| 28-02-2025 |
காலை முரளி
ஓம் சாந்தி
பாப்தாதா
|
மதுபன் |
| இனிமையான குழந்தைகளே! இந்த ஆன்மிக மருத்துவமனை உங்களை அரைக் கல்பத்திற்கு சதா ஆரோக்கியமானவர் ஆக்கக்கூடியது. இங்கு நீங்கள் ஆத்ம அபிமானியாகி அமருங்கள். | |
| கேள்வி: | தொழில் முதலியவை செய்து கொண்டிருக்கும் போதும் எந்த டைரக்ஷனை புத்தியில் நினைவு வைக்க வேண்டும்? |
| பதில்: | நீங்கள் எந்தவொரு உயிருடன் இருப்பவர்களையும் மற்றும் இறந்தவர்களையும் நினைவு செய்யாதீர்கள், ஒரு தந்தையின் நினைவு இருந்தது என்றால் விகர்மம் விநாசம் ஆகும் என்பது தந்தையின் டைரக்ஷன் ஆகும். எவரும் இதற்காக நேரமில்லை என்று கூறமுடியாது. அனைத்தையும் செய்துகொண்டே நினைவில் இருக்க முடியும். |
ஓம்சாந்தி. இனிமையிலும் இனிமையான ஆன்மிகக் குழந்தைகளுக்கு தந்தையின் குட்மார்னிங். குட்மார்னிங் கிற்குப் பிறகு தந்தையை நினைவு செய்யுங்கள் என்று குழந்தைகளுக்குக் கூறப்படுகிறது. ஹே! பதீதபாவனரே வந்து பாவனமாக்குங்கள் என்று அழைக்கவும் செய்கின்றனர். எனவே, தந்தை முதன்முதலிலேயே ஆன்மிகத் தந்தையை நினைவு செய்யுங்கள் என்று கூறுகின்றார். ஆன்மிகத் தந்தையோ அனைவருக்கும் ஒருவரே ஆவார். தந்தையை ஒருபொழுதும் சர்வவியாபி என்று கருதப்படுவதில்லை. எனவே, எவ்வளவு முடியுமோ, குழந்தைகள் முதன்முதலில் தந்தையை நினைவு செய்யுங்கள், ஒரு தந்தையைத் தவிர எந்த ஒரு சாகாரம் மற்றும் ஆகாரத்தை நினைவு செய்யாதீர்கள். இது முற்றிலும் சுலபம் தானே! நாங்கள் பிஸியாக இருக்கிறோம், நேரம் இல்லை என்று மனிதர்கள் கூறுகின்றனர். ஆனால், இதற்கோ நேரம் எப்பொழுதும் உள்ளது. தந்தை யுக்தி கூறுகின்றார். தந்தையை நினைவு செய்வதன் மூலமே நம்முடைய பாவம் எரிந்து சாம்பலாகும் என்பதையும் அறிந்துள்ளீர்கள். இது முக்கியமான விசயம் ஆகும். தொழில் முதலியவை செய்வதற்கு எந்தத் தடையும் இல்லை. அவை அனைத்தையும் செய்துகொண்டே தந்தையை மட்டும் நினைவு செய்தீர்கள் என்றால் விகர்மங்கள் விநாசம் ஆகும். நாம் பதீதமானவர்களாக இருக்கிறோம் என்பதைப் புரிந்திருக்கிறார்கள். சாது, சந்நியாசி, ரிஷி, முனிவர் போன்ற அனைவரும் தவம் செய்கின்றனர். பகவானை அடைவதற்காகவே தவம் செய்யப்படுகிறது. எதுவரை அவருடைய அறிமுகம் கிடைக்கவில்லையோ, அதுவரை அவரை சந்திக்க முடியாது. உலகில் எவருக்கும் தந்தையின் அறிமுகம் இல்லை என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்கள். தேகத்தின் அறிமுகமோ அனைவருக்கும் உள்ளது. பெரிய பொருளின் அறிமுகம் உடனடியாகக் கிடைத்துவிடுகிறது. ஆத்மாவின் அறிமுகத்தையோ, எப்பொழுது தந்தை வருகின்றாரோ, அப்பொழுதே புரிய வைக்கின்றார். ஆத்மா மற்றும் சரீரம் ஆகிய இரண்டு பொருட்கள் உள்ளன. ஆத்மா ஒரு நட்சத்திரம் ஆகும். மேலும், மிகவும் சூட்சுமமானது ஆகும். அதை எவரும் காண முடியாது. எனவே, எப்பொழுது இங்கு வந்து அமர்கிறீர்களோ, அப்பொழுது ஆத்ம அபிமானியாகி அமர வேண்டும். இது கூட அரைக் கல்பத்திற்கு சதா ஆரோக்கியமானவர் ஆவதற்கான ஒரு மருத்துவமனை ஆகும். ஆத்மாவோ அழிவற்றது, ஒருபொழுதும் அழியாது. முழு நடிப்பும் ஆத்மாவினுடையதே. நான் ஒருபொழுதும் விநாசம் ஆகுவதில்லை என்று ஆத்மா கூறுகின்றது. அனைத்து ஆத்மாக்களும் அழிவற்றவர்கள். சரீரம் அழியக்கூடியது. நாம் ஆத்மாக்கள் அழிவற்றவர்கள் என்பது இப்பொழுது உங்களுடைய புத்தியில் உள்ளது. நாம் 84 பிறவிகள் எடுக்கின்றோம், இது நாடகமாகும். இதில் தர்ம ஸ்தாபகர்கள் யார் யார் எப்பொழுது வருகிறார்கள், எத்தனை பிறவிகள் எடுத்திருப்பார்கள் என்பதை அறிந்துள்ளீர்கள். 84 பிறவிகள் என்று என்ன பாடப்படுகிறதோ, அது அவசியம் ஏதோ ஒரு தர்மத்தினுடையதாக இருக்கும். அனைவருக்கும் 84 பிறவிகள் இருக்க முடியாது. அனைத்து தர்மங்களும் சேர்ந்து வருவதில்லை. நாம் பிறருடைய கணக்கை ஏன் பார்க்க வேண்டும்? இந்த சமயத்தில் தர்மத்தை ஸ்தாபனை செய்வதற்காக வருகின்றனர் என்பதை அறிந்துள்ளனர். பிறகு, அதன் வளர்ச்சி ஏற்படுகிறது. அனைவரும் சதோபிரதானத்திலிருந்து தமோபிரதானம் ஆகியே தீர வேண்டும். உலகம் எப்பொழுது தமோபிரதானம் ஆகிறதோ, அப்பொழுதே பிறகு, தந்தை வந்து சதோபிரதான உலகத்தை உருவாக்குகின்றார். பாரதவாசிகளாகிய நாமே பிறகு புது உலகத்தில் வந்து இராஜ்யம் செய்வோம், மேலும், அப்பொழுது வேறு எந்த தர்மமும் இருக்காது என்பதை இப்பொழுது குழந்தைகளாகிய நீங்கள் அறிந்துள்ளீர்கள். குழந்தைகளாகிய உங்களிலும் கூட யார் உயர்ந்த பதவியைப் பெற வேண்டுமோ, அவர்கள் அதிகமாக நினைவில் இருப்பதற்கான முயற்சி செய்வார்கள். மேலும், பாபா நான் இவ்வளவு சமயம் நினைவில் இருக்கிறேன் என்ற சமாச்சாரத்தையும் எழுதுகின்றார்கள். சிலர் வெட்கப்பட்டுக்கொண்டு முழு சமாச்சாரத்தையும் கொடுப்பதில்லை. பாபா என்ன சொல்வாரோ என்று நினைக்கின்றனர். ஆனாலும் தெரியும் அல்லவா! பள்ளியில் ஆசிரியர் மாணவர்களிடம் நீங்கள் ஒருவேளை படிக்கவில்லை எனில், ஃபெயில் ஆகிவிடுவீர்கள் என்று கூறுவார்கள் அல்லவா? லௌகீக தாய் தந்தை கூட குழந்தைகளுடைய படிப்பின் மூலம் புரிந்து கொள்கின்றனர். இதுவோ மிகப் பெரிய பள்ளி ஆகும். இங்கு வரிசைக்கிரமமாக அமர வைக்கப்படுவதில்லை. வரிசைக்கிரமமாக இருக்கவே செய்வார்கள் என்பது புத்தியால் புரிந்து கொள்ளப்படுகிறது. இப்பொழுது பாபா நல்ல நல்ல குழந்தைகளை எங்கேயாவது அனுப்பிவிடுகின்றார், அவர்கள் சென்று திரும்பிய பின்னர் எங்களுக்கு மகாரதி வேண்டும் என்று பிறர் கடிதம் எழுதுகின்றனர், எனில், அவர்கள் தம்மைவிட புத்திசாலியாக, புகழ் வாய்ந்தவராக இருக்கிறார் என்று அவசியம் புரிந்துள்ளனர். வரிசைக்கிரமமாக இருக்கிறார்கள் அல்லவா? கண்காட்சியில் கூட அனேகவிதமாக வருகின்றனர். எனவே, வழிகாட்டிகளும் (கைடு) சோதிப்பதற்காக நிற்க வேண்டும். இவர் எத்தகைய மனிதர் என்பதை வரவேற்பவர்கள் அறிந்திருப்பார்கள். இவருக்கு நீங்கள் புரியவைத்திடுங்கள் என்று அவருக்கு (கைடு) பிறகு சமிக்ஞை செய்ய வேண்டும். முதல் தரம், இரண்டாவது தரம், மூன்றாவது தரம் என அனேக விதமாக உள்ளனர் என்பதை நீங்களும் புரிந்து கொள்ள முடியும். அங்கே அனைவருக்கும் சேவை செய்து தான் ஆக வேண்டும். ஒரு பெரிய மனிதர் இருக்கிறார் எனில், அவசியம் அந்த பெரிய மனிதரை உபசரிக்கின்றார்கள். இது விதி முறை ஆகும். தந்தை அதாவது டீச்சர் குழந்தைகளை வகுப்பில் மகிமை செய்கின்றார்கள், இது கூட அனைத்தையும் விட பெரிய மரியாதை ஆகும். பெயரை வெளிப்படுத்தக் கூடிய குழந்தைகளுடைய மகிமை அதாவது மரியாதை செய்யப்படுகிறது. இன்னார் செல்வந்தர், தார்மீக மனம் கொண்டவர் என்று கூறுவது கூட மரியாதை கொடுப்பது அல்லவா? உயர்ந்ததிலும் உயர்ந்தவர் பகவான் என்பதை இப்பொழுது நீங்கள் அறிந்துள்ளீர்கள். அவர் உயர்ந்ததிலும் உயர்ந்தவர் என்று கூறவும் செய்கின்றனர். ஆனால், பிறகு அவருடைய சுய சரிதையைப் (பயோகிராபி) பற்றி சொல்லுங்கள் என்று கேட்டீர்கள் என்றால் அவர் சர்வவியாபி என்று கூறுவார்கள். அவ்வளவு தான் ஒரேயடியாக தாழ்த்திவிடுகிறார்கள். அனைவரையும் விட உயர்ந்ததிலும் உயர்ந்தவர் பகவான் என்பதை இப்பொழுது நீங்கள் புரியவைக்க முடியும். அவர் மூலவதனவாசி ஆவார். சூட்சுமவதனத்தில் தேவதைகள் உள்ளனர். இங்கே மனிதர்கள் உள்ளனர். எனவே, உயர்ந்ததிலும் உயர்ந்தவர் அந்த நிராகாரமான பகவான் ஆவார்.
வைரம் போல் இருந்த நாமே பிறகு சோழி போல் ஆகிவிட்டோம் பிறகு, பகவானை தன்னை விட அதிகமாகக் கீழான நிலைக்கு கொண்டு சென்றுவிட்டோம் என்பதை இப்பொழுது நீங்கள் அறிந்துள்ளீர்கள். பகவானைப் பற்றி அறியவே இல்லை. பாரதவாசிகளாகிய உங்களுக்கே அறிமுகம் கிடைத்துள்ளது. பிறகு, அறிமுகம் குறைந்துவிடுகிறது. இப்பொழுது நீங்கள் தந்தையினுடைய அறிமுகத்தை அனைவருக்கும் கொடுத்துக்கொண்டே செல்கிறீர்கள். அநேகருக்கு தந்தையின் அறிமுகம் கிடைக்கும். உங்களுடைய முக்கிய சித்திரமே திரிமூர்த்தி, சக்கரம், மரம் ஆகும். இதில் எவ்வளவு வெளிச்சம் (ஞானம்) உள்ளது! இந்த இலட்சுமி நாராயணர் சத்யுகத்தின் எஜமானர்களாக இருந்தார்கள் என்று யார் வேண்டுமானாலும் கூறுவார்கள். நல்லது, சத்யுகத்திற்கு முன்னர் என்ன இருந்தது? இதைக் கூட இப்பொழுது நீங்கள் அறிந்துள்ளீர்கள். இப்பொழுது கலியுகத்தின் இறுதி ஆகும், மேலும் பிரஜைகள் மீது பிரஜைகளின் இராஜ்யம் நடைபெறுகிறது. இப்பொழுது இராஜ்யம் கிடையாது, எவ்வளவு வித்தியாசம் உள்ளது! சத்யுகத்தின் ஆரம்பத்தில் இராஜாக்கள் இருந்தனர், மேலும், இப்பொழுது கலியுகத்திலும் இராஜாக்கள் உள்ளனர். அவர்கள் எவரும் பாவனமாக இல்லை, ஆனால், பணம் கொடுத்துக் கூட பட்டத்தைப் பெற்றுக்கொள் கின்றனர். எவருமே மகாராஜா கிடையாது, பட்டத்தை விலைக்கு வாங்கிக் கொள்கின்றனர். பட்டியாலாவின் மகாராஜா, ஜோத்பூர், பிகானேரின் மகாராஜா . . . இவ்வாறு பெயர் சொல்கின்றனர் அல்லவா. இந்தப் பெயர் அழிவற்றதாக இருந்து வருகிறது. இந்த இலட்சுமி நாராயணரைப் பற்றிக் கூறும்பொழுது இவர்கள் சத்யுகத்தின் எஜமானர்களாக இருந்தார்கள் என்று கூறுவார்கள். யார் இராஜ்யத்தைப் பெற்றது? இராஜ்யம் எவ்வாறு ஸ்தாபனை ஆகிறது என்பதை இப்பொழுது நீங்கள் அறிந்துள்ளீர்கள். நான் உங்களுக்கு இப்பொழுது 21 பிறவிகளுக்காகப் படிப்பிக்கின்றேன் என்று தந்தை கூறுகின்றார். அவர்களோ படித்து இந்தப் பிறவியிலேயே வக்கீல் முதலிய நிலையை அடைகின்றனர். நீங்கள் இப்பொழுது படித்து எதிர்காலத்தில் மகாராஜா மகாராணி ஆகிறீர்கள். நாடக திட்டத்தின் அனுசாரம் புது உலகத்தின் ஸ்தாபனை நடந்து கொண்டிருக்கிறது. இப்பொழுது பழைய உலகம் ஆகும். எவ்வளவு தான் நல்ல நல்ல பெரிய மாளிகைகள் இருந்தாலும் வைரங்கள், இரத்தினங்களால் ஆன மாளிகையை உருவாக்குவதற்கு எவருக்கும் சக்தி இல்லை. சத்யுகத்தில் அனைவரும் வைரங்கள், இரத்தினங்களால் ஆன மாளிகையை உருவாக்கு கின்றனர் அல்லவா? உருவாக்குவதற்கு சமயம் எடுப்பதில்லை. இங்கேயும் கூட பூகம்பம் போன்றவை ஏற்படுகிறது என்றால் அனேக கைவினைஞர்களை ஈடுபடுத்துகின்றனர், ஓரிரண்டு வருடங்களில் முழு நகரத்தையும் உருவாக்கிவிடுகின்றனர். புதுடெல்லியை உருவாக்குவதற்கு 8, 10 வருடங்கள் ஆனது, இங்குள்ள பணியாட்கள் மற்றும் அங்குள்ள பணியாட்களிடம் வேறுபாடு உள்ளது அல்லவா? தற்காலத்தில் புதுப்புது கண்டுபிடிப்புகளையும் உருவாக்கிக்கொண்டு இருக்கின்றனர். கட்டிடங்களை உருவாக்கும் அறிவியலும் கூட வலிமை வாய்ந்ததாக உள்ளது, அனைத்தும் தயாராகக் கிடைக்கிறது, உடனடியாகக் அடுக்கு மாடிக் கட்டிடம் தயாராகிவிடுகிறது. மிகவும் வேக வேகமாக உருவாகின்றன, இந்த அனைத்தும் அங்கு பயன்பாட்டில் வருகின்றன அல்லவா! இவை அனைத்தும் உடன் வரப்போகின்றன. சம்ஸ்காரம் உள்ளது அல்லவா! இந்த அறிவியலின் சம்ஸ்காரமும் உடன் வரும். எனவே, பாவனம் ஆக வேண்டும் என்றால் தந்தையை நினைவு செய்யுங்கள் என்று இப்பொழுது தந்தை குழந்தைகளுக்குப் புரிய வைத்துக்கொண்டு இருக்கின்றார். தந்தையும் குட்மார்னிங் சொல்லிவிட்டுப் பிறகு படிப்பினை கொடுக்கின்றார். குழந்தைகளே தந்தையின் நினைவில் அமர்ந்துள்ளீர்களா? நடக்கும்பொழுதும் சுற்றும்பொழுதும் தந்தையை நினைவு செய்யுங்கள், ஏனெனில், ஜென்ம ஜென்மங்களின் சுமை தலை மீது உள்ளது. ஏணிப்படியில் இறங்கி இறங்கி 84 பிறவிகள் எடுக்கின்றீர்கள். இப்பொழுது பிறகு ஒரு பிறவியில் ஏறும் கலை உள்ளது. எந்தளவு தந்தையை நினைவு செய்து கொண்டே இருப்பீர்களோ, அந்தளவு குஷியும் இருக்கும், சக்தி கிடைக்கும். அனேக குழந்தைகள் உள்ளனர், அவர்களை முதல் நம்பரில் வைக்கப்படுகின்றது, ஆனால், அவர்கள் நினைவில் முற்றிலும் இருப்பதே இல்லை. ஞானத்தில் தீவிரமாக உள்ளனர், ஆனால், நினைவு யாத்திரையில் இல்லை. தந்தை குழந்தைகளின் மகிமை பாடுகின்றார். இவரும் முதல் எண்ணில் இருக்கின்றார் எனில், அவசியம் உழைப்பும் செய்திருப்பார் அல்லவா. நீங்கள் எப்பொழுதும் சிவபாபா புரியவைக்கின்றார் என்றே புரிந்துகொள்ளுங்கள், அப்பொழுது புத்தியோகம் அங்கு ஈடுபட்டு இருக்கும். இவரும் கற்றுக் கொண்டிருப்பார் அல்லவா. பிறகும் பாபாவை நினைவு செய்யுங்கள் என்று கூறுகின்றார். பிறருக்குப் புரியவைப்பதற்காகவே சித்திரங்கள் உள்ளன. நிராகாரமானவரையே பகவான் என்று கூறப்படுகிறது. அவர் வந்து சரீரத்தை தாரணை செய்கின்றார். ஒரு பகவானுடைய குழந்தைகளான அனைத்து ஆத்மாக்களும் சகோதரன் சகோதரன் ஆவீர்கள். இப்பொழுது இந்த சரீரத்தில் வீற்றிருக்கிறீர்கள். அனைவரும் அழிவற்ற மூர்த்திகள் ஆவீர்கள். இது அழிவற்ற மூர்த்தியின் (ஆத்மா) சிம்மாசனம் ஆகும். அழிவற்ற சிம்மாசனம் என்று குறிப்பிட்ட வேறு எந்தப் பொருளும் அல்ல. இந்த சிம்மாசனம் அழிவற்ற மூர்த்தியினுடையது. பிருக்குட்டியின் (நெற்றி) நடுவில் ஆத்மா வீற்றிருக்கிறது, இதையே அழிவற்ற சிம்மாசனம் என்று கூறப்படுகிறது. அழிவற்ற சிம்மாசனமானது அழிவற்ற மூர்த்தியினுடையது. ஆத்மாக்கள் அனைவரும் அழிவற்றவர்கள், எவ்வளவு சூட்சுமமானது! தந்தையோ நிராகாரமானவர். அவர் தனது சிம்மாசனத்தை எங்கிருந்து கொண்டு வருவார்? தந்தை கூறுகின்றார் - இது எனது சிம்மாசனம் ஆகும். நான் வந்து இந்த சிம்மாசனத்தைக் கடனாகப் பெறுகின்றேன். பிரம்மாவின் சாதாரண வயோதிக உடலில் அழிவற்ற சிம்மாசனத்தில் வந்து அமர்கின்றேன். அனைத்து ஆத்மாக்களின் சிம்மாசனம் இது என்பதை இப்பொழுது நீங்கள் அறிந்து கொண்டீர்கள். மனிதர்களுடைய விசயமே சொல்லப்படுகிறது, விலங்குகளினுடைய விசயம் அல்ல. முன்னர் எந்த மனிதர்கள் விலங்கை விட கீழானவர்கள் ஆகியிருந்தனரோ, அவர்கள் மாற வேண்டும். யாராவது விலங்கைப் பற்றிய விசயத்தைக் கேட்டால், முதலில் தன்னை சீர்திருத்துங்கள் என்று கூறுங்கள். சத்யுகத்திலோ விலங்குகள் கூட நன்றாக, முதல்தரமானதாக இருக்கும். குப்பை கூளங்கள் எதுவும் இருக்காது. அரசரின் மாளிகையில் புறா போன்றவைகளின் எச்சம் இருந்தது என்றால் தண்டனை கொடுக்கப்படும். கொஞ்சம் கூட குப்பை இருக்காது. அங்கு மிகவும் கவனம் இருக்கும். காவல் காத்துக்கொண்டு இருப்பார்கள், ஒருபொழுதும் எந்த விலங்கும் உள்ளே நுழைந்துவிட முடியாது. மிகவும் சுத்தமாக இருக்கும். இலட்சுமி நாராயணரின் கோவிலில் எவ்வளவு தூய்மை உள்ளது! சங்கர் பார்வதியின் கோவிலில் புறாவையும் காண்பிக்கின்றனர். எனில், அவசியம் கோவிலையும் அசுத்தம் செய்திருக்கும். சாஸ்திரங்களில் அதிகமான கட்டுக் கதைகளை எழுதிவிட்டனர்.
இப்பொழுது தந்தை குழந்தைகளுக்குப் புரியவைக்கின்றார், அவர்களில் கூட தாரணை செய்ய முடிந்தவர்கள் குறைவானவர்களே உள்ளனர். மற்றவர்கள் எதையும் புரிந்துகொள்வதில்லை. தந்தை குழந்தைகளுக்கு எவ்வளவு அன்புடன் புரியவைக்கின்றார் - குழந்தைகளே, மிக மிக இனிமையானவர் ஆகுங்கள். வாயிலிருந்து எப்பொழுதும் இரத்தினங்கள் வெளிப்பட்டுக்கொண்டே இருக்க வேண்டும். நீங்கள் யோக சொரூபமாகி ஞான மழை பொழிபவர்கள் ஆவீர்கள். உங்களுடைய வாயிலிருந்து கல் வெளிவரக் கூடாது. ஆத்மாவிற்குத் தான் மகிமை உள்ளது. நான் ஜனாதிபதி, இன்னார், . . . என்னுடைய சரீரத்தின் பெயர் இது என்று ஆத்மா கூறுகிறது. நல்லது, ஆத்மாக்கள் யாருடைய குழந்தைகள்? ஒரு பரமாத்மாவின் குழந்தைகள். எனவே, அவசியம் அவரிடமிருந்து ஆஸ்தி கிடைக்கும். அவர் பிறகு சர்வவியாபியாக எவ்வாறு இருக்க முடியும்! நாம் கூட முதலில் எதுவும் அறியாதவர்களாக இருந்தோம் என்பதை நீங்கள் புரிந்துள்ளீர்கள். இப்பொழுது புத்தி எவ்வளவு திறந்துவிட்டது!. நீங்கள் எந்த ஒரு கோவிலுக்குச் சென்றாலும் இவை அனைத்தும் பொய்யான சித்திரங்கள் என்று புரிந்துகொள்வீர்கள். 10 கைகளைக் கொண்ட, துதிக்கையுடைய யானையின் சித்திரம் ஏதாவது உள்ளதா என்ன! இவை அனைத்தும் பக்தி மார்க்கத்தின் விசயங்கள் ஆகும். உண்மையில் அனைவருக்கும் சத்கதியைக் கொடுக்கும் வள்ளலான ஒரு சிவபாபாவிற்கே பக்தி செய்யப்பட வேண்டும். இந்த இலட்சுமி நாராயணர் கூட 84 பிறவிகள் எடுக்கின்றனர் என்பது உங்களுடைய புத்தியில் உள்ளது. பிறகு உயர்ந்ததிலும் உயர்ந்த தந்தையே வந்து அனைவருக்கும் சத்கதி கொடுக்கின்றார். அவரை விடப் பெரியவர் எவரும் இல்லை. இந்த ஞானத்தின் விசயங்களை உங்களில் கூட வரிசைக்கிரமமாகவே தாரணை செய்ய முடியும். தாரணை செய்ய முடியவில்லை எனில், பிறகு என்ன பயன்? சிலரோ கண்ணிழந்தவர்களின் ஊன்றுகோல் ஆகுவதற்குப் பதிலாக கண் இழந்தவர்கள் ஆகிவிடுகின்றனர். எந்தப் பசு பால் கொடுக்காதோ அதை கிழமாடுகளுக்கான கொட்டகைக்கு அனுப்பிவிடுகின்றனர். இவர்களும் கூட ஞானத்தின் பால் கொடுக்க முடியாது. எந்த முயற்சியும் செய்யாதவர்கள் அனேகர் உள்ளனர். நாம் ஏதாவது பிறருக்கு நன்மை செய்ய வேண்டும் என்று நினைப்பதே இல்லை. தன்னுடைய அதிர்ஷ்டத்தைப் பற்றிய சிந்தனையே இருப்பதில்லை. என்ன கிடைத்துள்ளதோ அது நல்லது, போதும் என்று இருக்கின்றனர். இவர்களுக்கு அதிர்ஷ்டத்தில் இல்லை என்று தந்தை கூறுவார். தனது சத்கதிக்கான முயற்சி செய்ய வேண்டும். ஆத்ம அபிமானி ஆக வேண்டும். தந்தை எவ்வளவு உயர்ந்ததிலும் உயர்ந்தவர், மேலும், எவ்வாறு பதீத உலகத்தில், பதீத சரீரத்தில் வருகின்றார் பாருங்கள். அவரை அழைப்பதே பதீத உலகத்தில். எப்பொழுது இராவணன் துக்கம் கொடுக்கிறாரோ, அப்பொழுது முற்றிலும் கீழானவர்களாக ஆக்கிவிடுகிறார், அந்த சமயம் தந்தை வந்து சிரேஷ்டமாக்குகின்றார். யார் நல்ல முயற்சி செய்கின்றார்களோ, அவர்கள் இராஜா இராணி ஆகின்றார்கள். யார் முயற்சி செய்வது இல்லையோ, அவர்கள் ஏழையாகின்றார்கள். அதிர்ஷ்டத்தில் இல்லை எனில் முயற்சி செய்ய முடியாது. சிலரோ மிக நன்றாக அதிர்ஷ்டத்தை உருவாக்கிக் கொள்கின்றனர். நான் என்ன சேவை செய்கின்றேன் என்று ஒவ்வொருவரும் தன்னைப் பார்க்க முடியும். நல்லது.
இனிமையிலும் இனிமையான வெகுகாலத்திற்குப் பிறகு தேடிக் கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு தாய் தந்தை பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மிகக் குழந்தைகளுக்கு ஆன்மிகத் தந்தையின் நமஸ்காரம்.
தாரணைக்காக முக்கியமான சாரம்:
1. யோக சொரூபத்திலிருந்து ஞான மழை பொழிபவராகி வாயிலிருந்து எப்பொழுதும் இரத்தினங்களை வெளிப்படுத்த வேண்டும், மிக மிக இனிமையானவர் ஆக வேண்டும். ஒருபொழுதும் கல் (கடுமையான வார்த்தைகள்) வெளிவரக் கூடாது.
2. ஞானம் மற்றும் யோகத்தில் தீவிரமானவராகி தன்னுடைய மற்றும் பிறருடைய நன்மை செய்ய வேண்டும். தன்னுடைய உயர்ந்த அதிர்ஷ்டத்தை உருவாக்குவதற்கான முயற்சி செய்ய வேண்டும். கண் இழந்தவர்களின் ஊன்றுகோல் ஆக வேண்டும்.
ஓம் சாந்தி. முக்கியமாக பாரதம் மற்றும் முழு உலகத்திற்கும் இந்த செய்தியைத் தெரிவிக்க வேண்டும் என பாபா புரிய வைக்கிறார் மேலும் குழந்தைகளும் அறிகிறீர்கள். நீங்கள் அனைவரும் தூதுவர்கள். இப்போது பாரதம் மீண்டும் சொர்க்கமாக மாறிக் கொண்டிருக்கிறது என்ற செய்தியை அனைவருக்கும் மிக மகிழ்ச்சியோடு தெரிவிக்க வேண்டும். சொர்க்கத்தின் இறை தந்தை என்று யாரை அழைத்தோமோ அவரே ஸ்தாபனை செய்வதற்காக பாரதத்தில் வந்திருக்கிறார். இந்த நற்செய்தியை அனைவருக்கும் கூறுங்கள், என்பது குழந்தைகளாகிய உங்களுக்கான கட்டளை ஆகும். ஒவ்வொருவருக்கும் தன்னுடைய தர்மத்தைப் பற்றிய ஆர்வம் இருக்கிறது. உங்களுக்கும் ஆர்வம் இருக்கிறது. நீங்கள் மகிழ்ச்சியான செய்தியை கூறுகிறீர்கள். பாரதத்தின் தேவி தேவதா தர்மத்தின் ஸ்தாபனை ஆகிக் கொண்டிருக்கிறது. அதாவது பாரதம் மீண்டும், சொர்க்கமாக மாறிக் கொண்டிருக்கிறது. இப்போது நாம் சொர்க்கத்திற்கு அதிபதியாகிக் கொண்டிருக்கின்றோம் என்ற மகிழ்ச்சி உள்ளுக்குள் இருக்க வேண்டும். யாருக்குள் இந்த மகிழ்ச்சி இருக்கிறதோ அவர்களுக்கு எந்த விதமான துக்கமும் இருக்காது. புதிய உலகம் உருவாவதில் துன்பங்கள் இருக்கிறது என குழந்தைகள் அறிகிறார்கள். ஒன்றும் அறியாத பெண்கள் எவ்வளவு கொடுமைப்படுத்தப்படுகின்றனர். நாம் பாரதத்திற்கு எல்லையற்ற மகிழ்ச்சியான செய்தியைக் கூறுகின்றோம் என்ற நினைவு எப்போதும் குழந்தைகளுக்கு இருக்க வேண்டும். சகோதரிகளே ! சகோதரர்களே! வந்து இந்த மகிழ்ச்சியான செய்தியைக் கேளுங்கள் என பாபா அச்சடித்தது போன்று முழு நாளும் எப்படி அனைவருக்கும் இந்த செய்தியைக் கூறுவது என்ற சிந்தனை இருக்க வேண்டும். எல்லையற்ற தந்தை எல்லையற்ற சொத்தைக் கொடுக்க வந்திருக்கின்றார். இந்த லஷ்மி நாராயணனின் படத்தைப் பார்த்து முழு நாளும் மகிழ்ச்சி அடைய வேண்டும். நீங்கள் மிகப் பெரிய மனிதர்கள். ஆகவே, உங்களுக்குள் எந்த ஒரு காட்டுவாசிகளின் நடத்தையும் இருக்கக் கூடாது. நாம் குரங்கை விட மோசமாக இருந்தோம் என அறிகிறீர்கள். இப்போது பாபா நம்மை இவ்வாறாக(தேவி, தேவதை) மாற்றுகின்றார். எனவே எவ்வளவு குஷி இருக்க வேண்டும். ஆனால், அதிசயம் என்னவென்றால், குழந்தைகளுக்கு இந்த மகிழ்ச்சி இல்லை. அந்த உற்சாகத்தோடு மகிழ்ச்சியான செய்தியைக் கூறுவதில்லை. பாபா உங்களை தூதுவராக மாற்றியிருக்கிறார். அனைவரின் காதுகளிலும் இந்த செய்தியைக் கொடுத்துக் கொண்டே இருங்கள். நம்முடைய ஆதி சனாதன தேவி தேவதா தர்மம் எப்போது படைக்கப்பட்டது, பிறகு எங்கே சென்றனர் என பாரதவாசிகளுக்குத் தெரியவில்லை. இப்போதோ சித்திரங்கள் மட்டும் இருக்கின்றது. மற்ற தர்மங்கள் அனைத்தும் இருக்கின்றது. ஆதி சனாதன தேவி தேவதா தர்மம் மட்டும் இல்லை. பாரதத்தில் தான் சித்திரங்கள் இருக்கின்றது. பிரம்மா மூலமாக ஸ்தாபனை செய்கிறார். எனவே நீங்கள் அனைவருக்கும் இந்த மகிழ்ச்சியான செய்தியைக் கூறினால் உங்களுக்குள்ளும் மகிழ்ச்சி ஏற்படும். படக் கண்காட்சிகளில் நீங்கள் இந்த மகிழ்ச்சியான செய்தியைக் கூறுகிறீர்கள் அல்லவா? எல்லையற்ற தந்தையிடம் வந்து சொர்க்கத்தின் ஆஸ்தியை அடையுங்கள். இந்த லஷ்மி நாராயணன் சொர்க்கத்திற்கே அதிபதி அல்லவா? பிறகு அவர்கள் எங்கே சென்றனர். இதை யாருமே புரிந்துக் கொள்ளவில்லை. ஆகவே தான் முகம் மனிதர்களைப் போன்றும், நடத்தை குரங்கைப் போன்றும் இருக்கிறது எனக் கூறப்படுகிறது. இப்போது உங்களுடைய முகம் மனிதர்களை போன்று இருக்கிறது, நடத்தை தேவதைகளைப் போன்று மாறிக் கொண்டிருக்கிறது. நாம் மீண்டும் அனைத்து குணங்களும் நிறைந்தவர்களாக மாறுகிறோம் என அறிகிறீர்கள். பிறகு மற்றவர்களையும் இந்த முயற்சியை செய்விக்க வேண்டும். படக் கண்காட்சிகள் மூலம் சேவை செய்வது மிகவும் நல்லது. யாருக்கு இல்லற விவகாரங்களில் பந்தனம் இல்லையோ முதியவர்களாக, விதவைகளாக, குமாரிகளாக இருக்கிறார்களோ அவர்களுக்கு சேவை செய்வதற்கு வாய்ப்பு இருக்கிறது. சேவையில் ஈடுபட வேண்டும். இச்சமயம் திருமணம் செய்து கொள்வது மிகவும் நஷ்டம். திருமணம் செய்யாமல் இருப்பதே சுதந்திரமானது. இந்த மரண உலகம் அழுக்கான உலகம். அழுதுக் கொண்டிருக்கின்றனர் என பாபா கூறுகிறார். நீங்கள் தூய்மையான உலகத்திற்குச் செல்ல வேண்டும் என்றால் இந்த சேவையில் ஈடுபட வேண்டும். படக் கண்காட்சிகள் ஒன்றன் பின் ஒன்றாக வைக்க வேண்டும். சேவை செய்யக் கூடிய குழந்தைகளுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற ஆர்வம் நன்றாக இருக்கும். ஒரு சிலர் பாபாவிடம் நாங்கள் வேலையை விட்டுவிடவா? என்று கேட்கிறார்கள். பாபா பார்ப்பார். தகுதி இருக்கிறது என்றால், சரி, சேவையை செய்யுங்கள் என அனுமதி அளிக்கிறார். இப்படிப்பட்ட மகிழ்ச்சியான செய்தியை அனைவருக்கும் கூற வேண்டும். தனது இராஜ்ய பாக்கியத்தை வந்து அடையுங்கள் என பாபா கூறுகின்றார். நீங்கள் 5000 வருடத்திற்கு முன்பு இராஜ்ய பாக்கியத்தை அடைந்தீர்கள், இப்போது மீண்டும் அடையுங்கள். என்னுடைய வழிப்படி மட்டும் செல்லுங்கள்.
நமக்குள் என்னென்ன அவகுணங்கள் இருக்கின்றது என பார்க்க வேண்டும். நீங்கள் இந்த பேட்ஜ்கள் மூலமாக கூட நிறைய சேவை செய்யலாம். இது முதல் தரமான பொருளாகும். இது ஒரு பைசா மதிப்புடையதாக இருக்கலாம், ஆனால் இதன் மூலம் எவ்வளவு உயர்ந்த பதவியைப் பெற முடியும் ! மனிதர்கள் படிப்பதற்கு புத்தகங்கள் வாங்குவதற்காக எவ்வளவு செலவு செய்கிறார்கள். இங்கே புத்தகங்கள் வேண்டும் என்ற விசயம் எதுவும் இல்லை. அனைவரின் காதுகளிலும் மட்டும் இந்த செய்தியைக் கொடுக்க வேண்டும். இதுவே தந்தையின் உண்மையான மந்திரம் ஆகும். மற்ற அனைவரும் பொய்யான மந்திரங்களைக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். பொய்யான பொருட்களுக்கு எந்த மதிப்பும் கிடையாது. வைரங்களுக்குத் தான் மதிப்பிருக்கிறது. கற்களுக்கு இல்லை. ஒவ்வொரு வார்த்தையும் இலட்சக்கணக்கான ரூபாய் மதிப்புடையது என பாடப்பட்டிருக்கிறது. அவ்வாறு இந்த ஞானத்திற்காகவே கூறப்படுகிறது. அளவற்ற சாஸ்திரங்கள் இருக்கின்றது என பாபா கூறுகிறார். நீங்கள் அரைக் கல்பமாக படித்துக் கொண்டே வந்துள்ளீர்கள். அதன் மூலமாக எதுவும் கிடைக்கவில்லை. இப்போது உங்களுக்கு ஞான ரத்தினங்களைக் கொடுக்கிறார். அவர்களுடையது சாஸ்திரங்களின் அதிகாரம் ஆகும். தந்தையோ ஞானக் கடல். இவருடைய ஒவ்வொரு வார்த்தையும் லட்சக்கணக்கான, கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புடையதாகும். நீங்கள் உலகத்திற்கே அதிபதியாகிறீர்கள். பல கோடி மடங்கு செல்வந்தராக மாறுகிறீர்கள். இந்த ஞானத்திற்குத்தான் மகிமை இருக்கின்றது. அந்த சாஸ்திரங்களைப் படிப்பதால் ஏழையாகியிருக்கிறீர்கள். எனவே இந்த ஞான ரத்தினங்களை தானம் செய்ய வேண்டும். பாபா மிகவும் எளிய வழிமுறைகளைப் புரிய வைக்கின்றார். தனது தர்மத்தை மறந்து நீங்கள் வெளியே அலைந்து கொண்டு இருக்கிறீர்கள் என கூறுங்கள். பாரதவாசிகளாகிய உங்களின் ஆதி சனாதன தேவி தேவதா தர்மம் இருந்தது. அந்த தர்மம் எங்கே சென்றுவிட்டது. 84 லட்சம் பிறவிகள் என கூறியமையால் எந்த விஷயமும் புத்தியில் இல்லை. நீங்கள் ஆதிசனாதன தேவி தேவதா தர்மத்தினராக இருந்தீர்கள். பிறகு 84 பிறவிகள் எடுத்துள்ளீர்கள் என பாபா புரிய வைக்கின்றார். இந்த லட்சுமி நாராயணன் ஆதிசனாதன தேவ தேவதா தர்மத்தைச் சேர்ந்தவர் அல்லவா? இப்போது தர்மம் கீழானதாக, செயல்கள் கீழானதாக ஆகிவிட்டது. மற்ற தர்மங்கள் அனைத்தும் இருக்கின்றது. இந்த ஆதி சனாதன தர்மம் மட்டும் இல்லை. இந்த தர்மம் இருந்த போது வேறு எந்த தர்மமும் இல்லை. எவ்வளவு எளிதாக இருக்கின்றது. இவர் தந்தை, இவர் தாதா. பிரஜா பிதா பிரம்மா இருக்கின்றார் என்றால் நிறைய பி.கே இருப்பார்கள் அல்லவா? தந்தை வந்து இராவணனின் சிறையில் இருந்து, சோகவனத்தில் இருந்து விடுவிக்கின்றார். சோகவனத்தின் பொருளைக் கூட யாரும் புரிந்து கொள்வதில்லை. இது சோக உலகமாக, துக்க உலகமாக இருக்கிறது என பாபா கூறுகின்றார். அது சுக உலகமாக இருக்கிறது. நீங்கள் உங்களுடைய அமைதியின் உலகத்தை மற்றும் சுக உலகத்தை நினைவு செய்து கொண்டேயிருங்கள். இன்கார்போரியல் வேர்ல்டு (நிராகார உலகம்) என கூறுகிறார்கள் அல்லவா? ஆங்கில வார்த்தை மிக நன்றாக இருக்கிறது! ஆங்கிலம் புழக்கத்தில் இருந்து கொண்டு இருக்கிறது. இப்போது பல மொழிகள் ஆகிவிட்டது. நிர்குண பால அமைப்பு...... என கூறுகிறார்கள். நிர்குணம் என்றால் எந்த குணமும் இல்லை. இவ்வாறு அமைப்புகளை உருவாக்கி இருக்கிறார்கள். நிர்குணம் என்ற பொருளைக் கூட புரிந்து கொள்ளவில்லை. பொருள் புரியாமலேயே பெயர் வைக்கிறார்கள். அளவு கடந்த அமைப்புகள் உள்ளன. பாரதத்தின் ஒரே ஒரு ஆதிசனாதன அமைப்பு இருந்தது. அப்போது வேறு எந்த தர்மும் இல்லை. ஆனால் மனிதர்கள் 5000 வருடங்களுக்குப் பதிலாக கல்பத்தின் ஆயுளை இலட்சக்கணக்கான வருடங்கள் என எழுதிவிட்டனர். நீங்கள் அனைவரையும் இந்த அறியாமை இருளில் இருந்து வெளியே கொண்டு வர வேண்டும். சேவை செய்ய வேண்டும். இந்த நாடகம் நிச்சயிக்கப்பட்டு இருக்கின்றது. ஆனால், சிவபாபாவின் யக்ஞத்திலிருந்து சாப்பிடுகிறீர்கள், அருந்துகிறீர்கள். ஆனால், சேவை எதுவும் செய்யவில்லை என்றால் வலது கரமாக இருக்கக்கூடிய தர்மராஜ் நிச்சயமாக தண்டனை கொடுப்பார். ஆகவே எச்சரிக்கை கொடுக்கப்படுகிறது. சேவை செய்வது மிகவும் எளிதாகும். அன்போடு யாருக்கு வேண்டுமானாலும் புரிய வைத்துக் கொண்டே இருங்கள். நாங்கள் கோவிலுக்குச் சென்றோம் கங்கைக்கரைக்கு சென்றோம் என சிலருடைய செய்திகள் பாபாவிற்கு வருகிறது. அதிகாலையில் எழுந்து கோவிலுக்கு செல்கிறார்கள். ஆன்மீக சிந்தனை உடையவர்களுக்கு புரியவைப்பது எளிதாகும். லட்சுமி நாராயணனின் கோவிலில் சேவை செய்வது அனைத்தையும் விட நல்லதாகும். சரி, பிறகு அவர்களை இவ்வாறு உருவாக்கக்கூடியவர் சிவதந்தையே, அங்கேயும் சென்று புரிய வையுங்கள். காடு தீப்பற்றி எரியும். இது அனைத்தும் அழிந்து போகும். பிறகு உங்களுடைய நடிப்பும் முடிந்து போகும். நீங்கள் அரச குலத்தில் சென்று பிறவி எடுப்பீர்கள். இராஜ்யம் எப்படிக் கிடைக்கும் என்பது போகப்போக தெரியவரும். நாடகத்தில் முதலிலேயே கூறமாட்டார்கள். என்ன பதவி அடைவோம் என நீங்கள் தெரிந்து கொள்வீர்கள். அதிகமாக தான புண்ணியம் செய்யக்கூடியவர்கள் இராஜ்யத்தில் வருவார்கள் அல்லவா? இராஜாக்களிடம் நிறைய செல்வம் இருக்கிறது. இப்பொழுது நீங்கள் அழியாத ஞான ரத்தினங்களை தானம் செய்கிறீர்கள்.
இந்த ஞானம் பாரதவாசிகளுக்காகவே. ஆதி சனாதன தேவி தேவதா தர்மம் உருவாகிக் கொண்டு இருக்கின்றது. தூய்மை இல்லாதவர்களை தூய்மையானவர்களாக மாற்றுவதற்காக தந்தை வந்திருக்கிறார் என்று கூறுங்கள். என்னை நினையுங்கள் என தந்தை கூறுகின்றார். எவ்வளவு எளிது. ஆனால் தமோபிரதானமான புத்தி உடையவர்கள் எதையுமே கடைப்பிடிப்பதில்லை. விகாரங்கள் நுழைந்திருக்கிறது. விலங்குகள் கூட விதவிதமாக இருக்கிறது. சிலருக்குள் நிறைய கோபம் இருக்கிறது. ஒவ்வொரு விலங்கின் சுபாவமும் வேறுபட்டு இருக்கிறது. துன்பம் கொடுக்கக்கூடிய விதவிதமான சுபாவங்கள் இருக்கிறது. எல்லாவற்றையும் விட முதலில் துக்கம் கொடுக்கக்கூடிய விகாரம் காமத்தில் ஈடுபடுவதாகும். இராவண இராஜ்யத்தில் தான் இந்த விகாரங்களின் இராஜ்யம் நடக்கின்றது. எவ்வளவு நல்ல நல்ல பெண் குழந்தைகள் இருக்கிறார்கள். பாவம் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். அவர்களுக்கு பந்தனத்தில் இருப்பவர்கள் என கூறுகிறார்கள். பாபா தினம்தோறும் புரிய வைத்துக் கொண்டே இருக்கின்றார். உண்மையில் அவர்கள் ஞானத்தின் எல்லையை அடைந்துவிட்டால் பிறகு யாருமே அவர்களைப் பிடிக்க முடியாது. ஆனால், மோகம் நிறைய இருக்கிறது. சந்நியாசிகளுக்கு கூட வீடு வாசல் போன்றவை நினைவிற்கு வருகின்றன. அவர்கள் கஷ்டப்பட்டே அந்த பற்றை நீக்குகிறார்கள். இப்பொழுது நீங்கள் நண்பர்கள், உறவினர்கள் அனைவரையும் மறக்க வேண்டும். ஏனென்றால் இந்த பழைய உலகம் அழியப் போகின்றது. இந்த சரீரத்தையும் மறக்க வேண்டும். தன்னை ஆத்மா என உணர்ந்து தந்தையை நினைக்க வேண்டும். தூய்மையாக மாற வேண்டும். 84 பிறவிகளின் பாகத்தை நடிக்கத்தான் வேண்டும். இடையில் யாரும் திரும்பிப் போக முடியாது. இப்பொழுது நாடகம் முடியப் போகின்றது. இப்போது குழந்தைகளாகிய உங்களுக்கு நிறைய குஷியிருக்க வேண்டும். இப்பொழுது நீங்கள் உங்களுடைய வீட்டிற்குச் செல்ல வேண்டும். நடிப்பு முடியப் போகின்றது. பாபாவை அதிகமாக நினைக்க வேண்டும் என்ற தீவிர ஆர்வம் இருந்துகொண்டே இருக்க வேண்டும். நினைவினால் தான் விகர்மம் அழியும். வீட்டிற்குச் சென்று பிறகு சுகதாமத்திற்கு வருவீர்கள். சீக்கிரம் இந்த உலகத்தில் இருந்து விடுபட வேண்டும் என்று பலர் நினைக்கிறார்கள். ஆனால் எப்படி போவார்கள். முதலில் உயர்ந்த பதவி அடைவதற்கு முயற்சி செய்ய வேண்டும் அல்லவா? முதலில் நாம் எவ்வளவு தகுதி அடைந்திருக்கின்றோம் என தனது நாடியைப் பார்த்துக்கொள்ள வேண்டும். சொர்க்கத்திற்குச் சென்று என்ன செய்வார்கள். முதலில் தகுதி அடைய வேண்டும் அல்லவா? பாபாவிற்கு நல்ல குழந்தையாக இருக்க வேண்டும். இந்த லட்சுமி நாராயணன் தகுதி உடைய நல்ல குழந்தைகள் அல்லவா? குழந்தைகளைப் பார்த்து இவர்கள் மிகவும் நல்ல குழந்தைகள் சேவைக்கு தகுதி உடையவர்கள் என பகவானே கூறுகின்றார். சிலர் தகுதி அற்றவர் எனவும் கூறுவார். தனது பதவியை தானாகவே நஷ்டமாக்கிக் கொள்கிறார்கள். பாபா உண்மையைக் கூறுகிறார் அல்லவா? பதீத பாவனா வாருங்கள், வந்து சுக உலகத்திற்கு அதிபதியாக்குங்கள் என அழைக்கிறார்கள். அளவற்ற சுகத்தைக் கேட்கிறார்கள் அல்லவா? சிறிதாவது சேவை செய்வதற்குத் தகுதி அடையுங்கள் என பாபா கூறுகின்றார். என்னுடைய பக்தர்களுக்கு, இப்பொழுது சிவபாபா சொர்க்கத்தின் ஆஸ்தியைக் கொடுத்துக் கொண்டு இருக்கிறார் என்ற மகிழ்ச்சியான செய்தியைக் கூறுங்கள். என்னை நினையுங்கள் மற்றும் தூய்மையாகுங்கள். தூய்மையான உலகத்திற்கு அதிபதியாகி விடுவீர்கள் என அவர் கூறுகின்றார். இந்த பழைய உலகம் தீப்பற்றிக் கொண்டு இருக்கின்றது. குறிக்கோளை எதிரில் பார்க்கும் போது நாம் இவ்வாறு மாறவேண்டும் என்ற மகிழ்ச்சி ஏற்படுகின்றது. முழுநாளும் புத்தியில் இது நினைவு இருந்தால் ஒருபோதும் எந்த விதமான சைத்தான் வேலையும் செய்ய மாட்டீர்கள். நாம் இவ்வாறு மாறிக்கொண்டு இருக்கிறோம் என்றால் தவறான வேலைகளை எப்படி செய்ய முடியும்?. ஆனால் யாருடைய அதிர்ஷ்டத்தில் இல்லையோ இப்படியெல்லாம் வழிமுறைகளைக் கண்டுபிடிப்பதில்லை. தனக்காக சம்பாதிப்பதும் இல்லை. எவ்வளவு நல்ல வருமானம். வீட்டில் அமர்ந்தபடியே அனைவரும் சம்பாதிக்க வேண்டும். பிறகு மற்றவர்களையும் சம்பாதிக்க வைக்க வேண்டும். வீட்டில் அமர்ந்த படியே இந்த சுயதர்சன சக்கரத்தைச் சுழற்றுங்கள். மற்றவர்களையும் சுயதர்சன சக்கரதாரி ஆக்குங்கள். எவ்வளவு மற்றவர்களை உருவாக்குகிறீர்களோ அவ்வளவு உங்களுக்கு உயர்ந்த பதவி கிடைக்கும். இந்த லட்சுமி நாராயணனைப் போல மாறலாம். இதுவே உங்களுடைய குறிக்கோளாகும். அனைவரும் சூரிய வம்சியாக மாறுவதில் தான் கையை உயர்த்துகிறீர்கள். இந்த சித்திரங்கள் படக் கண்காட்சிகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இவைகளைப்பற்றி புரிய வைக்க வேண்டும். உயர்ந்ததிலும் உயர்ந்த தந்தை நமக்கு என்ன சொல்லிக் கொடுக்கின்றாரோ அதையே நாம் கேட்கின்றோம். பக்தி மார்க்கத்தின் விஷயங்களைக் கேட்பதில் நமக்கு விருப்பமில்லை. இந்த சித்திரங்கள் மிகவும் நன்றாக இருக்கின்றன. இவைகளை வைத்துக் கொண்டு நீங்கள் நிறைய சேவைகளை செய்ய முடியும். நல்லது.
இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு, தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே.
ஓம் சாந்தி. குழந்தைகளுக்கு தந்தையின் அறிமுகம் கிடைத்தது. பின்னர் தந்தையிடமிருந்து ஆஸ்தி பெற வேண்டும். மேலும் பாவனமாக ஆக வேண்டும். ஹே பதீத பாவனரே ! வந்து எங்களை பாவனமாக ஆக்குங்கள் என்று கூறவும் செய்கிறார்கள். ஏனெனில் நாம் பதீத புத்தி (தூய்மையற்ற புத்தி) உடையவர்கள் ஆவோம் என்று புரிந்துள்ளார்கள். இது பதீதமான (அயர்ன் ஏஜ்டு) இரும்பு யுகத்தின் உலகம் ஆகும் என்று புத்தியும் கூறுகிறது. புதிய உலகத்தை சதோபிரதானம், பழைய உலகத்தை தமோபிரதானம் என்றும் கூறப்படுகிறது. குழந்தைகளாகிய உங்களுக்கு இப்பொழுது தந்தை கிடைத்துள்ளார். பக்தர்களுக்கு பகவான் கிடைத்துள்ளார். பக்திக்குப் பின்னர் பகவான் வந்து பக்தியின் பலனை அளிக்கிறார் என்று கூறவும் செய்கிறார்கள். ஏனெனில் முயற்சி (உழைப்பு) செய்கிறார்கள். பின்னர் பலனும் வேண்டுகிறார்கள். பக்தர்கள் என்ன உழைப்பு செய்கிறார்கள் என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்கள். நீங்கள் அரைகல்பம் பக்தி மார்க்கத்தில் அடிகள் வாங்கி களைத்து விட்டுள்ளீர்கள். பக்தியில் மிகவும் உழைப்பு செய்துள்ளீர்கள். இதுவும் நாடகத்தில் பொருந்தி உள்ளது. பலன் பெறுவதற்காக உழைத்துள்ளீர்கள். பகவான் வந்து பக்தியின் பலனை அளிப்பார் என்று நினைக்கிறார்கள். எனவே பலன் அளிப்பவர் பிறகும் பகவான் தான் ஆகிறார். பக்தர்கள் பகவானை நினைவு செய்கிறார்கள். ஏனெனில் பக்தியில் துக்கம் உள்ளது. ஆக எங்களுடைய துக்கத்தை நீக்குங்கள் பாவனமாக ஆக்குங்கள் என்று கூறுகிறார்கள்.
இப்பொழுது இராவண ராஜ்யம் ஆகும் என்பதை யாரும் அறியாமல் உள்ளார்கள். இராவணன் தான் பதீதமாக (தூய்மையற்றவராக) ஆக்கி உள்ளான். இராம இராஜ்யம் வேண்டும் என்று கூறவும் செய்கிறார்கள். ஆனால் அது எப்பொழுது எப்படி ஆக வேண்டி உள்ளது என்பது பற்றி யாருக்குமே தெரியாது. இப்பொழுது இராவண இராஜ்யம் ஆகும் என்பதை ஆத்மா உள்ளுக்குள் புரிந்துள்ளது. இது இருப்பதே பக்தி மார்க்கமாக. பக்தர்கள் நிறைய நடனம், வேடிக்கை செய்கிறார்கள். குஷியும் கிடைக்கிறது. பிறகு அழவும் செய்கிறார்கள். பகவான் மீதுள்ள அன்பில் கண்ணீர் வந்து விடுகிறது. ஆனால் பகவானை அறியாமல் உள்ளார்கள். யாருடைய அன்பில் கண்ணீர் வருகிறதோ அவரை அறிந்து கொள்ள வேண்டும் அல்லவா? படங்களில் ஒன்றும் கிடைக்க முடியாது. ஆம். நிறைய பக்தி செய்கிறார்கள் என்றால் சாட்சாத்காரம் ஆகிறது. அவ்வளவு தான் ! அதுவே அவர்களுக்கு குஷியின் விஷயம் ஆகும். சுயம் பகவானே வந்து நான் யார் ஆவேன் என்ற அறிமுகத்தை அளிக்கிறார். நான் யாராக இருக்கிறேன், எப்படி இருக்கிறேன் என்பதை உலகத்தில் யாரும் அறியாமல் உள்ளார்கள். உங்களிடையே யார் பாபா என்று கூறுகிறார்களோ அவர்களில் கூட ஒரு சிலர் பக்குவமாக இருக்கிறார்கள். ஒரு சிலர் பக்குவமற்று இருக்கிறார்கள். தேக அபிமானத்தை விடுபடுவதில் தான் உழைப்பு உள்ளது. தேஹீ அபிமானி (ஆத்ம உணர்வுடையவர்) ஆக வேண்டி உள்ளது. நீங்கள் ஆத்மா ஆவீர்கள். நீங்கள் 84 பிறவிகள் அனுபவித்து தமோபிர தானமாக ஆகி உள்ளீர்கள் என்று தந்தை கூறுகிறார். இப்பொழுது ஆத்மாவிற்கு மூன்றாவது கண் கிடைத்துள்ளது. ஆத்மா புரிந்து கொண்டிருக்கிறது. குழந்தைகளாகிய உங்களுக்கு முழு சிருஷ்டி சக்கரத்தின் ஞானத்தை தந்தை அளிக்கிறார். தந்தை நாலேஜ்ஃபுல் (ஞானம் நிறைந்தவர்) ஆவார். எனவே குழந்தைகளுக்கும் நாலேஜ் அளிக்கிறார். நீங்கள் மட்டும் தான் 84 பிறவிகள் எடுக்கிறீர்களா என்று ஒரு சிலர் கேட்பார்கள். கூறுங்கள் - ஆம், எங்களிலும் கூட ஒரு சிலர் 84, ஒரு சிலர் 82 பிறவிகள் எடுக்கிறார்கள். அதிக பட்சமாக 84 பிறவிகள் எடுக்கிறார்கள். யார் முதலில் வருகிறார்களோ அவர்களுக்கு 84 பிறவிகள் இருக்கும். யார் நல்ல முறையில் படித்து உயர்ந்த பதவி அடைகிறார்களோ அவர்கள் சீக்கிரம் வருவார்கள். மாலையில் நெருக்கத்தில் கோர்க்கப்பட்டு விடுவார்கள். எப்படி புதிய வீடு அமைக்கப்பட்டு கொண்டு இருக்கும் பொழுது வீடு சீக்கிரம் அமைந்து விட்டால் போய் நாம் உட்காரலாம் என்று மனதில் தோன்றும். குழந்தைகளாகிய உங்களுக்குக் கூட இப்பொழுது நாம் இந்தப் பழைய உடையை விடுத்து புதியதைப் பெற வேண்டி உள்ளது என்ற குஷி இருக்க வேண்டும். நாடகத்தில் நடிகர்கள் ஒரு மணி அரை மணி நேரத்திற்கு முன்னதாகவே நேரம் முடிந்த உடன் வீட்டிற்குச் சென்று விடுவோம் என்று கடிகாரத்தைப் பார்த்து கொண்டே இருப்பார்கள். அந்த நேரம் வந்து விடுகிறது. குழந்தைகளாகிய உங்களுக்கு எல்லையில்லாத கடிகாரம் உள்ளது. கர்மாதீத நிலையை அடைந்து விட்டீர்கள் என்றால் பின் இங்கு இருக்க மாட்டீர்கள் என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்கள். கர்மாதீதராக ஆவதற்குக் கூட நினைவில் இருக்க வேண்டி வரும். மிகுந்த உழைப்பு உள்ளது. புதிய உலகத்திற்கு நீங்கள் செல்கிறீர்கள். பிறகு ஒவ்வொரு பிறவியிலும் கலை குறைந்து கொண்டே போகிறது. புதிய வீட்டில் 6 மாதம் வசித்தீர்கள் என்றால், கொஞ்சம் தூசி கறைகள் ஆகி விடுகிறது அல்லவா? கொஞ்சம் வித்தியாசம் ஏற்பட்டு விடுகிறது. எனவே அங்கு புதிய உலகத்தில் கூட ஒரு சிலர் முதலில் வருவார்கள். ஒரு சிலர் கொஞ்சம் பின்னால் வருவார்கள். முதலில் வருபவர்களை சதோபிரதானமானோர் என்று கூறுவார்கள். பின்னர் மெல்ல மெல்ல கலைகள் குறைந்து கொண்டே போகும். இந்த நாடகத்தின் சக்கரம் பேன் போல ஊர்ந்து கொண்டே இருக்கிறது. டிக் - டிக் என்று ஆகிக் கொண்டே இருக்கிறது. முழு உலகத்தில் யார் மூலம் எந்த செயல் நடக்கிறதோ அவ்வாறே இந்த சக்கரத்தில் மீண்டும் மீண்டும் நடந்து கொண்டே இருக்கிறது என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்கள். இது மிகவுமே புரிந்து கொள்ள வேண்டிய சூட்சுமமான விஷயங்கள் ஆகும். தந்தை அனுபவத்துடன் கூறுகிறார்.
இந்தப் படிப்பு மீண்டும் 5 ஆயிரம் வருடத்திற்கு பிறகு (ரிபீட்) திரும்பவும் நடைபெறும் என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்கள். இது ஏற்கனவே அமைந்து, அமைக்கப்பட்ட நாடகம் ஆகும். இந்த சக்கரம் பற்றி யாருக்குமே தெரியாது. இதனுடைய கிரியேட்டர் (படைப்பவர்) டைரக்டர் (இயக்குநர்) முக்கிய நடிகர்கள் யார் என்பது எதுவுமே தெரியாமல் உள்ளார்கள். நாம் 84 பிறவிகள் அனுபவித்து இப்பொழுது திரும்பச் செல்கிறோம் என்பது இப்பொழுது குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும். நாம் ஆத்மாக்கள் ஆவோம். (தேஹீ அபிமானி) ஆத்ம உணர்வுடையவர் ஆகும் பொழுதே குஷியின் அளவு அதிகரிக்கும். அது எல்லைக்குட்பட்ட நாடகம் ஆகும். இது எல்லையில்லாதது ஆகும். பாபா ஆத்மாக்களாகிய நமக்கு கற்பித்துக் கொண்டிருக்கிறார். குறிப்பிட்ட இந்த நேரத்தில் இது ஆகப் போகிறது என்று கூற மாட்டார். பாபாவிடம் ஏதாவது விஷயம் கேட்டார்கள் என்றால் நாடகத்தில் எது கூற வேண்டியதாக உள்ளதோ அதைச் சொல்லி விடுகிறேன் என்று கூறுகிறார். நாடகத்திற்கேற்ப என்ன பதில் கிடைக்க வேண்டியதாக இருந்ததோ அது கிடைத்து விட்டது அவ்வளவே! அதன்படி நடக்க வேண்டும். நாடகம் இன்றி தந்தை எதுவும் செய்ய முடியாது. நாடகத்தில் இருந்தது என்றால் புருஷார்த்தம் (முயற்சி) செய்து விடுவோம் என்று ஒரு சில குழந்தை கள் கூறுகிறார்கள். அவர்கள் ஒரு பொழுதும் உயர்ந்த பதவியை அடைய முடியாது. (புருஷார்த்தம்) முயற்சி நீங்கள் செய்ய வேண்டும் என்று தந்தை கூறுகிறார். நாடகம் முந்தைய கல்பத்தைப் போல உங்களை முயற்சி (புருஷார்த்தம்) செய்விக்கிறது. ஒரு சிலர் எது நாடகத்தில் இருக்குமோ அதன்படி நடப்பேன் என்று நாடகத்தின் மீது நின்று விடுகிறார்கள். அப்படியானால் அவர்களுடைய அதிர்ஷ்டத்தில் இல்லை என்று புரிய வைக்கப்படுகிறது. இப்பொழுது நாம் ஆத்மா ஆவோம். நாம் இந்த பாகத்தை நடிக்க வந்துள்ளோம் என்பது உங்களுக்கு நினைவு வந்துள்ளது. ஆத்மாவும் அவினாஷி ஆகும். பாகம் கூட அவினாஷி (அழியாதது) ஆகும். 84 பிறவிகளின் பாகம் ஆத்மாவில் பொருந்தி உள்ளது. பிறகு அதே பாகத்தை ஏற்று நடிப்பீர்கள். இதற்கு இயற்கை என்று கூறப்படுகிறது. இயற்கை பற்றி வேறு என்ன விரிவாக்கம் செய்ய முடியும். இப்பொழுது அவசியம் தூய்மையாக ஆக வேண்டும் என்பது முக்கியமான விஷயம் ஆகும். இதே சிந்தனை உள்ளது. கர்மம் செய்கையிலும் தந்தையின் நினைவில் இருக்க வேண்டும். நீங்கள் ஒரு பிரியதரிசனரின் பிரியதரிசினிகள் ஆவீர்கள் அல்லவா? ஒரு பிரியதரிசனரை எல்லா பிரியதரிசினிகளும் நினைவு செய்கிறார்கள். இப்பொழுது என்னை நினைவு செய்யுங்கள் என்று அந்த பிரியதரிசனர் கூறுகிறார். நான் உங்களை தூய்மையாக ஆக்க வந்துள்ளேன். நீங்கள் என்னை தான் பதீத பாவனர் என்று கூறுகிறீர்கள். பின் என்னை மறந்து கங்கையை ஏன் பதீத பாவனி என்று கூறுகிறீர்கள். இப்பொழுது நீங்கள் புரிந்துள்ளீர்கள். எனவே அவை அனைத்தையும் விட்டு விட்டுள்ளீர்கள். தந்தை தான் பதீத பாவனர் ஆவார் என்பதை நீங்கள் புரிந்துள்ளீர்கள். இப்பொழுது பதீத பாவனர் கிருஷ்ணர் என்று புரிந்து ஒரு பொழுதும் நினைவு செய்ய மாட்டார்கள். ஆனால் பகவான் எப்படி வருகிறார் என்பது யாருக்கும் தெரியாது. சத்யுகத்தில் இருந்த கிருஷ்ணருடைய ஆத்மா அநேக ரூபங்களை தாரணை செய்து செய்து இப்பொழுது தமோபிரதானமாக ஆகி உள்ளது. மீண்டும் சதோபிரதானமாக ஆகிறது. சாஸ்திரங்களில் இந்தத் தவறை செய்துள்ளார்கள். தவறு ஆகும் பொழுது தானே நான் வந்து தவறற்றதாக ஆக்குவேன் அல்லவா? இந்தத் தவறுகளும் நாடகத்தில் உள்ளன. மீண்டும் ஆகும். இப்பொழுது உங்களுக்கு புரிய வைத்துள்ளார். சிவ பகவானுவாச் (சிவ பகவான் கூறுகிறார்). பகவான் என்று கூறுவதும் சிவனுக்குத் தான் ஆகும். பகவானோ ஒரே ஒருவர் ஆவார். அனைத்து பக்தர்களுக்கும் பலன் அளிப்பவர் ஒரு பகவான் ஆவார். அவரை யாருமே அறிந்து கொள்ள முடியாமல் உள்ளார்கள். ஓ காட் ஃபாதர் என்று ஆத்மா தான் கூறுகிறது. அந்த லௌகீக (ஃபாதர்) தந்தையோ இங்கு இருக்கிறார். பிறகும் அந்த தந்தையை நினைவு செய்கிறார்கள். எனவே ஆத்மாவிற்கு இரண்டு (ஃபாதர்) தந்தையர் ஆகி விடுகிறார்கள். பக்தி மார்க்கத்தில் அந்த (ஃபாதர்) தந்தையை நினைவு செய்து கொண்டே இருக்கிறார்கள். ஆத்மாவோ இருக்கவே இருக்கிறது. இத்தனை அனைத்து ஆத்மாக்களுக்கும் அவரவருக்கென்று பாகம் கிடைத்துள்ளது. ஒரு சரீரத்தை விடுத்து பின் மற்றொன்றை எடுத்து பாகத்தை நடிக்க வேண்டி உள்ளது. இந்த எல்லா விஷயங்களையும் தந்தை தான் புரிய வைக்கிறார். நாம் இங்கு பாகம் ஏற்று நடிக்க வந்துள்ளோம் என்றும் கூறுகிறார்கள். இது ஒரு நாடக மேடை ஆகும். அதில் இந்த சந்திரன் நட்சத்திரங்கள் ஆகிய எல்லாமே விளக்குகள் ஆகும். இந்த சூரியன், சந்திரன், நட்சத்திரங்களை மனிதர்கள் தேவதை என்று கூறி விடுகிறார்கள். ஏனெனில் இவை மிகவும் நன்றாக வேலை செய்கின்றன. ஜொலிக்கின்றன. யாருக்கும் துன்பம் கொடுப்ப தில்லை.அனைவருக்கும் சுகம் அளிக்கின்றன. நிறைய வேலை செய்கின்றன. எனவே இவர்களை தேவதை என்று கூறி விடுகிறார்கள். நல்ல காரியம் செய்பவர்களுக்கு "இவர்களோ தேவதைகள் போல இருக்கிறார்கள்" என்று கூறுகிறார்கள் அல்லவா? இப்பொழுது உண்மையில் தேவதைகளோ சத்யுகத்தில் இருந்தார்கள். எல்லோரும் சுகம் அளிப்பவர்களாக இருந்தார்கள். எல்லோரும் அன்பாக இருந்தனர்.. எனவே அவர்களை தேவதைகளுக்கு ஒப்பிட்டுள்ளார்கள். தேவதைகளின் குணம் கூட பாடப்படுகிறது. அவர்களுக்கு முன்னால் சென்று "நாங்கள் நிர்க்குணமானவர்கள், எங்களிடம் எந்த ஒரு குணமும் இல்லை. நீங்கள் தான் இரக்கம் காட்ட வேண்டும்"" என்று பாடுகிறார்கள். உங்களுக்கு (தந்தைக்கு) இரக்கம் ஏற்பட்டிருக்கக் கூடும். "கருணை ஏற்பட்டது, அதனால் தானே நான் உங்களை குணவானாக ஆக்க வந்துள்ளேன்" என்று தந்தை கூறுகிறார். நீங்கள் பூஜிக்கதக்கவர்களாக இருந்தீர்கள். இப்பொழுது பூசாரி ஆகி உள்ளீர்கள். மீண்டும் பூஜிக்கதக்கவர் ஆகுங்கள். "ஹம் சோ" என்பதன் பொருளைக் கூட உங்களுக்குப் புரிய வைத்துள்ளார். மனிதர்களோ "ஆத்மாவி-ருந்து பரமாத்மா, பரமாத்மாவி-ருந்து ஆத்மா" (ஆத்மாவே பரமாத்மா, பரமாத்மாவே ஆத்மா) என்று கூறி விடுகிறார்கள். இது தவறு என்று தந்தை கூறுகிறார். ஆத்மாவாகிய நீங்கள் நிராகாரமானவராக இருந்தீர்கள். பிறகு நீங்களே தேவதை, க்ஷத்திரியர், வைசியர், சூத்திரர் ஆனீர்கள். இப்பொழுது நீங்களே பிராமண வர்ணத்தில் வந்துள்ளீர்கள். ஆத்மா முதலில் சதோ பிரதானம், சதோ, இரஜோ, தமோவில் வருகிறது. இந்த நாலேஜ் (ஞானம்) பாபா கல்ப கல்பமாக சங்கமயுகத்தில் வந்து அளிக்கிறார் என்பதை இப்பொழுது குழந்தைகளாகிய நீங்கள் புரிந்துள்ளீர்கள். உண்மையில் பாரதம் சொர்க்கமாக இருந்தது. அங்கு எவ்வளவு குறைவான மனிதர்கள் இருப்பார்கள்! இப்பொழுது கலியுகம் ஆகும். எல்லா தர்மத்தினரும் (மதங்கள்) வந்து விட்டுள்ளார்கள். சத்யுகத்தில் ஏதாவது தர்மம் இருந்ததா என்ன? அங்கு இருப்பதே ஒரே ஒரு தர்மம் ஆகும். மற்ற எல்லா ஆத்மாக்களும் சென்று விடுகிறார்கள். இப்பொழுது இந்த பழைய உலகத்தின் விநாசம் எதிரிலேயே உள்ளது என்பதை நீங்கள் அறிவீர்கள். தந்தை இராஜயோகத்தைக் கற்பித்துக் கொண்டிருக்கிறார். யார் வந்தாலும் சரி. இது எல்லையில்லாத கடிகாரம் ஆகும் என்று கூறுங்கள். தந்தை திவ்ய திருஷ்டி அளித்து இந்தக் கடிகாரத்தை உருவாக்க வைத்துள்ளார். எப்படி அந்த கடிகாரத்தை நீங்கள் அடிக்கடி பார்க்கிறீர்கள். இப்பொழுது இந்த எல்லையில்லாத கடிகாரம் நினைவிற்கு வருகிறது. தந்தை பிரம்மா மூலமாக ஒரு தர்மத்தின் ஸ்தாபனை, சங்கரன் மூலமாக அசுர உலகத்தினை விநாசம் செய்விக்கிறார். சக்கரம் அவசியம் சுற்ற வேண்டி உள்ளது என்று புத்தியும் கூறுகிறது. கலியுகத்திற்குப் பின்னர் சத்யுகம் வரும். இப்பொழுது மனிதர்களும் நிறைய உள்ளார்கள். தொல்லைகளும் நிறைய ஆகிக் கொண்டே இருக்கிறது. ஏவுகணைகளும் அவையே தான். சாஸ்திரங்களிலோ எவ்வளவு கதைகள் எழுதியுள்ளனர்! தந்தை வந்து வேதங்கள் சாஸ்திரங்களின் சாரத்தைப் புரிய வைக்கிறார். முக்கிய தர்மங்கள் நான்கு ஆகும். இந்த பிராமண தர்மம் ஐந்தாவது ஆகும். எல்லாவற்றையும் விட உயர்ந்ததிலும் உயர்ந்தது இந்த சிறிய தர்மம் ஆகும். யக்ஞத்தைப் பராமரிப்பவர்கள் பிராமணர்கள் ஆவார்கள். இது ஞான வேள்வி ஆகும். உபத்திரவங்களை நீக்குவதற்காக வேள்வி இயற்றுகிறார்கள். இந்தப் போர்கள் ஆகியவை மூளக் கூடாது என்று அவர்கள் நினைக் கிறார்கள். அட போர் மூளவில்லை என்றால் சத்யுகம் எப்படி வரும்? இத்தனை மனிதர்களும் எங்கே செல்வார்கள்? ஆத்மாக்களாகிய நம் அனைவரையும் அழைத்துச் செல்கிறார். எனவே அவசியம் சரீரத்தை இங்கு விட வேண்டி வரும். ஹே பாபா, வந்து எங்களை பதீத நிலையிலிருந்து பாவனமாக ஆக்குங்கள் என்று அழைக்கவும் செய்கிறீர்கள். நான் அவசியம் பழைய உலகத்தின் விநாசம் செய்விக்க வேண்டி உள்ளது என்று தந்தை கூறுகிறார். பாவன உலகம் என்பதே சத்யுகம் ஆகும். அனைவரையும் முக்திதாமத்திற்கு அழைத்துச் செல்கிறேன். எல்லோரும் காலனையோ கூப்பிடுகிறார்கள் அல்லவா? நாமோ காலன்களுக்கெல்லாம் காலனை கூப்பிடுகிறோம் என்பது புரியாமல் உள்ளார்கள். இதுவும் நாடகத்தில் பொருந்தி உள்ளது என்று தந்தை கூறுகிறார். ஆத்மாக்களை சீ-சீ உலகத்திலிருந்து வெளியேற்றி சாந்தி தாமத்திற்கு அழைத்துச் செல்கிறேன். இதுவோ நல்ல விஷயம் ஆகும் அல்லவா? நீங்கள் முக்தியில் சென்று பிறகு ஜீவன் முக்தியில் வர வேண்டி உள்ளது. பிறகு ஜீவன் பந்தனத்தில் வருகிறீர்கள். இத்தனை பேர் எல்லோரும் சத்யுகத்தில் வர மாட்டார்கள். பிறகு வரிசைக் கிரமமாக வருவார்கள். எனவே இப்பொழுது சாந்திதாமம் மற்றும் சுக தாமத்தை நினைவு செய்யுங்கள். பின்னால் வருபவர்களுடைய பார்ட்டே குறைவாக இருக்கும். முதலில் அவசியம் அவர்கள் சுகம் பெறுவார்கள். உங்களுடைய பாகம் எல்லோரையும் விட உயர்ந்தது ஆகும். நீங்கள் நிறைய சுகம் பெறுகிறீர்கள். தர்ம ஸ்தாபகரோ தர்மத்தின் ஸ்தாபனை மட்டும் செய்கிறார்கள். யாரையும் லிபரேட் செய்வதில்லை (விடுவிப்பதில்லை). தந்தையோ பாரதத்தில் வந்து எல்லோருக்கும் ஞானம் அளிக்கிறார். அவரே அனைவரின் பதீத பாவனர் ஆவார். அனைவரையும் லிபரேட் செய்கிறார். மற்ற தர்ம ஸ்தாபகர்கள் யாரும் சத்கதி செய்ய வருவதில்லை. அவர்கள் தர்ம ஸ்தாபனை செய்ய வருகிறார்கள். அவர்கள் ஒன்றும் சாந்திதாமம் சுக தாமத்திற்கு அழைத்துச் செல்வதில்லை. அனைவரையும் சாந்திதாமம், சுக தாமத்திற்கு தந்தை தான் அழைத்துச் செல்கிறார். யார் துக்கத்திலிருந்து விடுவித்து சுகம் அளிக்கிறார்களோ அவர்களுக்குத் தான் தீர்த்தங்கள் ஆகின்றன. மனிதர்கள் புரிந்து கொள்வது இல்லை. உண்மையிலும் உண்மையான தீர்த்தம் ஒரே ஒரு பாபாவினுடையது ஆகும். மகிமை கூட ஒரே ஒருவருடையது ஆகும். எல்லோருமே "ஹே லிபரேட்டர் வாருங்கள்" என்று அவரை அழைக்கிறார்கள். பாரதம் தான் உண்மையான தீர்த்தம் ஆகும். இங்கு தான் தந்தை வந்து அனைவருக்கும் முக்தி-ஜீவன் முக்தி அளிக்கிறார். எனவே நீங்கள் பிறகு பக்தி மார்க்கத்தில் அவருக்கு பெரிய பெரிய கோவில்கள் கட்டுகிறீர்கள். வைரம் வைடூரியங்களின் கோவில் கட்டுகிறீர்கள். சோமநாத்தின் கோவில் எவ்வளவு அழகாக அமைத்திருக்கிறார்கள். மேலும் இப்பொழுது பாருங்கள் பாபா எங்கு அமர்ந்திருக்கிறார். பதீதமான (தூய்மையற்ற) சரீரத்தில், பதீதமான (தூய்மையற்ற) உலகத்தில். நீங்கள் தான் அடையாளம் கண்டு கொள்கிறீர்கள். நீங்கள் பாபாவிற்கு உதவி செய்பவர்களாக ஆகிறீர்கள். மற்றவர்களுக்கு வழி கூறுவதில் யார் உதவி செய்பவர்களோ அவர்களுக்கு உயர்ந்த பதவி கிடைக்கும். இதுவோ விதி முறை ஆகும். உழைப்பு செய்யுங்கள் என்று தந்தை கூறுகிறார். தந்தை மற்றும் ஆஸ்தியை நினைவு செய்யுங்கள் என்று அநேகருக்கு வழி கூறுங்கள். 84ன் சக்கரமோ முன்னால் உள்ளது. இது குருடர்களுக்கு முன்னால் ஒரு கண்ணாடி போல. இந்த நாடகம் அவ்வாறே மிகச் சரியாக மீண்டும் (ரிபீட்) நடைபெறுகிறது. பிறகும் என்னை யாரும் அறிந்து கொள்ள மாட்டார்கள். அப்படி இன்றி என்னுடைய கோவிலை கொள்ளை அடிக்கிறார்கள் என்றால் நான் ஏதோ செய்வேன் என்பதல்ல. நாடகத்தில் கொள்ளை அடிக்க வேண்டியே உள்ளது. பிறகும் கொள்ளை அடித்து எடுத்துச் செல்வார்கள். என்னை அழைப்பதே பதீத நிலையிலிருந்து பாவனமாக ஆக்குங்கள் என்று. எனவே நான் வந்து குழந்தைகளாகிய உங்களுக்கு கற்பிக்கிறேன். நாடகத்தில் விநாசம் கூட பொருந்தி உள்ளது. அதுவே மீண்டும் நடக்கும். நான் விநாசம் ஆகி விட வேண்டும் என்று ஏதோ ஊதி விடுவதில்லை. இந்த ஏவுகணைகள் ஆகியவை அமைக்கப்பட்டது கூட நாடகத்தில் பொருந்தி உள்ளது. நான் கூட நாடகத்தின் பந்தனத்தில் கட்டுப்பட்டு இருக்கிறேன். என்னுடைய பார்ட் எல்லாவற்றையும் விடப் பெரியது ஆகும் - சிருஷ்டியை (படைப்பு) மாற்றுவது பதீத நிலையிலிருந்து பாவனமாக ஆக்குவது ! இப்பொழுது சக்திசாலி யார்? நானா? அல்லது நாடகமா? இராவணன் கூட நாடகப்படி வரவே வேண்டி உள்ளது. என்ன நாலேஜ் (ஞானம்) எனக்குள் உள்ளதோ அதை வந்து அளிக்கிறேன். நீங்கள் சிவபாபாவின் சேனை ஆவீர்கள். இராவணன் மீது வெற்றி அடைகிறீர்கள். சென்டர்கள் திறந்து கொண்டே இருங்கள் என்று தந்தை கூறுகிறார். நான் கற்பிக்க வருகிறேன். நான் எதையும் வாங்குவது இல்லை. பைசா ஏதாவது இருந்தால் அதை இதில் பயனுள்ளதாக ஆக்குங்கள். எல்லாமே முடித்து விட்டு பசியால் இறந்து விடுவது என்று அப்படியும் அல்ல. யாருமே பசியால் இறக்க முடியாது. பாபா எல்லாமே கொடுத்து விட்டார். பிறகு பசியால் இறக்கிறாரா என்ன? நீங்கள் பசியால் இறக்கிறீர்களா என்ன? சிவபாபாவினுடைய பண்டாரா (களஞ்சியம்) ஆகும். தற்காலத்திலோ உலகத்தில் பாருங்கள் எத்தனை மனிதர்கள் பசியால் இறந்து கொண்டே இருக்கிறார்கள்! இப்பொழுது குழந்தைகளாகிய நீங்களோ தந்தையிடமிருந்து முழுமையாக ஆஸ்தி பெறுவதற்கான புருஷார்த்தம் (முயற்சி) செய்ய வேண்டும். இது ஆன்மீக "நேச்சர் க்யூர்" (இயற்கை வைத்தியம்) ஆகும். முற்றிலும் எளிதான (சிம்பிள்) விஷயம் - வாயால் மன்மனாபவ என்று மட்டுமே கூறுகிறார். ஆத்மாவை (க்யூர்) குணப்படுத்துகிறார். எனவே தந்தையை அவினாஷி சர்ஜன் என்றும் கூறுகிறார்கள். எவ்வளவு நல்ல ஆபரேஷன் கற்பிக்கிறார்! என்னை நினைவு செய்தீர்கள் என்றால் உங்களுடைய எல்லா துக்கங்களும் நீங்கிப் போய் விடும். சக்கரவர்த்தி இராஜா ஆகி விடுவீர்கள். இந்த முட்களின் காட்டில் இருக்கும் பொழுதும் நாங்கள் மலர்களின் தோட்டத்திற்குச் சென்று கொண்டிருக்கிறோம் என்று நினையுங்கள். வீட்டிற்குச் சென்று கொண்டிருக்கிறோம் என்று நினையுங்கள். ஒருவருக்கொருவர் நினைவூட்டிக் கொண்டே இருங்கள். அல்லாவை நினைவு செய்தீர்கள் என்றால் (பே) அரசாட்சி கிடைத்து விடும். நல்லது.
இனிமையிலும் இனிமையான காணாமல் போய் வெகுகாலம் கழித்து கண்டெடுக்கப்பட்ட குழந்தைகளுக்கு தாய், தந்தை பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.
ஓம் சாந்தி. குழந்தைகள் சத்சங்கத்தில் அமர்ந்திருக்கிறீர்கள். இந்த சத்தியமான சங்கத்தில் கல்ப-கல்பமாக சங்கமயுகத்தில் தான் குழந்தைகள் அமர்கின்றனர். உலகமோ இதை அறிந்து கொள்ளவில்லை - அதாவது சத்தியத்தின் சங்கம் எனச் சொல்லப்படுவது எது? சத்சங்கம் என்ற பெயர் அவினாசியாக பல காலமாக இருந்து வந்துள்ளது. பக்தி மார்க்கத்திலும் சொல்கின்றனர், நாங்கள் இன்ன சத்சங்கத்திற்குச் செல்கிறோம். இப்போது உண்மையில் பக்தி மாôக்கத்தில் யாரும் சத்சங்கத்திற்குச் செல்வதில்லை. சத்சங்கம் இருப்பது ஞான மார்க்கத்தில் தான். இப்போது நீங்கள் சத்தியத்தின் சங்கத்தில் அமர்ந்திருக்கிறீர்கள். ஆத்மாக்கள் சத்தியமான பாபாவின் சங்கத்தில் (தொடர்பில்) அமர்ந்திருக்கிறார்கள். வேறு எந்த ஓர் இடத்திலும் ஆத்மாக்கள் பரமபிதா பரமாத்மாவின் சங்கத்தில் அமர்வதில்லை. தந்தையை அவர்கள் அறிந்து கொள்ளவில்லை. நாங்கள் சத்சங்கத்திற்குச் செல்கிறோம் எனச் சொல்லலாம் என்ற போதிலும் அவர்கள் தேக அபிமானத்தில் வந்து விடுகிறார்கள். நீங்கள் தேக அபிமானத்தில் வர மாட்டீர்கள். நீங்கள் புரிந்து கொண்டிருக்கிறீர்கள், நாம் ஆத்மா, சத்தியமான பாபாவின் சங்கத்தில் அமர்ந்துள்ளோம். வேறு எந்த ஒரு மனிதரும் சத்தியமான சங்கத்தில் அமர முடியாது. சத்தியத்தின் சங்கம் - இந்தப் பெயரும் கூட இப்போது தான். சத்தியத்தின் சங்கம் - இதன் யதார்த்த ரீதியிலான அர்த்தம் பாபா அமர்ந்து புரிய வைக்கிறார். ஆத்மாக்கள் நீங்கள் இப்போது சத்தியமான பரமாத்ம தந்தையுடன் கூட அமர்ந்திருக்கிறீர்கள். அவர் சத்தியமான தந்தை, சத்தியமான ஆசிரியர், சத்தியமான குருவாக உள்ளார். ஆக, நீங்கள் சத்தியமான சங்கத்தில் அமர்ந்திருக்கிறீர்கள் என்றாகிறது. பிறகு இங்கே அல்லது வீட்டில் அமர்ந்திருக்கலாம். ஆனால் தன்னை ஆத்மா என உணர்ந்து தந்தையை நினைவு செய்கிறீர்கள். நாம் ஆத்மா இப்போது சத்தியமான தந்தையை நினைவு செய்து கொண்டிருக்கிறோம், அதாவது சத்தியத்தின் சங்கத்தில் இருக்கிறோம். பாபா மதுபனில் அமர்ந்துள்ளார். பாபாவை நினைவு செய்வதற்கான யுக்திகளும் அநேக விதமானவை கிடைக் கின்றன. நினைவின் மூலம் தான் விகர்மங்கள் விநாசமாகும். இதையும் குழந்தைகள் அறிவார்கள் - நாம் 16 கலை சம்பூர்ணமாகிறோம். பிறகு கீழே இறங்கி-இறங்கியே கலைகள் குறைந்து கொண்டே போகின்றன. பக்தியும் முதலில் ஒருவருக்கே செய்யப் படுகின்றது. பிறகு இறங்கி-இறங்கி பலரை வணங்கும் பக்தியாக ஆகி விடுவதால் தமோபிரதானமாக ஆகி விடுகின்றனர். பிறகு அவர்களுக்கு சத்தியத்தின் சங்கம் நிச்சயமாக வேண்டும். இல்லையென்றால் தூய்மையாக எப்படி ஆவார்கள்? ஆக, இப்போது ஆத்மாக்களாகிய உங்களுக்கு சத்தியமான தந்தையின் சங்கம் (தொடர்பு) கிடைத்துள்ளது. ஆத்மா அறிந்துள்ளது, நாம் பாபாவை நினைவு செய்ய வேண்டும், அவருடைய (தொடர்பு) தான். நினைவையும் கூட சங்கம் (தொடர்பு) எனச் சொல்வார்கள். இது சத்தியத்தின் சங்கம். இந்த தேகம் இருந்த போதிலும் ஆத்மாவாகிய நீங்கள் என்னை நினைவு செய்யுங்கள். இது தான் சத்தியத்தின் சங்கம். எப்படி சொல்கின்றனர் இல்லையா இவர்களுக்குப் பெரிய மனிதர்களின் தொடர்பு கிடைத்துள்ளது, அதனால் தேக அபிமானியாக ஆகி விட்டுள்ளனர். இப்போது உங்களுடைய சங்கம் சத்தியமான பாபாவுடன், இதன் மூலம் நீங்கள் தமோபிரதானத்திலிருந்து சதோபிரதானமாக ஆகி விடுகிறீர்கள். பாபா சொல்கிறார், நான் ஒரு முறை மட்டுமே வருகிறேன். இப்போது ஆத்மாவுக்குப் பரமாத்மாவுடன் சங்கம் ஏற்படுவதால் 21 பிறவிகளுக்கு (துன்பங்கள்) அனைத்தையும் கடந்து சென்று விடுகிறீர்கள். பிறகு உங்களுடைய சங்கம் தேகத்துடன் ஏற்பட்டு விடுகிறது. இவ்வாறு டிராமா உருவாக்கப் பட்டுள்ளது. பாபா சொல்கிறார், என்னுடன் குழந்தைகளாகிய உங்களுக்கு சங்கம் ஏற்படுவதால் நீங்கள் சதோபிரதானமாக ஆகி விடுகிறீர்கள். அதை கோல்டன் ஏஜ் என சொல்லப் படுகின்றது.
சாது சந்நியாசிகள் முதலானவர்களோ ஆத்மா நிர்லேப் (பாவ புண்ணியம் அதில் ஒட்டாது), அனைவருமே பரமாத்மா தான் என நினைக்கின்றனர். ஆக, இதன் அர்த்தம், பரமாத்மா மீது கறை படிந்துள்ளது என்பதாகும். பரமாத்மா மீதோ கறை படிய முடியாது. தந்தை கேட்கிறார், பரமாத்மாவாகிய என் மீது கறை படிகிறதா என்ன? கிடையாது. நானோ எப்போதுமே பரந்தாமத்தில் வசிக்கிறேன். ஏனென்றால் நான் பிறப்பு-இறப்பில் வருவதில்லை. இதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். உங்களிலும் கூட சிலரது நினைவு அதிகமாக உள்ளது, சிலருக்குக் குறைவாக உள்ளது. சிலரோ நல்லபடியாகப் புருஷார்த்தம் செய்து யோகத்தில் உள்ளனர். எவ்வளவு நேரம் ஆத்மா தந்தையின் தொடர்பில் உள்ளதோ, அவ்வளவு நன்மை உள்ளது. விகர்மங்கள் விநாசமாகும். பாபா சொல்கிறார் - ஹே ஆத்மாக்களே, தந்தையாகிய என்னை நினைவு செய்யுங்கள். எனது தொடர்பில் இருங்கள். நான் இந்த சரீரத்தின் ஆதாரத்தையோ எடுக்க வேண்டியுள்ளது. இல்லையென்றால் பரமாத்மா பேசுவது எப்படி? ஆத்மா கேட்பது எப்படி? இப்போது குழந்தைகள் உங்களுடைய சங்கம் சத்தியமானவருடன். சத்தியமான பாபாவை நிரந்தரமாக நினைவு செய்ய வேண்டும். ஆத்மா சத்தியமானவருடன் தொடர்பு வைத்து நினைவு செய்ய வேண்டும். ஆத்மாவும் அற்புதமானது, பரமாத்மாவும் அற்புதமானவர். உலகமும் அற்புதமானது. இந்த உலகம் எப்படிச் சுற்றி வருகிறது என்பதும் ஓர் அற்புதமாகும். நீங்கள் முழு டிராமாவிலும் ஆல்ரவுண்டு பார்ட் நடிக்கிறீர்கள். ஆத்மாவாகிய உங்களுக்குள் 84 பிறவிகளின் பாகம் அடங்கியுள்ளது - இது அதிசயமாகும். சத்யுக ஆத்மாக்கள் மற்றும் இன்றைய ஆத்மாக்கள். அதிலும் ஆத்மாக்கள் நீங்கள் அனைவரை விடவும் அதிகமான ஆல்ரவுண்டர் ஆவீர்கள். நாடகத்தில் சிலருக்கு ஆரம்பத்திலிருந்தே நடிப்பின் பங்கு உள்ளது. சிலருக்கு இடையில், சிலருக்குக் கடைசியில் நடிப்பின் பாகம் உள்ளது. அவை அனைத்தும் எல்லைக்குட்பட்ட டிராமா. அவை கூட இப்போது தான் வெளிவந்துள்ளன. இப்போது விஞ்ஞானத்துக்கு இவ்வளவு முக்கியத்துவம் உள்ளது. சத்யுகத்தில் அதன் பலம் எவ்வளவு இருக்கும்! புது உலகம் எவ்வளவு விரைவாக உருவாகியிருக்கும்! அங்கே தூய்மையின் பலம் முக்கியமானதாகும். இப்போது பலமற்றவர்களாக உள்ளனர். அங்கே இருப்பவர்கள் பலவான்கள். இந்த இலட்சுமி-நாராயணர் பலவான்கள் அல்லவா? இப்போது இராவணன் பலத்தை அபகரித்துக் கொண்டான். பிறகு நீங்கள் அந்த இராவணன் மீது வெற்றி பெற்று எவ்வளவு பலவான் ஆகிறீர்கள்! எவ்வளவு சத்தியமானவருடன் சங்கம் வைக்கிறீர்களோ, அதாவது ஆத்மா எவ்வளவு சத்தியமான தந்தையை நினைவு செய்கிறதோ, அவ்வளவு பலவானாக ஆகின்றது. படிப்பிலும் கூட பலம் கிடைக்கின்றது தான் இல்லையா? உங்களுக்கும் பலம் கிடைக்கின்றது. முழு உலகத்தின் மீது நீங்கள் அதிகாரம் செலுத்துகிறீர்கள். ஆத்மாவுக்கு சத்தியமானவருடன் யோகம் சங்கமயுகத்தில் தான் நடைபெறுகின்றது. பாபா சொல்கிறார், ஆத்மாவுக்கு எனது சங்கம் கிடைப்பதால் ஆத்மா மிகவும் பலவானாக ஆகி விடுகின்றது. பாபா உலகின் சர்வ சக்திவான் (வேர்ல்டு ஆல்மைட்டி அத்தாரிட்டி) இல்லையா? அவரிடமிருந்து பலம் கிடைக்கின்றது. இதில் அனைத்து வேத- சாஸ்திரங்களின் முதல்-இடை-கடை அனைத்தும் வந்து விடுகின்றன.
எப்படி பாபா சர்வ சக்திவானாக உள்ளாரோ, அதுபோல் நீங்களும் சர்வ சக்திவானாக ஆகிறீர்கள். உலகின் மீது நீங்கள் இராஜ்யம் செய்கிறீர்கள். உங்களிடமிருந்து அதை யாராலும் அபகரிக்க முடியாது. உங்களுக்கு என்னிடமிருந்து எவ்வளவு பலம் கிடைக்கிறது! இவருக்கும் (பிரம்மா) பலம் கிடைக்கிறது. எவ்வளவு பாபாவை நினைவு செய்கிறீர்களோ, அவ்வளவு பலம் கிடைக்கும். பாபா வேறு எந்தக் கஷ்டமும் கொடுப்பதில்லை. நினைவு செய்தால் போதும். 84 பிறவிகளின் சக்கரம் இப்போது முடிவடைந்தது. இப்போது திரும்பிச் செல்ல வேண்டும். இதைப் புரிந்து கொள்வது ஒன்றும் பெரிய விசயம் கிடையாது. அதிகமாக இந்த விஷயங்களுக்குள் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. விதையை அறிந்து கொள்வதால் அதிலிருந்து மரம் முழுவதும் எப்படி வெளிவந்துள்ளது என்பதைப் புரிந்து கொள்ளலாம். சுருக்கமாக புத்தியில் வந்து விடும். இவை மிகவும் விசித்திரமான விசயங்களாகும். பக்தி மார்க்கத்தில் மனிதர்கள் எவ்வளவு அடி வாங்கிக் கஷ்டப் படுகின்றனர்! முயற்சி செய்கின்றனர். எதுவும் கிடைப்பதில்லை. பிறகு பாபா வந்து உங்களை உலகத்தின் எஜமானர் ஆக்குகிறார். நாம் யோகபலத்தினால் உலகத்தின் எஜமானராக ஆகிறோம். இந்தப் புருஷார்த்தத்தையே செய்ய வேண்டும். பாரதத்தின் யோகம் பிரசித்தி பெற்றது. யோகத்தினால் உங்கள் ஆயுள் எவ்வளவு அதிகமாகின்றது! சத்திய மானவரின் சங்கத்தினால் எவ்வளவு நன்மை ஏற்படுகின்றது! ஆயுளும் நீள்கின்றது. மேலும் உடலும் நோயற்றதாக ஆகி விடுகின்றது. இந்த அனைத்து விசயங்களும் குழந்தைகளாகிய உங்கள் புத்தியில் பதிய வைக்கப் படுகின்றது. பிராமணர்களாகிய உங்களைத் தவிர வேறு யாருக்கும் சத்தியமானவரோடு சங்கம் கிடையாது. நீங்கள் பிரஜாபிதா பிரம்மாவின் குழந்தைகள். தாத்தாவின் (சிவபாபா) பேரப்பிள்ளைகள். ஆக, இவ்வளவு குஷி இருக்க வேண்டும் இல்லையா - நாம் தாத்தாவின் பேரப்பிள்ளைகள். ஆஸ்தியும் தாத்தாவிடமிருந்து கிடைக்கின்றது! இதுவே நினைவு யாத்திரையாகும். புத்தியில் இதே சிந்தனை ஓடிக்கொண்டிருக்க வேண்டும். அந்த சத்சங்கங்களிலோ ஒரு பக்கமாக சென்று அமர்கின்றனர். இங்கே அந்த விசயம் கிடையாது. ஒரு இடத்தில் அமர்வதால் தான் சத்தியமானவரின் சங்கம் என்று ஆகி விடாது. எழும் போதும், அமரும் போதும் அவரை நினைவு செய்வோமானால் நாம் சத்தியமானவரின் சங்கத்தில் இருக்கிறோம் என்றாகும் - நினைவு செய்யவில்லை என்றால் தேக அபிமானம் உள்ளது. தேகமோ உண்மையல்லாத பொருள் இல்லையா? தேகத்தை சத்தியம் என சொல்ல மாட்டார்கள். தேகமோ ஜடப்பொருள், 5 தத்துவங்களால் ஆனது. அதில் ஆத்மா இல்லையெனில் அசைவு இருக்காது. மனிதர்களின் சரீரத்திற்கோ மதிப்பே கிடையாது. சௌபாக்கியமோ ஆத்மாவுக்குத் தான் கிடைக்கும். நான் இன்னார் என்று ஆத்மா சொல்கிறது இல்லையா? பாபா சொல்கிறார், ஆத்மாவோ எப்படி ஆகி விட்டது! முட்டை, ஆமை, மீன் அனைத்தையும் சாப்பிட்டு விடுகின்றது. ஒவ்வொருவரும் பஸ்மாசுரனாக உள்ளனர். தன்னைத் தானே பஸ்பம் செய்து கொள்கின்றனர். எப்படி? காமசிதையில் அமர்ந்து ஒவ்வொருவரும் தன்னை பஸ்பம் செய்து கொண்டுள்ளனர் என்றால் பஸ்மாசுரன் ஆகின்றனர் இல்லையா? இப்போது நீங்கள் ஞான சிதையில் அமர்ந்து தேவதா ஆகிறீர்கள். முழு உலகும் காமசிதையில் அமர்ந்து பஸ்மம் ஆகிவிட்டுள்ளது. தமோபிரதானமாக, கருப்பாக ஆகி விட்டுள்ளது. பாபா வருகிறார், குழந்தைகளைக் கருப்பிலிருந்து வெள்ளையாக்குவதற்காக. ஆக, தந்தை குழந்தைகளுக்குப் புரிய வைக்கிறார், தேக அபிமானத்தை விட்டு, தன்னை ஆத்மா என உணருங்கள். குழந்தைகள் பள்ளிக்கூடத்தில் படிக்கின்றனர். பிறகு படிப்போ வீட்டில் இருந்தாலும் புத்தியில் உள்ளது இல்லையா? இதுவும் உங்களுடைய புத்தியில் இருக்க வேண்டும். இது உங்களுடைய மாணவ வாழ்க்கை. நோக்கம் குறிக்கோள் நமக்கு உள்ளது. எழும் போதும், அமரும் போதும் நடமாடும் போதும் புத்தியில் இந்த ஞானம் இருக்க வேண்டும்.
இங்கே குழந்தைகள் வருகின்றனர், புத்துணர்ச்சி பெறுகின்றனர். யுக்திகள் புரிய வைக்கப் படுகின்றன, இப்படி-இப்படிச் செய்யுங்கள் என்று. உலகத்தில் ஏராளமான சத்சங்கங்கள் உள்ளன. எவ்வளவு மனிதர்கள் வந்து ஒன்று சேர்கின்றனர்! உண்மையில் அது சத்சங்கமோ இல்லை. சத்தியத்தின் சங்கமோ இப்போது குழந்தைகளாகிய உங்களுக்குத் தான் கிடைக்கின்றது. பாபா வந்து சத்யுகத்தை ஸ்தாபனை செய்கிறார். நீங்கள் எஜமானர் ஆகி விடுகிறீர்கள். தேக அபிமானம் அல்லது பொய்யான அபிமானத்தினால் நீங்கள் கீழே விழுந்து விடுகிறீர்கள். சத்தியத்தின் சங்கத்தினால் உயர்ந்து செல்கிறீர்கள். அரைக்கல்பமாக நீங்கள் பலனை அனுபவிக்கிறீர்கள். அங்கேயும் கூட உங்களுக்கு சத்தியத்தின் சங்கம் உள்ளது என்பது கிடையாது. எப்போது இரண்டு வகையானது உள்ளதோ அப்போது சத்தியத்தின் சங்கம், பொய்யான சங்கம் என சொல்லப் படுகின்றது. சத்தியமான தந்தை எப்போது வருகிறாரோ, அப்போது அவரே வந்து அனைத்து விசயங்களையும் புரிய வைக்கிறார். எதுவரை அந்த சத்தியமான தந்தை வரவில்லையோ, அதுவரை யாரும் தெரிந்து கொள்வதும் இல்லை. இப்போது பாபா குழந்தைகளாகிய உங்களுக்குச் சொல்கிறார் - ஹே ஆத்மாக்களே, என்னுடன் சங்கம் (சகவாசம்) வையுங்கள். உங்களுக்குக் கிடைத்துள்ள தேகத்தின் சங்கத்திலிருந்து விடுபட்டு விடுங்கள். தேகத்தின் சங்கம் சத்யுகத்திலும் இருக்கும். ஆனால் அங்கே நீங்கள் தூய்மையாக இருப்பீர்கள். இப்போது நீங்கள் சத்தியமானவரின் சங்கத்தின் மூலம் தூய்மையற்றதிலிருந்து தூய்மையாக ஆகிறீர்கள். பிறகு சரீரமும் சதோபிரதானமாகக் கிடைக்கும். ஆத்மாவும் சதோபிரதானமாக இருக்கும். இப்போதோ உலகமும் கூடத் தமோபிரதானமாக உள்ளது. உலகம் புதியதாகவும், பழையதாகவும் ஆகின்றது. புது உலகத்தில் நிச்சயமாக ஆதி சநாதன தேவி-தேவதா தர்மம் இருந்தது. இன்று அந்த தர்மத்தை மறைத்து ஆதி சநாதன ஹிந்து தர்மம் என சொல்கின்றனர். குழம்பிப் போயுள்ளனர். இப்போது பாரதவாசிகள் நீங்கள் புரிந்து கொண்டிருக்கிறீர்கள், நாம் புராதன தேவி-தேவதா தர்மத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தோம். சத்யுகத்தின் எஜமானர்களாக இருந்தோம். ஆனால் அந்த நஷா (போதை) எங்கே? கல்பத்தின் ஆயுளையே நீண்டதாக எழுதி விட்டுள்ளனர். அனைத்து விஷயங்களையும் மறந்து விட்டனர். இதற்குப் பெயரே மறதியின் விளையாட்டு. இப்போது சத்தியமான தந்தை மூலம் நீங்கள் முழு ஞானத்தையும் அறிந்து கொள்வதால் உயர்ந்த பதவி பெறுகிறீர்கள். பிறகு அரைக்கல்பத்திற்குப் பின் கீழே இறங்குகிறீர்கள். ஏனென்றால் இராவண இராஜ்யம் ஆரம்பமாகின்றது. உலகம் பழையதாகவோ ஆகும் இல்லையா? நீங்கள் புரிந்து கொண்டிருக்கிறீர்கள், நாம் புது உலகத்தின் எஜமானர்களாக இருந்தோம். இப்போது பழைய உலகத்தில் இருக்கிறோம். ஒரு சிலருக்கு இதுவும் நினைவிருப்பதில்லை. பாபா நம்மை சொர்க்கவாசி ஆக்குகிறார். அரைக்கல்பம் நாம் சொர்க்கவாசியாக இருப்போம். பிறகு அரைக்கல்பத்திற்குப் பின் கீழே இறங்குகிறீர்கள். ஏனெனில் இராவண இராஜ்யம் தொடங்குகிறது. உலகம் பழையதாகவோ ஆகும் இல்லையா? நீங்கள் புரிந்திருக்கிறீர்கள், பாபா நம்மை சொர்க்கவாசியாக ஆக்குகிறார். அரைக்கல்பத்திற்கு நாம் சொக்கவாசிகளாக இருப்போம். பிறகு நரகவாசி ஆவோம். நீங்களும் கூட மாஸ்டர் சர்வசக்திவானாக புருஷார்த்தத்தின் அனுசாரம் வரிசைக்கிரமப்படி ஆகியிருக்கிறீர்கள். இது ஞான அமிர்தத்தின் சத்தான ஊட்டம் (டோஸ்). சிவபாபாவுக்குப் பழைய உடலுறுப்புகள் கிடைத்துள்ளன. புது உறுப்புகளோ கிடைப்பதில்லை. பழைய வாத்தியம் (சரீரம்) கிடைக்கிறது. பாபா வருவதே வானப்ரஸ்த நிலையில் தான். குழந்தைகளுக்குக் குஷி ஏற்படுகிறது என்றால் பாபாவும் குஷியடைகிறார். பாபா சொல்கிறார், நான் குழந்தைகளுக்கு ஞானம் கொடுத்து இராவணனிடமிருந்து விடுவிப்பதற்காகச் செல்கிறேன். பாகமோ குஷியுடன் நடிக்கப் படுகிறது இல்லையா? பாபா மிகுந்த குஷியுடன் தமது பார்ட்டை நடிக்கிறார். பாபா இங்கே கல்ப-கல்பமாக வரவேண்டியுள்ளது. இந்த பாகம் ஒருபோதும் முடிந்து போவதில்லை. குழந்தைகளுக்கு மிகுந்த குஷி இருக்க வேண்டும். எவ்வளவு சத்தியத்தின் சங்கத்தில் சேர்கிறீர்களோ, அவ்வளவு குஷி இருக்கும். நினைவு குறைவாகச் செய்கிறீர்கள் அதனால் அவ்வளவு குஷி இருப்பதில்லை. பாபா குழந்தைகளுக்கு ஆஸ்தி தருகிறார். எந்தக் குழந்தைகள் உண்மையான மனதுடையவர்களோ, அவர்கள் மீது பாபாவுக்கு மிகுந்த அன்பு உள்ளது. உண்மையான மனம் உள்ளவர்களிடம் பாபா திருப்தி யடைகிறார். உள்ளும் புறமும் யார் உண்யைமானவர்களாக உள்ளனரோ, பாபாவுக்கு உதவியாளராக ஆகிறார்களோ, சேவையில் ஈடுபட்டிருக்கிறார்களோ, அவர்கள் தான் பாபாவுக்குப் பிரியமானவர்கள். தனது மனதைக் கேட்டுக் கொள்ள வேண்டும் - நாம் உண்மையிலும் உண்மையான சேவை செய்கிறோமா? உண்மையான பாபாவிடம் நாம் சங்கம் (தொடர்பு) வைக்கிறோமா? சத்தியமான பாபாவுடன் சங்கம் (தொடர்பு) வைக்கவில்லை என்றால் என்ன கதி கிடைக்கும்? அநேகருக்கு வழி சொல்லிக் கொண்டே இருப்பீர்களானால் உயர்ந்த பதவி பெறுவீர்கள். சத்தியமான பாபாவிடம் நாம் என்ன ஆஸ்தி பெற்றிருக்கிறோம் என்று தனக்குள் பார்க்க வேண்டும். இதையோ நம்பர்வார் அறிந்து கொண்டிருக்கிறீர்கள், ஒவ்வொருவரும் எவ்வளவு ஆஸ்தி பெறுகிறார்கள் என்று. இரவு-பகலுக்குள்ள வேறுபாடு இருக்கிறது. நல்லது.
இனிமையிலும் இனிமையான தேடிக்கண்டெடுக்கப் பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவு மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே!
ஓம் சாந்தி. ஓம் என்பதன் அர்த்தமே அஹம் - நான் ஆத்மா. மனிதர்கள் பிறகு ஓம் என்றால் பகவான் எனப் புரிந்து கொள்கின்றனர், ஆனால் அப்படி அல்ல. ஓம் என்றால் நான் ஆத்மா, இது என்னுடைய சரீரம். ஓம் சாந்தி என்று சொல்கின்றோம் அல்லவா! அஹம் - அதாவது ஆத்மாவின் சுயதர்மம் அமைதி. ஆத்மா தனது அறிமுகத்தைக் கொடுக்கிறது. மனிதர்கள் ஓம் சாந்தி என்று சொல்கின்றனர், ஆனால் ஓம் என்பதினுடைய அர்த்தத்தை யாரும் புரிந்து கொள்வதில்லை. ஓம் சாந்தி என்ற வார்த்தை நன்றாக உள்ளது. நான் ஆத்மா, எனது சுயதர்மம் அமைதி. ஆத்மாக்களாகிய நாம் சாந்தி தாமத்தில் வசிப்பவர்கள். எவ்வளவு எளிமையான அர்த்தம்! நீட்டி முழக்கி சொல்லும் கட்டுக் கதை அல்ல. இந்த சமயத்தில் உள்ள மனிதர்களுக்கு இப்போது புதிய உலகமாக உள்ளதா அல்லது பழைய உலகமாக உள்ளதா என்பது தெரியாது. புதிய உலகம் பிறகு எப்போது உண்டாகிறது, பழையதிலிருந்து பிறகு புதிய உலகம் எப்போது ஏற்படுகிறது என்பதை யாரும் அறியவில்லை. உலகம் எப்போது புதியதாக இருக்கும், மேலும் பிறகு பழையதாக எப்படி ஆகிறது? என்று யாரிடம் வேண்டுமானாலும் கேட்டுப் பார்க்கலாம். ஆனால் யாரும் சொல்ல முடியாது. இப்போது கலியுகம் பழைய உலகமாக உள்ளது. சத்யுகம் புதிய உலகம் என சொல்லப்படுகிறது. நல்லது, புதிய உலகம் பிறகு பழைய உலகமாக ஆவதற்கு எவ்வளவு வருடங்கள் பிடிக்கும்? இதுவும் யாருக்கும் தெரியாது. மனிதர்களாக இருந்தும், இதை அறிவதில்லை என்றால் விலங்குகளை விடவும் மோசமானவர்கள் என சொல்லப் படுகிறது. விலங்குகள் தம்மைப் பற்றி எதுவும் சொல்வதில்லை, மனிதர்கள் நாங்கள் பதீதமானவர்கள் (தூய்மையற்றவர்கள்), ஓ பதீத பாவனா வாருங்கள் என்று சொல்கின்றனர். ஆனால் அவரைப் பற்றி கொஞ்சமும் தெரியாது. பாவனம் என்ற வார்த்தை எவ்வளவு நன்றாக உள்ளது! பாவனமான உலகம் சொர்க்கம் புதிய உலகமாகத்தான் இருக்கும். தேவதைகளின் சித்திரங்களும் உள்ளன, ஆனால் இந்த இலட்சுமி நாராயணர் புதிய உலகின் எஜமானர்கள் என்பது யாருக்கும் புரிவதில்லை. இந்த அனைத்து விசயங்களும் எல்லைக்கப்பாற்பட்ட தந்தை வந்து குழந்தைகளுக்குப் புரிய வைக்கிறார். சொர்க்கம் புதிய உலகம் என சொல்லப்படுகிறது. தேவதைகள் சொர்க்கவாசிகள் எனப்படுகின்றனர். இப்போது பழைய உலகம் நரகமாக உள்ளது. இங்கே மனிதர்கள் நரகவாசிகளாக இருக்கின்றனர். யாராவது இறந்தாலும், சொர்க்கவாசியாகி விட்டார் என சொல்கின்றனர், அப்படியானால் இங்கே நரகவாசியாக இருக்கிறார் அல்லவா? கணக்குப் போட்டு சொல்லியும் விடுகின்றனர். இது நரகம் என்பது மிகச் சரியே ஆகும், ஆனால் நீங்கள் நரகவாசிகள் என்றால் கோபித்துக் கொள்வார்கள். பார்ப்பதற்கு மனிதர்களாக இருக்கின்றனர், மனிதர்களின் முகம்தான் இருக்கிறது, ஆனால் இலட்சணம் குரங்கு போல இருக்கிறது என்று தந்தை புரிய வைக்கிறார். இதுவும் கூட பாடப் பட்டுள்ளதல்லவா? தாங்களே கோவில்களில் சென்று தேவதைகளின் முன்பாக பாடுகின்றனர் - நீங்கள் அனைத்து குணங்களும் நிரம்பியவர். . . தன்னைக் குறித்து என்ன சொல்வார்கள்? நாங்கள் பாவிகள், கீழானவர்கள். ஆனால் நீங்கள் விகாரி என்று நேரடியாக சொன்னீர்கள் என்றால் கோபித்துக் கொள்வார்கள், ஆகையால் தந்தை குழந்தை களிடம் மட்டுமே பேசுகிறார், புரிய வைக்கிறார். வெளியாட்களிடம் பேசுவதில்லை, ஏனெனில் கலியுக மனிதர்கள் நரகவாசிகளாக உள்ளனர். இப்போது நீங்கள் சங்கம யுகவாசிகள். நீங்கள் தூய்மையடைந்து கொண்டிருக்கிறீர்கள். பிராமணர்களாகிய நமக்கு சிவபாபா படிப்பித்துக் கொண்டிருக்கிறார் என்பதை அறிவீர்கள். அவர் பதீத பாவனர். ஆத்மாக்களாகிய நம் அனைவரையும் அழைத்துச் செல்வதற்காக தந்தை வந்துள்ளார். எவ்வளவு எளிதான விஷயங்கள்! குழந்தைகளே, ஆத்மாக்களாகிய நீங்கள் சாந்தி தாமத்திலிருந்து நடிப்பை நடிப்பதற்காக வருகிறீர்கள் என்று தந்தை கூறுகிறார். இந்த துக்க தாமத்தில் அனைவரும் துக்கம் நிறைந்தவர்கள், ஆகையால் மனதிற்கு எப்படி அமைதி கிடைக்கும் என்று கேட்கிறார்கள். ஆத்மாவுக்கு அமைதி எப்படி ஏற்படும்? என்று கேட்பதில்லை. அட, நீங்கள் ஓம் சாந்தி என்று சொல்கிறீர்கள் அல்லவா! என்னுடைய சுயதர்மம் அமைதி. பிறகு அமைதியை ஏன் கேட்கிறீர்கள்? தன்னை ஆத்மா என்பதை மறந்து தேக அபிமானத்தில் வந்து விடுகிறீர்கள். ஆத்மாக்கள் சாந்தி தாமத்தில் வசிப்பவர்கள். இங்கே பிறகு அமைதி எங்கிருந்து கிடைக்கும்? அசரீரி ஆவதன் மூலமே அமைதி ஏற்படும். சரீரத்துடன் ஆத்மா இருக்கிறது எனும்போது அவர் கண்டிப்பாக பேசவும், நடக்கவும் வேண்டியுள்ளது. ஆத்மாக்களாகிய நாம் சாந்தி தாமத்திலிருந்து இங்கே நடிப்பை நடிப்பதற்காக வந்துள்ளோம். இராவணன்தான் நமது எதிரி என்பது கூட யாருக்கும் தெரியாது. எப்போதிலிருந்து இந்த இராவணன் எதிரி ஆனது? இதுவும் யாருக்கும் தெரியாது. அவருடைய உருவத்தை உருவாக்கி எரிக்கிறோம், இந்த இராவணன் யார் என்பது பெரிய பெரிய வித்வான், பண்டிதர்களுக்கும் கூட ஒருவருக்கும் தெரியாது. பிறவி பிறவிகளாக எரித்துக் கொண்டு வந்திருக்கின்றனர், கொஞ்சமும் தெரியாது. இராவணன் யார்? என்று யாரிடம் வேண்டுமானாலும் கேளுங்கள். இவையனைத்தும் கற்பனை என்று சொல்லி விடுவார்கள். தெரிவதே இல்லை எனும்போது வேறு என்ன பதில் கொடுப்பார்கள்? சாஸ்திரங்களில் கூட உள்ளது ஹே இராம்ஜி! உலகம் உருவாகவே இல்லை என்று. இப்படி பலர் சொல்கின்றனர். இப்போது கற்பனை என்பதன் அர்த்தம் என்ன? இது சங்கல்பங்களின் உலகம் என்று சொல்கின்றனர். யார் எப்படிப்பட்ட சங்கல்பங்களைச் செய்கிறார்களோ அப்படி ஆகிவிடுகின்றனர், இதன் அர்த்தமும் புரிந்து கொள்வதில்லை. தந்தை குழந்தைகளுக்கு வந்து புரிய வைக்கிறார். சிலர் நல்ல விதமாகப் புரிந்து கொண்டு விடுகின்றனர். சிலர் புரிந்து கொள்வதே இல்லை. நல்ல விதமாகப் புரிந்து கொள்பவர்கள் சொந்தத் தாயின் குழந்தைகள் என்று சொல்லப்படுகின்றனர், மேலும் புரிந்து கொள்ளாதவர்கள் மாற்றாந்தாய் குழந்தைகள் என்று சொல்லப்படுகின்றனர். இப்போது மாற்றாந்தாய் குழந்தைகள் வாரிசுகளாக ஆக மாட்டார்கள். பாபாவிடம் சொந்தத் தாய் குழந்தைளும் இருக்கின்றனர், மாற்றாந்தாய் குழந்தைகளும் இருக்கின்றனர். சொந்தத் தாய் குழந்தைகள் தந்தையின் சிரேஷ்ட வழிப்படி முழுமையாக நடக்கின்றனர். மாற்றாந்தாய் குழந்தைகள் நடப்பதில்லை. இவர்கள் என் வழிப்படி நடப்பதில்லை, இராவணனின் வழிப்படி நடக்கின்றனர் என்று தந்தை சொல்லி விடுகிறார். இராமன் மற்றும் இராவணன் என இரண்டு வார்த்தைகள் உள்ளன. இராம இராஜ்யம் மற்றும் இராவண இராஜ்யம். இப்போது உள்ளது சங்கம யுகம். தந்தை புரிய வைக்கிறார் - இந்த பிரம்மா குமார் - பிரம்மா குமாரிகள் அனைவரும் சிவ பாபாவிடம் ஆஸ்தியை எடுத்துக் கொண்டிருக்கின்றனர், நீங்கள் எடுப்பீர்களா? ஸ்ரீமத் (பகவான் வழி) படி நடப்பீர்களா? அப்போது கேட்கிறார்கள் - என்ன வழி? தந்தை உயர்ந்த வழியைக் கொடுக்கிறார் - தூய்மை அடையுங்கள். நாங்கள் தூய்மையாய் இருக்கிறோம், பிறகு கணவர் ஒப்புக் கொள்ளவில்லை என்றால் நான் யார் பேச்சைக் கேட்பது? எனக் கேட்கின்றனர். அவர் எனக்கு பதி பரமேஸ்வரன் என்கின்றனர். ஏனெனில் பாரதத்தில் பதியை (கணவரை) உனது குரு, ஈஸ்வரன் என்று அனைத்தும் அவரே என்று கற்றுக் கொடுக்கப்படுகிறது. ஆனால் அப்படி எதுவும் புரிந்து கொள்வதில்லை. அந்த சமயத்தில் ஆம் என்று சொல்லி விடுகின்றனர், கொஞ்சமும் ஏற்றுக் கொள்வதில்லை. என்றாலும் கூட குருமார்களிடம் கோவில் முதலானவற்றிற்குச் சென்றபடி இருக்கின்றனர். நீ எங்கும் வெளியில் செல்லாதே, நான் இராமனின் மூர்த்தியை வீட்டில் வைத்துத் தருகிறேன், பிறகு நீ அயோத்தி முதலான இடங்களுக்கு ஏன் அலைந்து கொண்டிருக்கிறாய் என்று கணவர் கூறுகிறார். அதை ஏற்பதில்லை. இவை பக்தி மார்க்கத்தின் ஏமாற்றங்களாகும். அவைகளை அனுபவிப்பார்கள், ஒருபோதும் ஏற்பதில்லை. அது அவர்களின் (தேவதைகளின்) கோவில் என்று புரிந்து கொள்கின்றனர். அட, உனக்கு இராமனை நினைவு செய்ய வேண்டுமா அல்லது அவரது கோவிலையா? ஆனால் புரிந்து கொள்வதில்லை. ஆக, தந்தை புரிய வைக்கிறார் - பக்தி மார்க்கத்தில் பகவானே வந்து எங்களுக்கு சத்கதி வழங்குங்கள் என்று சொல்லவும் செய்கிறீர்கள். ஏனென்றால் அவர் ஒருவர்தான் அனைவருக்கும் சத்கதி வழங்கும் வள்ளல். நல்லது, அவர் எப்போது வருகிறார்? அதுவும் கூட யாருக்கும் தெரியாது.
இராவணன்தான் உங்களுடைய எதிரி என்று தந்தை புரிய வைக்கிறார். இராவணனுடையது அதிசயமாக உள்ளது, அதை எரித்துக் கொண்டே இருக்கின்றனர், ஆனால் இறப்பதே இல்லை. இராவணன் என்பது என்ன என்பது யாருக்கும் தெரியாது. நமக்கு எல்லைக்கப்பாற்பட்ட தந்தையிடமிருந்து ஆஸ்தி கிடைக்கிறது என்பதை இப்போது குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். சிவ ஜெயந்தியையும் கொண்டாடுகின்றனர், ஆனால் சிவனை யாருக்கும் தெரியாது. அரசாங்கத்திற்கும் கூட நீங்கள் புரிய வைக்கிறீர்கள். சிவன்தான் பகவான் ஆவார், அவர்தான் ஒவ்வொரு கல்பமும் வந்து பாரதத்தை நரகவாசியிலிருந்து சொர்க்கவாசியாகவும், பிச்சைக்காரரிலிருந்து இளவரசனாகவும் ஆக்குகிறார். தூய்மையற்றவரை தூய்மையாக்குகிறார். அவரே அனைவருக்கும் சத்கதி வழங்கும் வள்ளல். இந்த சமயம் அனைத்து மனிதர்களும் இங்கே இருக்கின்றனர். கிறிஸ்துவின் ஆத்மா கூட ஏதோ ஒரு பிறவி எடுத்து இங்கேதான் இருக்கிறது. யாரும் திரும்பிச் செல்ல இயலாது. இவர்கள் அனைவருக்கும் சத்கதி வழங்குபவர் ஒரே ஒரு பெரிய (உயர்வான) தந்தை ஆவார். அவர் வருவதும் பாரதத்தில்தான். உண்மையில் சத்கதியை வழங்குபவரைத் தான் பக்தி செய்ய வேண்டும். அந்த நிராகார தந்தை இங்கே இல்லை. அவரை எப்போதும் மேலே இருப்பதாகப் புரிந்து கொண்டு நினைவு செய்கின்றனர். கிருஷ்ணரை மேலே இருப்பதாகப் புரிந்து கொள்வதில்லை. மற்ற அனைவரையும் இங்கே கீழே நினைவு செய்கின்றனர். கிருஷ்ணரையும் இங்கே நினைவு செய்வார்கள். குழந்தை களாகிய உங்களுடையது சரியான நினைவு ஆகும். நீங்கள் தன்னை இந்த தேகத்திலிருந்து தனிப்பட்ட ஆத்மா எனப் புரிந்து கொண்டு தந்தையை நினைவு செய்கிறீர்கள். உங்களுக்கு எந்த தேகத்தின் நினைவும் வரக்கூடாது. இதில் கண்டிப்பாக கவனம் தேவை. நீங்கள் தன்னை ஆத்மா என புரிந்து கொண்டு தந்தையை நினைவு செய்யுங்கள். பாபா நம்மை முழு உலகிற்கும் எஜமானராக ஆக்குகிறார். முழு கடல், முழு உலகம், முழு ஆகாயம் என அனைத்திற்கும் எஜமானராக ஆக்குகிறார். இப்போது எவ்வளவு துண்டு துண்டுகளாக இருக்கின்றன! ஒருவர் மற்றவரின் எல்லைக்குள் வர விடுவதில்லை. அங்கே (சத்யுகத்தில்) இந்த விசயங்கள் இருப்பதில்லை. பகவான் என்பவர் ஒரே ஒரு தந்தைதான் ஆவார். அனைவரும் தந்தையே தந்தை என்பது அல்ல. இந்து-சீனர் சகோதர சகோதரர், இந்து-முஸ்லிம் சகோதர-சகோதரர் என்று சொல்லவும் செய்கின்றனர், ஆனால் அர்த்தத்தைப் புரிந்து கொள்வதில்லை. இந்து-முஸ்லிம் சகோதர-சகோதரி என்று ஒருபோதும் சொல்வதில்லை. அல்ல. ஆத்மாக்கள் ஒருவருக் கொருவர் அனைவரும் சகோதர-சகோதரர்கள் ஆவார்கள். ஆனால் இந்த விசயத்தை அறிவதில்லை. சாஸ்திரங்கள் முதலானவைகளை கேட்டு கேட்டு சத்தியம், சத்தியம் என சொல்லியபடி இருக்கின்றனர், அர்த்தம் எதுவும் இருப்பதில்லை. உண்மையில் அசத்தியம், பொய்யாகும். சத்தியமான கண்டத்தில் உண்மையே உண்மை பேசுவார்கள். இங்கே பொய்யே பொய்யாக உள்ளது. நீங்கள் சொல்வது பொய் என்று யாரிடமாவது சொன்னீர்கள் என்றால் கோபித்துக் கொள்வார்கள். நீங்கள் உண்மை சொன்னீர்கள் என்றால் சிலர் நிந்தனை செய்யத் தொடங்கி விடுவார்கள். இப்போது தந்தையை பிராமணர்களாகிய நீங்கள்தான் தெரிந்து கொண்டிருக்கிறீர்கள். குழந்தைகளாகிய நீங்கள் தெய்வீக குணங்களை தாரணை செய்கிறீர்கள். இப்போது 5 தத்துவங்களும் கூட தமோபிரதானமாக உள்ளன என்பதை நீங்கள் அறிவீர்கள். இன்றைய நாட்களில் மனிதர்கள் பூதங்களுக்குக் கூட பூஜை செய்கின்றனர். பூதங்களின் நினைவுதான் இருக்கிறது. தன்னை ஆத்மா என புரிந்து கொண்டு என்னை மட்டும் நினைவு செய்யுங்கள் என தந்தை கூறுகிறார். பூதங்களை நினைவு செய்யாதீர்கள். இல்லற விஷயங்களில் இருந்தபடி புத்தியின் தொடர்பை தந்தையுடன் வையுங்கள். இப்போது ஆத்ம அபிமானி ஆக வேண்டும். எந்த அளவு தந்தையை நினைவு செய்கிறீர்களோ அந்த அளவு பாவ கர்மங்கள் அழியும். ஞானத்தின் மூன்றாம் கண் உங்களுக்கு கிடைக்கிறது.
இப்போது நீங்கள் விகர்மாஜீத் (பாவ கர்மங்களை வென்றவர்) ஆக வேண்டும். அது விகர்மாஜீத் காலம். இது விகர்ம காலம். நீங்கள் யோக பலத்தின் மூலம் விகர்மங்களின் மீது வெற்றி அடைகிறீர்கள். பாரதத்தின் யோகம் புகழ் வாய்ந்தது. மனிதர்களுக்குத் தெரியாது. சன்னியாசிகள் வெளி நாடுகளில் சென்று நாங்கள் பாரதத்தின் யோகம் கற்றுத் தர வந்துள்ளோம் என கூறுகின்றனர். இவர்கள் ஹடயோகிகள் என்று அவர்களுக்குத் தெரியாது. அவர்கள் இராஜயோகம் கற்றுத் தர முடியாது. நீங்கள் இராஜரிஷிகள் ஆவீர்கள். அவர்கள் எல்லைக்குட்பட்ட சன்னியாசிகள், நீங்கள் எல்லைக்கப்பாற்பட்ட சன்னியாசிகள். இரவு-பகலுக்கான வித்தியாசம் உள்ளது. பிராமணர்களாகிய உங்களைத் தவிர வேறு யாரும் இராஜயோகம் கற்றுத் தர முடியாது. இவை புதிய விசயங்கள் ஆகும். புதியவர்கள் யாரும் புரிந்து கொள்ள முடியாது. ஆகையால் புதியவர்கள் யாரும் அனுமதிக்கப் படுவதில்லை. இது இந்திர சபையல்லவா? இந்த சமயம் அனைவரும் கல்புத்தி உள்ளவராக இருக்கின்றனர். சத்யுகத்தில் தங்க புத்தியுள்ளவர்களாக நீங்கள் ஆகிறீர்கள். இப்போது உள்ளது சங்கம யுகம். கல்லிலிருந்து தங்கமாக ஒரு தந்தையைத் தவிர வேறு யாரும் ஆக்க முடியாது. தங்க புத்தியுள்ளவராக ஆவதற்காக நீங்கள் இங்கே வந்துள்ளீர்கள். பாரதம் தங்கப் பறவையாக இருந்தது அல்லவா? இந்த இலட்சுமி நாராயணர் உலகின் எஜமானர்களாக இருந்தனர் அல்லவா? இவர்கள் எப்போது இராஜ்யம் செய்தனர் என்பதும் யாருக்கும் தெரியாது. இன்றிலிருந்து 5 ஆயிரம் வருடங்களுக்கு முன்பு இவர்களின் இராஜ்யம் இருந்தது. இவர்கள் பின் எங்கே சென்றார்கள்? 84 பிறவிகளை அனுபவித்தனர் என்று நீங்கள் சொல்ல முடியும். இப்போது தமோபிரதானமாக உள்ளனர், பிறகு தந்தையின் மூலம் சதோபிரதானமாக ஆகிக் கொண்டிருக்கின்றனர், ததத்வம் (நீயே அது, அதுவே நீ). இந்த ஞானத்தை தந்தையைத் தவிர சாது சன்னியாசிகள் முதலான யாரும் தர முடியாது. அது பக்தி மார்க்கம், இது ஞான மார்க்கம். குழந்தைகளாகிய உங்களிடம் இருக்கும் நல்ல நல்ல பாடல்களைக் கேட்டீர்கள் என்றால் மயிர்க்கூச்சம் ஏற்படும். குஷியின் அளவு ஒரேயடியாக ஏறிவிடும். பிறகு அந்த போதை நிலையாகவும் இருக்க வேண்டும். இது ஞான அமிர்தமாகும். அந்த சாராயத்தைக் குடித்தால் போதை ஏறிவிடுகிறது. இங்கே இதுவோ ஞான அமிர்தமாகும். உங்களுடைய போதை இறங்கக் கூடாது, எப்போதும் ஏறி இருக்க வேண்டும். நீங்கள் இந்த இலட்சுமி நாராயணரைப் பார்த்து எவ்வளவு குஷியடைகிறீர்கள்! நாம் ஸ்ரீமத்படி மீண்டும் சிரேஷ்டாச்சாரிகளாக (உயர்ந்தவர்களாக) ஆகிக் கொண்டிருக்கிறோம். இங்கே பார்த்துக் கொண்டிருந்தாலும் புத்தியின் தொடர்பு தந்தை மற்றும் ஆஸ்தியின் மீது ஈடுபட்டிருக்க வேண்டும். நல்லது.
இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமான பாப்தாதாவின் அன்பு நினைவுகளும் காலை வணக்கமும். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.
ஓம் சாந்தி
கர்மத்தின் கணக்கைத் தீர்க்கும் சங்கமயுகம்
வியாபாரம், தொழில் மற்றும் நிறுவனம் எதுவாயினும் அவற்றின் பொறுப்பாளர்கள், அவர்கள் பொறுப்பேற்றுள்ள அந்த நிறுவனத்தின் வரவு, செலவுக் கணக்குகளை முறைப்படி பதிவேடுகளில் பதிந்து அக்கணக்கை ஆண்டுக்கு ஒரு முறையோ அல்லது தேவைப்பட்டால் இன்னும் சில குறுகிய காலத்திலோ முடித்து, இலாபம் மற்றம் நஷ்ட்ட விவரங்களை அறிந்து கொள்வர். நடந்து முடிந்த ஆண்டில் இருந்த இருப்புகள் வரும் ஆண்டிற்கான பதிவேட்டில் எடுத்துச் செல்லப்பட்டு சென்ற ஆண்டிற்கான கணக்குகள் மேலும் தொடரும். இது போன்ற கணக்கு வைக்கும் முறை ஒவ்வொரு குடும்பத்திலும் வட வழக்கத்தில் உள்ளது. இந்த கணக்குகள் வைக்கும் வழக்கத்தின் மூலம் ஒரு நிறுவனம், அல்லது தனிப்பட்டவர்களின் ஒரு குறிப்பிட்ட காலத்தில் பலவகைத் தலைப்புகளில் மொத்த வரவு, செலவு கையிருப்புத் தொகை போன்ற விவரங்களை அறிய இயலும். இதுபோன்ற வரவு, செலவு கணக்குகள் ஆண்டு தோறும் அரசாங்கத்தால் வட தயாரிக்கப்பட்டு திட்ட அறிக்கைகள் வெளியிடப்படுகின்றன. இவை அனைத்தும் பொருள் சார்ந்த கணக்குகள் அறிக்கைகள். இந்த கணக்குகள் மூலம் அறியப்படும் கடன் மற்றும் வரவு நிலுவைகள் வசூல் செய்யப்பட முடியாத நிலை வரும்போது அவை வேறு ஒருவரிடம் வசூல் செய்யப்படலாம், ஏற்றுக் கொள்ளப்படலாம் அல்லது தள்ளுபடி செய்யப்படலாம். ஆனால் இக்கணக்குகள் மனித உணர்வுகள் சார்ந்த கணக்குகள் அல்ல. பொருள் சார்ந்த கணக்குகள் கர்மத்தின் கணக்கு.
ஆனால், நடைமுறை வாழ்க்கையில் அவரவர், எண்ணம், சொல் செயல்களின் விளைவான நன்மை, தீமைகள் எந்தப் பதிவேட்டிலும் பதியப்படுவதில்லை, மாறாக அவைகளின் எதிர்வினைகள் சம்மந்தப்பட்டவர்களின் ஆத்மாவில் பதியப்படுகின்றது. இந்தப் பதிவுகளைத்தான் கர்மத்தின் கணக்கு என்கிறோம். ஒரு ஒ- ஒளி நாடாவில் பதியப்பட்டவை அதே நாடாவை வேறொரு ஒ- ஒளி நாடாவில் பொறியில் போட்டு கேட்கவோ, பார்க்கவோ முடிகிறது. வேறொரு பொறியில் போடப்பட்டதால் ஏற்கனவே பதிவானவை அழிந்து விடுவதில்லை. ஏற்கனவே பதிவானவற்றை கேட்க பார்க்க முடிகிறது. அதுபோல் மனித ஆத்மாவில் பதியப்பட்ட ஒருவரின் கர்ம வினைகள் அதாவது அவர் செய்த நன்மை, தீமைகளின் பதிவுகள் அந்த ஆத்மா வேறொரு உடலை அடைந்து தன் முந்தைய பதிவுகளைத் தொடருகிறது. ஏனென்றால் ஆத்மா அழிவதில்லை ஒரு மனிதனின் மரணத்திற்குப் பின் அந்த ஆத்மா வேறொரு தன் பழைய பதிவுகளுடன் உடலை அடைகிறது. மனித மரணம் என்பது தூங்குவது போலவும் பிறப்பு என்பது தூங்கி விழிப்பது போலவும் நடைபெறுகிறது. அதனால் பûôய பதிவுகள் அழியாமல் ஆத்மா தன் பழைய பதிவுகளை இயல்பாகத் தொடருகிறது. ஒரு பாம்பு தன் தோலை இயல்பாக உரித்து விட்டு பழைய நிலையிலேயே இருப்பது போல் ஆத்மா வழக்கப்படி செயல்படுகிறது. ஆக மனித ஆத்மா புதிய உடம்பில் தன் பழைய அதாவது முந்தைய செயல்களைத் தொடருகிறது. அதனால் தான் முந்தைய பிறவியில் தீயவராக இருந்தவர் தன் அடுத்தப் பிறவியிலும் அதே குணமுடையவராகவும் நற்குணங்களை உடையவர் நற்செயல் செய்பவராகவும் இருக்கின்றனர். அதுபோல் ஒருவர் இப்பிறவியில் வேறொருவருக்கு கொடுக்கும் துன்பத்தின் பலனை வரும் பிறவியில் அனுபவிக்க நேரிடுகிறது. எவருக்கு இவர் இந்த துன்பத்தை முன்பு கொடுத்தாரோ அவர் இப்பிறவியில் இவருக்கு துன்பம் கொடுக்க நேரிடலாம். இவை அனைத்தும் கர்மத்தின் கணக்கே. எந்த ஒரு செயலுக்கும் அதற்கு சமமான எதிர்விளைவுகள் உண்டு என்பது கூட இதனால் தான் இதுபோல் ஒருவருக்கு நாம் செய்யும் நன்மைகளும் தான தருமங்களும், அடுத்த பிறவியிலும் தொடர்ந்து நன்மை பயக்கும். ஏற்கனவே ஒரு ஒ- ஒளி நாடாவில் வேறு ஒன்றை பதியும் போது ஏற்கனவே பதிந்தவை அழிந்து விடுதல் நேர்மறை எண்ணம், சொல் செயல்களினால் பழைய பதிவுகள் அழிந்து விடும். இதுபோல் மாற்றம் ஏற்பட வேண்டும் சத்தியயுகத்திலும் திரேதா யுகத்திலும் தூய்மையாக இருந்த ஆத்மா துவாபர யுகம், தொடங்கி இக்க-யுகத்தில் மிகவும் அழுக்கடைந்து தூய்மை இழந்து தீமைகளே நிறைந்த நிலைக்கு வந்ததால் தான் குற்றங்கள் நிறைந்து அதன் விளைவாக பஞ்ச தத்துவங்களான நிலம், நீர், நெருப்பு, காற்று மற்றும் ஆகாயம் என்ற பஞ்ச தத்துவங்களும் தன் தூய்மையை இழந்து பருவ கால மாற்றங்களும் தன் நிலை தவறி வெள்ளம், புயல், கொலை, கொள்ளை, நேர்மையற்ற செயல்கள், அறிவிய-ன் அபார வளர்ச்சியின் காரணமாக கண்டு பிடிக்கப்பட்ட அறிவியல் பொருட்களினால் ஆக்கப்பூர்வத்திற்கு பயன்படுதலை விட அழிவை நோக்கி உலகம் பயணம் செய்து கொண்டிருக்கிறது. வீட்டிற்கு வீடு, என்பது மட்டுமின்றி நாட்டுக்கு நாடு சண்டை, வரட்சி, மக்களுக்க நோய் காரணமான அழிவு என்று உலகம் அழிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. மாற்றம் ஒன்றே மாற்றத்திற்கு வழி.
தூய்மையான ஆத்மாக்கள் தன் சுய தன்மையான, அன்பு, அமைதி, சுகம், சாந்தி, ஆனந்தம் என்ற தன்மையை படிப்படியாக இழந்து தூய்மையற்ற நிலையை அடைவதற்கும் அவரவரின் கர்மவினைகள் என்ற கணக்கி-ருந்தும் விடுபடுவதே உண்மையான மற்றும் காலத்தின் சுழற்சி என்ற இந்த நாடகம் 5000 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடந்து கொண்டிருக்கிறது என்பதையும் அதை மாற்றும் வழியையும் நடைபெறம் சங்கமயுகத்தில் சிவ பாபா இந்த பூமியில் தாதா லேக் ராஜ் என்ற பிரம்மா பாபாவின் கமலவாய் மூலம் துவங்கி மம்மா மாதேஸ்வரி சரஸ்வதி முதலான பெண்களையே தலைமைப் பொறுப்பாக வைத்து ராஜஸ்தான் மாநிலம் மவுண்ட் அபு என்ற இடத்தை தலைமை இடமாகக் கொண்டு 87 ஆண்டுகளாக உலகம் முழுவதும் 147 நாடுகளில் பரவி உலக மாற்றத்தை செய்து கொண்டிருக்கிறார்.
சங்கமயுகமும் சத்யயுகத் துவக்கமும்
நடைபெறுடம் க-யுகத்தின் இறதிக் கட்டமான நூறு ஆண்டுகளான சங்கமயுகத்தின் துவக்க ஆண்டான 1937 ல் தாதா லேக் ராஜ் என்ற பிரம்மா பாபாவின் வாய் மூலம் பரமாத்மாவாகிய சிவபாபா இந்த பூமிக்கு வந்து அவர் ஞானத்தை சொல்லத் துவங்கி இன்று 87 ஆண்டுகள் ஆன நிலையில் விரைவாக சுயமாற்றமும் உலக மாற்றமும் ஏற்பட வேண்டியுள்ளதை சிவ தந்தை அன்றாடம் முரளியில் சொல்- குழந்தைகளுக்குப் புரிய வைத்துக் கொண்டிருக்கிறார். தீமைகளே நிறைந்த இந்த க-யுகம் மாற்றம் என்பது, ஆத்மாக்களாகிய குழந்தைகள் தூய்மையடைந்து புதிய யுகமான சத்தியுகத்தி-ருந்து தேவதைகளாக வர வேண்டும் என்பதே அதற்கு சிவபாபா கூறுவதாவது தன்னை ஒரு ஆத்மா என உணர்ந்து பரமாத்மாவான என்னை நினைவு செய்யுங்கள். என்பதே ஆகும். சிவபாபாவே வந்து இந்த உலக மாற்றத்தை ஏற்படுத்தும் இந்த சங்கமயுகம் வரும் சத்தியுகத்தைக் காட்டிலும் உயர்ந்த காலம் அதாவது வைர யுகம் என்று கூறுவார். ஏனென்றால் இக்காலத்தில் தான் பாபா இந்த ஞானத்ûதைக் கேட்கும் ஆத்மாக்ளை குழந்தைகள் என்று அழைக்கிறார். ஆத்மாக்களை அன்பாக குழந்தைகளே என்று அழைத்து ஒவ்வொருவரையும் வைரத்திற்குச் சமமானவர்களாக குணமேன்மை உடையவர்களாக மாற்றுகிறார். தான் அன்றாட முரளியின் மூலம் ஞானக் கருத்துக்களைச் சொல்- பாபா முரளியின் மூலம் சங்கமயுகத்தில் கூறும் முக்கிய கருத்தாவது.
கீழ்க்குறித்த ஜந்து பொக்கிஷங்கள் நிறைந்தவராகி அனைவருக்கும் அப்பொக்கிஷங்களைக் கொடுங்கள்.
1. அறிவின் பொக்கிஷம் அதாவது நான் ஒரு அழியாத ஆத்மா ஒரு ஒளிப்புள்ளி அன்பு, அமைதி, மகிழ்ச்சி, ஆனந்தம் நிறைந்த ஆத்மா என்பதை உணர்ந்து இந்த ஞானத்தை மற்றவருக்கும் கொடுங்கள்.
2. யோகா என்ற நினைவின் பொக்கிஷம் அதாவது, பரமாத்மாவாகிய நானும் ஒரு புள்ளி வடிவமான அழிவற்ற பிறப்பு இறப்புகள் இல்லாத ஆத்மா. பரமாத்மாவாகிய நான் அமைதி, ஆனந்தக் கடல், சுகக் கடல், தூய்மைக் கடல் என்பதை உணர்ந்து என்னை நினைவு செய்யுங்கள்ள. இதனால் உங்கள் கர்ம வினைகள் அழிந்து விடும்.
3. நீங்களும் என்னைப் போன்றே தூய்மையும், நற்குணங்கள் என்னும் பொக்கிஷயம் உடையவர் ஆகுங்கள். மற்றவர்களுக்கும் இதைக் கொடுங்கள்.
4. அன்பின் பொக்கிஷம் நிறைந்தவர்களாகி மற்றவர்களுக்கும் கொடுங்கள்.
5. மகிழ்ச்சியின் பொக்கிஷத்தையும் அனைவருக்கும் கொடுங்கள்.
6. காலத்தின் பொக்கிஷம் என்பது காலம் பொன் போன்றது எனவே காலத்தைக் கடத்தாமல் சுய மாற்றம் பெறுங்கள் என்பதாகும்.
குறிப்பாக காலம் என்னும் நேரத்தின் பொக்கிஷத்தை அறிந்து மேற்குறித்த அனைத்து பொக்கிஷங்களையும் மற்றவர்களுக்குக் கொடுங்கள். ஏனென்றால் சங்கமயுகத்தின் ஒவ்வொரு நிமிடமும் அனேக ஆண்டுகளுக்கு சமமானது. பாபா சொல்கிறார் நீங்கள் அனைத்து பொக்கிஷங்களிலும் நிறைந்தவர் என்பதை உங்கள் மூலம் மற்றும் உங்களது செயல்கள் மூலம் காட்ட வேண்டும். உங்கள் முயற்சிகளைக் காட்சிப் படுத்துங்கள் ஏனென்றால் திடீரென்று எதுவும் நிகழலாம். அதனால் வின்னால் பார்த்துக் கொள்ளலாம் என்று தள்ளிப் போடாதீர்கள்.
ஆகவே கர்மத்தின் கணக்கை சிவபாபாவின் நினைவில் முடித்து சங்கக காலத்திற்குள் நானும் மாறி மற்றவர்களையும் மாற்றுவோம் அதுவே நமக்கு இப்போது அவசியமான சேவை. அதற்கு பாபா சொல்கிறபடி அமிர்தவேளையில் எழுந்து தன்னை ஒரு ஆத்மா என உணர்ந்து பாபாவை நினைவு செய்தும் ஒரு மணிக்கு ஒரு நிமிடம் தன்னை ஒரு ஆத்மா என உணர்ந்து பாபாவின் நினைவி-ருந்து நானும் மாறி உலகையும் மாற்ற முயற்சிப்போம். அது கர்மத்தின் கணக்கை முடிக்கும் வழியென அறிவோம்.
ஓம் சாந்தி
பி.கு இளங்கோவன்.
தாரணைக்கான முக்கிய சாரம்:
1. நாம் எந்தளவு தகுதி ஆகியிருக்கிறோம் என தனது நாடியைப் பார்க்க வேண்டும். தகுதி அடைந்து சேவையின் பலனை நிரூபித்துக் காண்பிக்க வேண்டும். ஞானத்தின் எல்லையற்ற வெளிப்பாட்டின் மூலம் பந்தனத்திலிருந்து விடுபடவேண்டும்.
2. ஒரு பாபாவின் வழிப்படி நடந்து உள்ளிருக்கும் அவகுணங்களை நீக்க வேண்டும். துக்கத்தில் இருக்கிறோம் என்ற எண்ணத்தை விட்டு விட்டு சுகம் நிறைந்தவர் ஆகவேண்டும். ஞான ரத்தினங்களை தானம் செய்ய வேண்டும்.
1. உயர்ந்த பதவியை அடைய வேண்டும் என்றால் தந்தைக்கு முழுமையான உதவியாளர் ஆக வேண்டும். குருடர்களுக்கு வழி காண்பிக்க வேண்டும். எல்லையில்லாத கடிகாரத்தை எப்பொழுதும் நினைவில் வைக்க வேண்டும்.
2. யக்ஞத்தை பராமரிப்பதற்காக உண்மையிலும் உண்மையான பிராமணர் ஆக வேண்டும். பைசா ஆகியவை இருந்தால் அவற்றை பயனுள்ளதாக ஆக்கி தந்தையிடமிருந்து முழுமையான ஆஸ்தி பெற வேண்டும்.
1) உங்களுக்குக் கிடைத்துள்ள தேக சம்மந்தப்பட்ட சங்கத்திலிருந்து விடுபட்டிருக்க வேண்டும். சத்தியமானவரின் சங்கத்தின் மூலம் தூய்மையாக வேண்டும்.
2) இந்த மாணவ வாழ்க்கையில் நடமாடும் போதும் சுற்றிவரும் போதும் புத்தியில் ஞானம் சுழன்று கொண்டே இருக்க வேண்டும். நோக்கம் குறிக்கோளை நினைவில் வைத்து புருஷார்த்தம் செய்ய வேண்டும். உண்மையான மனதுடன் பாபாவின் உதவியாளர் ஆக வேண்டும்.
1. விகர்மங்களை வென்றவர் ஆவதற்காக யோகபலத்தின் மூலம் பாவ கர்மங்களின் மீது வெற்றியை அடைய வேண்டும். இங்கே பார்த்தபடி இருந்தாலும் புத்தியின் தொடர்பு தந்தை மற்றும் ஆஸ்தியின் மீது ஈடுபட்டிருக்க வேண்டும்.
2. தந்தையின் ஆஸ்தியின் மீது முழுமையான அதிகாரத்தை அடைவதற்காக சொந்தத் தாயின் குழந்தைகள் ஆக வேண்டும். ஒரு தந்தையின் ஸ்ரீமத் படிதான் நடக்க வேண்டும். தந்தை புரிய வைப்பதை தானும் புரிந்து கொண்டு பிறருக்கும் புரிய வைக்க வேண்டும்.
| வரதானம்: |
திருப்தி மூலமாக அனைவரின் மதிப்பை பெறுபவராகி சதா முக மலர்ச்சியுடையர் ஆகுக திருப்தியின் அடையாளம் உடனடியாக மலர்ந்த முகமாக தென்படும். சதா திருப்தியாளர் முக மலர்ச்சியுடனிருப்பர். அவரை ஒவ்வொருவரும் புகழ்வார்கள். முக மலர்ச்சியால் மட்டுமே மதிப்பை பெற முடியும். ஆகவே சதா திருப்தியாக மற்றும் மகிழ்ச்சியாக இருக்கும் விசேஷ வரதானத்தை தானும் பெற்று பிறருக்கும் வழங்குங்கள். ஏனெனில் இந்த வேள்வியின் இறுதி சக்தி அனைத்து பிராமணர்களின் சதா சந்தோஷம். எப்போது அனைவரும் சதா சந்தோஷமாக இருப்பார்களோ அப்போதே வெளிப்பாட்டின் முழக்கம் முழங்கும். அதாவது வெற்றிக் கொடி பறக்கும். சோதனைகள் மற்றும் பிரச்சினைகளில் வாடிப் போவதற்கு பதிலாக கேளிக்கை என்ற அனுபவம் செய்யக்கூடிய எப்பொழுதும் வெற்றி அடையும் வெற்றியாளர் ஆவீர்களாக. இந்த புருˆôர்த்தி வாழ்க்கையில் நாடகப்படி பிரச்சினைகள் மற்றும் நிலைமைகளோ வரவே வேண்டி உள்ளது. ஜென்மம் எடுத்த உடனேயே முன்னேறுவதற்கான இலட்சியம் கொள்வது என்றால் சோதனைகள் மற்றும் பிரச்சினைகளை அழைப்பது. பாதையை கடந்து செல்ல வேண்டி இருக்கும் போது பாதையில் காட்சிகளே தென்படக்கூடாது என்று நினைத்தால் அது எவ்வாறு முடியும். ஆனால் அந்த காட்சிகளை கடந்து செல்வதற்கு பதிலாக அவற்றை திருத்துவதில் ஈடுபட்டு விட்டீர்கள் என்றால் தந்தையின் நினைவின் இணைப்பு தளர்ந்து போய் விடுகிறது.மேலும் கேளிக்கைக்கு பதிலாக மனதை வாட செய்து விடுகிறீர்கள். எனவே ஆஹா காட்சிகளே ஆஹா என்ற கீதம் பாடியபடியே முன்னேறிச் செல்லுங்கள், அதாவது எப்பொழுதும் வெற்றியாளர் ஆவீர்களாக என்ற வரதானத்திற்குரியவராக ஆகி விடுங்கள். மன்மனாபவ என்ற விதி மூலம் பந்தனங்களின் விதையை முடித்துவிடக் கூடிய நஷ்டோமோகா ஸ்மிருதி சொரூபம் (பற்றுதலை அழித்து நினைவு சொரூபம்) ஆகுக. பந்தனங்களின் விதை சம்பந்தம் ஆகும். பாபாவுடன் சர்வ சம்பந்தங்களும் இணைந்திருக்குமானால் வேறு யாரிடமாவது மோகம் எப்படி ஏற்படும்? சம்பந்தம் இல்லாமல் பற்றுதல் இருப்பதில்லை. பற்றுதல் இல்லையென்றால் பந்தனம் இல்லை. விதையை முடித்து விட்டால், விதை இல்லாமல் விருட்சம் எப்படி முளைத்து வளரும்? இது வரை கூட பந்தனம் இருக்குமானால், கொஞ்சம் துண்டித்திருக்கிறீர்கள், கொஞ்சம் இணைத்திருக்கிறீர்கள். எனவே மன்மனாபவ என்ற விதி மூலம் மனதின் பந்தனங்களில் இருந்தும் கூட விடுபட்டு, நஷ்டோமோகா ஸ்மிருதி சொரூபம் ஆகுங்கள். பிறகு இந்தப் புகார்கள் எல்லாம் முடிந்து போகும் -- அதாவது என்ன செய்வது, பந்தனம், அது விடுபடுவதில்லையே! அவிபச்சாரி மற்றும் நிர்விக்ன மனோநிலையின் மூலம் முதல் ஜென்மத்தின் பலனை அடையக்கூடிய சமீபமான மற்றும் சமமானவர் ஆகுக! எந்த குழந்தை இங்கு பிரம்மாபாபாவின் குணம் மற்றும் சமஸ்காரத்திற்கு சமீபமாக இருக்கின்றார்களோ, அனைத்து சம்பந்தங்களில் பாபாவுடன் இருக்கின்றார்களோ மற்றும் சமமான அனுபவத்தை செய்கின்றார்களோ அவர்களே, அங்கு இராயலான குலத்தில் முதல் ஜென்மத்தின் சம்பந்தத்தில் நெருக்கமாக வருகின்றார்கள். 2. யார் ஆரம்பத்திலிருந்து இப்பொழுது வரை ஒருவரையே நினைப்பவராக (அவிபச்சாரி) மற்றும் தடைகளற்றவராக (நிர்விக்னமாக) இருக்கின்றார்களோ அவர்கள் தான் முதலில் வருவார்கள். நிர்விக்னம் என்றால் தடை வரவே இல்லை என்றல்ல ஆனாலும் தடைகளை வென்றவராக மற்றும் தடைகள் மீது சதா வெற்றி அடைவதாகும். இந்த இரண்டு விசயங்களில் யாரேனும் ஆரம்பத்திலிருந்து இறுதி வரை சரியாக இருந்தால் முதல் ஜென்மத்திலும் துணையாக ஆவர்கள் தெய்வீக புத்தி என்ற -ப்ட் மூலம் மூன்று லோகங்களுக்கு பயணம் செய்யக் கூடிய சகஜயோகி ஆகுக. சங்கமயுகத்தில் அனைத்து குழந்தைகளுக்கும் தெய்வீக புத்தி என்ற -ப்ட் கிடைக்கிறது. இந்த அதிசயமான -ப்ட் மூலம் மூன்று லோகங்களில் எங்கு செல்ல வேண்டுமோ அங்கு சென்று விட முடியும். நினைவு என்ற சுவிட்ச் ஆன் செய்தால் போதும், விநாடியில் சென்றடைந்து விடுவீர்கள் மற்றும் எவ்வளவு நேரம் எந்த லோகத்தின் அனுபவம் செய்ய விரும்புகிறீர்களோ அவ்வளவு நேரம் அங்கு நிலைத்திருக்க முடியும். இந்த -ப்ட் பயன்படுத்துவதற்கு அமிர்தவேளையின் கவனமாக இருந்து நினைவு என்ற சுவிட்ச் யதார்த்த முறையில் செட் செய்யுங்கள். அதிகாரத்துடன் இந்த -ப்டை காரியத்தில் பயன்படுத்தும் போது சகஜயோகி ஆகிவிடுவீர்கள். கடின உழைப்பு முடிவடைந்து விடும். |
| சுலோகன்: | மனதை சதா மகிழ்ச்சியாக வைத்துக் கொள்வது - |
அவ்யக்த சமிக்ஞை - ஏகாந்தப்பிரியர் ஆகுங்கள், ஒற்றுமை மற்றும் ஏகாக்ரதாவை தனதாக்குங்கள்
ஏகாந்தவாசி ஆவது என்றால் சுற்றுச் சூழ-ன் வைப்ரேஷனி-ருந்து விலகியிருப்பதாகும். சிலருக்கு தனிமை பிடிப்பதில்லை, கூட்டத்தில் இருப்பது, சிரிப்பது, பேசுவதையே அதிகம் விரும்புவார்கள். இது வெளிமுகமாக இருப்பதாகும். இப்போது தன்னை ஏகாந்தவாசியாக ஆக்குங்கள். அதாவது அனைத்து ஈர்ப்புகளின் வைப்ரேசன-ருந்து விலகி உள் முகமாகுங்கள். இப்போது வருகின்ற காலத்தில் இந்த பயிற்சியே பயன் தரும். மாறாக வெளிமுக ஈர்ப்பிலேயே வசமாகும் பழக்கம் இருந்தால் தக்க சமயத்தில் ஏமாற்றமே நிகழும்.
25.02.2025 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்
இனிமையான குழந்தைகளே ! இப்போது பாரதம் மீண்டும் சொர்க்கமாக மாறிக் கொண்டிருக்கிறது, சொர்க்கத்தின் இறை தந்தை வந்திருக்கிறார் என்ற மகிழ்ச்சியான செய்தியை அனைவருக்கும் கூறுங்கள்.
கேள்வி: சொர்க்கத்திற்கு அதிபதியாக மாறக் கூடிய மகிழ்ச்சி எந்த குழந்தைகளுக்கு இருக்கிறதோ அவர்களின் அடையாளம் என்ன?
பதில்: அவர்களுக்கு எந்த விதமான துன்பமும் வர முடியாது. நாம் மிகப் பெரிய ஆட்கள், (பிராமண ஆத்மாக்கள்) நம்மை எல்லையற்ற தந்தை இவ்வாறாக (லஷ்மி நாராயணன்) மாற்றுகின்றார் என்ற போதை அவர்களுக்கு இருக்கும். அவர்களின் நடத்தை மிகவும் மேன்மையானதாக இருக்கும். அவர்களால் மற்றவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியைக் கூறாமல் இருக்க முடியாது.
மரியாதா புருúˆôத்தமர் ஆவது ஆகும்.
அவ்யக்த சமிக்ஞை: ஏகாந்தபிரியர் ஆகுங்கள், ஒற்றுமை மற்றும்
ஒருமுக நிலையை கடைபிடியுங்கள்.
ஏகாந்தவாசி என்றால் அனுபவி மூர்த்தி. நிகழ்காலத்திற்கேற்ப இப்பொழுது வானபிரஸ்த நிலைக்கு சமீபத்தில் இருக்கிறீர்கள். வானபிரஸ்திகள் பொம்மை விளையாட்டு விளையாட மாட்டார்கள். வானபிரஸ்திகள் ஏகாந்தமாக தனிமையில் மற்றும் நினைவு செய்தபடி இருப்பார்கள். எனவே எல்லையில்லாத வானபிரஸ்திகளாகிய நீங்கள் அனைவரும் எப்பொழுதும் ஒருவரின் ஆழத்தில் அதாவது நிரந்தர ஏகாந்தத்தில் எப்பொழுதும் ஸ்மிருதி சொரூபமாக இருங்கள். இதுதான் எல்லையில்லாத வானபிரஸ்தி நிலை ஆகும்.
26.02.2025 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்
இனிமையான குழந்தைகளே ! நாம் இப்பொழுது பழைய ஆடையை விடுத்து வீட்டிற்குச் செல்வோம். பிறகு புதிய உலகத்தில் புதிய ஆடையைப் பெறுவோம் என்ற அளவற்ற மகிழ்ச்சி உங்களுக்கு இருக்க வேண்டும்.
கேள்வி: நாடகத்தின் எந்த ஒரு துல்லியமான இரகசியம் மிகவுமே புரிந்து கொள்ள வேண்டியதாக உள்ளது.
பதில்: இந்த நாடகம் பேன் போல நகர்ந்து கொண்டே இருக்கிறது. டிக் - டிக் என்று ஆகிக் கொண்டே இருக்கிறது. யாருடைய எந்த ஒரு செயல் நடந்ததோ அதே பின்னர் அவ்வாறே 5 ஆயிரம் வருடங்களுக்கு பின்னால் (ரிபீட்) மீண்டும் நடைபெறும். இந்த இரகசியம் மிகவும் சூட்சுமமாகப் புரிந்து கொள்ள வேண்டியது ஆகும். எந்தக் குழந்தைகள் இந்த இரகசியத்தை சரியாகப் புரிந்திருப்பதில்லையோ அவர்கள் நாடகத்தில் இருந்தால் பின் புருஷார்த்தம் (முயற்சி) செய்வோம் என்று கூறுகிறார்கள். அவர்களால் உயர்ந்த பதவியை அடைய முடியாது.
ஏகாந்தப் பிரியர் ஆகுங்கள், ஒற்றுமை மற்றும் ஒருமுகத் தன்மையைத் தனதாக்குங்கள்
எந்த அளவு சேவையின் குழப்பத்தில் வருகிறீர்களோ, அந்த அளவு முற்றிலும் அண்டர்கிரவுண்டில் சென்று விடுங்கள். எந்த ஒரு புதிய கண்டுபிடிப்பு மற்றும் சக்திசாலி கண்டுபிடிப்பும் அண்டர்கிரவுண்டில் தான் செய்கின்றனர். எனவே ஏகாந்தவாசி ஆவது தான் அண்டர்கிரவுண்டில் செல்வதாகும். சமயம் கிடைக்கும் போதெல்லாம் -- சேர்ந்தாற்போல் ஒரு மணி அல்லது அரை மணி நேரம் கிடைப்பதில்லை -- ஆனால் இடையிடையில் 5 நிமிடம் கிடைத்தாலும் கூட கடலின் ஆழத்தில் சென்று விடுங்கள். இதன் மூலம் சங்கல்பங்கள் மீது பிரேக் போட முடியும். பிறகு சப்தத்தில் வர விரும்பினாலும் வர முடியாது.
27.02.2025 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்
இனிமையான குழந்தைகளே! சத்தியத்தின் சங்கம் (சேர்க்கை) ஞான மார்க்கத்தில் தான் ஏற்படுகிறது. இப்போது நீங்கள் சத்திய பாபாவின் சங்கத்தில் அமர்ந்திருக்கிறீர்கள். பாபாவின் நினைவில் அமர்வது என்றால் சத்சங்கம் செய்வதாகும்.
கேள்வி : சத்சங்கத்தின் அவசியம் குழந்தைகள் உங்களுக்கு இப்போது தான் உள்ளது. ஏன்?
பதில் : ஏனென்றால் சதோபிரதான ஆத்மா, ஒரு சத்தியமான தந்தை, சத்தியமான குருவின் சங்கத்தினால் தான் சதோபிரதானமாக, அதாவது கருப்பிலிருந்து வெண்மையாக ஆக முடியும். சத்சங்கத்தினாலன்றி பலமற்ற ஆத்மா பலவான் ஆக முடியாது. பாபாவின் சங்கத்தினால் (தொடர்பால்) ஆத்மாவுக்குள் தூய்மையின் பலம் வந்து விடுகின்றது. 21 பிறவிகளுக்கு அவரது துன்பம் விலகி விடுகின்றது (படகு அக்கரை சேர்கின்றது)
நர்மறையாக (பாசிட்டிவில்) மாற்றம் செய்யுங்கள்.
அவ்யக்த சமிக்ஞை: ஏகாந்த பிரியராகுங்கள், ஒற்றுமை மற்றும் ஒருமுகத்தன்மையை தனதாக்குங்கள்
ஏகாந்தவாசி என்றாலே எப்போதும் தனிமையில் இருப்பது மட்டுமல்லாமல் ஒரு தந்தை நினைவில் மூழ்கியிருப்பதாகும். ஒருமுகத் தன்மையின் சக்தி இருந்தால் எந்த ஒரு ஆத்மாவிற்கும் செய்தியை சென்றடைய வைக்கலாம். எந்த ஆத்மாவையும் வரவழைக்கவும் முடியும். எந்த ஒரு ஆத்மாவின் சப்தத்தையும் கண்டறிய முடியும். எந்த ஆத்மாவிற்கும் தொலைவில் இருந்தபடியே ஒத்துழைப்பு தர முடியும்.
.
28.02.2025 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்
இனிமையான குழந்தைகளே! அமைதி வேண்டும் என்றால் அசரீரி ஆகுங்கள், இந்த தேக உணர்வில் வருவதனால்தான் அமைதியின்மை ஏற்படுகிறது, ஆகையால் தனது சுயதர்மத்தில் நிலைத்திருங்கள்.
கேள்வி: சரியான நினைவு என்பது எது? நினைவு செய்யும் சமயத்தில் எந்த விஷயத்தில் விசேஷ கவனம் தேவை?
பதில்: தன்னை இந்த சரீரத்திலிருந்து தனிப்பட்ட ஆத்மா எனப் புரிந்து கொண்டு தந்தையை நினைவு செய்வது - இதுதான் சரியான உண்மையான நினைவு ஆகும். எந்த தேகமும் நினைவுக்கு வரக்கூடாது, இந்த கவனம் வைப்பது மிக அவசியம் ஆகும். நினைவில் இருப்பதற்காக ஞானத்தின் போதை ஏறி இருக்க வேண்டும், பாபா நம்மை முழு உலகிற்கும் எஜமானன் ஆக ஆக்குகிறார், நாம் முழு சமுத்திரம், முழு பூமிக்கு எஜமான் ஆகிறோம் என்பது புத்தியில் இருக்க வேண்டும்.
பாட்டு : உங்களை அடைந்ததினால் இவ்வுலகையே அடைந்துவிட்டோம்.
இது தான் வாழ்க்கை வாழும் கலையாகும்.
அவ்யக்த இˆôரே - ஏகாந்தவாசி ஆகுங்கள், ஏக்தா (ஒற்றுமை) மற்றும் ஏகாக்ரதா (ஒருநிலைப்படுத்தல்) கொண்டு வாருங்கள்
ஏகாந்தவாசி என்பதற்கு இரண்டு பொருள் இருக்கிறது. வெளியில் இருக்கும் ஏகாந்தம் அல்ல, ஆனால் ஒன்றின் ஆழத்தில் மூழ்குவதாகும். வெளியில் மட்டும் ஏகாந்தமாக இருந்தால் ச-த்து விடும். நாள் எப்படி கடக்கும் என்று தெரியவில்லையே என்று கூறுவீர்கள். ஆனால் ஒரு தந்தையின் ஆழத்தில் மூழ்கி விடுங்கள். கட-ன் ஆழத்தில் சென்றால் அதிக பொக்கிஷங்கள் கிடைக்கும். அதே போன்று ஒருவரின் ஆழத்தில் சென்று விடுங்கள். அதாவது தந்தையிடமிருந்து என்ன பிராப்தியாக கிடைத்திருக்கிறதோ அதில் மூழ்கி விடுங்கள்.