தமிழ் முரளி · Brahma Kumaris

இன்றைய முரளி · 16 நவம்பர், 2026

ஓம் சாந்தி · BapDada · 16 நவம்பர், 2026

இன்றைய முரளி — தினமும் காலையில் புதியது.

18
பதிவிறக்கு PDF
0:00--:--

உரையைத் தேர்ந்தெடுக்கவும் → ஹைலைட் / பெட்டி / அடிக்கோடு

16-11-2026
காலை முரளி
ஓம் சாந்தி
பாப்தாதா
மதுபன்

இனிமையான குழந்தைகளே! உங்களுடைய நடத்தை மிக மிக இனிமையாகவும் இராயலாகவும் இருக்க வேண்டும், கோபம் என்ற பூதம் முற்றிலும் இருக்கக் கூடாது.
கேள்வி: 21 பிறவிகளின் பிராப்தியை அடைவதற்காக குழந்தைகள் எந்த விஷயத்தில் அவசியம் கவனம் கொடுக்க வேண்டும்?
பதில்: இந்த உலகத்தில் இருந்து கொண்டே, அனைத்தையும் செய்து கொண்டே, புத்தியின் தொடர்பு (நினைவு) ஒரு உண்மையான நாயகனுடன் இருக்க வேண்டும். தந்தையின் புகழுக்கு குறைவு ஏற்படும் படியாக எந்த ஒரு கெட்ட பழக்கமும் இருக்கக் கூடாது. வீட்டில் இருந்த போதிலும் கூட இவர்களுக்குள் மிக நல்ல தெய்வீக குணங்கள் உள்ளன என்று பிறர் நினைக் கும் படியாக ஒருவருக்கொருவர் அன்போடு இருங்கள்.
பாடல்: விழிப்படையுங்கள் நாயகிகளே விழிப்படையுங்கள்!

ஓம்சாந்தி. இனிமையிலும் இனிமையான ஆன்மிகக் குழந்தைகள் பாடல் கேட்டீர்கள். இதனுடைய அர்த்தத்தையும் குழந்தைகள் அவசியம் புரிந்திருப்பீர்கள். தந்தை வந்து புதுப்புது விஷயங்களைக் கூறுகின்றார். புதிய உலகத்தின் புதிய யுகத்திற்காக குழந்தைகள் இந்த விஷயங்களை 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பும் கேட்டிருந்தீர்கள். பிறகு மீண்டும் இப்பொழுது கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள். மற்றபடி இடையில் பக்தி மார்க்கத்தின் விஷயங் களை மட்டும் தான் கேட்டிருக்கிறீர்கள். சத்யுகத்தில் இந்த விஷயங்கள் இருக்காது. அங்கு ஞான மார்க்கத்தின் பிராப்தி (பலன்) இருக்கிறது. இப்பொழுது குழந்தைகளாகிய நீங்கள் புது உலகிற்காக உண்மையான வருமானம் செய்து கொண்டு இருக்கிறீர்கள். ஞானத்தை வருமானத் திற்கான ஆதாரம் என்று சொல்லப்படுகிறது. படிப்பின் மூலமாக சிலர் வக்கீல், இன்ஜினியர் போன்று பதவி அடைகிறார்கள். வருமானமும் கிடைக்கிறது. நீங்கள் இந்தப் படிப்பின் மூலம் இராஜாக்களுக்கெல்லாம் இராஜா ஆகிறீர்கள். இது எவ்வளவு உயர்ந்த வருமானம் ஆகும்! இப்பொழுது குழந்தைகளாகிய உங்களுக்கு இந்த நம்பிக்கை உள்ளது. ஒருவேளை கொஞ்சம் சந்தேகம் இருக்கிறது என்றாலும், போகப்போக நம்பிக்கை ஏற்பட்டு விடும். ஒரு வினாடியில் ஜீவன்முக்தி என்று பாடப்பட்டுள்ளது. பாபாவினுடையவர் ஆகிவிட்டோம் மற்றும் ஆஸ்திக்கு எஜமானர் ஆகிவிட்டோம். தந்தை, யார் சொர்க்கத்தின் படைப்பாளரோ, அவர் நம்மை எஜமானர் ஆக்குவதற்காக வந்திருக்கின்றார். இந்த நம்பிக்கை குழந்தைகளுக்கு இருக்க வேண்டும். இரண்டு தந்தைகள் இருக்கின்றார்கள் என்பதையும் நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். ஒருவர் லௌகீகத் தந்தை, மற்றொருவர் பரலௌகீகத் தந்தை, அவரை பரமபிதா பரமாத்மா, ஓ இறை தந்தையே என்று அழைக்கின்றார்கள். லௌகீகத் தந்தையை ஒருபொழுதும் பரமபிதா என்று சொல்லமாட்டார்கள். அந்த ஒரு பரலௌகீகத் தந்தை தான் அனைவருக்கும் சுகத்தை கொடுக்கும் வள்ளல், சாந்தியை கொடுக்கும் வள்ளல் ஆவார். சத்யுகத்தில் அனைவரும் சுகம் நிறைந்தவர்களாக இருக்கிறார்கள். மற்ற ஆத்மாக்கள் சாந்தி தாமத்தில் இருப்பார்கள். சத்யுகத் தில் உங்களுக்கு சுகம், சாந்தி, செல்வம், நோயற்ற சரீரம் ஆகிய அனைத்தும் இருந்தன. எனவே, அத்தகைய மிக அன்பான தந்தையை அனைவரும் அழைக்கிறார்கள். சாது சந்நியாசிகள் கூட தவம் செய்கிறார்கள், ஆனால், யாரை நினைத்து தவம் செய்கிறார்கள் என்பதை அறிந்திருக்க வில்லை. நாம் பிரம்மத்தில் ஐக்கியமாகிவிட வேண்டும் என்று அவர்கள் பிரம்மத்தை நினைத்து தவம் செய்கிறார்கள். ஆனால், ஐக்கியமாக முடியாது. பிரம்மத்தை நினைவு செய்வதால் பாவம் அழிவதில்லை. தந்தை கூறுகின்றார், என்னை நினைவு செய்யுங்கள் என்று. சர்வ சக்திவான் நானா அல்லது வசிப்பிடமான பிரம்மமா? பிரம்ம மகாத்தத்துவத்தில் அனைத்து ஆத்மாக்களும் வாசம் செய்கின்றனர். பிரம்மத்தை அவர்கள் பகவான் என்று புரிந்திருக்கிறார்கள். எவ்வாறு பாரதவாசிகள் ஹிந்துஸ்தானில் இருக்கக்கூடிய காரணத்தினால் தன்னுடைய தர்மத்தை ஹிந்து தர்மம் எனப் புரிந்திருக்கிறார்களோ, அவ்வாறே வசிப்பிடமான பிரம்ம தத்துவத்தை பரமாத்மா எனப் புரிந்து கொண்டார்கள். அது பிரம்மாண்டம் ஆகும். அங்கே ஆத்மாக்கள், ஜோதி புள்ளியாக முட்டை வடிவத்தில் (ஆகாரத்தில்) இருக்கின்றன. ஆகையினால், அதை பிரம்மாண்டம் என்று கூறுகின்றனர். இது மனித சிருஷ்டி ஆகும். பிரம்மாண்டம் வேறு, மனித சிருஷ்டி வேறு ஆகும். ஆத்மா என்றால் என்ன என்பது யாருக்கும் தெரியாது. (பிருக்குட்டியின்) புருவங்கள் மத்தியில் அற்புதமான நட்சத்திரம் ஜொலிக்கிறது என்று சொல்லவும் செய்கிறார் கள். பிறகு ஆத்மா கட்டைவிரல் போல் உள்ளது என்றும் கூறுகிறார்கள். ஆத்மா முற்றிலும் சூட்சுமமான புள்ளியாக உள்ளது, அதை இந்த கண்களால் பார்க்க முடியாது. இதைப் பார்ப்பதற் கான, பிடிப்பதற்கான முயற்சி அதிகம் செய்கிறார்கள். ஆனால், யாராலும் தெரிந்து கொள்ள முடியாது என்று தந்தை கூறுகின்றார். இப்பொழுது நீங்கள் பாரதத்தை சொர்க்கமாக்குவதில் தந்தையின் உதவியாளராகவும் ஆகவேண்டும் என்று குழந்தைகளாகிய நீங்கள் அறிந்திருக் கிறீர்கள். தந்தை வருவதே பாரதத்தில் தான். சிவஜெயந்தி பாரதத்தில் தான் கொண்டாடு கிறார்கள். எவ்வாறு கிறிஸ்து வாழ்ந்து மறைந்து விட்டார். இருப்பினும் கிறிஸ்தவர்கள் அவர் நினைவாக கிறிஸ்துமஸ் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். கிறிஸ்து எப்பொழுது வந்தார் என்பதையும் அறிந்திருக்கிறார்கள். ஆனால், பாரதவாசிகளுக்கு தந்தை எப்பொழுது வந்திருந் தார், கிருஷ்ணர் எப்பொழுது வந்திருந்தார் என்பது தெரியாது. அவர்களுக்கு யாரைப் பற்றியும் தெரியாது. கிருஷ்ணருடைய மகிமை அனைத்தும் பாடுகிறார்கள். அவரை ஊஞ்சலில் வைத்து ஆட்டுகிறார்கள், அன்பு செலுத்துகிறார்கள். ஆனால், அவரது பிறப்பு எப்பொழுது ஏற்பட்டது என்பதை அறிந்திருக்கவில்லை. துவாபர யுகத்தில் கீதை சொன்னார் என்று சொல்லி விட்டனர். ஆனால், கிருஷ்ணர் துவாபரயுகத்தில் வருவதில்லை. லீலைகள் அனைத்தும் ஒரு தந்தை யினுடையது ஆகும். அதனாலேயே உங்களுடைய (கதி) வழி தனிப்பட்டது என்று அவரைப் பற்றி கூறுகிறார்கள். கிருஷ்ணர் சத்யுகத்தின் இளவரசர் ஆவார். யோக பலத்தினால் குழந்தை பிறக்கப்போகிறது என்பது தாய்க்கு முதலிலேயே காட்சி கிடைத்துவிடும். அங்கே சரீரத்தையும் கூட அவ்வாறே விடுவார்கள். ஒரு சரீரத்தை விடுத்து மற்றொன்றை எடுப்பார்கள். நாகத்தின் எடுத்துக்காட்டு உள்ளது. உண்மையில் சந்நியாசி இந்த உதாரணத்தைக் கொடுக்க முடியாது. நீங்கள் விகாரி மனிதர்களுக்கு, அமர்ந்து ஞானத்தினுடைய பூம் பூம் செய்து (சொல்லி) தமோபிரதானத்திலிருந்து சதோபிரதானமாக ஆக்கிவிடுகிறீர்கள். பூம் பூம் செய்து மனிதர்களை தேவதை ஆக்குவது என்பது உங்களுடைய தொழில் ஆகும். ஆமை முதலியவற்றின் உதாரணம் கூட இந்த சமயத்திற்காகத் தான். கர்மம் செய்தாலும் எவ்வளவு நேரம் கிடைக் கிறதோ, அப்பொழுதெல்லாம் தந்தையை நினைவு செய்ய வேண்டும். இது நம்முடைய கடைசி பிறவி என்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். இப்பொழுது நாடகம் முடிவடையப் போகிறது. சரீரம் பழையது ஆகும். இதனுடைய கர்மவினைப் பயனை முடிக்க வேண்டும். எப்பொழுது சதோபிரதானம் ஆகிவிடுவீர்களோ அப்பொழுது கர்மாதீத் நிலை வந்துவிடும். பிறகு நாம் இந்த சரீரத்தில் இருக்க முடியாது. கர்மாதீத நிலை ஏற்பட்டவுடன் சரீரத்தை விட்டுவிடுவீர்கள். பின்னர், யுத்தம் ஆரம்பம் ஆகிவிடும். அனைத்து சரீரங்களும் அழிந்து, ஆத்மாக்கள் கொசுக் கூட்டம் போல் சென்றுவிடும். தூய்மை ஆகாமல் யாரும் செல்ல இயலாது. இது இராவணனால் ஸ்தாபனை செய்யப்பட்ட துக்கதாமம் ஆகும், மற்றும் இராமரால் ஸ்தாபனை செய்யப்பட்டது சிவாலயம் ஆகும். உண்மையில் பரமாத்மாவின் பெயர் சிவன் ஆகும், இராமர் அல்ல. சத்யுக சிவாலயத்தில் அனைத்து தேவதைகள் இருக்கிறார்கள். பின்னர், பக்தி மார்க்கத்தில் சிவனுடைய சிலை வடித்து, அதற்காக கோவில், சிவாலயம் முதலியவை உருவாக்குகிறார்கள். இவர் இப்பொழுது சிவபாபாவினுடைய சிம்மாசனம் ஆகும். ஆத்மா இந்த சிம்மாசனத்தில் வீற்றிருக்கிறது. தந்தை கூட இங்கே அருகில் வந்து வீற்றிருக்கின்றார் மற்றும் வந்து கற்பிக் கின்றார். எப்பொழுதும் இதில் வீற்றிருப்பதில்லை. நினைவு செய்தவுடன் அவர் வந்துவிட்டார். நான் உங்களுடைய எல்லையற்ற தந்தை ஆவேன். என்னிடமிருந்து உங்களுக்கு ஆஸ்தி கிடைக்க வேண்டும். பிரம்மா எல்லையற்ற தந்தை கிடையாது. ஆகையால், நீங்கள் என்னை நினைவு செய்யுங்கள் என்று தந்தை கூறுகின்றார். பாபா ஞானக்கடலாக இருக்கின்றார், அன்புக் கடலாக இருக்கின்றார் என்று இனிமையான குழந்தைகள் அறிந்திருக்கிறீர்கள். எனவே, குழந்தைகளாகிய நீங்களும் கூட அன்புக்கடல் ஆகவேண்டும். ஆண், பெண் ஒருவர் மீது ஒருவர் உண்மையான அன்பு செலுத்துவதில்லை. அவர்கள் காம விகாரத்தை தான் அன்பு என நினைக் கின்றனர். ஆனால், காமம் மகா எதிரியாகும். இது முதல், இடை, மற்றும் கடை வரை துக்கம் கொடுக்கக் கூடியது ஆகும் என்று பாபா கூறியிருக்கின்றார். தேவதைகள் நிர்விகாரிகளாக இருந்தார்கள். அதனாலேயே, கிருஷ்ணரைப் போன்ற குழந்தை கிடைக்க வேண்டும், கிருஷ்ணரைப் போன்ற கணவன் கிடைக்க வேண்டும் என்று கூறுகிறார்கள். கிருஷ்ணபுரியை நினைவு செய்கிறார்கள் அல்லவா! இப்பொழுது தந்தை கிருஷ்ண புரியை ஸ்தாபனை செய்து கொண்டிருக்கின்றார். நீங்கள் சுயம் ஸ்ரீகிருஷ்ணர் போல அல்லது மோகன் போல (அழகான வராக) ஆகமுடியும். மற்ற இளவரசர், இளவரசிகளும் இருப்பார்கள். எனவே, இவர்கள் அனை வரும் இங்கே உருவாகிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுடைய பட்டியலும் உள்ளது. மாலை யினுடைய 8 மணிகளும் இருக்கின்றன, 108 மணிகளும் இருக்கின்றன. மக்கள் 9 இரத்தினங்கள் பதிக்கப்பட்ட மோதிரம் அணிகின்றார்கள். இப்பொழுது இந்த 8 பேர் யார்? நடுவில் இருப்பது யார்? இனிமையிலும் இனிமையான தந்தை மூலம் நாம் இரத்தினம் ஆகிக் கொண்டிருக்கிறோம் என்பதையும் நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். தந்தை கூறுகின்றார், குழந்தைகள் பரஸ்பரம் தங்களுக்குள் மிகுந்த அன்போடு நடந்து கொள்ள வேண்டும். இல்லை யெனில், பாபாவிற்கு அவப்பெயர் ஏற்பட்டுவிடும். பின்னர், சத்குருவிற்குச் நிந்தனை கிடைக்கச் செய்தவர்கள் உயர் பதவி அடைய இயலாது. ஒரு தந்தையை நினைவு செய்யுங்கள், கறை நீங்கிவிடும் என்ற இந்த மந்திரத்தையும் அனைவருக்கும் சொல்ல வேண்டும். இவருக்குள் கோபம் இல்லை, மிகுந்த அன்பு வந்துவிட்டது என்று பிறர் நினைக்கும் அளவிற்கு வீட்டிலும் கூட அவ்வளவு அன்போடு நடந்து கொள்ள வேண்டும். சாராயம், சிகரெட் முதலியவற்றை குடிப்பது என்பது மிக கெட்ட பழக்கம் ஆகும். அத்தகைய அனைத்து கெட்ட பழக்கங்களையும் விட்டு விடவேண்டும். தெய்வீக குணங்களை இங்கேயே தாரணை செய்ய வேண்டும். இராஜ்யத்தை ஸ்தாபனை செய்வதில் உழைக்க வேண்டியுள்ளது. மற்ற தர்மத்தினர் இராஜ்யத்தை ஸ்தாபனை செய்வ தில்லை. அவர்கள் மேலிருந்து, அனைவரும் பின்னால் வந்து கொண்டே இருப்பார்கள். நீங்கள் 21 பிறவிகளுக்கான பிராப்தியை உருவாக்கிக் கொண்டிருக்கிறீர்கள். இதில் மாயையின் புயல் அதிகமாக வரும். ஆனாலும், முயற்சி செய்து தெய்வீக குணங்களை தாரணை செய்ய வேண்டும். ஒருவேளை கோபத்துடன் பேசினால், இவருக்குள் பூதம் உள்ளது என்று மக்கள் கூறுவார்கள். அவ்வாறிருந்தால், எல்லையற்ற தந்தையின் மதிப்பை இழந்துவிடும்படி செய்வ தாகும். பின்னர், அப்பேற்பட்டவர்கள் எவ்வாறு உயர்ந்த பதவியை அடைவார்கள்? மிகவும் இனிமையானவராக, பற்றற்றவராக ஆகவேண்டும். இங்கே இருந்தாலும், அனைத்தும் செய்து கொண்டிருந்தாலும் யோகம் (நினைவு) நாயகனுடன் இருக்க வேண்டும். என்னை நினைவு செய்தீர்கள் என்றால் பாவங்கள் எரிந்து சாம்பல் ஆகிவிடும், இதை யோக அக்னி என்று கூறப்படுகிறது என்று தந்தை கூறியிருக்கின்றார். இங்கே ஹடயோகத்திற்கான அவசியம் இல்லை. தன்னுடைய சரீரத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளவேண்டும். மிகவும் மதிப்பு வாய்ந்த சரீரம் ஆகும். உணவும் கூட சுத்தமானதாக சாப்பிட வேண்டும். தேவதைகளுக்கு எத்தகைய பிரசாதம் படைக்கிறார்கள்! ஸ்ரீநாத் கோவிலுக்குச் சென்று பாருங்கள். வங்காளத்தில் காளிக்கு வெள்ளாட்டை படைக்கிறார்கள். அவர்கள் தங்களது முன்னோர்களுக்கு கூட மீனைப் படைக்கிறார்கள். இல்லையென்றால், முன்னோர்கள் கோபம் கொள்வார்கள் என்று நினைக் கின்றனர். யாரோ ஒருவர் வழக்கத்தை ஏற்படுத்தி விட்டார்கள், அது தொடர்ந்து இருந்து வருகிறது. தேவி தேவதைகளின் இராஜ்யத்தில் எந்தப் பாவ காரியமும் நடைபெறுவதில்லை. அது இராம இராஜ்யம் ஆகும். இங்கே கர்மம், விகர்மம் ஆகிறது. அங்கே கர்மம், அகர்மம் ஆகிறது. இப்பொழுது ஹரித்வாருக்குச் சென்று அமர்ந்து கொள்கிறார் கள். ஹரி என்று கிருஷ்ணரைக் கூறுகிறார்கள். இப்பொழுது, கிருஷ்ணரோ சத்யுகத்தில் இருக்கிறார். உண்மை யில் ஹரி என்ற பெயர் சிவனுடையது ஆகும். துக்கத்தைப் போக்கக் கூடியவர் ஆவார். ஆனால், கீதையில் கிருஷ்ணருடைய பெயரைப் போட்டு, ஹரி என்று கிருஷ்ணரை நினைத்து விட்டனர். உண்மையில் துக்கத்தைப் போக்கக் கூடியவர் சிவபாபா ஆவார். ஹரியின் வாசல் (ஹரி கா துவார்) என்று சத்யுகத்தைக் கூறப்படுகிறது. பக்தி மார்க்கத்தில் என்னவெல்லாம் தோன்றுகிறதோ அதைச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

பழைய உலகை புதுப்பிப்பதற்காக, நான் சங்கமயுகத்தில் வருகின்றேன் என்று தந்தை கூறு கின்றார். இராவணன் பழைய எதிரி. ஒவ்வொரு வருடமும் இராவணனை எரிக்கிறார்கள். எவ்வளவு பணம் செலவு செய் கிறார்கள்! அனைத்தும் நேரத்தை வீணாக்குவது, பணத்தை வீணாக்குவது ஆகும். வங்காளத்தில் எத்தனை தேவிகளை உருவாக்குகிறார்கள்! அவற்றிற்கு உண்ண, குடிக்கக் கொடுத்து, பூஜை செய்து பின்னர் சென்று மூழ்கடித்து விடுகின்றனர். இதைப் பற்றிய ஒரு பாடல் உள்ளது. குழந்தைகள் மிகவும் இனிமையானவர் ஆகவேண்டும். ஒரு பொழுதும் கோபத்துடன் பேசக் கூடாது. தந்தையிடம் ஒருபொழுதும் கோபித்துக் கொள்ளக் கூடாது. கோபம் கொண்டு ஒருவேளை படிப்பை விட்டுவிட்டால், அது தன் காலைக் கோடரி யால் வெட்டுவதற்குச் சமம் ஆகும். இங்கே நீங்கள் விஷ்வத்தின் எஜமானர் ஆவதற்காக வந்திருக்கிறீர்கள். மகாராஜா ஸ்ரீ நாராயணர், மகாராணி ஸ்ரீ இலட்சுமி என்று கூறப்படுகிறது. மற்றபடி, ஸ்ரீ ஸ்ரீ என்பது சிவபாபாவின் பட்டம் ஆகும். ஸ்ரீ என்று தேவதைகளுக்குச் சொல்லப் படுகிறது. ஸ்ரீ என்றால் சிரேஷ்டம் என்று அர்த்தம்.

நாம் என்னவாக இருந்தோம் என்று இப்பொழுது நீங்கள் சிந்தித்துப் பாருங்கள். மாயை, நம்முடைய தலையைத் திருப்பி நம்மை என்னவாக ஆக்கிவிட்டது! பாரதம் எவ்வளவு செல்வச் செழிப்போடு இருந்தது! பின்னர், எவ்வாறு ஏழ்மை ஆனது? என்ன ஆயிற்று? எதையும் புரிந்திருக்கவில்லை. நாம் தேவதைகளாக இருந்தோம், பின்னர், சத்திரியர் ஆனோம் என்று இப்பொழுது நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். ஆத்மா தான் பரமாத்மா என்று அவர்கள் கூறுகிறார் கள். இல்லையெனில், நானே அது (ஹம் சோ) என்பதன் அர்த்தம் எவ்வளவு எளிதானது ஆகும்! மனிதப் பிறப்பு ஒன்று மட்டும் தான் என்று அவர்கள் கூறுகிறார்கள்.ஆனால், மனிதர்களின் பிறவி 84 ஆகும் என்று தந்தை புரிய வைக்கின்றார். அந்த 84 பிறவிகளில், உங்களுடைய இந்த ஒரு சங்கமயுக பிறப்பானது கிடைத்தற்கரியதாகும். இந்தப் பிறப்பிலேயே நீங்கள் எல்லையற்ற தந்தையிடமிருந்து சொர்க்கத்தின் ஆஸ்தியைப் பெறுகிறீர்கள். நீங்கள் மிகவும் ராயலான தந்தையின் குழந்தைகள் ஆவீர்கள். எனவே, உங்களிடம் எவ்வளவு ராயல்டி இருக்க வேண்டும்! ராயலான மனிதர்கள் ஒருபொழுதும் சத்தமாகப் பேசமாட்டார்கள். உலகத்தில் ஒவ்வொரு வீட்டில் எவ்வளவு குழப்பம் உள்ளது! சொர்க்கத்தில் அத்தகைய எந்தவொரு விஷயமும் இருக்காது. இந்த பாபா கூட வல்லபாச்சாரி குலத்தைச் சேர்ந்தவராக இருந்தார். ஆனாலும் கூட அந்த சத்யுக தேவதைகள் எங்கே, தற்காலத்தின் வைஷ்ணவர்கள் எங்கே! வைஷ்ணவர்களாக இருப்பதனால் விகாரத்தில் செல்லமாட்டார்கள் என்பது கிடையாது. இராவண இராஜ்யத்தில் அனைவரும் விகாரத்தின் மூலம் பிறக்கின்றார்கள். சத்யுகத்தில் சம்பூரண நிர்விகாரியாக இருப்பார்கள். இப்பொழுது நீங்கள் சம்பூரண நிர்விகாரி ஆகிக் கொண்டிருக்கிறீர்கள் மற்றும் யோக பலத்தின் மூலம் விஷ்வத்தின் எஜமானர் ஆகின்றீர்கள். உங்களுடைய நடத்தை மிகவும் இனிமையானதாக ராயலாக இருக்க வேண்டும். எந்த ஒரு வாதம் மற்றும் சாஸ்திரத்தைப் பற்றிய விவாதம் செய்யக்கூடாது. அவர்கள் எப்பொழுது சாஸ்திரங்களைப் பற்றிய விவாதம் செய்வதற்கு அமர்கிறார்களோ, அப்பொழுது ஒருவரை ஒருவர் பிரம்பால் கூட அடித்துவிடு வார்கள். அது அவர்களுடைய குற்றம் எதுவும் இல்லை. இந்த ஞானத்தை அறியவே இல்லை. இது ஆன்மிக ஞானம் ஆகும். இது ஆன்மிகத் தந்தையிடமிருந்து கிடைக்கிறது. அவர் ஞானக் கடலாக இருக்கின்றார். அவருடைய சரீரத்திற்குப் பெயர் கிடையாது, அவர் அவ்யக்த மூர்த்தியாக இருக்கின்றார்.எனது பெயர் சிவன் என்று கூறுகின்றார். நான் ஸ்துôல அல்லது சூட்சும சரீரம் எடுப்பதில்லை. ஞானக் கடல், ஆனந்தக் கடல் என்று என்னைத் தான் கூறுகிறார்கள். சாஸ்திரங்களில் என்ன என்னவெல்லாம் எழுதிவிட்டார்கள். அனுமான் வாயு புத்திரனாக இருந்தார். காற்றின் மூலம் எவ்வாறு குழந்தை பிறக்கும்? பின்னர், பரமாத்மா கச்ச, மச்ச அவதாரம் எடுக்கின்றார் என்று கூறுகின்றனர். எவ்வளவு நிந்தனை செய்கிறார்கள்! நீங்கள் அசுர வழிப்படி எனக்கு இவ்வளவு நிந்தனை செய்துவிட்டீர்கள், 24 அவதாரம் என்று கூறிய பின்பும் வயிறு நிரம்பாமல் (திருப்தி அடையாமல்) பின்னர், அணு அணுவில், கல், மண்ணில் இருப்பதாகக் கூறிவிட்டார்கள் என்று பாபா வந்து புகார் செய்கின்றார். இந்த சாஸ்திரங்கள் அனைத்தும் துவாபர யுகத்தில் இருந்து உருவானது ஆகும். முதன் முதலில் சிவனுடைய பூஜை நடந்தது. கீதை கூட பின்னால் எழுதப்பட்டது ஆகும். இவை அனைத்தும் அனாதியான விளையாட்டு ஆகும் என்று இப்பொழுது தந்தை புரிய வைத்துக் கொண்டிருக்கின்றார். உங்களை உலகத்திற்கு எஜமானர் ஆக்குவதற்காக இப்பொழுது நான் வந்திருக்கின்றேன். எனவே, தந்தையை முழுமையாகப் பின்பற்ற வேண்டும். இலட்சணமும் கூட மிகவும் நன்றாக இருக்க வேண்டும். இது கூட அதிசயம் அல்லவா! கலியுகத்தின் இறுதியில் உலகம் எப்படி உள்ளது? பிறகு, சத்யுகத்தில் எப்படி உள்ளது என்பதை பார்ப்பீர்கள்? கலியுகத்தில் பாரதம் ஏழ்மையாக உள்ளது, சத்யுகத்தில் பாரதம் செல்வச் செழிப்போடு இருக்கும். அந்த சமயத்தில் வேறு எந்தக் கண்டமும் இருக்காது. இந்த கீதையின் நிகழ்வு மீண்டும் நடைபெற்றுக் கொண்டி ருக்கிறது. நல்லது.

இனிமையிலும் இனிமையான தேடிக் கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்காக தாய், தந்தை பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மிகக் குழந்தைகளுக்கு ஆன்மிக தந்தையின் நமஸ்காரம்.

தாரணைக்கான முக்கியமான சாரம்:

1. நாம் ராயல் (உயர்ந்ததிலும் உயர்வான) தந்தையின் குழந்தைகள். ஆகையினால், தன்னுடைய நடத்தையை மிகவும் ராயலாக ஆக்கவேண்டும். சத்தமாகப் பேசக் கூடாது. மிகவும் இனிமையானவர் ஆகவேண்டும்.

2. ஒருபொழுதும் தந்தையிடம் அல்லது தங்களுக்குள் கோபம் கொள்ளக்கூடாது. கோபித்துக் கொண்டு படிப்பை ஒருபொழுதும் விட்டுவிடக் கூடாது. என்னவெல்லாம் கெட்ட பழக்கங்கள் உள்ளனவோ, அவற்றை விட்டுவிட வேண்டும்.

வரதானம்: முற்றுப்புள்ளி மூலமாக சிரேஷ்ட ஸ்திதி ரூப பதக்கத்தை
பிராப்தி அடையக் கூடிய மகாவீர் ஆகுக !
இந்த அனாதி நாடகத்தில் ஆன்மீக சேனைகளுக்கு ஸ்தூலமாக பதக்கம் கொடுப்பதில்லை. ஆனால் நாடகப்படி அவர்களுக்கு சிரேஷ்ட ஸ்திதி ரூப பதக்கம் தானாகவே பிராப்தி ஆகிறது. இந்தப் பதக்கம் யார் ஒவ்வொருவருடைய பாகத்தையும் சாட்சியாகப் பார்க்கிறார்களோ முற்றுப் புள்ளியும் சகஜமாக வைக்கிறார்களோ அவர்களுக்கு மட்டுமே கிடைக்கிறது. இம்மாதிரியான ஆத்மாக்களுக்கு அஸ்திவாரம் அனுபவத்தின் ஆதாரத்தில் ஏற்படுகிறது ஆகையால் எந்த விதமான பிரச்சனை என்ற சுவர் அவர்களை தடுக்க முடியாது.
சுலோகன்: ஒவ்வொரு பரஸ்திதி ரூப மலையைக் கடந்து

 

தனது லட்சியத்தை அடையக் கூடிய பறக்கும் பறவை ஆகுக !

அவ்யக்த இஷாரா : பிரம்மா பாபாவிற்கு சமமாக சம்பன்ன மற்றும்

சம்பூர்ண ஸ்திதியை அனுபவம் செய்யுங்கள்.

ஒவ்வொருவருடைய பேச்சையும் ஏற்றுக் கொண்டு மரியாதை கொடுப்பது என்பது எப்பொழுது வருகிறதோ, அப்பொழுது சம்பூர்ணத்தன்மை மற்றும் வெற்றி என்ற இவ்விரண்டும் அருகில் வந்து விடுகிறது. ஏனென்றால் ஒவ்வொருவருக்கும் மரியாதை கொடுப்பது தான் எதிர்காலத் தில் அதிகாரத்தை எடுப்பதாகும்.

முரளி என்றால் என்ன?

முரளி என்பது பிரம்மா குமாரிகளின் தினசரி ஆன்மீக போதனை; இது ஒவ்வொரு காலையும் மதுபனில் இருந்து வெளியிடப்படுகிறது. இங்கே நீங்கள் இன்றைய முரளியைத் தமிழில் படிக்கலாம், ஆடியோ கேட்கலாம், PDF பதிவிறக்கலாம். படிப்புக்கு உதவியாக உரையை ஹைலைட் செய்யலாம் — உங்கள் குறிகள் இந்த உலாவியிலேயே பாதுகாப்பாக இருக்கும்.

28 மொழிகளில் முரளி

Daily Murli · Madhuban மூலம்: மதுபன் முரளி பிரிவு இது ஒரு தனிப்பட்ட வாசிப்புச் செயலி, அதிகாரப்பூர்வ இணையதளம் அல்ல.