தமிழ் முரளி · Brahma Kumaris

இன்றைய முரளி

ஓம் சாந்தி · BapDada · 28 நவம்பர், 2026

இன்றைய முரளி — today Tamil murli, daily murli in Tamil.

18
முரளி28 நவம்பர், 2026 · தமிழ் (இலங்கை)
0:00--:--

உரையைத் தேர்ந்தெடுக்கவும் → ஹைலைட் / பெட்டி / அடிக்கோடு

28-11-2026
காலைமுரளி
ஓம்சாந்தி
பாப்தாதா
மதுபன்

சாராம்சம்: இனிய குழந்தைகளே, அனைவருக்கும் ஒரேயொரு தந்தையின் அறிமுகத்தைக் கொடுப்பதுடன் உங்கள் கொடுக்கல் வாங்கல்களையும் ஒரேயொரு தந்தையுடன் மாத்திரம் வைத்திருங்கள். உங்களது உண்மையான கணக்குகளைத் தந்தையிடம் மாத்திரம் கொடுங்கள்.
கேள்வி: குழந்தைகள் இப்பொழுதும் தொடர்ந்து பல வகையான தவறுகளைச் செய்வதற்கான காரணம் என்ன?
பதில்: நீங்கள் யோகத்தில் மிகவும் பலவீனமாக இருப்பதே பிரதானமான காரணம். நீங்கள் தந்தையின் நினைவில் நிலைத்து இருந்தீர்களானால், ஒருபோதும் தவறான செயல்களைச் செய்ய மாட்டீர்கள். நீங்கள் பெயரிலும் ரூபத்திலும் அகப்பட்டுக் கொள்ளும் போது, உங்களால் யோகம் செய்ய இயலாதிருக்கும். தூய்மை அற்றவர்களிலிருந்து தூய்மையானவர்கள் ஆகுவதற்கான அக்கறையைக் கொண்டிருங்கள். சதா சிவபாபாவின் நினைவில் நிலைத்திருங்கள். நீங்கள் ஒருவருக்கொருவர் பௌதீக அன்பைக் கொண்டிருக்கக் கூடாது.
பாடல்: சுவாலை ஏன் ஏற்றப்படவில்லை?

ஓம் சாந்தி. இது பக்தி மார்க்கத்தில் பாடப்படுகின்ற பாடலாகும். பின்னர் இந்தப் பாடல்கள் அனைத்தும் நிறுத்தப்படும். ஏனெனில் அவற்றிற்கான அவசியம் இல்லை. தந்தையிடம் இருந்து ஆஸ்தியை நீங்கள் ஒரு விநாடியில் பெறுவதாக நினைவு கூரப்பட்டுள்ளது. நீங்கள் எல்லையற்ற பாபாவிடமிருந்து ஜீவன்முக்தி எனும் ஆஸ்தியைப் பெறுகின்றீர்கள் என்பது உங்களுக்குத் தெரியும். இந்த துன்ப உலகில் இருந்தும் சீரழிவிலிருந்தும் விடுதலை அடைவதே, ஜீவன்முக்தி என்பதன் அர்த்தம். பின்னர் நீங்கள் என்னவாக ஆகுவீர்கள்? அதற்கு நீங்கள் இலக்கையும் குறிக்கோளையும் மிக நன்றாக விளங்கப்படுத்த வேண்டும். எவராவது வந்தால் அனைத்திற்கும் முதலில் அதிமேலான கடவுளின் அறிமுகத்தை அவருக்குக் கொடுங்கள் எனக் நேற்றிரவு பாபா உங்களுக்கு விளங்கப்படுத்தினார். உங்கள் இலட்சியம் என்ன என மக்கள் உங்களிடம் வினவுகின்றனர். முதலில் எல்லையற்ற தந்தையின் அறிமுகத்தைக் கொடுங்கள். அவர் இப்பொழுது கூறுகின்றார்: என்னை நினைவு செய்யுங்கள், நீங்கள் தூய்மையாகுவீர்கள். நினைவு கூரப்பட்டுள்ளது: ஓ தூய்மையாக்குபவரே வாருங்கள்! ஆகவே தந்தை நிச்சயமாக அதிகாரியாகவே இருக்க வேண்டும். அவர் ஒரு பாகத்தைப் பெற்றிருக்க வேண்டும். அவர் அதிமேலான தந்தை என அழைக்கப்படுகி;றார். அவர் பாரதத்தில் மாத்திரமே வருகிறார். அவர் வந்து பாரதத்தை அதிமேலானது ஆக்குகின்றார். அவர் சுவர்க்கம் என்ற பரிசை உங்களுக்குக் கொண்டு வருகிறார். மனித உலகிலே சத்தியயுகத்தை ஆட்சி செய்த சூரியவம்ச தேவர்களே அதிமேலானவர்கள். அதிமேலான கடவுளே சுவர்க்கத்தை ஸ்தாபிக்கிறார். அவர் சுவர்க்கத்தை ஸ்தாபிப்பவரான தந்தையாகிய சுவர்க்கக் கடவுள் என்று அழைக்கப்படுகிறார். அவர் தந்தையாவார், ஆகவே அவரையிட்டு தந்தை சர்வவியாபி என உங்களால் கூறமுடியாது. அவர் சர்வவியாபி எனக் கூறுகையில் நீங்கள் தந்தையின் ஆஸ்தியை இழக்கிறீர்கள். இவை அத்தகைய இனிமையான விடயங்கள். 'தந்தை' என்பது ஆஸ்தியைக் குறிக்கிறது. அவர் நிச்சயமாகத் தனது குழந்தைகளுக்கு ஆஸ்தியைக் கொடுப்பார். குழந்தைகள் அனைவரதும் தந்தை ஒரேயொருவரே ஆவார். அவர் வந்து உங்களுக்கு அமைதி, சந்தோஷம் என்ற ஆஸ்தியைக் கொடுப்பதுடன் இராஜயோகத்தையும் உங்களுக்குக் கற்பிக்கிறார். ஏனைய ஆத்மாக்கள் தங்கள் கர்மக்கணக்குகளைத் தீர்த்து வீடு திரும்புவார்கள். பழைய உலகம் அழிக்கப்பட இருக்கிறது. அதற்காக இந்த மகாபாரத யுத்தம் இடம்பெறுகின்றது. பல சமயங்களின் அழிவும் ஒரேயொரு தர்மத்தின் ஸ்தாபனையும் இடம்பெற வேண்டும். கலியுகத்திற்குப் பின்னர் நிச்சயமாக சத்தியயுகம் வரவேண்டும் என புத்தியும் கூறுகிறது. தேவர்களின் வரலாறு மீண்டும் மீண்டும் இடம்பெறுகிறது. பிரம்மாவின் மூலமாக அவர் ஸ்தாபனையை மேற்கொள்கிறார் என்பது நினைவு கூரப்படுகிறது. உயர்ந்த அந்தஸ்தைக் கோருவதற்கு அவர் உங்களைத் தூண்டுகிறார். தந்தை கூறுகிறார்: குழந்தைகளே இந்த இறுதிப் பிறவியில் தூய்மையாகுங்கள். மரண உலகிற்குத் தோல்வியும் அமரத்துவ உலகிற்கு வெற்றியும் உள்ளன. பார்வதிகளாக நீங்கள் அனைவரும் அமரத்துவக் கதையை செவிமடுக்கிறீர்கள். புதல்வர்கள் புதல்விகளாகிய இருவரும் அமரத்துவமானவர்கள் ஆவர். நீங்கள் இதை அமரத்துவக் கதை என்றோ அல்லது மூன்றாவது கண்ணின் கதை என்றோ அழைக்கலாம். பொதுவாகப் பெண்களே அந்தக் கதைகளை செவிமடுப்பார்கள். அமரத்துவ உலகில் ஆண்கள் எவரும் இருக்க மாட்டார்களா? அங்கு இருபாலாரும் இருப்பார்கள். பக்திமார்க்கத்து சமய நூல்கள் என்ன கூறுகின்றன என்றும் தந்தை என்ன கூறுகின்றார் என்றும் தந்தை மாத்திரமே விளங்கப்படுத்துகிறார். பக்தி மார்க்கப் பலனைக் கொடுப்பதற்கு கடவுள் வருகிறார் எனக் கூறப்பட்டுள்ளது. சத்தியயுகத்தில் தேவர்கள் உண்மையிலேயே உலகை ஆட்சி செய்தார்கள். யார் அவர்களுக்குப் பலனைக் கொடுத்தது? சாதுக்கள் அல்லது சந்நியாசிகள் எவராலும் அதைக் கொடுக்க முடியாது. அனைவரும் ஒரே அளவிற்கு பக்தி செய்வதில்லை என்பது உங்களுக்குத் தெரியும். அதிகளவில் பக்தி செய்பவர்கள் அதற்கேற்ற பலனை நிச்சயமாகப் பெறுவார்கள். வழிபடத் தகுதிவாய்ந்தவர்களாக இருந்தவர்கள் வழிபடுபவர்கள் ஆகிப் பின்னர் வழிபடத்தகுதி வாய்ந்தவர்கள் ஆகுகின்றனர். தங்கள் பக்தியின் பலனை அவர்கள் பெறுகின்றனர். இவ் அனைத்து விடயங்களுமே விளங்கப்படுத்தப்பட வேண்டும். முதலில் திரிமூர்த்திப் படத்தை விளங்கப்படுத்துங்கள். அவர்களை முதலில் ஏணிப்படத்திற்கு அழைத்துச் செல்லாதீர்கள். அவை விபரங்கள் ஆகும். அனைத்திற்கும் முதலில் தந்தையின் அறிமுகத்தைக் கொடுங்கள். அவரே அதிமேலானவர். பின்னர் பிரம்மா, விஷ்ணு, சங்கரின் அறிமுகத்தையும் அதன் பின் இலக்ஷ்மி நாராயணனின் அறிமுகத்தையும் கொடுங்கள். பக்தி மார்க்கத்தில் பல படங்கள் உள்ளன. அனைத்திற்கும் முதலில் நீங்கள் எல்லையற்ற தந்தையிடம் இருந்து எல்லையற்ற ஆஸ்தியாகிய சுவர்க்கத்தைக் கோரிக் கொள்கிறீர்கள் என்பதை அவர்களுக்குக் கூறுங்கள். அதிமேலான கடவுள் மேன்மையான ஆஸ்தியைக் கொடுக்கிறார். சிவனது பிறந்ததினம் பாரதத்தில் கொண்டாடப்படுகிறது, ஆகவே தந்தையாகிய சுவர்க்கக் கடவுள் வந்து நிச்சயமாக சுவர்க்கத்தை ஸ்தாபித்திருக்கிறார். தந்தை மாத்திரமே சுவர்க்கத்தை ஸ்தாபிக்கிறார், 5000 ஆண்டுகளிற்குப் பின்னர் அது நரகமாக ஆகுகிறது. இராமர் (சிவன்) வர வேண்டியுள்ளது. ஆகவே இராவணனும் சரியான நேரத்தில் வர வேண்டும். இராமர் ஆஸ்தியைக் கொடுக்கிறார், ஆனால் இராவணன் சாபத்தைக் கொடுக்கிறான். இந்த ஞானம் அதாவது, பகல் முடிவிற்கு வந்து, இரவு ஆரம்பமாகிறது. பகல் வேளையில் சூரிய சந்திர வம்சங்கள் மாத்திரமே இருக்கின்றன. இவற்றை இரத்தினச் சுருக்கமாக விளங்கப்படுத்துவது மிகவும் இலகுவானது. எல்லாவற்றிற்கும் முதலில், நீங்கள் அதிமேலான தந்தையின் அறிமுகத்தை அவர்களுக்குக் கொடுத்து, அதனை அவர்களிடம் உறுதியாக்குங்கள். இதுவே பிரதான விடயம். தேவவம்சம் சத்தியயுகத்திலேயே இருந்தது. சதோபிரதானாக இருந்த அவர்கள் பின்னர் சதோ, இரஜோ, தமோ நிலைகளினூடாகச் சென்றார்கள். இது சக்கரமாகும். இது எல்லா நேரமும் ஒரே மாதிரியான காலமாக இருப்பதில்;;லை. அதிமேலான தந்தையை நினைவு செய்ய வேண்டும் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் உங்கள் புத்தியில் வைத்துக் கொள்ள வேண்டும். பலர் இந்நினைவில் மிகவும் பலவீனமானவர்களாகவே இருக்கிறார்கள். வேறு பல எண்ணங்கள் இருப்பதாலேயே எவ்வாறு மீண்டும் மீண்டும் மறந்து விடுகின்றார் என்ற தனது சொந்;த அனுபவத்தை பாபாவும் பகிர்ந்து கொள்கிறார். இதனாலேயே கூறப்பட்டுள்ளது: 'பல பொறுப்புக்களைக் கொண்டுள்ளவர்கள் எவ்வாறு நினைவில் நிலைத்திருக்க முடியும்?" பாபாவிற்கு நாள் முழுவதும் பல தொடர்புகள் இருந்ததால் பற்பல விடயங்கள் அவர் முன்னே தோன்றும். அதிகாலை வேளை எழுந்து, அவ்வேளையில் நினைவு செய்ய அமர்வதில் பாபாவிற்கு அதிகளவு விருப்பம் இருந்தது. ஸ்தாபனையின் பின்னர் மீண்டும் ஒருமுறை நான் உலகச் சக்கரவர்த்தி ஆகுவேன் என்ற போதையும் அவருக்கு இருந்தது. முதலாவதும், முதன்மையானதும் தந்தையின் அறிமுகமே என்ற தனது சொந்த அனுபவத்தையும் பாபா உங்களுக்குக் கூறுகிறார். எவரேனும் உங்களுக்கு வேறு எதனையும் கூறினால், அதனால் எந்தப் பிரயோசனமும் இல்லை என நீங்கள் அவரிடம் கூறுங்கள். அதிமேலான தந்தையின் அறிமுகத்தையே நாங்கள் உங்களுக்குக் கொடுக்கிறோம். உலக அதிபதிகள் ஆகுகின்ற அதிமேலான ஆஸ்தியை அவர் மாத்திரமே கொடுக்கிறார். தேவர்களின் படங்களை ஆரிய சமாஜியைச் சேர்ந்தவர்கள் நம்புவதில்லை. அவர்கள் உங்களைப் படங்களுடன் பார்க்கும் போது குழப்பம் அடைகிறார்கள். தங்களின் ஆஸ்தியைப் பெற விரும்புபவர்கள், வந்து அமைதியாக அமர்ந்திருந்து நீங்கள் கூறுவதைச் செவிமடுப்பார்கள். அதிமேலானவர் கடவுள் மட்டுமே என்ற ஒன்றே பிரதான விடயம். பிரம்மாவோ, விஷ்ணுவோ சங்கரரோ அதிமேலானவர்கள் என அழைக்கப்படுவதில்லை. அதிமேலான தந்தை ஒருவரிடமிருந்தே ஆஸ்தி பெறப்படுகிறது. அவர் மாத்திரமே தூய்மை ஆக்குபவர் ஆவார். இவ்விடயங்களை உறுதியாக்கிக் கொள்ளுங்கள். கடவுள் ஒருவரே. தந்தை என்பது ஆஸ்தியைக் குறிக்கிறது, உங்களின் ஆஸ்தியை உங்களுக்கு கொடுப்பதற்காகவே அவர் பாரதத்திற்கு வருகிறார். பிரம்மாவின் மூலம் புதிய உலகின் படைப்பும், சங்கரரின் மூலம் பழைய உலகின் அழிவும் இடம்பெறுகிறது. மகாபாரத யுத்தத்தின் மூலம் புதிய உலகப் படைப்பும், சங்கரரின் மூலம் பழைய உலகின் அழிவும் இடம்பெறுகிறது. மகாபாரத யுத்தத்தின் மூலம் சுவர்க்க வாசல் திறப்பதால், நீங்கள் தூய்மையற்றவரில் இருந்து தூய்மை ஆகுகிறீர்கள். எல்லையற்ற தந்தையின் மூலம் பாரதம் ஓர் ஆஸ்தியைப் பெறுகிறது. இந்த ஒரு விடயத்தைத் தவிர வேறு எதுவுமில்லை. தந்தை கூறுகிறார்: என்னை நினைவு செய்தால், உங்களில் இருக்கும் கலப்படம் அகற்றப்படும். இந்த ஒரு விடயம் அவர்களுக்குப் புரிந்தாலே, ஏனையவற்றை நீங்கள் அவர்களுக்கு விளங்கப்படுத்த வேண்டும். இந்தப் படங்கள் யாவுமே விபரங்கள் ஆகும். ஞான அமிர்தத்தைப் பருகி, தூய்மை ஆகுங்கள் என்றே நாங்கள் அவர்களுக்குக் கூறுகிறோம். ஆனால் அவர்களோ நஞ்சையே விரும்புகிறார்கள். இதன் அடிப்படையில் ஒரு படமும் உள்ளது. அதனாலேயே கூறப்படுகிறது: நாங்கள் ஏன் அமிர்தத்தைத் துறந்து நஞ்சை ஏற்க வேண்டும்? ஆன்மீகத் தந்தை மாத்திரமே ஆன்மீக ஞானத்தைக் கொடுக்கிறார். அந்தத் தந்தை எவ்வாறு சர்வவியாபகர் ஆக இருக்க முடியும்? நீங்கள் விரும்பினால் அந்தத் தந்தையைச் சர்வவியாபகர் என்று நம்புங்கள். நாங்கள் இப்பொழுது அதனை நம்புவதில்லை. நாங்களும் அதனை முன்னர் நம்பினோம். அது தவறு எனத் தந்தை இப்பொழுது எங்களுக்கு கூறியுள்ளார். நீங்கள் தந்தையிடம் இருந்து ஓர் ஆஸ்தியைப் பெறுகிறீர்கள். பாரதம் இப்பொழுது நரகமாக உள்ளது. மீண்டும் ஒரு முறை அதனை நாங்கள் சுவர்க்கமாக ஆக்குகிறோம். அதாவது, ஒரு தூய்மையான இல்லற ஆச்சிரமமாக ஆக்குகிறோம். ஆதிசனாதன தேவிதேவதா தர்மம் ஒரு தூய இல்லற ஆச்சிரமம் ஆகும். அது இப்பொழுது தூய்மையற்ற விகாரம் நிறைந்த உலகமாக உள்ளது. தந்தை கூறுகிறார்: என்னை நினைவு செய்யுங்கள்! சிவபாபாவே அதிமேலான படைப்பவர் ஆவார். நீங்கள் அவரிடம் இருந்தே ஓர் ஆஸ்தியைப் பெறுவீர்கள். இப்பொழுது கலியுகத்தில் எத்தனையோ மக்கள் உள்ளனர். ஆனால் சத்தியயுகத்திலோ வெகு சிலரே இருப்பார்கள். அந்நேரத்தில் ஏனைய அனைவருமே சாந்தி தாமத்தில் இருப்பார்கள். ஆகையால் நிச்சயமாக யுத்தம் ஆரம்பிக்கும்போது மாத்திரமே, ஏனைய அனைவரும் முக்தியை அடைகிறார்கள். இவ்விடயங்கள் யாவும் குழந்தைகளாகிய உங்கள் புத்தியில் நிலைத்திருக்க வேண்டும். குழந்தைகளே, நிச்சயமாக நீங்கள் சேவை செய்ய வேண்டும். சேவை செய்வதன் மூலம் மாத்திரமே உங்களால் உயர்ந்ததோர் அந்தஸ்தை அடைய முடியும். உங்கள் மத்தியில் ஒருவரோடு ஒருவர் ஒத்துப்போக முடியாதிருப்பதால், நீங்கள் சிவபாபாவை மறந்துவிட வேண்டும் என்றோ, சிவபாபாவின் சேவையைச் செய்வதை நிறுத்தி விடுவது என்றோ இருக்கக் கூடாது. அவ்வாறாயின், உங்கள் அந்தஸ்தே அழிக்கப்படும். அதன் பின்னர், நீங்கள் சேவை செய்வதற்குப் பதிலாக அவச்சேவை செய்வீர்கள். ஒருவரோடு ஒருவர் உப்பு நீர் போல் ஆகுவதனால், சேவையில் இருந்து விலகி இருப்பதைப் போன்று மோசமானது வேறு எதுவும் இல்லை. தந்தையை நினைவு செய்தால், உங்களால் ஒரு வருமானத்தை ஈட்ட முடியும். புனிதமானவர்கள் ஆகுவதற்கும், தந்தையை நினைவு செய்வதற்கும் இப்பொழுது நீங்கள் இந்த ஞானத்தைப் பெற்றிருக்கிறீர்கள். “துரியா” (ஹோலி பண்டிகையுடன் சம்பந்தப்பட்ட வைபவம்) இந்த ஞானத்தின் கொண்டாட்டமாகும். கூறப்பட்டிருக்கிறது: “கியான்” “விக்கியான்”. விக்கியான் என்பது யோகமும், கியான் (இந்த ஞானம்) உலகச் சக்கரமும் ஆகும். ஹோலியைப் பற்றியோ துரியாவைப் பற்றியோ மக்களுக்கு எதுவுமே தெரியாது. தந்தையை நினைவு செய்து, இந்த ஞானத்தை அனைவருக்கும் கூறுங்கள்: பாபா மீண்டும் மீண்டும் உங்களுக்கு விளங்கப்படுத்துகிறார்: அதிமேலான தந்தையை சர்வவியாபி என அழைக்க முடியாது. அவ்வாறாயின் வேறு எவரை நீங்கள் நினைவு செய்கிறீர்கள்? தந்தை கூறுகிறார்: சதா என்னை மாத்திரமே நினைவு செய்யுங்கள்! எப்படியாயினும் உங்களுக்குப் படைப்பவரைத் தெரியாவிடின் நீங்கள் எதைப் பெற்றுக் கொள்வீர்கள்? அவரைத் தெரியாததாலேயே மக்கள் அவர் சர்வவியாபகர் எனக் கூறுகிறார்கள். ஆகவே அவரே அதிமேலானவர் என்பதனை நிரூபித்தால், சர்வவியாபி என்ற அபிப்பிராயம் அவர்களது புத்தியில் இருந்து அகற்றப்படுகின்றது. நாங்கள் அனைவரும் சகோதரர்கள் ஆவோம். தந்தை 5000 வருடங்களுக்கு ஒரு முறை வந்து, எங்களுக்கு ஆஸ்தியைத் தருகிறார். சத்தியயுகத்தில் தேவர்கள் இருப்பார்கள். ஏனைய அனைவரும் முக்திக்குச் செல்வார்கள். தந்தையின் அறிமுகத்தை அனைவருக்கும் தொடர்ந்து கொடுங்கள். கிறிஸ்துவிடம் மக்கள் பிரார்த்திக்கிறார்கள். கிறிஸ்து அனைவரினதும் தந்தை அல்ல என அவர்களிடம் கூறுங்கள். அசரீரியானவரே அனைவரதும் தந்தையாவார். அவரையே ஆத்மாக்கள் அனைவரும் அழைக்கிறார்கள்: ஓ தந்தையான, கடவுளே! கிறிஸ்து அவரது மகன் என நினைவு கூரப்பட்டுள்ளார். மகனிடம் இருந்து எவ்வாறு ஓர் ஆஸ்தியைப் பெறுவது? கிறிஸ்து படைப்பு ஆவார். கிறிஸ்துவை நினைவு செய்வதன் மூலம், தமோபிரதானில் இருந்து சதோபிரதான் ஆகலாம் என எந்;தச் சமயநூல்களிலும் எழுதப்படவில்லை. கீதையில் மாத்திரமே எழுதப்பட்டுள்ளது: சதா என்னை மாத்திரமே நினைவு செய்யுங்கள். தந்தையான கடவுளின் சமயநூல் கீதையே ஆகும். அவர்கள் தந்தையின் பெயரை அகற்றி விட்டு, ஸ்ரீகிருஷ்ணரின் பெயரைப் புகுத்தி உள்ளார்கள். இந்தத் தவறை அவர்கள் செய்து விட்டார்கள். தந்தையே அதிமேலானவர். அவர் மாத்திரமே அமைதி, சந்தோஷம் என்ற ஆஸ்தியைக் கொடுக்கிறார். சிவனின் படம் ஒன்றை, நீங்கள் அனைவரும் உங்களுடன் வைத்திருக்க வேண்டும். சிவபாபா இந்த ஆஸ்தியை கொடுத்தார். பின்னர் நாங்கள் அதனை 84 பிறவிகளின் போது இழந்து விட்டோம். ஏணியின் படத்தை விளங்கப்படுத்துங்கள்: தூய்மையாக்குபவரான தந்தை மாத்திரமே வந்து, தூய்மையாகுவதற்கான வழிமுறையைக் காட்டுகிறார். மக்கள் கூறுகிறார்கள்: பகவான் ஸ்ரீகிருஷ்ணரே பேசுகிறார். நீங்கள் கூறுகிறீர்கள்: கடவுள் சிவன் பேசுகிறார். அதிமேலான தந்தை முதல் மாடியில் வசிக்கிறார். அதன் பின்னர் இரண்டாவது மாடியில் சூட்சும உலகம் உள்ளது. இது மூன்றாம் மாடியாகும். இதுவே உலகம். அதன் பின்னர் நீங்கள் சூட்சும உலகிற்குச் செல்கிறீர்கள். அங்கேயே நீதிமன்றம் உள்ளது. தண்டனை அங்கேயே கிடைக்கிறது. தண்டனையை அனுபவித்த பின்னர் நீங்கள் மேலே வீட்டிற்குச் செல்வீர்கள். தந்தை குழந்தைகள் அனைவரையும் திரும்பவும் அழைத்துச் செல்கிறார். இப்பொழுது இது சங்கமயுகம் ஆகும். இதற்கான காலம் 100 வருடங்கள் என நீங்கள் கணக்கிடலாம். குழந்தைகள் பாபாவிடம் வினவுகிறார்கள்: பாபா, சுவர்க்கத்தில் என்ன இருக்கும்? பாபா கூறுகிறார்: குழந்தைகளே, நீங்கள் முன்னேறிச் செல்லச் செல்ல அவற்றை நீங்கள் பார்ப்பீர்கள். எல்லாவற்றிற்கும் முதலில் தந்தையை இனங்கண்டு கொள்ளுங்கள். தூய்மையற்றவரில் இருந்து தூய்மையாக வேண்டும் என்ற அக்கறையை மாத்திரம் கொண்டிருங்கள். சுவர்க்கத்தில் இடம்பெற வேண்டியவை, தொடர்ந்தும் இடம்பெற்றுக் கொண்டிருக்கும். புதிய உலகிற்குச் செல்வதற்கான முழு ஆஸ்தியையும் தந்தையிடம் இருந்து பெற்றுக் கொள்வதற்கு, நீங்கள் மிகவும் தூய்மை ஆகுங்கள். இடையில் இடம்பெறுவதையும், நீங்கள் முன்னேறிச் சென்று கொண்டிருக்கும் போது பார்ப்பீர்கள். இவை யாவும் நினைவு செய்யப்பட வேண்டும். அவற்றை நினைவு செய்யாததால், சரியான நேரத்தில் அவற்றை உங்களால் புரிந்து கொள்ள முடியாதுள்ளது. அவற்றை நீங்கள் மறந்து விடுகிறீர்கள். குழந்தைகளே, நீங்கள் நல்ல செயல்களையே செய்ய வேண்டும். தந்தையின் நினைவில் நிலைத்திருப்பதன் மூலம் நீங்கள் தீய செயல்களில் ஈடுபட மாட்டீர்கள். பலரும் மிகவும் தீய செயல்களில் ஈடுபடுகிறார்கள். குறிப்பிட்ட ஒரு ஆசிரியர் கற்பித்தால் மாத்திரமே, அனைத்துமே உங்களுக்கு விருப்பமாக இருக்கும் என்றிருக்கக் கூடாது. பின்னர், அந்த ஆசிரியர் சென்று விட்டார் என்றால் உங்களுக்கு எல்லாமே முடிந்து விடும். சிலர் மரணம் அடைவதற்கு அவர்களது ஆசிரியரே காரணமாக உள்ளனர். அதாவது நீங்கள் தந்தையின் ஆஸ்தியை பெறுவதிலிருந்து மரணிக்கிறீர்கள். அதுவும் அபாக்கியம் என்றே அழைக்கப்படுகிறது. ஒருவருக்கொருவர் பெயரிலும், வடிவிலும் சிக்குண்டு விடுவதால் மரணம் அடைந்து விடுகிறார்கள். எவ்விதமான லௌகீக அன்பும் இருக்கக் கூடாது. சிவபாபாவையே சதா நினைவு செய்யுங்கள். வேறு எவரிடமும் உங்கள் கொடுக்கல் வாங்கல்கள் இருக்கக் கூடாது. அவர்களிடம் கூறுங்கள்: இதனை எதற்காக எனக்குத் கொடுக்கிறீர்கள்? உங்களின் யோகம் சிவபாபாவுடன் உள்ளது. சிவபாபாவிற்கு நேரடியாகக் கொடுக்காதவர்கள், எதனையுமே சேமித்துக் கொள்வதில்லை. பிரம்மாவின் மூலமே ஸ்தாபனை மேற்கொள்ளப்படுவதால் அவர் மூலமே அனைத்தும் இடம்பெறுகிறது. நீங்கள் கொடுத்தவற்றை இடையில் வேறு எவரேனும் தனக்காகப் பயன்படுத்தினால் அது சிவபாபாவிடம் சேமிக்கப்படுவதில்லை. நீங்கள் சிவபாபாவிற்குக் கொடுக்க வேண்டுமானால், அதனை பிரம்மாவின் ஊடாகவே கொடுங்கள். பிரம்மாவின் ஊடாகவே நிலையங்களை ஆரம்பியுங்கள். அனுமதியின்றி எவரேனும் ஒருவர் தானாகவே ஒரு நிலையத்தை ஆரம்பித்தால், அது ஒரு நிலையம் ஆகாது. பாபாவும் தாதாவும் சேர்ந்திருக்கிறார்கள். இவரின் கைகளில் ஏதாவது ஒன்று கொடுக்கப்பட்டால், அது சிவபாபாவிடம் கொடுக்கப்பட்டுள்ளது என்றே அர்த்தம். பாபாவிற்கு தங்களின் செய்திகள் எதனையுமே கொடுக்காத பல நிலையங்கள் உள்ளன. நீங்கள் எழுத வேண்டும். சிவபாபா, இதுவே உங்கள் நிலையத்தின் கணக்குகள். கணக்குகளை அதிபதி பெற்றுக் கொள்ளுதல் வேண்டும். பலரும் சிவபாபாவிடம் சேமித்துக் கொள்வதில்லை. அதற்குத் தேவையான விவேகம் அவர்களிடம் இல்லை. அவர்களிடம் அதிகளவில் இந்த ஞானம் இருக்கின்ற போதிலும், இதற்கான சரியான வழிமுறை அவர்களுக்குத் தெரியாது. நிலையம் ஆரம்பித்து விட்டோம் என்ற சந்தோஷத்தில் அவர்கள் இருக்கிறார்கள். நீங்கள் வேறு எவருக்கேனும் கொடுத்து, அவர் ஒரு நிலையத்தை ஆரம்பித்திருந்தால், அந்த நிலையத்தை சிவபாபா ஆரம்பித்துள்ளார் என்றில்லை. அவ்வாறான நிலையம் செழிப்படையாது. நீங்கள் ஒரு நிலையத்தை ஆரம்பிக்க வேண்டும் என்றால், அது சிவபாபாவின் ஊடாகவே ஆரம்பிக்கப்பட வேண்டும். சிவபாபா, நான் இதனைக் கொடுக்கிறேன். ஒரு நிலையத்திற்காக அதனைப் பயன்படுத்துங்கள். குழந்தைகள் பல தவறுகளைச் செய்வதுடன் யோகத்திலும் பலவீனமாக இருக்கிறார்கள். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:

  1. இந்த ஞானத்தைக் கற்றுக் கொள்வதுடன், உங்கள் எதிர்காலத்தை உருவாக்கிக் கொள்வதற்கான ஒரு வழிமுறையையும் கற்றுக் கொள்ளுங்கள். ஒரே ஒரு தந்தையிடம் இருந்து உங்கள் ஆஸ்தியைப் பெற்றுக் கொள்ளுங்கள். எந்தச் சரீரதாரியினாலும் அபாக்கியசாலிகள் ஆகி விடாதீர்கள்.
  2. உங்களுக்கும் இன்னொருவருக்கும் இடையில் ஏதாவது ஒன்று இடம்பெற்று விட்டது என்பதால் சேவையை நிறுத்தி விடாதீர்கள். அதிகாலை வேளை எழுந்து உங்களுடன் நீங்களே பேசுங்கள். தந்தையை நினைவு செய்ய முயற்சி செய்யுங்கள்.
ஆசீர்வாதம்: உங்களுடைய மேன்மையான தாரணையினால் துறவறத்தைச் செய்வதன் மூலம் பாக்கியத்தை அனுபவம் செய்கின்ற ஓர் உண்மையான துறவி ஆகுவீர்களாக.
முழுத் தூய்மையே பிராமணர்களின் மேன்மையான தாரணையாகும். இந்தத் தாரணையை இட்டே நினைவுகூரப்பட்டுள்ளது: நீங்கள் மரணிக்க நேர்ந்தாலும், உங்கள் சத்தியத்தை ஒருபோதும் மீறாதீர்கள். எந்தவொரு சூழ்நிலையிலும், நீங்கள் எதையாவது துறக்க நேர்ந்தாலும், சகிக்க நேர்ந்தாலும் அல்லது எதிர்ப்பை சந்திக்க நேர்ந்தாலும் இந்தத் தாரணையைப் பேணுவதற்காக, தைரியத்தை கொண்டிருக்க வேண்டியிருந்தாலும் அதனை சந்தோஷமாகச் செய்யுங்கள். துறவறத்தை துறவறமாகக் கருதாதீர்கள், ஆனால் அதனை உங்கள் பாக்கியமாக அனுபவம் செய்யுங்கள். அப்பொழுது நீங்கள் ஓர் உண்மையான துறவி என அழைக்கப்படுவீர்கள். அத்தகைய தாரணையைக் கொண்டிருப்பவர்களே உண்மையான பிரமாணர்கள் என அழைக்கப்படுகிறார்கள்.
சுலோகம்: தமது சக்திகள் அனைத்தையும் ஒழுங்குமுறையில் வைத்திருப்பவர்களே மாஸ்டர் சர்வசக்திவான் ஆவார்கள்.
 
---ஓம் சாந்தி---

அவ்யக்த சமிக்ஞை: தந்தை பிரம்மாவைப் போல், சம்பூரணமான, முழுமையான ஸ்திதியை அனுபவம் செய்யுங்கள்.

சக்கார் வடிவத்தின், இறுதியான கர்மாதீத் ஸ்திதியில் ஆசீர்வாதங்களை அருள்கின்ற பாகம் இருந்ததை மாத்திரமே நீங்கள் பார்த்தீர்கள். சமநிலையைக் கொண்டிருப்பதும், ஆசீர்வாதங்களைக் கொடுப்பதும் அதன் சிறப்பாக இருந்தது. அவ்வாறாகவே தந்தையைப் (பிரம்மாபாபா) பின்பற்றுங்கள். இதுவே இலகுவான, சக்திமிக்க சேவையாகும். இப்பொழுது, ஆசீர்வாதங்களைக் கொடுப்பதே விசேட ஆத்மாக்களின் பாகமாக உள்ளது. அதனை நீங்கள் உங்கள் கண்களாலோ அல்லது நெற்றியின் இரத்தினத்தாலோ கொடுக்க முடியும். சேவையை செய்கின்ற போது, எப்பொழுதும் எந்தவொரு கர்மாவின் பந்தனத்திலிருந்தும் அப்பால் இருங்கள். பற்றற்று இருங்கள். ஒருபோதும் உங்கள் கர்மாவின் ஆதிக்கத்திற்கு உட்படாதீர்கள். உங்கள் பௌதீகப் புலன்களினால் ஒவ்வொரு செயலைச் செய்யும் பொழுதும், உரிமையின் போதையைக் கொண்டிருங்கள்: இதுவே சம்பூர்ண ஸ்திதியாகும்.

முரளி என்றால் என்ன?

முரளி என்பது பிரம்மா குமாரிகளின் தினசரி ஆன்மீக போதனை; இது ஒவ்வொரு காலையும் மதுபனில் இருந்து வெளியிடப்படுகிறது. இங்கே நீங்கள் இன்றைய முரளியைத் தமிழில் படிக்கலாம், ஆடியோ கேட்கலாம், PDF பதிவிறக்கலாம். படிப்புக்கு உதவியாக உரையை ஹைலைட் செய்யலாம் — உங்கள் குறிகள் இந்த உலாவியிலேயே பாதுகாப்பாக இருக்கும்.

Also searched astoday tamil murli · todays murli in tamil · today murli in tamil · bk tamil murli · tamil pdf murli · daily murli in tamil · daily murli tamil · baba murli tamil today · tamil murli today · brahma kumaris tamil murli · indraya murali

28 மொழிகளில் முரளி

Daily Murli · Madhuban மூலம்: மதுபன் முரளி பிரிவு இது ஒரு தனிப்பட்ட வாசிப்புச் செயலி, அதிகாரப்பூர்வ இணையதளம் அல்ல.