| 27-11-2026 |
காலைமுரளி
ஓம்சாந்தி
பாப்தாதா
|
மதுபன் |
| சாராம்சம்: | இனிய குழந்தைகளே, பாரதமே அனைவருக்குமான யாத்திரை ஸ்தலமாகும். ஆகையாலே இந்த யாத்திரை ஸ்தலமான பாரதத்தின் புகழைப் பற்றி அனைத்துச் சமயத்தவர்களிடமும் கூறுங்கள். அனைவருக்கும் செய்தியைக் கொடுங்கள். |
| கேள்வி: | எந்த முயற்சியைச் செய்வதனால், உங்களின் இறுதி எண்ணங்கள் உங்கள் இலக்கிற்கு உங்களை இட்டுச் சென்று, உங்களை உறக்கத்தை வெற்றிகொள்பவர்கள் ஆக்குகின்றன? |
| பதில்: | இரவில் உறங்கச் செல்வதற்கு முன்னர், எல்லாவற்றிற்கும் முதலில், தந்தையையும் ஆஸ்தியையும் நினைவுசெய்து, தொடர்ந்தும் சுயதரிசனச் சக்கரத்தைச் சுழற்றுங்கள். உறக்கம் வருகின்ற உணர்வு ஏற்படும் பொழுது, நீங்கள் உறங்கச் சென்றால், உங்களின் இறுதி எண்ணங்கள் உங்கள் இலக்கிற்கு உங்களை இட்டுச் செல்லும். அதிகாலை வேளையில் விழித்தெழும் பொழுது, நீங்கள் அந்தக் கருத்துக்களை நினைவு செய்வீர்கள். நீங்கள் இதனைப் பயிற்சி செய்யும் பொழுது, உறக்கத்தை வென்றவர்கள் ஆகுவீர்கள். எதனையேனும் செய்பவர் அதற்கான வெகுமதியைப் பெறுவார். இதனைச் செய்பவர்களின் செயற்பாடுகள் மிகவும் பிரபல்யம் அடையும். |
| பாடல்: | அன்பிற்கினியவருடன் இருப்பவர்கள் மீதே இந்த ஞானமழை பொழிகிறது. |
ஓம் சாந்தி. அன்பிற்கினியவருடன் இருப்பவர்கள். உலகில் பல தந்தையர் உள்ளனர், ஆனால் படைப்பவர் மாத்திரமே அவர்கள் அனைவருக்கும் தந்தையாவார். அவர் மாத்திரமே ஞானக் கடல் ஆவார். ஞானத்தினால் மாத்திரமே சற்கதி பெறப்படுகிறது. சத்தியயுகம் ஸ்தாபிக்கப்படும் பொழுதே, மனிதர்கள் சற்கதியைப் பெறுகிறார்கள். பாபா மாத்திரமே சற்கதியை அருள்பவர் என்று அழைக்கப்படுகிறார். சங்கம யுகத்தில் மாத்திரமே ஞானக்கடல் வந்து, உங்களைச் சற்கதிக்குள் அழைத்துச் செல்கிறார். இந்நேரத்தில் அனைவரும் சீரழிவில் உள்ளனர்; அனைவரும் ஒரேமாதிரியான சீரழிந்த நிலையைக் கொண்டிருப்பதில்லை. பாரதமே அனைத்திலும் அதிபுராதன தேசம். பாரதத்தைச் சேர்ந்தவர்களையிட்டே 84 பிறவிகள் நினைவுகூரப்பட்டுள்ளன. நிச்சயமாக முதன்முதலில் வருகின்ற மனிதர்களே, 84 பிறவிகளை எடுப்பதற்கான தகுதியைப் பெறுவார்கள். தேவர்கள் 84 பிறவிகளை எடுக்கிறார்கள், பிராமணர்களும் 84 பிறவிகளை எடுக்கிறார்கள். முக்கியமானவர்கள் மாத்திரமே குறிப்பிடப்பட்டிருக்கிறார்கள். பிரம்மா மூலம் உலகைப் புதிதாக ஆக்குவதற்கு, தந்தை முதலில் சூட்சும உலகை உருவாக்குகிறார். பின்னர் புதிய உலகின் ஸ்தாபனை இடம்பெறுகிறது. ஒரேயொரு தந்தையே திரிலோகநாதரும் (மூவுலகிற்கும் பிரபு) ஆவார். அவரின் குழந்தைகளாலும் தங்களை மூவுலகிற்கும் பிரபுக்கள் என அழைத்துக் கொள்ள முடியும். இங்கே பலரும் தங்களைத் திரிலோகநாதர் என அழைத்துக் கொள்கின்றனர். கௌரி-சங்கர், ராதா-சியாம் எனத் தேவர்களின் இரட்டைப் பெயர்களையும் அவர்கள் தங்களுக்கு வைத்துக் கொள்கின்றனர். எவ்வாறாயினும், இராதையும் கிருஷ்ணரும் இரு வேறு இராச்சியங்களைச் சேர்ந்தவர்கள். நல்ல குழந்தைகளின் புத்திகளால் மிக நல்ல கருத்துக்களைக் கிரகிக்க முடியும். திறமையான வைத்தியர்கள் பல மருந்துகளின் பெயர்களைத் தங்கள் புத்தியில் வைத்திருப்பார்கள். இங்கும் ஒவ்வொரு நாளும் புதிய கருத்துக்கள் வெளிப்படுகின்றன. இதனை நன்றாகப் பயிற்சி செய்பவர்கள் ஒவ்வொரு நாளும் புதிய கருத்துக்களைக் கிரகிப்பார்கள். எதனையுமே கிரகிக்காதவர்களை மகாராத்திகள் என்று அழைக்க முடியாது. அனைத்தும் உங்களின் புத்தியிலேயே தங்கியுள்ளது. அத்துடன், அது பாக்கியத்தைப் பற்றிய கேள்வியுமாகும். அதுவும் நாடகமே. எவருக்குமே நாடகத்தைத் தெரியாது. நீங்கள் சரீரங்களை ஏற்று, உங்கள் பாகங்களை நடிக்கிறீர்கள் என்பதை ஆத்மாக்களான நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். எவ்வாறாயினும் நாடகத்தின் ஆரம்பம், மத்தி, இறுதியைப் பற்றி எவருக்குமே தெரியாது, அதாவது, அவர்களுக்கு எதுவுமே தெரியாது. அதனை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும். அனைவருக்கும் தந்தையின் அறிமுகத்தைக் கொடுக்க வேண்டியது குழந்தைகளான உங்களின் கடமையாகும். தாங்கள் இதனை அறிந்து கொள்ளவில்லை என அவர்களில் எவருமே கூறாதிருக்கும் வகையில், நீங்கள் முழு உலகிற்குமே இதனைக் கூறவேண்டும். வெளிநாட்டில் இருந்தும் பலர் வருவார்கள். அவர்கள் அனைவருக்கும் பம்பாயில் ஒழுங்குகள் செய்து கொடுக்கப்படும். அம்மக்கள் சக்திவாய்ந்தவர்கள்; அவர்களிடம் பெருமளவு பணமும் உள்ளது. அவர்கள் சிவனைத் தங்களின் சிரேஷ்ட குரு எனக் கருதுவார்கள். அதனாலேயே சமய ஸ்தாபகர்கள் ஒவ்வொருவருக்குமே ஏதோவொரு பாகம் உள்ளது என விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் குழந்தைகளுக்குக் காட்சிகள் கிடைத்தன. ஏபிரகாம், கிறிஸ்து போன்றவர்களும் உங்களைச் சந்திக்க வருவார்கள். ஆகவே அவர்களுக்கான ஒரு தளம் உருவாக்கப்பட வேண்டும். உல்லாசப் பயணிகள் அனைவரும் தொடர்ந்தும் பம்பாயிற்கு வருகிறார்கள். பாரதம் அனைவரையும் பெருமளவு கவருகிறது. உண்மையிலே பாரதமே தந்தையின் பிறப்பிடமாகும். எவ்வாறாயினும், கடவுள் அனைவரிலும் இருக்கிறார் எனக் கூறுவதால், அவர்கள் எல்லையற்ற தந்தையின் முக்கியத்துவம் இழக்கப்படுமாறு செய்து விட்டார்கள். பாரதமே அனைத்திலும் அதிமகத்தான யாத்திரை ஸ்தலம் என்பதை நீங்கள் இப்பொழுது விளங்கப்படுத்துகிறீர்கள். சமய ஸ்தாபகர்கள் அனைவரும் தங்களின் சொந்தச் சமயங்களை ஸ்தாபிக்க வருகிறார்கள். அதன்பின்னர், ஒவ்வொரு சமயத்தை சேர்ந்தவர்கள் அனைவரும் அவர்களைத் தொடர்ந்தும் கீழே இறங்குகிறார்கள். இப்பொழுது இது இறுதி நேரம், அனைவருமே வீடு திரும்ப முயற்சி செய்கிறார்கள். எவ்வாறாயினும், அவர்களை இங்கே கீழே அழைத்து வந்தவர் யார்? என நீங்கள் அவர்களிடம் வினவலாம். கிறிஸ்தவ மதத்தைக் கிறிஸ்து ஸ்தாபித்தார், எனவே அவரா உங்களைக் கீழே அழைத்து வந்தார்? அனைவருமே இப்பொழுது விரக்தியுற்று இருப்பதால், வீடு திரும்ப விரும்புகிறார்கள். ஒவ்வொருவருமே தனது சொந்தப் பாகத்தை நடிக்க வருகிறார். அவர்கள் தங்களின் பாகங்களை நடித்ததும், இறுதியில் துன்பத்துக்குள் செல்ல வேண்டும். அதன்பின்னர் உங்களைத் துன்பத்தில் இருந்து விடுதலை செய்து, சந்தோஷத்திற்கு அழைத்துச் செல்வது தந்தையின் பணியாகும். பாரதமே தந்தையின் பிறப்பிடம். குழந்தைகளாகிய உங்களுக்கு மாத்திரமே இதன் முக்கியத்துவம் தெரியும். இதனை அறிந்தவர்கள் போதை அடைந்துள்ளனர்: ஒவ்வொரு கல்பத்திலும் பாபா பாரதத்திற்கு வருகிறார். இதனை அனைவருக்கும் கூறி, அவர்களையும் வரவழையுங்கள். படைப்பின் ஞானத்தைப் பற்றி எவருக்கும் தெரியாது. ஆகவே, சேவையாளர்களாகி, உங்கள் பெயரைப் புகழடையச் செய்யுங்கள். இந்தக் கண்காட்சி சகல இடங்களிலும் இடம்பெறும். திறமைசாலிக் குழந்தைகளின் உதவியை அவர்கள் தொடர்ந்தும் நாடுகின்றார்கள். அவர்களின் பெயர்களை அவர்கள் தொடர்ந்தும் கூறுகின்றார்கள். அவர்கள் சிவபாபாவின் பெயரையும், அத்துடன் பிரம்மபாபாவின் பெயரையும், மூன்றாவதாக, குழந்தைகளான குமார்க்கா, கங்கா, மனோகர் போன்றோரின் பெயர்களையும் கூறுகின்றார்கள். பக்தி மார்க்கத்தில், அவர்கள் மாலையின் மணிகளை உருட்டுகிறார்கள். இங்கே, அவர்கள் தங்களின் உதடுகளினால் இந்தப்பெயர்களை உச்சரிக்கிறார்கள்: இன்னார் சிறந்த சேவையாளரும், ஆணவம் அற்றவரும் ஆவார். அவர் மிகவும் இனிமையானவரும், சரீர உணர்வு எதுவும் அற்றவரும் ஆவார். கூறப்பட்டுள்ளது: நீங்கள் அன்பைக் கொடுக்கும் பொழுது, அன்பைப் பெறுகிறீர்கள். தந்தை கூறுகிறார்: நீங்கள் இப்பொழுது சந்தோஷம் அற்றவர்களாகி விட்டீர்கள். நீங்கள் என்னை நினைவுசெய்தால், நான் உங்களுக்கு உதவி செய்வேன். உங்களுக்கு வெறுப்பு ஏதேனும் இருக்குமாயின், நீங்கள் உங்கள் மீதே வெறுப்பு கொண்டிருக்கிறீர்கள் என்பதும், நீங்கள் ஓர் அந்தஸ்தைப் பெற மாட்டீர்கள் என்பதுமே அர்த்தம். நீங்கள் அதிகளவு செல்வத்தைப் பெறுகிறீர்கள். ஒருவர் ஓர் அதிர்ஷ்ட இலாபச்சீட்டை வெல்லும்பொழுது, மிகவும் சந்தோஷம் அடைகிறார். அந்த அதிர்ஷ்ட இலாபச்சீட்டில் பல பரிசுகள் உள்ளன. அதில் இரண்டாம், மூன்றாம் பரிசுகளும் உள்ளன. இதுவும் இறை ஓட்டப்பந்தயம் ஆகும். இது இந்த ஞான, யோக ஓட்டப் பந்தயமும் ஆகும். இதில் விரைவாக ஒடுபவர்கள் கழுத்து மாலையாகி, சிம்மாசனத்திற்கு அண்மித்து இருப்பார்கள். நீங்கள் அனைவரும் கர்மயோகிகள். நீங்கள் உங்கள் வீடுகளையும் கவனித்துக் கொள்ள வேண்டும். நீங்கள் ஒரு மணித்தியாலம் வகுப்பில் கற்று, அதன்பின்னர் வீட்டிற்குச் சென்று, மீட்டல் செய்யுங்கள். அவர்கள் பாடசாலைகளிலும் அவ்வாறே செய்கிறார்கள். அவர்கள் பாடசாலையில் கற்று, பின்னர் வீட்டில் அதனை மீட்டல் செய்கிறார்கள். தந்தை கூறுகிறார்: ஒரு மணித்தியாலமோ, அரை மணித்தியாலமோ கற்க வேண்டும். பகலில் எட்டு மணித்தியாலங்கள் உள்ளன, அந்த நேரத்தில் தந்தை கூறுகிறார்: ஒரு மணித்தியாலமோ, அரை மணித்தியாலமோ கற்க வேண்டும் அல்லது வகுப்பில் 15 அல்லது 20 நிமிடங்களேனும் அமர்ந்திருந்து, அதனைக் கிரகித்து, அதன்பின்னர் உங்கள் தொழிலில் ஈடுபடுங்கள். முன்னர் உங்களை அமரச் செய்து, பாபா கூறினார்: பாபாவின் நினைவில் அமர்ந்து, சுயதரிசனச் சக்கரத்தைச் சுழற்றுங்கள். உங்களுக்கு நினைவு செய்வதற்கான ஞானம் உள்ளது. தந்தையையும், ஆஸ்தியையும் நினைவுசெய்து, சுயதரிசனச் சக்கரத்தைச் சுழற்றும் பொழுது, உறக்கம் வருவது போல் தோன்றினால், உறங்கச் செல்லுங்கள். அப்பொழுது உங்களின் இறுதி எண்ணங்கள் உங்களின் இலக்கிற்கு உங்களை இட்டுச் செல்லும். பின்னர் அதிகாலையில் நீங்கள் விழித்தெழும் பொழுது, அந்த அதே கருத்துக்களையே நினைவு செய்வீர்கள். இதனைப் பயிற்சி செய்வதன் மூலம், நீங்கள் உறக்கத்தை வெற்றி கொண்டவர்கள் ஆகுவீர்கள். எதனையாவது செய்பவர்கள், அதன் வெகுமதியைப் பெறுவார்கள். எதனையாவது செய்பவர்களில் இது தெளிவாகத் தெரியும், அவர்களது செயற்பாடுகள் பிரபல்யம் அடைகின்றன. இன்ன இன்னார் இந்த ஞானத்தை நன்றாகக் கடைந்து, அதனைக் கிரகிக்கிறார் என்பதைக் கண்டு கொள்ளலாம். அவரிடம் பேராசை போன்ற எதுவுமே இருக்காது. இவை பழைய சரீரங்கள், உங்களுடையவை பற்றி நீங்கள் அதிகம் கவலைப்படக் கூடாது. நீங்கள் இந்த ஞானத்தையும், யோகத்தையும் முற்றாகக் கிரகிக்கும்பொழுது, அது நன்றாக நிலைத்திருக்கும். நீங்கள் எதனையும் கிரகிக்காது விட்டால், சரீரம் மேலும் தொடர்ந்தும் சீரழிந்து விடும்; அது படிப்படியாகச் சீரழிந்த பின்னர், இடுகாட்டில் முற்றாகப் புதைக்கப்பட்டதாக ஆகும். எதிர்காலத்தில் நீங்கள் ஒரு புதிய சரீரத்தைப் பெறவுள்ளீர்கள். ஆத்மாக்களும் தூய்மையாக்கப்பட வேண்டும். இந்தப் பழைய சரீரங்கள் அழுக்கடைந்த ஆடைகளைப் போன்றவை. நீங்கள் எவ்வளவுதான் பவுடர் போன்றவற்றைப் பூசினாலும், அவை ஒரு சதமேனும் பெறுமதி இற்றவை. நீங்கள் அனைவருமே இப்பொழுது சிவபாபாவுடன் நிச்சயதார்த்தம் செய்யப்பட்டுள்ளீர்கள். ஒரு பெண் தன் திருமண நாளில், முதலில் பழைய ஆடைகளையே அணிகிறாள். நீங்கள் இனிமேலும் பௌதீக அலங்காரங்களைக் கொண்டு உங்கள் சரீரத்தை அலங்கரிக்கக் கூடாது. நீங்கள் யோகத்தினாலும், இந்த ஞானத்தினாலும் உங்களை அலங்கரித்தால், தேவதைகள் ஆகுவீர்கள். இது ஞான ஏரியாகும். தொடர்ந்தும் இந்த ஞானத்தில் மூழ்கினால், நீங்கள் சுவர்க்கத் தேவதைகள் ஆகுவீர்கள். பிரஜைகள் தேவதைகள் என அழைக்கப்படுவதில்லை. ஸ்ரீகிருஷ்ணர் பெண்களைக் கடத்திச் சென்று, அவர்களைச் சக்கரவர்த்தினிகளும் அரசிகளும் ஆக்கினார் என அவர்கள் கூறுகிறார்கள். அவர் அவர்களைக் கடத்திச் சென்று, பிரஜைகளின் சுடலையாண்டி ஆக்கினார் எனக் கூறப்பட மாட்டாது. அவர்களை அரசிகள் ஆக்குவதற்கே கடத்திச் சென்றார். நீங்களும் அத்தகைய முயற்சியையே செய்ய வேண்டும். உங்களுக்குக் கிடைப்பதைக் கொண்டு நீங்கள் சந்தோஷமாக இருந்து விடக்கூடாது. இது ஒரு பாடசாலை. இங்கு கற்பதே பிரதான விடயம். பலர் கீதைப் பாடசாலைகளை நடத்துகிறார்கள். அவர்கள் அமர்ந்திருந்து, கீதையை வாசித்து, அதனை மற்றவர்களும் இதயபூர்வமாகக் கற்குமாறு செய்கிறார்கள். சிலர் ஒரு வாசகத்தை எடுத்து, அதன் விரிவாக்கத்தைக் கொடுப்பார்கள். சிலர் அதனை வெறுமனே வாசிக்கிறார்கள், ஏனையோர் ஒரு வாசகத்தை எடுத்து, பின்னர் அரை மணித்தியாலத்திற்கோ அல்லது 45 நிமிடத்திற்கோ அதில் சொற்பொழிவு ஆற்றுவார்கள்; அதில் எந்த நன்மையும் இருப்பதில்லை. இங்கே தந்தையே அமர்ந்திருந்து உங்களுக்குக் கற்பிக்கிறார். உங்களின் இலக்கும், குறிக்கோளும் தெளிவாக உள்ளன. சமயநூல்களைக் கற்பதில், இலக்கோ, குறிக்கோளோ இருப்பதில்லை. தொடர்ந்தும் முயற்சி செய்யுங்கள். எவ்வாறாயினும், நீங்கள் எதனைப் பெற்றுக் கொள்வீர்கள்? நீங்கள் பெருமளவு பக்தி செய்யும் பொழுது, உங்களால் கடவுளைக் காண முடியும். இரவுக்குப் பின்னர் பகல் நிச்சயமாக வருகின்றது. மக்கள் கல்பத்திற்குப் பல்வேறு கால எல்லைகளைக் காட்டுகிறார்கள். அவர்களுக்கு விளங்கப்படுத்துவதற்கு உங்களுக்குச் சக்தி தேவை. யோக சக்தியின் மூலமே நீங்கள் அனைத்தையுமே செய்ய வேண்டும். உங்களால் இதனைச் செய்ய இயலாவிட்டால், உங்களிடம் அதற்கான சக்தி இல்லை என்பதும், உங்களிடம் யோகம் இல்லை என்பதுமே அதன் அர்த்தம். யோகத்தில் ஆழ்ந்திருக்கும் குழந்தைகளுக்கு பாபா உதவி செய்கிறார். நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டுள்ளதே மீண்டும் தொடர்ந்தும் நடைபெறுகின்றது. நடந்தவை அனைத்தும் தொடர்ந்தும் விநாடிக்கு விநாடி நடைபெறும். நாங்கள் ஸ்ரீமத்திற்கு ஏற்ப செயற்படுகிறோம். நீங்கள் ஸ்ரீமத்தைப் பின்பற்றாவிட்டால், உங்களால் மேன்மையானவர்களாக முடியாது. அது வரிசைக்கிரமமாகவே உள்ளது. தாங்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என அம்மக்கள் எண்ணுகிறார்கள், ஆனால் அதன் அர்த்தம் அவர்களுக்குத் தெரியாது. அவர்கள் யாராக வர விரும்புகிறார்கள்? அவர்கள் அனைவரும் ஒரு தந்தையாக வேண்டுமா அல்லது அனைவருமே சகோதரர்களாக வேண்டுமா? சகோதரர்களாக இருக்கவே விரும்புகிறோம் என அவர்கள் கூறினால், அது நல்லது. ஸ்ரீமத்தைப் பின்பற்றுவதனால், நாங்கள் உண்மையில் ஒன்றாக முடியும். நீங்கள் அனைவரும் ஒரேயொருவருடைய வழிகாட்டல்களைப் பின்பற்றுகிறீர்கள். ஒரேயொருவரே உங்கள் தந்தையும், ஆசிரியரும், குருவும் ஆவார். ஸ்ரீமத்தை முழுமையாகப் பின்பற்றாதவர்களால், மேன்மையானவர்களாக முடியாது. நீங்கள் ஸ்ரீமத்தைப் பின்பற்றாது விட்டால், முடிவடைந்து விடுவீர்கள். தகுதியும், திறமையும் உடையவர்களையே ஓட்டப் பந்தயத்திற்குத் தேர்ந்து எடுக்கின்றார்கள். சிறந்த குதிரைகளையே முக்கியமான ஓர் ஓட்டப்பந்தயத்திற்காக அவர்கள் பயன்படுத்துகிறார்கள். ஏனெனில் குதிரைப் பந்தயத்தில் கட்டும் பணத்தில், அதிகளவு அதிர்ஷ்ட இலாபம் உள்ளது. இதுவும் மனிதக் குதிரை ஓட்டப்பந்தயமே ஆகும். அவர்கள் ஹுசைனின் குதிரையைக் காட்டுகிறார்கள். இரு வகையான வன்முறைகள் உள்ளன. அரைக்கல்பமாக உங்களையும், ஏனையோரையும் கொன்று கொண்டிருக்கின்ற காமவாளே முதல் இலக்க வன்முறையாகும். இந்த வன்முறையைப் பற்றி எவருக்குமே தெரியாது. சந்நியாசிகள் கூட இதனைப் பற்றிப் புரிந்து கொள்வதில்லை; அவர்கள் அது ஒரு விகாரம் எனச் சாதாரணமாகக் கூறுகிறார்கள். தந்தை கூறுகிறார்: குழந்தைகளே, காமமே கொடிய எதிரி. ஆரம்பம் முதல் மத்தியின் ஊடாக, இறுதிவரை அது உங்களுக்குத் துன்பத்தையே விளைவிக்கிறது. எங்களுடையது இல்லறப்பாதை, அது இராஜயோகம் என்பதை நீங்கள் நிரூபிக்க வேண்டும். அவர்களுடையது ஹத்தயோகம். அவர்கள் ஹத்தயோகத்தைச் சங்கராச்சாரியாரிடம் இருந்து கற்கிறார்கள். நாங்கள் சிவாச்சாரியாரிடம் இருந்து இராஜயோகத்தைக் கற்கிறோம். நீங்கள் மேலும் முன்னேறிச் செல்லும்பொழுது, நிச்சயமாக வெளிப்படுத்தப்படுவீர்கள். சிலர் வினவுகிறார்கள்: தேவர்கள் 5000 வருடங்களில், 84 பிறவிகளை எடுக்கிறார்களாயின், கிறிஸ்தவர்கள் எத்தனை பிறவிகளை எடுக்கின்றார்கள்? இற்றைக்கு 2000 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர், கிறிஸ்து இருந்திருந்தால், அது சராசரியாக எத்தனை பிறவிகள் எனக் கணக்கிட்டுப் பாருங்கள். 30 இலிருந்து 32 பிறவிகளாக இருக்கும் என்பது தெளிவாகுகின்றது. பெருமளவு சந்தோஷத்தை அனுபவம் செய்பவர்களே பெருமளவு துன்பத்தையும் அனுபவம் செய்கிறார்கள். ஏனைய சமயத்தவர்கள் குறைவான சந்தோஷத்தையும், குறைவான துன்பத்தையும் அனுபவம் செய்கிறார்கள். சராசரியான ஒரு கணக்கீடு எடுக்க வேண்டும். பிரதான சமய ஸ்தாபகர்களைப் பற்றி நீங்கள் பேசலாம். பின்னர் வருபவர்கள் குறைந்த எண்ணிக்கையான பிறவிகளையே எடுக்கிறார்கள். புத்தருக்கும், ஏபிரகாமிற்கும் கூட இதனை நீங்கள் கணக்கிடலாம். ஒருவேளை, ஓரிரு பிறவிகளின் வித்தியாசம் இருக்கக்கூடும். உங்களால் மிகச்சரியாகக் கூற முடியாது, ஆனால் அண்ணளவாக நீங்கள் விளங்கப்படுத்தலாம். இவ்விடயங்கள் யாவும் கடையப்பட வேண்டும். உங்களிடம் எவராவது கேட்டால், நீங்கள் எதனை விளங்கப்படுத்துவீர்கள்? அவர்களிடம் கூறுங்கள்: அனைத்துக்கும் முதலில் தந்தையை நினைவு செய்யுங்கள், ஏனெனில் நீங்கள் அவரிடமிருந்து உங்கள் ஆஸ்தியைப் பெற வேண்டும். நீங்கள் முன்னர் எத்தனை பிறவிகள் எடுத்தீர்களோ, அத்தனை பிறவிகளையே எடுப்பீர்கள். தந்தையிடம் இருந்து உங்கள் ஆஸ்தியைப் பெற்றுக் கொள்ளுங்கள். மிகவும் நன்றாக விளங்கப்படுத்துங்கள். அதற்கு முயற்சி தேவைப்படுகிறது. பம்பாயிலுள்ள குழந்தைகள் பெருமளவு முயற்சி செய்கிறார்கள், எனெனில் அவர்கள் சிறந்த வெற்றியாளர்களாக வேண்டும். உங்களுக்கு இதற்கு மிகவும் திறமையான புத்தி தேவைப்படுகின்றது. பாபாவின் செல்வத்தில் பெருமளவு அன்பு இருக்க வேண்டும். சிலர் எந்தச் செல்வத்தையுமே பெற்றுக் கொள்வதில்லை. இந்த ஞான இரத்தினங்களைப் பெற்று, அவற்றைக் கிரகியுங்கள். இருந்தும் சிலர் கூறுகிறார்கள்: நான் என்ன செய்வது? எனக்கு எதுவுமே புரியவில்லை. உங்களுக்குப் புரியாவிட்டால், அது உங்கள் விதியாகும்! அச்சா.
இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
- உங்கள் சரீரத்தை நன்றாக வைத்துக் கொள்வதற்கு, இந்த ஞானத்தையும் யோகத்தையும் கிரகியுங்கள். எதற்கும் பேராசைப்படாதீர்கள். இந்த ஞானத்தாலும், யோகத்தாலும் உங்களை அலங்கரியுங்கள், ஆனால் பௌதீக அலங்காரங்கள் எதனாலும் அலங்கரிக்காதீர்கள்.
- ஒரு மணித்தியாலத்திற்கோ அல்லது அரை மணித்தியாலத்திற்கோ நிச்சயமாகக் கற்றிடுங்கள். இந்த ஞானத்திலும், யோகத்திலும் விரைந்தோடுங்கள்.
| ஆசீர்வாதம்: |
உங்களின் முன்னால் சங்கமயுகத்தின் மேன்மையான படத்தை வைத்திருப்பதன் மூலம் திரிகாலதரிசியாகி, எதிர்காலத்தின் காட்சியைப் பார்ப்பீர்களாக. எதிர்காலத்தின் பேறுகள் அனைத்தையும் அனுபவம் செய்வதற்கு முன்னர், சங்கமயுக பிராமணர்களான நீங்கள், அவற்றை இப்போது அனுபவம் செய்ய வேண்டும். இந்த வேளையில், நீங்கள் இரட்டைக்கிரீடம், சிம்மாசனம், திலகத்தைப் பெற்று, சகல உரிமைகள் கொண்டிருப்பதன் சொரூபங்கள் ஆகுகிறீர்கள். எதிர்காலத்தில் உங்களிடம் ஒரு தங்கக்கரண்டி இருக்கும். ஆனால் இந்த வேளையில், நீங்கள் வைரங்கள் போன்று ஆகுகின்றீர்கள். உங்களின் வாழ்க்கைகளும் வைரங்கள் போன்று ஆகுகின்றன. அங்கே, நீங்கள் வைரங்கள் பதித்த தங்க ஊஞ்சல்களில் ஆடுவீர்கள். ஆனால் இங்கே, நீங்கள் பாப்தாதாவின் மடி என்ற ஊஞ்சலில், அதீந்திரிய சுகம் என்ற ஊஞ்சலில் ஆடுகிறீர்கள். அதனால் திரிகாலதரிரி ஆகி, நிகழ்காலத்தினதும் எதிர்காலத்தினதும் மேன்மையான படத்தைப் பார்ப்பதன் மூலம் சகல பேறுகளையும் அனுபவம் செய்யுங்கள். |
| சுலோகம்: | கர்மத்தினதும் யோகத்தினதும் சமநிலை, இறை ஆசீர்வாதங்களுக்கான உரிமையை நீங்கள் பெறச் செய்கின்றது. |
அவ்யக்த சமிக்ஞை: தந்தை பிரம்மாவைப் போல், சம்பூரணமான, முழுமையான ஸ்திதியை அனுபவம் செய்யுங்கள்.
ஒவ்வொரு பிராமணரும் தந்தை பிரம்மாவைப் போன்று வாழும் சொரூபமாக வேண்டும். வெளிச்ச வீட்டின்-சக்தி வீட்டின் அலங்கார ஊர்தி (நடமாடும் காட்சிப்பொருள்) ஆகுங்கள். எண்ணங்கள் மற்றும் மௌனசக்தியைப் பற்றிய உரை ஒன்றை ஆயத்தம் செய்து, உங்கள் கர்மாதீத் ஸ்திதியில் ஆசீர்வாதங்களை அருள்கின்ற சொரூபம் என்ற பாகத்தை நடியுங்கள். அப்பொழுது நீங்கள் சம்பூர்ணத்தை நெருங்குவீர்கள். அதன் பின்னர், ஒரு விநாடிக்கும் குறைவான நேரத்தில், எங்கு ஒரு பணி இடம்பெற வேண்டுமோ, உங்கள் கம்பியற்ற (வயர்லஸ்) இணைப்பினூடாக உங்களால் அங்கே வழிகாட்டலைக் கொடுக்க முடியும். உங்கள் கர்மாதீத் ஸ்திதியின் அடிப்படையில் நீங்கள் ஒரு எண்ணத்தைக் கொண்டிருக்கின்ற போது, ஒரு விநாடியில் அது எங்கு சென்றடைய வேண்டுமோ அங்கு சென்றடையும்.