செய்கின்றார்கள். எனது பெயர் துன்பத்தை நீக்கி, சந்தோஷத்தை அருள்பவர். உங்களைத் துன்பத்தில் இருந்து நீக்கிய பின்னர் அவர் என்ன செய்கின்றார்? நீங்கள் அமைதி தாமத்தில் அமைதியாக இருக்கின்றீர்கள் என்றும் சந்தோஷ உலகில் சந்தோஷம் இருக்கின்றது என்பதையும் நீங்கள் அறிவீர்கள். அமைதி தாமம், சந்தோஷதாமத்தில் இருந்து வேறுபட்டதாகும். இது துன்பதாமம் ஆகும். இந்நேரத்தில் அனைவரும் துன்பத்திலேயே உள்ளனர். நீங்கள் 21 பிறவிகளுக்கு எந்த விதமான துன்பமும் அற்ற சந்தோஷத்திற்குள் செல்கின்றீர்கள் என்பதை இப்பொழுது அறிவீர்கள். அதனது உண்மையான பெயர் சுவர்க்கமாகும். அது ஒரு இனிமையான பெயராகும்! தந்தை கூறுகின்றார்: நான் உங்களுக்கு எந்தக்கஷ்டமும் கொடுக்கவில்லை. இயல்பாகவே தந்தையையும், ஆஸ்தியையும் நினைவு செய்து உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதுங்கள்! பாபா உங்களுக்கு இந்த ஞானத்தைக் கற்பிக்கின்றார். சத்தியயுகத்தில் நீங்கள் ஓர் ஆத்மா என்றும் எவ்வாறு நீங்கள் ஒரு சரீரத்தைவிட்டு இன்னொன்றை எடுக்க வேண்டும் என்ற ஞானத்தையும் கொண்டிருக்கின்றீர்கள். அதுவே ஆத்ம உணர்வு என அழைக்கப்படுகின்றது. இது ஆன்மீக ஞானமாகும், எவராலும் இதைக் கொடுக்க முடியாது. ஆன்மீகத் தந்தை வந்து ஆத்மாக்களுக்கு இந்த ஞானத்தைக் கொடுக்கின்றார். அவர் அதை ஒவ்வொரு 5000 வருடங்களிலும் கொடுக்கின்றார். மக்கள் முற்றிலும் இருளில் இருக்கின்றனர். நீங்கள் இப்பொழுது ஒளியைப்பெற்று, அறியாமை எனும் உறக்கத்;தில் இருந்து விழித்தெழுந்துள்ளீர்கள். ஒரு தந்தையே அனைத்து மணவாட்டிகளினதும், மணவாளன் ஆவார். தந்தை கூறுகின்றார்: நான் உங்களுடைய தந்தையும், மணவாளனும் அத்துடன் குருமார்கள் அனைவரினதும் குருவும் ஆவேன். நானே பரம ஆசிரியர். ஒரு சற்குருவே குருமார்கள் அனைவருக்கும் சற்கதி அருள்பவர் ஆவார். அவர் கூறுகின்றார்: குழந்தைகளே, நானே அனைவருக்கும் சற்கதி அருள்கின்றேன். முக்திக்குப் பின்னர் சற்கதி உள்ளது. ஒவ்வொருவரது ஆத்மாவும், வீடு திரும்பவேண்டும் எனத் தந்தை விளங்கப்படுத்தி உள்ளார். ஆத்மாவே சதோபிரதானாகவும், சதோ, ரஜோ, தமோவாகவும் ஆகுகின்றார். சிலர் மிகச்சிறிய பாகத்தையே கொண்டுள்ளனர். அவர்கள் வந்து போவார்கள். அவர்கள் நுளம்புகள் போன்று பிறந்து மரணிப்பார்கள். அவ்வாறான ஆத்மாக்கள் தந்தையிடம் இருந்து ஆஸ்தியைப் பெறுவதில்லை. தந்தையிடம் இருந்து தூய்மை, அமைதி, சந்தோஷம் எனும் ஆஸ்தி பெறப்படுகின்றது. தந்தை ஆத்மாக்களாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். தந்தை அசரீரியானவர். அவர் வந்து இவரது வாய் மூலம் விளங்கப்படுத்துகின்றார். அவர்கள் சிவபாபாவுக்கு மிகவும் உயரமான இடங்களில் கோவில்கள் கட்டியுள்ளார்கள். அவர்கள் யாத்திரையாகவும், கூட்டமாகவும் மேலே செல்கின்றார்கள். அங்கே அவர்கள் அருந்துவதற்கு ஏதாவது ஞானாமிர்தம் உள்ளதா? அவர்கள் அதிகளவு பணத்தைச் செலவழிக்கின்றார்கள்! அரசாங்கமும் அவர்களுக்கு அதிகளவு வசதிகளைச் செய்து கொடுக்க வேண்டியுள்ளது. அதிலே கஷ்டமுள்ளது. எவ்வாறு நீங்கள் சிறு குழந்தைகளை அங்கே யாத்திரையாக எடுத்துச் செல்லமுடியும்? அவர்கள் குழந்தைகளை இன்னொருவரின் பராமரிப்பில் விட்டுச் செல்கின்றார்கள். அவர்கள் குழந்தைகளை அழைத்துச் செல்வதில்லை. அவர்கள் இரண்டிலிருந்து மூன்று மாதங்கள் யாத்திரை செல்கின்றார்கள். நீங்கள் இங்கு வரும்போது அமர்ந்திருந்து செவிமடுப்பதுடன், கற்கவும் வேண்டும். சிறிய குழந்தைகள் இதைச் செவிமடுக்க மாட்டார்கள். நீங்கள் இங்கே ஞானத்தையும், யோகத்தையும் கற்க வருகின்றீர்கள். தந்தை இங்கிருந்து உங்களுக்கு இந்த ஞானத்தைக் கொடுக்கின்றார். எனவே, இங்கு சத்தம் போன்ற எதுவும் இருக்கக்கூடாது. இல்லையெனில் உங்களுடைய கவனம் அவர்களின்பால் ஈர்க்கப்படும். இங்கே நீங்கள் அமைதியாக அமர்ந்திருந்து கவனத்துடன் செவிமடுக்க வேண்டும். யோகம் மிக இலகுவானது. உங்களுக்கு என்ன வேலை இருக்கின்றதோ, தொடர்ந்தும் செய்யுங்கள். ஆனால் உங்கள் புத்தியின் யோகம் அங்கே இணைக்கப்பட்டிருக்க வேண்டும். பாபாவை நினைவு செய்வதனால் நீங்கள் பெரிய வருமானத்தை சம்பாதிக்கின்றீர்கள். நீங்கள் சதா ஆரோக்கியமானவர்கள் ஆகுவீர்கள் என்பதை அறிவீர்கள். நீங்கள் உங்களுடனேயே பேசவேண்டும். உங்களுக்காக உணவு சமைக்கும்போதும் பாபாவின் நினைவில் நிலைத்திருங்கள். கைகளினால் வேலைகள் அனைத்தையும் செய்கின்ற போதிலும் உங்களது தந்தையை நினைவு செய்யுங்கள். நினைவில் இருப்பதனால் நீங்கள் நன்மை அடைவீர்கள். நீங்கள் சமைக்கின்ற உணவும் மிக நன்றாக இருக்கும். நீங்கள் உலக அரசுரிமையைப் பெறுகின்றீர்கள். நீங்கள் இங்கே இலக்ஷ்மி, நாராயணன் ஆகவே வந்துள்ளீர்கள். நீங்கள் அனைவரும் சூரிய வம்சத்தினர் ஆகுவீர்கள் எனக் கூறுகின்றீர்கள். இந்நேரத்தில் உங்களுடைய மம்மாவும், பாபாவும், சரஸ்வதியும், பிரம்மாவும் என நீங்கள் அறிவீர்கள். அவர்களுடைய அடுத்த பிறவியில் அவர்கள் இலக்ஷ்மி, நாராயணன் ஆகுவார்கள். எவராவது அவரது அடுத்த பிறவியில் என்னவாக ஆகுவார் என உங்களால் கூறமுடியாது. நேரு அவருடைய அடுத்த பிறவியில் என்ன ஆகினார் என எவருமே அறியமாட்டார்கள். ஒருவர் மிக நல்ல தானங்கள் செய்திருந்தால், அவர் ஒரு நல்ல குடும்பத்தில் பிறப்பெடுப்பார். நீங்கள் இப்பொழுது அனைத்தையும் புரிந்து கொள்கின்றீர்கள். இவர்கள் இருவருடைய பெயர்கள் ஆதிதேவ் பிரம்மாவும், ஆதிதேவி சரஸ்வதியும் ஆகும். அவர்கள் பின்னர் சுவர்க்கத்தின் அதிபதிகள் ஆகுவார்கள். அச்சா. அவர்களின் குழந்தைகள் அவர்களுடனேயே உள்ளனர். தாங்கள் சுவர்க்கத்தின் அதிபதிகள் என அவர்களும் கூறுகின்றனர். இது நிச்சயிக்கப்பட்டுள்ளது. நீங்கள் அவர்களை சூட்சும உலகில் காண்கின்றீர்கள். பெண் தெய்வங்களின் கோவில்களில் அதிக கூட்டம் உள்ளது. ஒரு ஜெகதாம்பாவே இருக்கின்றார். அவரது விக்கிரகங்களின் முகச்சாயல் அனைத்து இடங்களிலும் ஒரேமாதிரி இருக்க வேண்டும். மம்மாவைப் பாருங்கள். அந்த விக்கிரகங்கள் குழந்தைகளாகிய உங்களைப் போன்றே முகச்சாயல் உள்ளவையாக இருப்பதனால், அவை குமாரி, அதர்குமாரி எனப் பெயரிடப்பட்டு உள்ளன. நீங்களே அவ்வாறு ஆகியுள்ளீர்கள் என்பதை அறிவீர்கள். நாங்கள் அனைவரும் பிரம்மாகுமாரர்களும், குமாரிகளும் ஆவோம். தம்பதிகளும்கூட தாங்களும் பிரம்மா குமாரர்களும், குமாரிகளும், ஒரு தந்தையின் குழந்தைகள் எனக் கூறுகின்றனர். இது உங்களின் ஞாபகார்த்தம் ஆகும். நீங்கள் இந்த ஞானத்தை விளக்கத்துடன் கொடுக்கின்றீர்கள். இதுவே அர்த்தமுள்ள தில்வாலா ஆலயம் ஆகும். எவ்வாறாயினும் உங்களால் மாத்திரமே இதை விளங்கப்படுத்த முடியும். நீங்கள் இந்த ஸ்தாபனையை மேற்கொள்கின்றீர்கள் என்பதை அறிவீர்கள். நீங்கள் ஸ்ரீமத்தைப் பின்பற்றுவதன் மூலம் இராஜயோகத்தினால் பாரதத்தைச் சுவர்க்கம் ஆக்குகின்றீர்கள். அச்சா.

இனிமையிலும் இனிமையான அன்புக்குரிய எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும் ஆன்மீகத்தந்தை ஆன்மீகக்குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:

  1. இந்த ஞானத்திலும், யோகத்திலும் முழுமையான கவனம் செலுத்துங்கள். இந்த ஞானத்தைச் செவிமடுக்கின்றபோது, மிக அமைதியாக இருந்து, ஒருமுகப்படுத்துங்கள். நீங்கள் கர்மயோகிகள் ஆகவேண்டும்.
  2. தந்தை உங்களுக்குக் காட்டிய வீட்டிற்கான பாதையை அனைவருக்கும் காட்டுங்கள். சுயதரிசன சக்கரதாரிகளாக இருப்பதுடன், இந்த ஞானம் எனும் சங்கையும் ஊதுங்கள்.
ஆசீர்வாதம்: மகாத்மா (மகான்) மற்றும் விருந்தாளி (மெஹ்மான்) என்ற இரண்டு வார்த்தைகளை உணர்ந்தவராக இருப்பதன் மூலம் ஒரு பற்றற்ற பார்வையாளராக அப்பால் இருந்து, சகல கவர்ச்சிகளில் இருந்தும் விடுபடுவீர்களாக.
உங்களின் ஸ்திதியை அப்பால் இருக்கின்ற பற்றற்ற பார்வையாளர் ஆக்குவதற்கு, இரண்டு விடயங்களில் கவனம் செலுத்துங்கள். 1) இந்த ஆத்மாவான நான், மகாத்மா ஆவேன். 2) இந்த ஆத்மாவான நான், இந்தப் பழைய உலகிலும் இந்தப் பழைய சரீரத்திலும் ஒரு விருந்தாளி ஆவேன். இந்த விழிப்புணர்வை நீங்கள் கொண்டிருப்பதன் மூலம், உங்களின் பற்றின் பலவீனங்கள் மற்றும் கவர்ச்சிகள் அனைத்தும் இயல்பாகவே இலகுவாக முடிவடைந்துவிடும். உங்களை மகாத்மாவாகப் புரிந்து கொள்வதன் மூலம், உங்களின் சம்ஸ்காரங்களின் ஆதிக்கத்தின் கீழ் நீங்கள் செய்யும் எந்தவொரு சாதாரணமான செயல்களும் நீங்கள் உருவாக்கும் சாதாரணமான எண்ணங்களும் மாற்றப்படும். உங்களை ஒரு மகான் மற்றும் விருந்தாளியாகக் கருதியவண்ணம் நீங்கள் செயல்படும்போது, நீங்கள் புகழுவதற்குத் தகுதிவாய்ந்தவர் ஆகுவீர்கள்.
சுலோகம்: அனைவரின் நல்லாசிகளாலும் அவர்களின் ஒத்துழைப்புத் துளிகளாலும் பெரியதொரு பணியும் இலகுவானதாகி விடும்.
 
---ஓம் சாந்தி---

அவ்யக்த சமிக்கை: எரிமலை ஸ்திதியில் இருந்தவண்ணம் சக்திவாய்ந்த நினைவை அனுபவம் செய்யுங்கள்.

ஒரு சக்திமிக்க மனதைக் கொண்டிருப்பதன் அடையாளம், ஒரு விநாடியில் நீங்கள் விரும்பிய இடத்திற்கு உங்களால் சென்றடையக் கூடியதாக இருப்பதாகும். உங்கள் மனம் பறக்கக் கற்று, அப்பயிற்சியை விருத்தி செய்யும் போது, ஒரு விநாடியில் நீங்கள் விரும்பிய இடத்திற்கு உங்களால் சென்றடைய முடியும். ஒரு கணம், நீங்கள் சரீர உலகிலும், அடுத்த கணம் நீங்கள் பரந்தாமத்திலும் இருக்க வேண்டும். இப்பொழுது இந்தப் பயிற்சியை அதிகரியுங்கள். இப்பொழுது இந்தப் பயிற்சியை அதிகரிகின்ற போது, உங்கள் நினைவு சக்திமிக்கதாக இருக்கும்.

முரளி என்றால் என்ன?

முரளி என்பது பிரம்மா குமாரிகளின் தினசரி ஆன்மீக போதனை; இது ஒவ்வொரு காலையும் மதுபனில் இருந்து வெளியிடப்படுகிறது. இங்கே நீங்கள் இன்றைய முரளியைத் தமிழில் படிக்கலாம், ஆடியோ கேட்கலாம், PDF பதிவிறக்கலாம். படிப்புக்கு உதவியாக உரையை ஹைலைட் செய்யலாம் — உங்கள் குறிகள் இந்த உலாவியிலேயே பாதுகாப்பாக இருக்கும்.

28 மொழிகளில் முரளி

Daily Murli · Madhuban மூலம்: மதுபன் முரளி பிரிவு இது ஒரு தனிப்பட்ட வாசிப்புச் செயலி, அதிகாரப்பூர்வ இணையதளம் அல்ல.