தமிழ் முரளி · Brahma Kumaris

இன்றைய முரளி · 24 நவம்பர், 2026

ஓம் சாந்தி · BapDada · 24 நவம்பர், 2026

இன்றைய முரளி — தினமும் காலையில் புதியது.

18
பதிவிறக்கு PDF
0:00--:--

உரையைத் தேர்ந்தெடுக்கவும் → ஹைலைட் / பெட்டி / அடிக்கோடு

24-11-2026
காலைமுரளி
ஓம்சாந்தி
பாப்தாதா
மதுபன்

சாராம்சம்: இனிய குழந்தைகளே, இந்த ஞானச் செல்வத்தைத் தானம் செய்வதற்கு, ஞானக் கடலை கடையுங்கள். தானம் செய்யும் ஆர்வம் இருக்கும் போது, நீங்கள் அதைத் தொடர்ந்தும் கடைவீர்கள்.
கேள்வி: இந்த ஞானமார்க்கத்தில், நீங்கள் சதா ஆரோக்கியமாக இருப்பதற்கான வழிமுறை என்ன?
பதில்: நீங்கள் சதா ஆரோக்கியமாக இருப்பதற்கு, தந்தையிடம் இருந்து நீங்கள் பெற்றுக் கொள்ளும் இந்த ஞானப்புல்லை (முரளி) மென்று, ஜீரணியுங்கள். அதாவது, இந்த ஞானத்தைக் கடையுங்கள். ஞானத்தை கடையும் பழக்கமுடைய குழந்தைகள், அதாவது, ஜீரணித்துக் கொள்வோர், நோய்வாய்ப்பட முடியாது. விகாரங்கள் எனும் எந்த நோயும் இல்லாதோர், சதா ஆரோக்கியமாக உள்ளார்கள்.
பாடல்: நீங்களே அன்புக் கடல், உங்களிடம் இருந்து ஒரு துளிக்காக நாங்கள் ஏங்குகின்றோம்.

ஓம் சாந்தி. குழந்தைகளாகிய நீங்கள் பாடலைச் செவிமடுத்தீர்கள். மக்கள் எவ்வாறான பாடல்களை இயற்றினாலும், அவர்கள் எந்தச் சமயநூலை எழுதியிருந்தாலும், அவர்களுக்கு எதுவும் புரிவதில்லை. மக்கள் எதை வாசித்த போதிலும், எவருமே அதனால் நன்மை அடையவில்லை. மாறாக, இழப்பே தொடர்ந்துள்ளது. கடவுள் ஒருவரே அனைவருக்கும் நன்மையளிப்பவர். உங்களுக்கு நன்மை அளிப்பவர் வந்துவிட்டார் என்பதை நீங்கள் புரிந்து கொண்டிருக்கின்றீர்கள். அவர் நன்மை அளிப்பதற்கான பாதையைக் காட்டுகின்றார். ஒரேயொரு தந்தை மாத்திரமே விசேடமாக பாரதக் குழந்தைகளாகிய உங்களுக்கும், பொதுவாக உலகிற்கும் நன்மை அளிக்கின்றார். நீங்கள் சத்தியயுகத்தில் இருந்த போது நீங்கள் அனைவருமே நன்மை அடைந்தீர்கள். நீங்கள் சந்தோஷ உலகில் இருந்த போது, ஏனைய அனைவரும் அமைதி தாமத்தில் இருந்தார்கள். இது குழந்தைகளாகிய உங்கள் புத்தியில் உள்ள போதிலும், இந்தக் கருத்து நழுவி விடுகிறது. இதனை நீங்கள் முழுமையாக கிரகிப்பதில்லை. நீங்கள் இந்த ஞானத்தில் ஒரு கருத்தைக் கடைந்தாலுமே, இவ்வாறு நிகழாது. மிருகங்களுக்குள்ள அறிவேனும் இன்றைய மனிதர்களுக்கு இல்லை. மிருகங்கள் (பசுக்கள்), புல்லை உண்ட பின்னர் தொடந்தும் அசைபோடும். நீங்களும்கூட உணவைப் பெறுகிறீர்கள், ஆனால் நாள் முழுவதும் அதனை அசை போடுவதில்லை. பசுக்கள் அதனை நாள்முழுவதும் தொடர்ந்தும் அசைபோடுகின்றன. நீங்கள் இந்த ஞானப்புல்லைப் பெறுகிறீர்கள். யோகமும் இந்த ஞானமும் உள்ளன. இந்த ஞானக்கடலை நாள்முழுவதும் தொடர்ந்தும் கடையுங்கள். சேவையில் எந்த ஆர்வமும் இல்லாதோர் இந்த ஞானத்தைக் கடைந்து என்ன செய்வார்கள்? அவர்களுக்கு அந்த ஆர்வம் இல்லாததால், அவர்கள் எதையும் செய்வதில்லை. சிலர் இந்த ஞானச் செல்வத்தை வழங்குவதில் ஆர்வம் கொண்டுள்ளார்கள். மாட்டுத் தொழுவங்களுக்குச் சென்று மக்கள் பசுக்களுக்கு புற்கள் கொடுப்பதுண்டு. அதை ஒரு புண்ணியச் செயலாகக் கருதுகிறார்கள். தந்தை இந்த ஞானப்புல்லை உங்களுக்கு ஊட்டுகிறார். நீங்கள் இதைத் தொடர்ந்தும் கடைந்தால், நீங்கள் சந்தோஷமாக இருப்பதுடன் சேவை செய்வதிலும் ஆர்வம் கொண்டிருப்பீர்கள். அவர்கள் ஒரு கலசமளவு அல்லது ஒரு துளியை எடுத்திருந்தாலும் சுவர்க்கத்திற்குச் செல்ல முடியும். சுவர்க்கத்தின் வாசல் திறக்க உள்ளது. உண்மையில் நீங்கள் இந்த ஞானக் கடலை விழுங்க வேண்டும். சிலர் அதனை முழுமையாக விழுங்கி விடுகின்றார்கள், சிலரோ, வந்து ஒரு துளியை மாத்திரம் எடுக்கின்றார்கள், எனினும் அவர்களாலும் நிச்சயமாக சுவர்க்கத்திற்குச் செல்ல முடியும். நீங்கள் அதிகமாக கிரகிக்கும் அளவிற்கேற்ப உயர்ந்த அந்தஸ்தையும் கோரிக் கொள்வீர்கள். ஒரு துளியுடனும் உங்களால் சுவர்க்கத்திற்குச் செல்ல முடியும். ஒருவர் மரணிக்கும் தறுவாயில், அவரது வாயில் அவர்கள் ஒரு துளி கங்கைநீரை ஊற்றுகின்றார்கள். சில வீடுகளில் கங்கை நீரையே எப்பொழுதும் அருந்துகின்றார்கள். அவர்கள் எவ்வளவு நீரை அருந்தியிருக்க வேண்டும்? கங்கை தொடர்ந்தும் ஓடிக் கொண்டிருக்கின்றது. முழு கங்கையையும் அவர்களால் விழுங்கிவிட முடியாது! நீங்கள் கடல் முழுவதையும் விழுங்கியதாக உங்களையிட்டு நினைவுகூரப்பட்டுள்ளது. ஞானக் கடலை நெருங்கி வந்து, அதிகளவு சேவை செய்பவர்கள் உருத்திர மாலையில் கோர்க்கப்படுவார்கள். நீங்கள் இதனை எந்தளவிற்கு விழுங்கி, பிறருக்கு நன்மை அளிக்கின்றீர்களோ அந்தளவிற்கு நீங்கள் உயர்ந்ததோர் அந்தஸ்தைக் கோருவீர்கள். நீங்கள் கிரகிப்பதற்கேற்ப, அதிகளவு சந்தோஷமாக இருப்பீர்கள். செல்வந்தர்கள் சந்தோஷமாக இருக்கின்றார்கள். அதிகளவு செல்வம் வைத்திருப்பவர்கள், அதனைத் தானம் செய்வதனால் அல்லது கல்லூரிகளைக் கட்டுவதாலோ, யாத்திரிகளுக்கு மடங்கள் கட்டுவதாலோ அல்லது கோயில்களைக் கட்டிக் கொடுப்பதாலும் அதிகளவு சந்தோஷத்தை அனுபவம் செய்வார்கள். இங்கு, நீங்கள் அழியாத இந்த ஞான இரத்தினங்களைப் பெறுகிறீர்கள். நீங்கள் 21 பிறவிகளுக்கு, அழியாத பொக்கிஷங்களைப் பெறுகிறீர்கள். இதை நன்றாக கிரகித்த பின்னர், தானம் செய்வோர், நல்ல அந்தஸ்தைப் பெறுவார்கள். சில குழந்தைகள் எழுதுகிறார்கள்: ‘பாபா நான் எனது வேலையை விட்டுவிலகி, இந்த ஆன்மீக சேவையில் ஈடுபட விரும்புகின்றேன், எங்கும் சென்று புரொஜெக்டர்களிலும், கண்காட்சிகளிலும் விளங்கப்படுத்த விரும்புகிறேன். ஒருவர் ஒரு துளியைப் பெற்றாலும், அவர் நன்மை அடைவார். எனக்கு சேவை செய்வதற்கு பேராவல் உள்ளது’. இருப்பினும் பாபா ஒவ்வொருவரது ஸ்திதியையும் அறிவார். சேவை செய்வதுடன், அதற்கான தெய்வீகக்குணங்களும் இருத்தல் வேண்டும். எந்தவிதமான கோபமோ அல்லது, பிழையான எண்ணங்களோ இருத்தல் ஆகாது. விகாரத்தின் எந்த நோயும் இருத்தல் ஆகாது. நல்லாரோக்கியம் இருத்தல் வேண்டும். மிகவும் குறைந்தளவில் விகாரம் கொண்டவர்கள் ஆரோக்கியமாக உள்ளார்கள் என்று பாபா கூறுகின்றார். பாபா அவர்களைப் புகழ்வார். யார் நல்ல மகாராத்திகள் என்பதும் நினைவு கூரப்படுகிறது! அசுரர்களுக்கும் தேவர்களுக்கும் இடையே யுத்தம் நிகழ்ந்தது என்றும், அதில் தேவர்களே வென்றதாகவும் காட்டப்பட்டுள்ளது. இப்போது, நாம் ஐந்து விகாரங்கள் எனும் அசுரனுடனேயே யுத்தம் புரிகின்றோம். அசுரர் என்பது, எந்த மானிட வர்க்கமும் அல்ல. ஆனால் அசுர குணத்தைக் கொண்டோரே அசுரர்கள் எனப்படுகிறார்கள். காமமே முதற்தர அசுர குணமாகும். இதனாலேயே சந்நியாசிகளும் அதை துறந்து, ஓடிவிடுகிறார்கள். இந்த அசுரத்தனத்தை துறப்பதற்கு, முயற்சி தேவைப்படுகிறது. நீங்கள் வீட்டில் வாழ வேண்டும். ஆனால், எல்லா அசுரக்குணங்களையும் துறந்துவிடல் வேண்டும். தூய்மை ஆகுவதால், நீங்கள் முக்தியையும் ஜீவன் முக்தியையும் பெறுகிறீர்கள். பெறுபேறோ அதி மகத்துவமானது! அம்மக்கள், தங்கள் வீட்டையும் குடும்பத்தையும் துறந்து ஓடிய போதிலும், அதனால் எந்தவித பேறும் கிடையாது. இந்தப்படங்களின் மூலம் புரிந்து கொள்வதற்கு மிகவும் நல்ல பல விடயங்கள் உள்ளன. மக்கள் படக்காட்சிகளை நடாத்துகிறார்கள். பலரும் சென்று அதை பார்வையிட்ட போதிலும், அவை எதிலுமே, நன்மை கிடையாது. இங்கு, இந்தப் படங்களில், அதிகளவு இந்த ஞானம் உள்ளதுடன், இவற்றால் பல நன்மைகளும் உள்ளன. இதில் ஓவியங்கள் போன்றன அடங்கியுள்ளன என்றோ அல்லது, அது இவற்றை வரைந்தவரின் திறமையே என்ற கேள்விக்கோ இடமில்லை. அவர்கள் தமது சொந்தப் படைப்புகளில் (படங்களில்) கையொப்பம் இடுவதுடன், ஓவியர்கள் பரிசுகளும் பெறுகின்றார்கள். சிலர், தாம் நிச்சயமாக தந்தையை நினைவு செய்ய வேண்டும் என்பதையேனும் புரிந்து கொள்கின்றார்கள். அவர்கள், இந்தளவைக் கூறினாலுமே, அவர்கள் பிரஜைகளில் ஒருவர் ஆகுவார்கள். பல பிரஜைகள் உருவாக்கப்பட உள்ளார்கள். நான் ஞானக்கடல் ஆவேன். ஒருவர் ஒரு துளி இந்த ஞானத்தைப் பெற்றாலும், அவரால் சுவர்க்கத்திற்குச் செல்ல முடியும். கண்காட்சிகளாலும், விழாக்களினாலும் பலர் நன்மை அடைகின்றார்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள். கடவுள் நன்மை செய்பவர் ஆவார். நீங்களும் நன்மை அடைந்துள்ளீர்கள். ஆனால், நீங்கள் சதா இந்த ஞானக்கடலை கடைய வேண்டும். இது உங்கள் விழிப்புணர்வில் இருப்பின், நீங்கள் அதிகளவு நன்மை அடைவீர்கள். ஒருவர் பிழையான விடயங்களைக் கேட்கும் போது, அதனை ஒரு காதால் கேட்டு மறு காதால் விட்டுவிடல் வேண்டும். தந்தை கூறுகிறார்: நான், உங்களுக்கு மிக நல்ல விடயங்களைக் கூறுகிறேன். தந்தையின் அறிமுகத்தைக் கொடுப்பதே முதல் இலக்க, பிரதான விடயம். ஒரேயொரு தந்தையை மாத்திரமே நினைவு செய்யுங்கள். அவரே அனைத்தும் ஆவார். இவ்வாறான பலர் பக்தி மார்க்கத்தில் உள்ளார்கள். அவர்களிடம் கூறுங்கள் : நீங்கள் செய்வது மிகவும் நல்லதே. கடவுளே உங்கள் மூலம் அனைத்தையும் செய்கின்றார் என்று நீங்கள் விரல்களினால் சமிக்ஞை செய்து காட்டுகின்றீர்கள். அவர் அனைவருக்கும் நன்மையளிப்பவரும், மேலே வசிப்பவரும் ஆவார். ஆத்மாக்களாகிய நீங்களும் மேலேயே வசிக்கின்றீர்கள். நீங்கள், இந்த ஞான விடயங்கள்; அனைத்தையும் புரிந்து கொண்டுள்ளீர்கள். தந்தை கூறுகிறார்: குழந்தைகளே, உங்கள் ஆடைகள் (உடல்) பழுதடைந்து விட்டன. சத்திய, திரேதா யுகங்களில் உங்களிடம் அழகான ஆடைகள் இருந்தன. இப்போது, இன்னும் எவ்வளவு காலத்திற்கு நீங்கள் இந்த பழுதடைந்த ஆடைகளை தொடர்ந்தும் அணியப் போகிறீர்கள். இருப்பினும், எவரும் இதை புரிந்து கொள்வதில்லை. தந்தை வந்து விளங்கப்படுத்தினால் மாத்திரமே உங்களால் புரிந்து கொள்ள முடியும். ஒரு தந்தை மாத்திரமே இந்த ஞானத்தைக் கொடுக்கின்றார் என்பதை குழந்தைகளாகிய நீங்கள் இப்போது புரிந்து கொள்கின்றீர்கள். அவரே கடல் ஆவார். கடலை விழுங்குபவர்கள் வெற்றி மாலையில் ஒரு மணி ஆகுவார்கள். அவர்கள் சதா சேவையில் மும்முரமாக இருப்பார்கள். பாபா உருத்திர மாலையை உருவாக்குவதற்கும் உங்களைத் தூய்மை ஆக்குவதற்கும் வந்துள்ளார். நீங்கள் பின்னர் தூய்மையாகி வீடு திரும்ப வேண்டும். நீங்கள் வந்த இடத்திற்கே, வரிசைக்கிரமமாகத் திரும்பிச் செல்வீர்கள். உங்களால், முன்பாகவோ தாமதித்தோ செல்ல முடியாது. ஒரு நாடகத்திலும், நடிகர்கள் அனைவருக்கும், தத்தமது பாகங்களை நடிப்பதற்கென ஒரு நேரம் நிச்சயிக்கப்பட்டிருக்கும். இதிலும்கூட, அனைத்து நடிகர்களும் தத்தமது நேரத்திற்கு ஏற்ப வரிசைக்கிரகமாக கீழிறங்கி வருகிறார்கள். இது நிச்சயிக்கப்பட்ட எல்லையற்ற நாடகம். புள்ளியான ஆத்மாக்களாகிய நாங்கள், பிரம்ம தத்துவத்தில் வசிப்பவர்கள். அங்கு வேறு என்ன இருக்க முடியும்? ஒரு புள்ளியான ஆத்மாவுக்கும், ஒரு பெரிய சரீரத்திற்கும் இடையே பாரிய வித்தியாசம் உள்ளது. ஆத்மாவிற்கு ஒரு சின்னஞ் சிறிய இடமே தேவை, ஆனால் பிரம்மம் என்ற மகாதத்துவம் மிகவும் பெரியது. அண்ட வெளிக்கு எல்லை இல்லாதைப் போன்றே, பிரம்ம தத்துவத்திற்கும் எல்லை இல்லை. அவர்கள் முடிவை அடைவதற்கு கடும் பிரயத்தனம் செய்த போதிலும், அவர்களால் அதனை அடைய முடியாதுள்ளது. அது அவர்கள் அடையக் கூடிய இடமோ அல்லது அதற்கு அப்பால் செல்லக்கூடிய இடமோ அல்ல. விஞ்ஞானத்தின் அகங்காரம் அதிகளவில் இருப்பினும், அதனால் எந்த நன்மையும் கிடையாது. ஆகாயம் வெற்றிடமே அன்றி வேறு எதுவும் அல்ல, பாதாளத்திலும் வெற்றிடத்தைத் தவிர வேறு எதுவும் இல்லை என்றே அவர்கள் கேள்விப்பட்டுள்ளார்கள். சந்திரனில் ஓர் உலகம் இருப்பதாக அவர்கள் நம்புகிறார்கள். அதுவும் நாடகத்தில் அவர்களுக்கென நிச்சயிக்கப்பட்ட பாகமாகும். அதனால் எந்த நன்மையும் கிடையாது. தந்தை வந்து, எங்களை உலக அதிபதிகள் ஆக்குகிறார். அதில் எவ்வளவோ நன்மை உள்ளது. இருப்பினும், சந்திரனுக்கு போவதாலும், மந்திரம் போன்றவற்றால், பேய்களையும், தீய ஆவிகளையும் விரட்டுவதாலும் என்ன நன்மையுள்ளது? நாங்கள் இப்போது எங்களது எல்லையற்ற ஆஸ்தியை எல்லையற்ற தந்தையிடம் இருந்து கோரிக் கொண்டிருக்கிறோம். நாங்கள் ஒவ்வொரு சக்கரத்திலும் இதைப் பெறுகின்றோம். உலக வரலாறும் புவியியலும் தொடர்ந்தும் சுழல்கின்றது. இந்தச் சக்கரம் தொடர்ந்தும் சுழல்கிறது. ஆரம்பத்தில், முழு உலகிலும் பாரதம் மாத்திரமே இருந்தது. பாரத மக்களே உலக அதிபதிகளாக இருந்தார்கள். அங்கு, தேவர்கள் மற்றைய தேசங்களைப் பற்றி அறியாதிருந்தார்கள். அவை அனைத்தும் பின்னரே வருகின்றன. சமயஸ்தாபகர்கள் வந்து தங்கள் சொந்த சமயங்களை ஸ்தாபித்தாலும், எவருக்குமே அவர்கள் சத்கதி அளிப்பதில்லை. அவர்கள் ஒரு மதத்தை மாத்திரமே ஸ்தாபிக்கின்றார்கள். அவர்கள் ஏன் புகழப்பட வேண்டும்? அவர்கள், தங்கள் பாகத்தை நடிப்பதற்காக முக்தி தாமத்திலிருந்து வருகிறார்கள். மக்கள், தாங்கள் அநாதியான முக்தியில் இருக்கவே விரும்புகின்றோம் என்று கூறுகிறார்கள். வருவதும், போவதுமான இந்தச் சக்கரத்திற்குள் தாங்கள் எதற்காக வரவேண்டும் என அவர்கள் வினவுகின்றார்கள். இருப்பினும், அனைவரும் இந்தச் சக்கரத்திற்குள் வரவேண்டும். ஒவ்வொருவரும், மறுபிறவி எடுத்ததன் பின்னர், வீடுதிரும்ப வேண்டும். இந்தச் சக்கரம் நிச்சயிக்கப்பட்ட நாடகம். நூறாயிரம் ஆண்டுகளைக் கொண்டதோர் நாடகம் இருக்க முடியாது. இது இயற்கையான அநாதியான நாடகம். இது கடவுளின் விந்தை எனப்படுகிறது. நீங்கள், படைப்பவரினதும் படைப்பினதும் விந்தையை அறிந்திருத்தல் வேண்டும். உலகச் சக்கரத்தை அறிந்து கொள்ள முயற்சிக்கும் ஒரு மனிதரேனும் இல்லை. உலகச் சக்கரம் எவ்வாறு சுழல்கிறது என்பதை அறிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணமேனும் அவர்களுக்கு இல்லை. அனைத்திலும் பழமையான வடிவம் சிவலிங்கமாகும். குதா (கடவுள்) வந்ததால், அதற்கான ஞாபகார்த்தத்தை அவர்கள் உருவாக்கி உள்ளார்கள். அவர்கள், முதன்முதலில் சிவனை வழிபட ஆரம்பிக்கும் போது, வைரத்தில் இலிங்கத்தைச் செய்கின்றார்கள். பின்னர், பக்தி ரஜோவாகவும் தமோவாகவும் ஆகும்போது, கல்லிலான உருவங்களையே செய்கின்றார்கள். சிவபாபா வைரத்தாலான ஓர் உருவமல்ல. அவர் ஒரு புள்ளியாக இருந்த போதிலும், அவரை வழிபடுவதற்காக அவருடைய உருவத்தை பெரிதாக செய்கிறார்கள். அவர்கள் சிவலிங்கத்தை வைரத்தால் செய்ய வேண்டுமென்று கருதுகின்றார்கள். அவர்கள், சோமநாதருக்கான பிரமாண்டமான ஆலயத்தில், ஒரு புள்ளியை வைத்தால், எவராலும் ஒன்றையும் புரிந்து கொள்ள முடியாதுள்ளது. பக்தி மார்க்கத்தில் என்ன நடக்கின்றது என்று தந்தை விளங்கப்படுத்துகிறார். விஞ்ஞானிகள் பல நல்ல பொருட்களைத் தொடர்ந்தும் கண்டு பிடித்துக் கொண்டிருக்கின்றார்கள். அவர்கள் விநாசத்திற்கான பொருட்களையும் கண்டுபிடிக்கிறார்கள். முன்னர், மின்சாரம் இல்லாததால், அவர்கள் சிட்டி விளக்குகளை ஏற்றினார்கள். தந்தை விளங்கப்படுத்துகிறார்: இனிய குழந்தைகளே, குறைந்தளவுடன் திருப்தி அடைந்து விடாதீர்கள். இந்த ஞானத்தை நன்றாகக் கிரகித்து, கடலை விழுங்குங்கள். நன்றாகச் சேவை செய்வோர், நல்லதோர் அந்தஸ்தைக் கோரிக் கொள்வார்கள். உங்களின் சந்தோஷ பாதரசம் நாள்முழுவதும் உயர்ந்து இருக்க வேண்டும். இது களங்கமடைந்த உலகமாகும். நாங்கள் இங்கிருந்து செல்ல வேண்டும். பழைய உலகம் அழிக்கப்பட வேண்டும். அதற்கான ஆயத்தங்கள் நடைபெற்று வருகின்றன. வெகுசில நாட்களே எஞ்சியுள்ளன. ஆகையால் இந்நேரத்தில் அதிகளவு சேவை செய்யப்பட வேண்டும். முழு பாரதத்தில் மாத்திரம் அல்லாது, நீங்கள் வெளிநாடுகள் அனைத்திற்கும் செல்ல வேண்டும். வெளிநாடுகளில் நானாதிசையிலும் இந்த விடயங்களைப்பற்றி பத்திரிக்கைகள் வாயிலாக அறிவிக்க வேண்டும். மக்கள், ஏணிப்படத்தின் மூலமாக விரைவாக புரிந்து கொள்வார்கள். தந்தை, குழந்தைகளாகிய உங்களைத் திரும்பவும் சுவர்க்கவாசி ஆக்குவதற்காக வருகிறார். இலக்ஷ்மியும் நாராயணனும் வாழ்ந்த போது, உண்மையாகவே அவர்கள் பாரதத்தை ஆட்சி செய்தார்கள். மக்கள், பாரதம் புராதன தேசம் என்ற அதன் புகழை அதிகளவில் பாடுகின்றார்கள். அவர்கள், பாரதம் முன்னர் எப்படி இருந்தது என்பது பற்றிய பல புகழ்ச்சிகளைப் பாடியுள்ளார்கள். பாரதத்தில், அவர்கள் அனைவரும் தூய தேவியர்களாகவே இருந்தனர். நாங்கள் 21 பிறவிகளுக்கான எமது வெகுமதியைத் தந்தையிடம் இருந்து பெறுகின்றோம் என்பதை நீங்கள் அறிவீர்கள். தந்தை, உங்களுக்கு மிகவும் இலகுவான விடயங்களையே கற்பிக்கின்றார். அவர், திரௌபதியின் பாதங்களை பிடித்துவிட்டதாகக் காட்டப்பட்டிருப்பினும், அவ்வாறு எதுவும் நடக்கவில்லை. பாபா கூறுகிறார்: குழந்தைகளான நீங்கள் பக்தி மார்க்கத்தில் அலைந்து திரிந்து களைப்பு அடைந்துள்ளீர்கள். நான் இப்போது உங்கள் களைப்பை அகற்றுகிறேன். நீங்கள் அலைந்து திரிந்ததால் தூய்மையற்றவர்கள் ஆகிவிட்டீர்கள். தந்தை கூறுகிறார்: நான் இப்போது உங்கள் களைப்பை அகற்றுகிறேன். நீங்கள் பின்னர், துன்பத்தை அனுபவம் செய்யவே மாட்டீர்கள். அங்கே துன்பத்தின் சிறிதளவு சுவடும் இருப்பதில்லை. இருப்பினும், உயர்ந்த அந்தஸ்தைக் கோருவதற்கு முயற்சி செய்தல் வேண்டும். நீங்கள் உயர்ந்த அந்தஸ்தைக் கோரினால், கடந்த பிறவியில் நல்ல செயல்களைச் செய்துள்ளீர்கள் என்று சொல்லப்படும். இது நினைவு கூரப்பட்டாலும், நீங்கள் எப்போது முயற்சி செய்து அந்த அந்தஸ்தை அடைந்தீர்கள் என்பதை எவருமே அறியார்கள். தந்தை, இப்போது உங்களுக்கு அத்தகைய செயல்களை செய்ய கற்பிக்கின்றார். அவர் உங்களுக்கு, நல்ல செயல்களைச் செய்து உயர்ந்த அந்தஸ்தைக் கோரிக் கொள்ளுங்கள் எனவும் கூறுகிறார். இங்கு மனிதர்களின் செயல்கள் பாவம் நிறைந்ததாக உள்ளன. அது சுவரக்கம், அங்கே செயல்கள் நடுநிலையாக உள்ளன. அங்கே உங்களுக்கு இந்த ஞானம் இருக்க மாட்டாது. தந்தை கூறுகிறார்: எனக்கு கர்ம தத்துவம் தெரியும். இந்த நேரத்தில் நல்ல செயல்களை செய்பவர்கள், நல்ல பலனைப் பெறுவார்கள். இது கர்ம ஷேத்திரம். சிலர் மிக நல்ல செயல்களைச் செய்கிறார்கள். சிலர் சேவையில் மாத்திரமே கவனம் செலுத்துகிறார்கள். ஏனையோர் வினவுகின்றார்கள்: பாபா, என்னிடம் ஏதேனும் குறைபாடுகள் உள்ளனவா? இல்லை, நீங்கள் உங்களால் இயன்றளவு சேவை செய்வீர்கள், அது தொடர்ந்தும் அதிகரிக்கும். சேவை செய்ய வேண்டியவர்கள் தொடர்ந்தும் வெளிப்படுவார்கள். இன்னமும் சொற்ப நாட்களே உள்ளன என்பது உங்கள் இதயத்திற்கு உறுதியாகத் தெரிகிறது. அங்கும் உயர்ந்த அந்தஸ்தைக் கோரிக்கொள்ளும் அளவிற்கு இப்பொழுது உங்கள் முயற்சி இருத்தல் வேண்டும். பாபா உங்களுக்கு, இந்த ஞானப் புல்லை ஊட்டுகிறார். அவர் கூறுகிறார்: அதைத் தொடர்ந்தும் அசைபோடுங்கள், உங்களின் தாரணை உறுதியாகும். அத்துடன் உங்களது சந்தோஷ பாதரசமும் உயரும். அதிகளவு சேவை செய்யப்பட வேண்டும், இந்த செய்தி பலருக்கும் கொடுக்கப்படல் வேண்டும். நீங்கள் தூதுவரது குழந்தைகளாகிய தூதுவர்கள் ஆவீர்கள். உங்களது படங்கள் ஒருநாள் பிரபல்யமான பத்திரிகைகளில் பிரசுரிக்கப்படும். பத்திரிகைகள் வெளிநாடுகளுக்கும் செல்கின்றன. இந்தப் படங்களின் மூலமாக, இந்த ஞானம் தந்தையாகிய கடவுளிடம் இருந்து மாத்திரமே வருகிறது என்பதை அவர்கள் புரிந்து கொள்வார்கள். இருப்பினும் மன்மனாபவ ஆகுவதற்கு முயற்சி தேவை. பாரத மக்கள் மாத்திரமே இந்த முயற்சியைச் செய்வார்கள். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:

  1. தந்தை கூறும் நல்ல விடயங்களைக் கொண்ட இந்த ஞானக் கடலைக் கடைந்து, பலருக்கும் நன்மை செய்பவர் ஆகுங்கள். பிழையானவற்றை ஒரு காதால் கேட்டு மற்றைய காதால் விட்டு விடுங்கள்.
  2. எந்தவிதமான அசுர குணம் உங்களிடம் இருந்தாலும் அதைத் துறந்து விடுங்கள். தந்தை உங்களுக்கு ஊட்டும் இந்த ஞானப் புல்லை தொடர்ந்தும் அசை போடுங்கள்.
ஆசீர்வாதம்: நீங்கள் உலக நன்மைக்காக உங்களின் பொக்கிஷங்கள் அனைத்தையும் பயன்படுத்துவதன் மூலம் வெற்றிசொரூபம் ஆகுவீர்களாக.
நீங்கள் உங்களின் எல்லைக்கு உட்பட்ட இல்லறத்திற்காகவும் எல்லைக்கு உட்பட்ட சுபாவம் மற்றும் சம்ஸ்காரங்களுக்காகவும் அதிகளவு நேரத்தைச் செலவிடுகிறீர்கள். எவ்வாறாயினும், நீங்கள் உங்களின் சொந்த இல்லறத்திற்கு அப்பால் இருந்து, உங்களின் எண்ணங்கள், வார்த்தைகள், செயல்கள், உறவுமுறைகள் மற்றும் தொடர்புகளில் சமநிலையைப் பேணுங்கள். அப்போது உங்களால் இந்தப் பொக்கிஷங்கள் அனைத்திலும் சிக்கனத்தைப் பேணுவதன் மூலம் குறைந்த செலவில் நிறைந்த கோலாகலத்தைப் பெற முடியும். இப்போது, உங்களின் நேரம் என்ற பொக்கிஷம், உங்களின் சக்தி என்ற பொக்கிஷம் அத்துடன் உங்களின் பௌதீகப் பொக்கிஷங்களைப் பயன்படுத்தி, குறைந்த செலவில் நிறைந்த வெற்றியைப் பெறுகின்ற ஒருவர் ஆகுங்கள். உங்களின் மீது அவற்றைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, உலக நன்மைக்காகப் பயன்படுத்துங்கள். நீங்கள் அப்போது வெற்றி சொரூபம் ஆகுவீர்கள்.
சுலோகம்: ஒரேயொருவரின் அன்பிலே சதா திளைத்திருங்கள். நீங்கள் தடைகளில் இருந்து விடுபடுவீர்கள்.
 
---ஓம் சாந்தி---

அவ்யக்த சமிக்ஞை: தந்தை பிரம்மாவைப் போல், சம்பூரணமான, முழுமையான ஸ்திதியை அனுபவம் செய்யுங்கள்.

இப்பொழுது, சேவையின் செயல்களில், எந்த பந்தனத்தையும் கொண்டிருக்காதீர்கள். எனது இடம், எனது சேவை, எனது மாணவர்கள், எனது ஒத்துழைக்கும் ஆத்மாக்கள். இவையும் சேவையின் செயல்களின் பந்தனங்களே. கர்மாதீத் ஆகுங்கள், அதாவது, இவ்வாறான செயல்களின் எந்தவொரு பந்தனத்தில் இருந்தும் விடுபட்டிருங்கள். தந்தை பிரம்மா எப்பொழுதும் பற்றற்றவராகவும் அன்பாகவும் இருப்பதில் சமநிலை கொண்டிருந்தார். அனைவருக்கும் உரிமையுடையவர் என்ற அனுபவத்தை கொடுத்த போதிலும், அவர் அனைவரையும் அந்த ஒருவருடன் (அசரீரியானவருடன்) இணைக்கச் செய்தார். அவ்வாறாகவே குழந்தைகளாகிய நீங்களும் அனைவருக்கும் உரிமையுடையவர் என்ற உணர்வைக் கொடுத்து, ஆத்மாக்களுக்கு இலக்கைக் காட்ட வேண்டும். அப்பொழுது நீங்கள் தந்தைக்குச் சமமானவர் என்று அழைக்கப்படுவீர்கள்.

முரளி என்றால் என்ன?

முரளி என்பது பிரம்மா குமாரிகளின் தினசரி ஆன்மீக போதனை; இது ஒவ்வொரு காலையும் மதுபனில் இருந்து வெளியிடப்படுகிறது. இங்கே நீங்கள் இன்றைய முரளியைத் தமிழில் படிக்கலாம், ஆடியோ கேட்கலாம், PDF பதிவிறக்கலாம். படிப்புக்கு உதவியாக உரையை ஹைலைட் செய்யலாம் — உங்கள் குறிகள் இந்த உலாவியிலேயே பாதுகாப்பாக இருக்கும்.

28 மொழிகளில் முரளி

Daily Murli · Madhuban மூலம்: மதுபன் முரளி பிரிவு இது ஒரு தனிப்பட்ட வாசிப்புச் செயலி, அதிகாரப்பூர்வ இணையதளம் அல்ல.