தமிழ் முரளி · Brahma Kumaris

இன்றைய முரளி · 22 நவம்பர், 2026

ஓம் சாந்தி · BapDada · 22 நவம்பர், 2026

இன்றைய முரளி — தினமும் காலையில் புதியது.

18
பதிவிறக்கு PDF
0:00--:--

உரையைத் தேர்ந்தெடுக்கவும் → ஹைலைட் / பெட்டி / அடிக்கோடு

22-11-2026
காலை முரளி
ஓம் சாந்தி
"அவ்யக்த பாப்தாதா"
ரிவைஸ் 03.04.2012

எனது என்பதை உனது என்பதில் மாற்றி கவலையற்ற மஹாராஜா ஆகுங்கள். தந்தையின் அன்பு மற்றும் சேவையில் மனதை சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ளுங்கள். வீணானவை வருவதற்கு இடைவெளி இருக்காது.

இன்று பாப்தாதா நாலாபுறங்களிலுமுள்ள தனது கவலையற்ற மஹாராஜாக்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறார். ஒவ்வொரு குழந்தையும் அதிகாலையில் எழுந்து கவலையற்ற ஸ்திதி யில் நிலைத்திருந்து ஒவ்வொரு கர்மமும் செய்கிறார்கள். ஒவ்வொரு குழந்தைக்கும் அனுபவம் இருக்கிறது. அதாவது இந்த கவலையற்ற வாழ்க்கை மஹாராஜா வாகவும், கவலை யற்று இருப்பது எவ்வளவு அன்பாக உள்ளது. ஏனென்றால் நீங்கள் அனைவருமே தந்தையிடம் கவலையைக் கொடுத்தவிட்டு, பெருமிதமாக உணர்கிறீர்கள். அதுவும் அழியாத பெருமிதத்தை எடுத்துள்ளீர்கள். இந்த கவலையற்ற வாழ்க்கை எவ்வளவு அன்பு நிறைந்துள்ளது. ஒவ்வொரு குழந்தையும் அனுபவம் செய்கிறார்கள். இரவும், பகலும் எந்த விதமான விசயத்திற்கும் கவலையின்றி இருக்கும் பெருமிதம் உள்ளது. உங்களுக்குத் தெரியும், அதாவது இந்தக் கவலையற்ற வாழ்க்கை ஒரு பிறவிக்கு மட்டுமின்றி பலபிறவிகளுக்காக மஹாராஜாக்களாக தந்தை ஆக்கியுள்ளார். இப்பொழுது அனுபவம் செய்கிறீர்கள், கவலையற்ற வாழ்க்கை இருக்கும் பொழுது, சதா நெற்றியில் திவ்ய ஜோதி பிரகாசித்துக் கொண்டிருக்கிறது. ஒரு வேளை கவலை இருந்தது என்றால் தலையின் மீது பலவிதமான துக்கங்கள் நிறைந்த கூடை இருக்கிறது என்று பொருள். இந்த கவலையற்ற வாழ்க்கையின் விதி மிகவும் சகஜமானதாகும். எல்லைக்குட்பட்ட, எவையாகிலும் எனது எனது என்பதை உனது என்று மாற்றி விட்டீர் கள். இதில் சிறிதளவே வித்தியாசம் உள்ளது. எ மற்றும் உ ஆனால் எனது என்பதை உனது என்று மாற்றுவதால் வாழ்க்கை எவ்வளவு குஷி நிறைந்ததாக ஆகிவிடுகிறது. ஆகிவிட்டது தானே? தோள்களை அசைத்து காட்டுங்கள், ஆகிவிட்டது. கவலையற்ற வாழ்க்கை ஆகிவிட்டது. ஏனென்றால் கவலை நிறைந்த வாழ்க்கைக்கு ஆதாரம் வீணான சங்கல்பமாகும். அதனால் இப்பொழுது பாப்தாதா ஒவ்வொரு குழந்தையிடமிருந்தும், வீணான சங்கல்பத் தினுடைய அடையாளம் கூட இருக்கக்கூடாது. என விரும்புகிறார். ஏனென்றால் எப்பொழுது எனது என்பதை, உனது என்பதில் மாற்றிவிட்டீர்களோ அப்பொழுது நீங்கள் என்னவாக ஆகிவிட்டீர்கள், நீங்கள் கவலையற்ற மஹாராஜாவாக ஆகிவிட்டீர்கள், மேலும் இந்த வாழ்க்கை எவ்வளவு அன்பாக இருக்கிறது. கவலையற்ற ராஜா நிலையில் ஒவ்வொரு காரியத்தையும் செய்கிறீர் கள். ஏன் என்ன எவ்வாறு எதுவரை என் கவலைகளெல்லாம் முடிந்து போய்விட்டது. பாப்தாதா இந்த சீசனின் இறுதி நாளில் ஒவ்வொரு குழந்தையும், எனது என்பதை உனது என்பதில் மாற்றி விட வேண்டும் என்று விரும்புகிறார். தந்தை தானாகவே பஸ்பம் செய்து விடுவார். நீங்கள் சிறிதளவு மாற்றம் செய்யுங்கள். சம்மதமா? முடியும் தானே? ஒருவேளை முடியும் என்றால் கையை உயர்த்துங்கள். மிகவும் நல்லது, ஏனென்றால் 5-6 மாதம் நீங்கள் அனைவரும் உலகத் திலுள்ள துக்கமான ஆத்மாக்களுக்கு சக்திமிக்க விருத்தி மூலம் சுகம், சாந்தியின் கிரணங் களைக் கொடுக்க வேண்டும். இதன் மூலம் உங்கள் மனதை சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ள வேண்டும். வியர்த்த சங்கல்பம் கூட எதிரில் வருகிறது. மனதில் வருகிறது தானே. அதனால் பாப்தாதா ஒவ்வொரு கவலையற்ற ராஜா குழந்தையும் தன்னுடைய மனதை உள்ளுணர்வை வீணான சங்கல்பம் வருவதற்கு சிறிது கூட இடம் தராமல் இருக்குமாறு விரும்புகிறார். இதற்காக உழைக்க வேண்டியதில்லை ஆனால் தந்தையின் அன்பில் மூழ்கி இருந்து உள்ளுணர்வை சேவையில் ஈடுபடுத்துவதில் சுறுசுறுப்பாக வைக்கும் பொழுது போர் எதுவும் செய்ய வேண்டியிருக்காது. சில குழந்தைகள் கூறுகிறார்கள். விரும்பாவிடினும் யுத்தம் வந்து விடுகிறது. இதை என்னவென்று சொல்வது? எல்லையற்றதாகும். அதனால் யாரிடம் அன்புள்ளதோ அவர்கள் கூறுவதை ஏற்றுக் கொள்வதில் எந்தவிதக் கடினமும் இல்லை. அதனால் உங்கள் அனைவருக்கும் தந்தையிடம் உடையாத அன்புள்ளது தானே சதா உள்ளதா, அல்லது அவ்வப்பொழுதுள்ளதா? சதா அன்புள்ளது என்று கூறுபவர்கள் கையை உயர்த்துங்கள். சதா அன்பு இருக்கும்பொழுது தந்தை கூறுவார். குழந்தைகள் செய்வார்கள் என்று பார்க்க முடிகிறது. இது உங்களுக்கு தெரியும் தானே.

அதனால் இப்பொழுது இந்த சீசனில் குழந்தைகள் இந்த திட சங்கல்பத்தைச் செய்வதை பாப்தாதா விரும்புகிறார் தயார் தானே ? தலையை அசைத்துக் காண்பியுங்கள். திட சங்கல்பம் செய்ய தயார் தானே? பின்னால் இருப்பவர்கள் தயார் தானே, தாய்மார்கள் தயார் தானே? பாண்டவர்களும் கூட தயார்தானே? நல்லது இரண்டு கைகளையும் உயர்த்துங்கள். கையை உயர்த்தும் பொழுது பாப்தாதாவை குஷிப்படுத்துகிறீர்கள் எவ்வாறு கையை உயர்த்தினீர்களோ, அவ்வாறே மனதின் கையையும் உயர்த்துங்கள். ஒருபொழுதும் வீணான சங்கல்பம் வரவிட மாட்டீர்கள். அதனுடைய வேலை வருவது உங்களுடைய வேலை எது? முடித்து விடுவது. இந்த சீசனில் ஏற்கனவே இரு விசயங்களில் கவனம் வைப்பதைப் பற்றி பாப்தாதா கூறி யுள்ளார். ஒன்று சங்கல்பம் இரண்டு சமயம். இந்த சங்கமயுகத்தின் ஒவ்வொரு நொடியும் 21 பிறவிகளுக்கு தொடர்ங்துள்ளது என்று உங்களுக்குத் தெரியும். மேலும் இந்த நேரத்தில் பாப்தாதாவிற்கு குழந்தைகளிடத்திலும், குழந்தைகளுக்கு பாப்தாதாவிடமும் அன்பு உள்ளது. அதனால் சங்கமயுகத்தின் ஒரு நொடி 21 பிறவிக்கு தொடர்புள்ளது. இப்பொழுது நேரத்தை பயன்படுத்தவில்லையென்றால் பாபாவிடம் அன்பு இருக்கிறதை விரும்பவும் செய்கிறார்கள். ஆனால் பாபா கூடவே இருப்பேன் கூடவே செல்வேன் என்பது இயலாது. இப்பொழுது வீடு திரும்ப வேண்டுமல்லவா? அதனால் வீட்டிற்கு கூடவே செல்ல வேண்டும். இராஜ்ஜியத் திலும் கூட பிரம்மா பாபாவின் கூடவே திரும்பி வர வேண்டும். ஆகையால் பிரம்மா பாபா ஃபரிஷ்தா ரூபத்தில் உள்ளார். மேலும் நீங்களும் கூடவே செல்ல வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும். ஃபரிஷ்தா ஆகி விட வேண்டும் ஆகியே தீர வேண்டும் தானே.

பிரம்மா பாபாவுடன் கையை சேர்த்துச் செல்ல வேண்டும். கை என்பது என்ன? ஃபரிஷ்தாவிற்கு ஸ்தூலமான கை இல்லை. பிரம்மா பாபாவின் கை எது? ஸ்ரீமத். பாப்தாதாவினுடைய ஸ்ரீமத் என்னவென்றால் இப்பொழுது கவலையற்ற மஹாராஜாவாகி ஜகதம்பா எவ்வாறு புருஷார்த்தம் செய்தாரோ, பாபா கூறுவதை ஜெகதம்பா செய்வார். இவ்வாறு ஜெகதம்பாவை பின்பற்றுங்கள். நேரம் மற்றும் சங்கல்பத்தை வெற்றியுள்ளதாக ஆக்க வேண்டும். வீணாகி விடக்கூடாது. ஒவ்வொரு சங்கல்பத்திற்கும் 21 பிறவிகளுக்கான தொடர்பு இருக்கிறது என்பதை கேட்டீர்கள் தானே. எப்பொழுதும் மனதை சுறுசுறுப்பாக வைத்திருப்பதை பாப்தாதா விரும்புகிறார். முரளி யின் சிந்தனையில் சேவையில் ஒவ்வொரு நேரமும் சுறுசுறுப்பாக இருங்கள். தங்களுடைய சார்ட்டை உருவாக்குங்கள். இடை இடையே விதவிதமான என்னென்ன டிரில் பாபா கூறினாரோ அது தெரியும் தானே. அசரீரி ஆவதற்கான டிரில், உங்களது மூன்று சொரூபத் தினுடைய நினைவு டிரில் தெரியுமல்லவா. எவ்வாறு தந்தைக்கு மூன்று ரூபம் உள்ளதோ, உங்களுக்கும் கூட மூன்று ரூபம் உள்ளது. பிராமணன், ஃபரிஷ்தா மற்றும் தேவதை இந்த மூன்று ரூபத்தின் டிரில் மூலமாக மனதை சுறுசுறுப்பாக வைப்பதற்கான மகா மந்திரம் எது? மன்மனாபவ. மற்றபடி பாப்தாதாவிற்கு ஒவ்வொரு குழந்தைகளிடத்திலும் மிகுந்த அன்பு உள்ளது. ஆகையால் ஒவ்வொரு குழந்தையும் விஜயிபவ என்ற வரம் கிடைக்கப் பெற விரும்புகிறார். சில குழந்தைகள் நாங்கள் வெற்றியோ அடைந்து விட்டோம். ஆனால் 108-ல் வர இயலாது என்று எண்ணுகிறார்கள். ஆனால் நீங்கள் வெற்றியாளர் ஆகும்பொழுது பாப்தாதா வின் மாலை யின் வந்து விடுவீர்கள். நீங்கள் முதலில் வெற்றியாளராகுங்கள். என்ன சங்கல்பம் உள்ளது? வெற்றியாளராகுங்கள். என்ன சங்கல்பம் உள்ளது. வெற்றியாளராகியே தீர வேண்டும் தானே. 108 மாலையில் வந்தால் மட்டும் போதுமா? இல்லை. பாபாவுடைய ஒவ்வொரு குழந்தையும் வெற்றியாளர் தான். ஒவ்வொரு குழந்தையின் நெற்றியிலும் பாப்தாதா என்ன பார்த்துக் கொண்டிருக்கிறார்? வெற்றித் திலகம். ஏனென்றால் சாதாரண ரூபத்தில் தந்தையின் அறிமுகம் பெற்றுக் கொண்டீர்கள் தானே. கடைசிக் குழந்தையானாலும் புருஷார்த்தத்தில் பின் தங்கி இருந்தாலும், விசேஷம் என்னவென்றால் மேரா பாபா என்று கூறுகிறீர்கள். ஆகையால் ஒவ்வொரு குழந்தையும் தைரியம் வைத்து வெற்றியை அடைந்தே தீர வேண்டும். எதை மட்டும் செய்ய வேண்டும்?எந்த விதமான உழைப்பிற்கான விசயமுமில்லை, அன்பிற்கான விசயமாகும். பாப்தாதாவிடம் அன்பிருக்கிறது, பரிவாரத்திலும் அன்பு இருக்கும்பொழுது, அவர்கள் தனித்து இருக்க முடியாது. அதனால் பிரம்மா பாபாவிடம் எவ்வளவு அன்பு இருக் கிறது. பிரம்மாபாபாவிடமும் சிவபாபாவிடமும் எங்களுக்கு உடைக்க முடியாத அன்புள்ளது என்பவர்களை கையை உயர்த்துங்கள். உடைக்க முடியாது தானே? மிகவும் நல்லது. அதனால் மற்றொரு சீசனில் பாப்தாதா எதைப் பார்க்க விரும்புகிறார்? புரிந்து கெண்டு விட்டீர்கள். வீணானவற்றிலிருந்து, சக்திசாலியான சங்கல்பத்தை ஏற்படுத்துவரில் உங்களுக்கு 5-6 மாதங்கள் கிடைத்துள்ளது. கீழே இருக்கும் மற்றும் (பாண்டவபவன், ஞான சரோவர் போன்ற) மேலே இருப்பவர்களுமான மதுபன் வாசிகள் எழுந்துருங்கள். நிறைய பேர் உள்ளனர். அதனால் மதுபன் வாசிகள் பாப்தாதாவிற்கு பிரியமானவர்கள். இதனால் மற்றவர்கள் மேல் அன்பு இல்லை என்று கிடையாது. அவர்களும் அன்பானவர்கள் தான், ஆனால் மதுபன் வாசிகளை விட ஒரு விசயத்தில் விசேஷ அன்பு இருக்கிறது அது என்ன? மனதில் அனைவரும் நினைவு செய்கிறார் கள் அனைவரும் யோகி ஆத்மாக்கள், ஞானி ஆத்மாக்களும் வட ஆனால் மதுபன் வாசிகளுக்கு எதிர்காலத்தை சகஜமாக ஆக்கிக் கொள்வதற்கான ஒரு லிப்ட் உள்ளது. அந்த லிப்ட் எது ? யாரெல்லாம் மதுபன் வருகிறார்களோ அவர்களுக்கான சேவையில் நிமித்தமாக உள்ளார்கள். உணவு மற்றும் பலவித பணிகளில் சேவை செய்கின்றனர். பாப்தாதா கூறுகிறார், துப்புரவு செய்பவர்களும் உள்ளனர். அவர்களும் கூட பாக்யசாலிகள் ஏன்? யாரெல்லாம் வருகிறார்களோ அவர்கள் இந்த வாயு மண்டலத்தைப் பார்த்து, உங்கள் உள்ளத்தின் சக்தியைப் பார்த்து குஷி அடைகிறார்கள். உணவு தயாரிப்பாளர்களாகட்டும் ஏதாவது பணியில் இருப்பவர்களாகட்டும் ஆனால் மதுபன் வாசிகளுக்கு வாய்ப்பு இருக்கிறது. மதுபன்னின் அன்பு மற்றும் சக்திசாலி வாயு மண்டலத்தை உருவாக்குவதில் இருப்பதால் அவர்களுக்கு மிகுந்த வாழ்த்துக்களை பாப்தாதா அளித்துக் கொண்டிருக்கிறார். அதாவது இந்த சீசன் முடிந்து வரக் கூடிய காலத்திற்காகவும் தங்களது மனதில் ஆத்மாக்களுக்கு திருப்தி அளிப்பதில் மற்றும் சக்திசாலி அனுபவம் செய்விப் பதிலும் நிமித்தமாக இருக்கிறார்கள். இதனால் மதுபன் வாசிகளுக்கு அனைவரும் கை தட்டுங்கள் நல்லது.

இன்று அமிர்தவேளையில் பாப்தாதாவிற்கு மதுபன் சேவாதாரிகள் முன்னே வந்தார்கள், வதனத்தில் ஒவ்வொரு வரையும் பாப்தாதா சந்தித்தார், மேலும் குறிப்பாக உங்களுக்கு ஏற்கனவே கூறப்பட்டுள்ளது, அதாவது நாலு மணிக்கு அட்வான்ஸ் பார்ட்டியில் சென்றுள்ள விசேஷமான தாதிகள் அவசியம் வருகிறார்கள். அதனால் இன்று கூட விசேஷமான தாதிகள் மற்றும் விசேஷமான சகோதரர்கள் வந்தார்கள். அவர்கள் குறிப்பாக மதுபன் வாசிகளை வெளிப் படுத்தக் கூறினார்கள். விசேஷமாக தீதி, தாதி மற்றும் விசேஷமான சகோதரர்கள் கூட மதுபன் வாசிகளை நினைவு செய்தார்கள். மேலும் தாதி விசேஷமான நினைவு கொடுத்தார்கள். கூடவே வதனத்தின் மாம்பழம் எவ்வளவு பெரியது என்று தெரிந்தாலும், தடியை பயன்படுத்தாமல் என்ன பழம் வேண்டுமோ, அதை உங்கள் கையாலேயே எடுத்துக் கொள்ள முடியும். இன்று மதுபன் வாசிகளிடம் மாம்பழத்தின் பிக்னிக் செய்து கொண்டிருப்பதாக தாதி கூறினார். மற்ற தாதிகளும் விசேஷ சகோதரர்களும் கூட இருந்தனர். மதுபன்னிற்காக உங்கள் மனதில் என்ன வருகிறது என பாப்தாதா கேட்டார். அதற்கு தாதி என்ன கூறினார்? நமக்கும் தெரிகிறது தாதிக்கும் புரிகிறது, தாதிக்கு அனைத்தும் தெரிகிறது என்று. தாதி கூறுகிறார், இதுவரை என் மனதில் இருப்பது என்னவென்றால் ஒவ்வொரு மதுபன்வாசியும் புருஷார்த்தத்தில் ஏதாவது குறை வைத்திருந்தால் அதற்காகப் புருஷார்த்த்தம் செய்ய வேண்டும். ஆனால் மதுபன் வாசி களிடம், ஒரு விசயத்தை நான் விரும்புகிறேன். எதை விரும்புகிறேன்? ஒவ்வொரு மதுபன் வாசி யும் பாப்சமான் ஆக வேண்டும். அனைவரும் அதுபோலவே ஆக வேண்டும். ஆனால் மதுபன் விசேஷம் என்னவென்றால் அவர்களுக்கு தாதியிடம் அன்பு இருந்து இது எனக்குத் தெரியும் என்று தாதியும் கூறினார். அன்பிற்கு கைமாறாக எவ்வாறு பாபா கூறினார். மம்மா செய்தாரோ அதுபோல ஆக வேண்டும். என்று விரும்புகிறார். இது மதுபன் வாசிகளுக்கும் தெரியும். இவ்வாறே அமிர்தவேளையில் இருந்து இரவு வரை ஒவ்வொரு மதுபன் வாசிக்கும் பாபாவிடம் அன்புள்ளது. தாதிகளிடத்திலும் கூட அன்பிருந்தது. அதனால் மம்மா எவ்வாறு தந்தையின் ஒவ்வொரு வழியையும் வாழ்க்கையில் கொண்டு வந்தாரோ, அவ்வாறே நாங்களும் கொண்டு வந்துள்ளோம் என்கின்றனர். தாதிகளிடம் அன்போ இருக்கிறது, அதனால் இதை செய்வேன் என்று கூறி விட்டு அதிகாலையிலிருந்து இரவு வரை சங்கல்பம், பேச்சு, செயலில் கொண்டு வரவில்லையென்றால் தாதிகள் மற்றும் பாபாவிற்கு விருப்பம் இல்லாமல் போய்விடும்.

மற்றபடி டீச்சர்களைப் பார்த்து குஷி அடைகிறார். ஏனென்றால் தந்தைக்குச் சமமான இருக்கையின் பாக்யம் கிடைத்துள்ளது. தந்தையின் முரளி கூறுவதற்கான இருக்கை கிடைத்துள்ளது. டீச்சர்களை எப்பொழுதும் துணைவர்கள் என்று கூறுகிறார். இப்பொழுது டீச்சர் களுக்காக ஒரு விசயதை பாப்தாதா விரும்புகிறார். கேட்டீர்கள்தானே? ஒவ்வொரு டீச்சரின் முகத்திலும் பிரம்மா பாபாவிற்குச் சமமாக குஷி நிறைந்த பார்வை வர வேண்டும். உள்ளுக்குள் புருஷார்த்தம் இருந்தாலும் உங்கள் முகத்தின் மூலமாக தந்தையின் பிரத்யட்சம் ஆக வேண்டும். யாரையாவது பார்க்கும் போது கூட உங்களுக்குள் தந்தையின் பிரகாசம் தென்பட வேண்டும். இவ்வாறு முகத்தின் மூலம் சேவை செய்யக் கூடியவர்கள் தந்தையை பிரத்யட்சப்படுத்தி விடுவார்கள். இவ்வாறு மகத்தின் மூலம் பிரத்யட்சப்படுத்துவதற்கான நேரம் இப்பொழுது வந்து விட்டது. அதனால் டீச்சர்களுக்கு மேரா பாபா என்ற நினைவு தானாகவே இருக்கிறது. இப்பொழுது முகத்தின் மூலம் தந்தையை பிரத்யட்சம் செய்ய வேண்டும். செய்ய முடியும் என்றால் செய்யுங்கள். பாருங்கள், இதுவரை ரிசல்ட் என்னவாக இருக்கிறது? பிரம்மா குமாரிகள் மிக நல்ல காரியம் செய்து கொண்டி ருக்கிறார்கள், தந்தை பிரத்யட்சம் ஆகவில்லை. அவர் இப்பொழுதும் கூட குப்தமாக இருக்கிறார். அதனால் நிமித்த டீச்சர்கள் அல்லது ஏதாவது குழந்தை மூலம் இப்பொழுது தந்தையை பிரத்யட்சம் செய்யுங்கள். பிரம்மா குமாரிகள் நன்றாக சேவை செய்கின்றனர் என்பது இப்பொழுது முடிந்து விட்டது. பிரம்மா குமாரிகளை இவ்வாறு தகுதியுள்ளவராக ஆக்கிக் கொண்டிருக்கிறார் என்பதை பிரத்யட்சப்படுத்த வேண்டும். இந்த கருத்து இப்பொழுது இருந்து கொண்டிருக்கிறது என்னுடைய தந்தை வந்து விட்டார் என்று பாடல் பாடுகிறீர்கள், ஆனால் மற்ற ஆத்மாக்களுக்கு இது பிரத்யட்சம் ஆக வேண்டும், அதாவது, சுயம் பகவான் பிரத்யட்சமாகி இந்த சகோதரிகள் அல்லது சகோதரர்கள் மூலமாக செய்த கொண்டிருக்கிறார்கள் என்று. இந்த பிரத்யட்சம் செய்ய வேண்டும் தானே எப்பொழுது செய்வீர்கள்? இப்பொழுது என்ன கூறுவீர்கள்? இப்பொழுது தான் (இப்பொழுது ஆரம்பம் செய்து அடுத்த சீசன் வரை இது நடக்கும்) நீங்கள் அனைவரும் கூடவே இருக்கிறீர்கள், வரும் சீசனின் முடிந்து விடுமா? புரிந்து கொண்டவர்கள் கையை உயர்த்துங்கள். ஒரு சிலர் கையை உயர்த்திக் கொண்டிருக்கிறார்கள். யார் கையை உயர்த்தவில்லையே நீங்கள் செய்வதை அவர்கள் பார்ப்பார்கள் டீச்சர்கள் சங்கல்பம் செய்து விட்டீர்கள் தானே? ஏனென்றால் அனைத்தும் திடீரென்று நடந்து கொண்டிருப்பதைப் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள் என்பதை பாப்தாதா கூறுகிறார். சில குழந்தைகள் இவ்வாறு நினைக்கின்றனர் திடீரென்று நடக்கும் என்று கூறி நிறைய சமயம் சென்று விட்டது என்றும், இப்பொழுதே நடக்க வேண்டும் என்றும். ஆனால் எப்பொழுது குழந்தைகள் பாப்சமான் ஆவார்களோ அப்பொழுது இது நடக்கும். உங்கள் உருவம் முகம் மற்றும் பேச்சு தந்தையை பிரத்யட்சப்படுத்தட்டும். இது நடந்தே ஆக வேண்டும். இப்பொழுது நிமித்தமாக ஆக வேண்டும். வரும் சீசனில் என்ன செய்வீர்கள்? உங்களை தந்தைக்கு சமமாக ஆக்கி விடுங்கள். என்ன குறை இன்னும் உள்ளதோ அதை முடித்து விட வேண்டும். மேலும் பாப்தாதாவிற்கு எந்த விசயத்தில் குஷி உள்ளது. குழந்தைகள் சிறிய, பெரிய சென்டர்களில் வாணி மூலமாக நாம் என்ன காரியம் செய்து கொண்டிருக்கிறோம் என்பது பிரசித்தமாகியுள்ளது. வாயுமண்டலத்தை மாற்றியுள்ளீர்கள் இதற்காக பாப்தாதா வாழ்த்துக் களை அளித்துக் கொண்டிருக்கிறார். யாரெல்லாம் நிகழ்ச்சிகள் செய்து கொண்டிருக் கிறீர்களோ நன்றாக செய்துள்ளீர்கள். மேலும் இப்பொழுது அனைவருடைய கவனத்திலும் வந்துள்ளது. அதாவது பிரம்மா குமாரிகள் குப்த ரூபத்தில் தங்களது காரியத்தின் நேரத்தை 75 வருடங்களாக செய்து முடித்துள்ளார்கள் என்று. பிரம்மா குமாரிகளின் பகவான் பாபா வந்து விட்டார் என்று இப்போது கூற வேண்டும். லட்சியம் இருக்கிறது தானே அதனால் அடுத்த சீசன் வரை இந்த காரியம் ஆரம்பமாகிவிட வேண்டும். இதற்காக தனிப்பட்ட நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்ய வேண்டும். திட்டமும் செய்கிறீர்கள், கலந்தாலோசனையும் செய்கிறீர்கள். அதனால் மீட்டிங்கில் ஆஸ்தியைக் கொடுக்கக் கூடிய தந்தை வந்து விட்டார் என்று அனைத்து குழந்தைகளுக்கும் தெரியுமாறு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யுங்கள். யாரும் வஞ்சிக்கப்பட்டு விடக் கூடாது. பாப்தாதாவிற்கோ குழந்தைகளின் துக்கத்தைப் பார்த்து மிகவும் இரக்கம் வருகிறது. எப்பொழு தெல்லாம் துக்கத்தில் கூக்குரல் இடுகிறார்களோ அப்பொழுது தந்தைக்கு இரக்கம் ஏற்படுகிறது. தேவ தேவியர்களாகிய உங்களைக் கூட பலர் கூப்பிடுகிறார்கள். அதனால் அடுத்த சீசனில் வீணானவைகளின் அடையாளம் இருக்கக் கூடாது சம்மதமா? உள்ளத்தின் கையை உயர்த்துங் கள். வீணானவை என்னவென்றே தெரியாமல் போய் விட வேண்டும், எவ்வாறு சொர்க்கத் தினுடைய அரசகுமாரிகளாக வரும்பொழுது அவர்களுக்கு துக்கம், அசாந்தியைப் பற்றித் தெரியாதோ அவ்வாறு இருக்க வேண்டும். என்ன நடக்கிறது? என்று கூறுவார்கள். இவ்வாறு பிராமணப் பரிவாரத்திலும் வீணானவை என்ன என்பது தெரியக் கூடாது. சுய சிந்தனை சுய சிந்தனையாளராக இருக்கவும் நல்லது.

நாலாபுறங்களிலுள்ள அனைத்து குழந்தைகளுக்கும் பாப்தாதாவின் உள்ளத்திலிருந்து அன்பு நினைவுகள் மற்றும் தந்தை ஒவ்வொரு குழந்தையினுடைய சுவமானத்தின் குஷியில் இருப்பதைப் பார்த்து மகிழ்ச்சி அடைகிறார். ஒருபொழுதும் சுமானத்தை விட்டுவிடக் கூடாது. சுவமான்தாரி என்றால் சதா சர்வ பிராப்தி நிறைந்தவர் சுவமானத்தின் பட்டியல் மிக நீளமானது. தினமும் ஒவ்வொரு சுவமானத்தை நினைவில் வைத்து சொரூபத்தில் கொண்டு வரக்கூடிய தீவிர புருஷார்த்தி ஆகி முன்னேறிச் சென்று கொண்டே இருங்கள். பாப்தாதாவின் உள்ளத்தில் உங்களை வைத்து உங்களுடைய உள்ளத்தில் பாப்தாதாவை வைத்து பயமற்றவராகி மாஸ்டர் சர்வ சக்திவானாகி நடந்து கொண்டு வாருங்கள். நீங்களும் பறந்து செல்லுங்கள் மற்றவரையும் பறக்க வையுங்கள். ஓம் சாந்தி

வரதானம்: சேவையின் மேடையில் உள்ளடக்கும் சக்தி மூலமாக
வெற்றி மூர்த்தி ஆகக் கூடிய மாஸ்டர் கடல் ஆகுக !
எப்பொழுது சேவையின் மேடையில் வருகிறீர்களோ அப்பொழுது பலவிதமான விசயங்கள் எதிரில் வருகின்றன. அந்த விசயங்களை சுயத்தில் உள்ளடக்கும் பொழுது வெற்றி மூர்த்தியாக ஆவீர்கள். உள்ளடக்கும் சக்தி என்றால் சங்கல்ப ரூபத்திலும் வட வீணான விசயங்கள் மற்றும் பாவனையின் அம்ச ரூபம் கூட இருக்கக் கூடாது. நன்மை யற்ற பேச்சை நல்ல பாவனை மூலம் மாற்றி விடுங்கள். அவகுணத்தை, குணமாகவும், நிந்தனையை புகழாகவும் மாற்றி விடுங்கள். அப்பொழுது மாஸ்டர் சாகர் என்று கூறுவார்கள்.
சுலோகன்: விஸ்தாரத்தைப் பார்க்காமல் சாரத்தைப் பார்க்கக் கூடிய

 

மேலும் சுயத்தில் உள்ளடக்குபவர் தான் தீவிர புருஷார்த்தி ஆவர்.

அவ்யக்த இஷாரா : பிரம்மா பாபாவிற்கு சமமாக சம்பன்ன மற்றும்

சம்பூர்ண ஸ்திதியை அனுபவம் செய்யுங்கள்.

எவ்வாறு ஆமை, நொடியில் தன் அங்கங்களை உள்ளடக்கி கொள்கிறதோ, அவ்வாறு உள்ளடக்கும் சக்தியையும் நாம் படைக்க முடியும். மாஸ்டர் படைப்பவராகி நீங்கள் உள்ளடக்கும் சக்தியின் ஆதாரத்தில் அனைத்து சங்கல்பங் களையும் உள்ளடக்கி ஒரு நொடியில் ஒரே சங்கல்பத்தில் நிலைத்து விடுங்கள். எப்பொழுது அனைத்து கர்மேந்திரியங் களுடைய கர்மத்தின் நினைவிலிருந்து விலகி ஒரே ஒரே ஆத்மீக சொரூபத்தில் நிலைத்து விடும்பொழுது, கர்மாதீத், அதாவது சம்பன்ன ஸ்திதியின் அனுபவம் ஏற்படும்.

முரளி என்றால் என்ன?

முரளி என்பது பிரம்மா குமாரிகளின் தினசரி ஆன்மீக போதனை; இது ஒவ்வொரு காலையும் மதுபனில் இருந்து வெளியிடப்படுகிறது. இங்கே நீங்கள் இன்றைய முரளியைத் தமிழில் படிக்கலாம், ஆடியோ கேட்கலாம், PDF பதிவிறக்கலாம். படிப்புக்கு உதவியாக உரையை ஹைலைட் செய்யலாம் — உங்கள் குறிகள் இந்த உலாவியிலேயே பாதுகாப்பாக இருக்கும்.

28 மொழிகளில் முரளி

Daily Murli · Madhuban மூலம்: மதுபன் முரளி பிரிவு இது ஒரு தனிப்பட்ட வாசிப்புச் செயலி, அதிகாரப்பூர்வ இணையதளம் அல்ல.