தமிழ் முரளி · Brahma Kumaris

இன்றைய முரளி · 26 நவம்பர், 2026

ஓம் சாந்தி · BapDada · 26 நவம்பர், 2026

இன்றைய முரளி — today Tamil murli, daily murli in Tamil.

18
முரளி26 நவம்பர், 2026 · தமிழ் (இலங்கை)
0:00--:--

உரையைத் தேர்ந்தெடுக்கவும் → ஹைலைட் / பெட்டி / அடிக்கோடு

26-11-2026
காலைமுரளி
ஓம்சாந்தி
பாப்தாதா
மதுபன்

சாராம்சம்: இனிய குழந்தைகளே, இனிமையான தந்தையையும், இனிமையான இராச்சியத்தையும் நினைவு செய்யுங்கள், நீங்கள் மிக, மிக இனிமையானவர்கள் ஆகுவீர்கள்.
கேள்வி: எம்முயற்சியைச் செய்வதனால், குழந்தைகளாகிய நீங்கள் மனிதர்களில் இருந்து தேவர்கள் ஆகுகின்றீர்கள்?
பதில்: நீங்கள் இப்பொழுது இந்த ஞான ஏரியில் மூழ்கி, இந்த ஞான தேவதைகள் ஆகுகின்றீர்கள். இந்த ஞானத்தில் நீராடுவதன் மூலம், உங்கள் குணாதிசயங்கள் மாறுகின்றன் உங்களிடமுள்ள குறைபாடுகள் அனைத்தும் அகற்றப்படுகின்றன. தந்தையையும், விஷ்ணு தாமத்தையும் நினைவு செய்வதனால், நீங்கள் தூய தேவர்கள் ஆகுகின்றீர்கள். தேவர்களின் கவர்ச்சியே அவர்களது தூய்மையாகும். இதனாலேயே அவர்களது ஆலயங்களுக்குச் செல்வதற்கு மக்கள் வெகுதொலைவில் இருந்தே ஈர்க்கப்படுகின்றார்கள்.
பாடல்: எங்கள் யாத்திரை தனித்துவமானது!

ஓம் சாந்தி. இனிமையிலும், இனிமையான, ஆன்மீகக் குழந்தைகளாகிய நீங்கள் பாடலைக் கேட்டீர்கள். குழந்தைகளாகிய நீங்களே அதிர்ஷ்ட நட்சத்திரங்களாக நினைவு செய்யப்படுகின்றீர்கள். ஞான சூரியனும், ஞானச் சந்திரனும், ஞானத்தின் அதிர்ஷ்ட நட்சத்திரங்களாகிய நீங்களும் இருக்கின்றீர்கள். பௌதீகமான சூரியனும், சந்திரனும் மேடைக்கு ஒளியைக் கொடுக்கின்றன, இதனாலேயே நீங்கள் புகழப்பட்டுள்ளீர்கள். நீங்களே இந்த ஞான நட்சத்திரங்கள் ஆவீர்கள். அந்த நட்சத்திரங்களை ஞான நட்சத்திரங்கள் என அழைக்க முடியாது. “ஞான சூரியன்” என்ற பெயரைக் கேட்பதால், அவரது ரூபம் சூரியனைப் போன்றது என அவர்கள் நினைக்கின்றார்கள். அவர்கள் கடவுள் கற்களிலும், கூழாங்கற்களிலும் இருக்கின்றார் எனவும் நம்புகின்றார்கள். பலர் சூரியனில் நம்பிக்கை வைத்திருக்கின்றார்கள். அவர்கள் தங்களைச் சூரிய வம்சத்தவர் என அழைக்கின்றனர். அவர்கள் சூரியனை வழிபடுவதுடன், சூரியனின் அடையாளத்துடன் ஒரு கொடியையும் வைத்திருக்கின்றனர். உங்கள் கொடி திரிமூர்த்தியினுடையது. அது மிகவும் அற்புதமானது! “சத்தியம் வெற்றியைக் கொண்டு வருகின்றது” என அதில் எழுதப்பட்டுள்ளது. அவர் உண்மையில் உங்களை உலகம் முழுவதையும் வெற்றி கொள்ள வைக்கின்றார். நீங்கள் சிவசக்தி பாண்டவ சேனையாவீர்கள். அவர்கள் திரிமூர்த்தி வீதி, திரிமூர்த்தி இல்லம் என வீதிகளுக்கும், கட்டடங்களுக்கும் பெயரிட்டுள்ளார்கள். தந்தை இதன் அர்த்தத்தையும், திரிமூர்த்தியின் மூலம் அவர் என்ன செயல்களைச் செய்யத் தூண்டுகின்றார் எனவும் விளங்கப்படுத்துகின்றார். அவர் பிரம்மாவின் மூலம் ஸ்தாபனையை மேற்கொள்கின்றார். அவர்கள் திரிமூர்த்தியின் படத்திலிருந்து “சிவன்” எனும் பெயரை அகற்றி, அதனைப் பொய்யாக்கி விட்டார்கள். திரிமூர்த்தியின் படத்திலுள்ள இரகசியங்களை நீங்கள் இப்பொழுது அறிவீர்கள். சத்தியமானவரான சிவபாபா, பிரம்மாவின் மூலம் உங்களுக்கு இராச்சியத்தைக் கொடுக்கின்றார். முன்னைய கல்பத்தில் பெற்றதைப் போன்று, குழந்தைகளாகிய நாங்கள் மிகச்சரியாக, மீண்டும் ஒருமுறை சிவபாபாவிடம் இருந்து தூய்மை, அமைதி, சந்தோஷம், செழிப்பு நிறைந்த எங்கள் இராச்சியத்தைப் பெறுகின்றோம். எப்பொழுதும் பிரம்மச்சாரிய காலத்திலேயே கல்வி பெறப்படுகின்றது. இந்நாட்களில், சிலர் தங்கள் திருமணத்தின் பின்னரும், தங்கள் வருமானத்தை அதிகரித்துக் கொள்வதற்குப் பாடநெறிகளைக் கற்கின்றனர். இங்கோ உங்கள் வருமானம் எல்லையற்றது. சிவபாபா உங்களை உலக அதிபதிகள் ஆக்குவதற்கு வந்துள்ளார் என்பதைக் குழந்தைகளான நீங்கள் அறிவீர்கள். ஸ்ரீமத்தே அதிமேன்மையானது எனக் கூறப்பட்டுள்ளது. ஒருவர் பாபாவின் குழந்தை ஆகும்பொழுது, அவர் தனது சகோதரர்களின் கட்டளைகளை அன்றி, பாபாவின் வழிகாட்டல்களையே நிச்சயமாகப் பின்பற்றுவார். நீங்கள் பல பிறவிகளாக அந்தக் கட்டளைகளைப் பின்பற்றினீர்கள், ஆனால் அதைச் செய்வதில் எந்த நன்மையும் இருக்கவில்லை. நீங்கள் இப்பொழுது பாபாவின் வழிகாட்டல்களைப் பின்பற்ற வேண்டும். சாதுக்கள், புனிதர்கள் அனைவரும் சகோதரர்களே. தந்தை மேன்மையான வழிகாட்டல்களை உங்களுக்குக் கொடுப்பதற்காக இப்பொழுது வந்துள்ளார். மக்களில் பலர் இயற்கை மருத்துவமே செய்கின்றார்கள். அவை அனைத்தும் தற்காலிகமானது. இந்த இயற்கை வைத்தியம் 21 பிறவிகளுக்கு உரியது. அம்மக்கள் உங்களைக் குளிர்ந்த நீரில் குளிக்குமாறோ, அல்லது இதைச் செய்யுங்கள், அதைச் செய்யுங்கள் என்றோ அல்லது உங்கள் உணவிலும், பானத்திலும் முன்னெச்சரிக்கை எடுக்குமாறோ கூறுகின்றனர். இங்கே, உணவு, பானத்திற்கான கேள்வியே இல்லை. இங்கே இனிய தந்தை குழந்தைகளான உங்களுக்குக் கூறுகின்றார்: இப்பொழுது என்னை நினைவு செய்யுங்கள், நீங்கள் மிக இனிமையானவர்கள் ஆகுவீர்கள். தேவர்கள் இனிமையானவர்கள்; அவர்களிடம் அதிகளவு கவர்ச்சி உள்ளது. முன்னர், சிவாலயங்கள் உயரமான மலைகளிலேயே கட்டப்பட்டன. மக்கள் அவர்களின் ஒரு கணத் தரிசனத்தைப் பெறுவதற்காக, கால்நடையாகவே செல்வார்கள், ஏனெனில் அவர்களின் தூய்மை அவர்களை ஈர்க்கும். தேவர்கள் தூய்மையாக இருந்த பொழுது, உலகை ஆட்சிசெய்தார்கள். இப்பொழுது மக்கள் அவர்களுடைய விக்கிரகங்களுக்கு முன்னால் சென்று, விழுந்து வணங்குகின்றார்கள். அனைவரும் இப்பொழுது அந்த இனிய தந்தையை நினைவு செய்கின்றனர். அவர் இங்கே வரவேண்டியுள்ளது. அவர்கள் நிச்சயமாக அவர் மூலம் சுவர்க்கத்தில் பெருமளவு சந்தோஷத்தைப் பெறுகின்றார்கள். இதனாலேயே அவர்கள் அவரை நினைவு செய்கின்றார்கள். இராவண இராச்சியத்தின் முடிவின் பொழுதே தந்தை வந்து, சுவர்க்க இராச்சியத்தைக் கொடுக்கின்றார். பாபா பாரதத்தில் மாத்திரமே வருகின்றார். மக்கள் பாரதத்தில் சிவனின் பிறந்ததினத்தைக் கொண்டாடுகின்றனர். ஆனால் அதனைச் செய்வதனால், தாங்கள் எதனைப் பெறுகின்றார்கள் என்பதை அவர்கள் அறியார்கள். தந்தை கூறுகின்றார்: நான் குழந்தைகளாகிய உங்களை இனிமையானவர்கள் ஆக்குவதற்கு வந்துள்ளேன். நீங்கள் மிகவும் அசுத்தமானவர்களாகி விட்டீர்கள்! பாபா ஞானம் நிறைந்தவர், நீங்கள் இப்பொழுது இந்த ஞானம் அனைத்தையும் பெறுகின்றீர்கள். விதையானவரே ஞானம் அனைத்தையும் கொண்டிருப்பார். அவரே விதையானவரும், சத்தியமானவரும், உயிருள்ளவரும், ஞானக்கடலும் ஆவார். அவர் சத்தியத்தையே பேசுகின்றார். அவரும் ஆத்மாவே, ஆனால் அவரே பரம் ஆவார். “பரமாத்மா” என்றால் கடவுள் என்பதாகும். அவர் எப்பொழுதும் பரந்தாமத்திலேயே வசிப்பவரும், அதிமேலானவரும் ஆவார். அவர் பெயர், ரூபத்திற்கு அப்பாற்பட்டவர் என மக்கள் கூறுகின்றனர். ஆனால் பெயர், ரூபம் இல்லாமல் எதுவுமே இருக்க முடியாது. அவரது பெயர் சிவன், அனைவரும் அவரை வழிபடுகின்றனர். அவர் அசரீரியானவர், அவர் இப்பொழுது வந்துள்ளார். முன்னர் நாங்கள் சரீர உணர்வு உள்ளவர்களாக இருந்தோம், ஆனால் தந்தை இப்பொழுது கூறுகின்றார்: குழந்தைகளே, ஆத்ம உணர்வு உடையவர்கள் ஆவீர்களாக! கீதையிலும் எழுதப்பட்டுள்ளது: மன்மனாபவ! அதில் அவர்கள் சிவனின் பெயருக்குப் பதிலாக, ஸ்ரீகிருஷ்ணரின் பெயரை இட்டதால், அதனைப் பொய்யாக்கி விட்டார்கள். புத்தகங்களை வாசிப்பதனால், ஒருவர் இராச்சியத்தைப் பெற முடியாது. சத்திய யுகத்திலேயே இராச்சியம் இருக்கின்றது. தந்தை நிச்சயமாகச் சங்கம யுகத்திலேயே வரவேண்டும். இப்பொழுது நாடகத்திற்கேற்ப, பக்தி முடிவிற்கு வருகின்றது. பக்தியின் பின்னர் இந்த ஞானம் உள்ளது. இது பழைய உலகம், சத்தியயுகமோ புதிய உலகம். சத்திய யுகத்திலே சூரிய வம்சத்தினர் ஆட்சிசெய்தார்கள். நீங்கள் சாதாரண ஆணிலிருந்து நாராயணனாகவும், சாதாரணப் பெண்ணில் இருந்து இலக்ஷ்மியாகவும் மாறுகின்ற இராஜயோகம் இதுவாகும். சத்திய யுகத்தில் அது அவர்களுடைய இராச்சியமாக இருந்தது, ஆனால் இப்பொழுது கலியுகத்தில் என்ன உள்ளது எனப் பாருங்கள்! நீங்கள் இப்பொழுது சத்திய யுகத்துக்குச் செல்வதற்காக, மீண்டும் ஒருமுறை கற்கின்றீர்கள். பக்தி மார்க்கத்து வேதங்கள், சமயநூல்கள் அனைத்தும் துறக்கப்பட வேண்டும். நீங்கள் இந்த ஞானத்தைப் பெற்ற பின்னர் பக்திக்கான தேவையில்லை. இந்த ஞானத்தின் மூலம் நாங்கள் உலக அதிபதிகள் ஆகுகின்றோம். பக்தியின் பலனை எங்களுக்குத் தருவதற்காகத் தந்தை வந்து விட்டார். அவர் எங்களுக்காகவே இந்த ஞானத்தைப் பேசுகின்றார். நாங்கள் நிச்சயமாகத் தூய்மை அற்றவர்களில் இருந்து தூய்மையானவர்களாக வேண்டும், ஏனெனில் தூய்மை அற்றவர்களால் வீடு திரும்ப முடியாது. தூய்மையான ஆத்மாக்கள் அனைவரும் முக்திதாமத்தில் வசிக்கின்றார்கள். சந்தோஷ தாமத்திலும் ஆத்மாக்கள் அனைவரும் தூய்மையானவர்கள். இப்பொழுது கலியுகத்தில் அனைவரும் தூய்மை அற்றவர்கள். யார் அவர்களைத் தூய்மை ஆக்குவார்? ஒரேயொரு தந்தை மாத்திரமே தூய்மையாக்குபவர். தந்தை கூறுகின்றார்: நான் இவரது பல பிறவிகளின் கடைசிப் பிறவியில் வருகின்றேன். இந்த தாதாவே மகத்தான முதல் இலக்கப் பக்தர் ஆவார். நீங்கள் அவரைப் பிரம்மா என்றோ அல்லது இலக்ஷ்மி, நாராயணனின் ஆத்மா என்றோ அழைக்கலாம். இது புரிந்து கொள்ளப்பட வேண்டிய, ஆழமான விடயம். பிரம்மா, விஷ்ணுவின் தொப்புள் கொடியிலிருந்து வெளிப்பட்டார், விஷ்ணு பிரம்மாவின் தொப்புள் கொடியிலிருந்து வெளிப்பட்டார். விஷ்ணு 84 பிறவிகளின் பின்னர் பிரம்மா ஆகுகின்றார். இவ்விடயங்கள் எந்தச் சமயநூல்களிலும் குறிப்பிடப்படவில்லை. தந்தையும் கீதையைப் படிக்கும் வழக்கம் உடையவர். இவர் இந்த ஞானத்தைப் பெற்று, விஷ்ணுவின் காட்சியையும், பாபா தனக்கு உலக இராச்சியத்தைத் தருவதையும் கண்டவுடன், உடனடியாகவே கீதையை வாசிப்பதை நிறுத்தி விட்டார். பாபா இவரினுள் பிரவேசித்து விட்டார். பின்னர் இவர் என்றுமே கீதையை மீண்டும் தொடவே இல்லை. இவர் ஒரேயொரு தந்தையையே நினைவுசெய்ய ஆரம்பித்தார். இவர் கூறுகின்றார்: நான் அந்தத் தந்தை கூறுவதைச் செவிமடுக்கத் தொடங்கினேன். சிவபாபா கூறுகின்றார்: நான் குழந்தைகளுடன் பேசும்பொழுது, இவரும் செவிமடுப்பார். நான் இவரது சரீரத்தில் பிரவேசித்தேன், இதனாலேயே இவர் அர்ச்சுனர் எனப் பெயரிடப்பட்டார். சமயநூல்களிலே, அவர்கள் ஒரு குதிரை இரதத்தைக் காட்டியுள்ளார்கள். அதிகளவு வேறுபாடுள்ளது! அவர் ஒரு குதிரை இரதத்தில் அமர்ந்திருந்து, ஒருவருக்கு மாத்திரம் இந்த ஞானத்தைக் கொடுத்தாரா? எவ்வாறு அது சாத்தியமில்லை என்பதை நீங்கள் இப்பொழுது புரிந்து கொள்கின்றீர்கள். எவ்வாறு பாபா உங்களுக்கு நடைமுறைரீதியில் கற்பிக்கின்றார் என்பதை நீங்கள் காண்கின்றீர்கள். பல்வேறு நிலையங்கள் உள்ளன. எனவே உங்களுக்குக் கற்பிப்பதற்கு ஒரு யுத்தகளம் அன்றி, ஒரு பாடசாலையே தேவைப்படுகின்றது. பாபா உங்களுக்கு இராஜயோகம் கற்பிக்கின்றார். சத்திய யுகத்தில் சமயநூல்கள் இருக்க மாட்டாது. நான் இந்நேரத்திலேயே உங்களுக்கு இந்த ஞானத்தைக் கூறியுள்ளேன்; சத்திய யுகத்தில் இதற்கான தேவை இருக்க மாட்டாது. பழைய உலகில் இருக்கின்ற அனைத்தும் தூசாக மாறும். இதுவே குதிரை அர்ப்பணிக்கப்படுகின்ற, ஞான யாகமாகும். இந்த இரதமே (சரீரம்) குதிரை என்று அழைக்கப்படுகின்றது. இதுவும் அர்ப்பணிக்கப்பட வேண்டும். ஆத்மா தந்தைக்கு உரியவர் ஆகுகின்றார், பின்னர் பழைய சரீரம் அழிக்கப்படும். நீங்கள் இந்த அசுத்தமான சரீரங்களைக் கிருஷ்ணரின் பூமிக்கு எடுத்துச் செல்ல மாட்டீர்கள். ஆத்மாக்கள் அமரத்துவமானவர்கள். ஹோலிகா எரிக்கப்படுகின்ற பொழுது, இனிப்பான சப்பாத்தி எரிக்கப்படுகின்றது, ஆனால் அதனுடன் கட்டப்பட்டுள்ள நூல் எரியாமல் இருக்கின்றது. பாபா எல்லையற்ற விடயங்களை உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். நீங்கள் இதுவரைக்கும் கேட்ட அனைத்தையும் மறந்து விடுங்கள். பாரதம் இப்பொழுது பொய்மையான பூமியாகி விட்டது. நேற்று அது சத்திய பூமியாக இருந்தது. தந்தை இதனைச் சத்தியபூமி ஆக்கினார், பின்னர் இராவணன் இதனைப் பொய்யான பூமியாக்கி உள்ளான். இந்த இராவணனே அனைவரதும் மிகவும் பழமையான எதிரியாவான். அவர்கள் யார் எதனைக் கூறினாலும், பின்பற்றுகின்றார்கள். உதாரணமாக, தில்வாலா ஆலயத்தில், அவர்கள் ஆதிதேவருக்கு மகாவீரர் எனப் பெயரிட்டுள்ளார்கள். அனுமானே மகாவீரர் ஆவார். அவர்களுக்கு இடையில் அதிகளவு வேறுபாடுள்ளது. உங்கள் மிகச்சரியான ஞாபகார்த்தம் அந்த ஆலயத்தில் உள்ளது. மேலே சுவர்க்கம் உள்ளது, அதற்குக் கீழே நீங்கள் தபஸ்யா செய்கின்றீர்கள். அவர்கள் ஆதிநாத்தின் தங்கத்திலான விக்கிரகத்தையும் உருவாக்கி உள்ளார்கள். பாரதம் “தங்கச் சிட்டுக்குருவியாக” இருந்தது என அவர்கள் கூறுகின்றனர். பாரதத்தில் இருந்ததைப் போன்று அந்தளவு தங்கம் வேறு எங்குமே இருக்கவில்லை. அங்கே தங்க மாளிகைகள் இருந்தன. கூரைகளும் சுவர்களும், வைரங்களாலும் இரத்தினங்களாலும் பதிக்கப்பட்டிருந்தன. ஆலயங்களிலும் அதிகளவு வைரங்களும், இரத்தினங்களும் இருந்தன. அவை பின்னர் கொள்ளை அடிக்கப்பட்டன. அவர்கள் அவற்றை மசூதிகளில் பதித்தார்;கள். அந்நேரத்தில் அவற்றின் பெறுமதி என்னவாக இருந்திருக்கும்? அதிகளவு செல்வம் அங்கே இருந்தது, அதனாலேயே அது கொள்ளை அடிக்கப்பட்டது. புராதன பாரதம் செல்வம் மிக்கதாக இருந்தது எனவும், அது இப்பொழுது ஏழ்மையாகி விட்டது எனவும் அனைவரும் அறிவார்கள். ஏழைகளின் மீதே ஒருவர் இரக்கம் கொள்கின்றார். இராவணன் உங்களை மிகவும் வளமற்றவர்கள் ஆக்கிவிட்டான். தந்தை இப்பொழுது உங்களை மீண்டும் ஒருமுறை வளமானவர்;கள் ஆக்குகின்றார். இது ஓர் எல்லையற்ற நாடகம், ஆனால் எவருமே இதன் ஆரம்பம், மத்தி, இறுதியை அறிய மாட்டார்கள். தந்தை ஞானம் நிறைந்தவர். அவர் அமர்ந்திருந்து, ஒவ்வொருவரின் உள்ளேயும் என்ன இருக்கின்றது என்று பார்க்கின்றார் என்றில்லை. இவை அனைத்தும் நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டுள்ளது. ஒருவர் என்ன பாவம் செய்தாலும், அவர் அதற்கான தண்டனையை நிச்சயமாகப் பெறுகின்றார். நான் ஞானம் நிறைந்தவர் என்றும், தூய்மையாக்குபவர் என்றும் அழைக்கப்படுகின்றேன். மக்கள் அழைக்கின்றார்கள்: ஓ பாபா, வாருங்கள்! வந்து எங்களுக்கு ஞானத்தைக் கொடுத்து, எங்களைத் தூய்மை ஆக்குங்கள். நான் வந்து இந்தப் பணியை மேற்கொள்கின்றேன். தந்தை கூறுகின்றார்: சமயநூல்களிலுள்ள விடயங்கள் அனைத்தையும் மறந்து, நான் உங்களுக்குக் கூறுகின்ற விடயங்களை மாத்திரம் செவிமடுங்கள். நீங்கள் இப்பொழுது தந்தையுடன் இராஜயோகம் கற்கின்றீர்கள். நீங்கள் சூரிய வம்சத்தினராகவும், பின்னர் சந்திர வம்சத்தினராகவும், பின்னர் வைசிய வம்சத்தினராகவும், அதன்பின்னர் சூத்திர வம்சத்தினராகவும் ஆகுவீர்கள். நீங்கள் இந்த ஞானத்தை உங்கள் புத்திகளில் கொண்டிருக்கின்றீர்கள். நீங்கள் சத்திய யுகத்தில் அனைத்தையும் மறந்து விடுவீர்கள். அங்கே எவரும் தந்தையை நினைவு செய்வதில்லை. அவர்கள் தங்;களுடைய ஆஸ்தியைப் பெற்ற பின்னர், அவரை ஏன் நினைவுசெய்ய வேண்டும்? அனைத்துமே உங்களுக்கு மிக நன்றாக விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. இவ்விடயங்கள் எந்தச் சமயநூல்களிலும் குறிப்பிடப்படவில்லை. ஒரேயொரு தந்தையே விருட்சத்தின் விதையானவர். அவர் கூறுகின்றார்: என்னை நினைவு செய்யுங்கள்! ஒருவர் மாத்திரம் படைப்பவரா அல்லது கூழாங்கற்களும் கற்களும் படைப்பவர்களாக இருக்குமா? தந்தை கூறுகின்றார்: இராவணன் உங்களது புத்திகளை அதிகளவு பாழாக்கி விட்டான். பெரிய கல்விமான்கள் அனைவருக்கும் அதிகளவு அகங்காரம் உள்ளது. அவர்கள் முற்றிலுமே தந்தையை அறியமாட்டார்கள். அவர்களுக்குப் படைப்பின் ஆரம்பம், மத்தி, இறுதி பற்றியும் தெரியாது. தந்தை கூறுகின்றார்: நான் உங்களுக்கு இராச்சியத்தைக் கொடுத்தேன், நீங்கள் அனைத்துச் செல்வத்தையும் பயன்படுத்தி விட்டு, இப்பொழுது இரக்கின்றீர்கள். இதனாலேயே அசுர சமுதாயம் நினைவுகூரப்பட்டுள்ளது. அவர்கள் தேவர்களின் புகழை அதிகளவு பாடுகின்றனர். பின்னர் அவர்கள் கூறுகின்றனர்: நாங்கள் தெய்வீகக் குணங்கள் அற்றவர்கள், எங்களிடம் எந்தத் தெய்வீகக் குணங்களும் இல்லை. குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது, தெய்வீகக் குணங்களைக் கிரகித்து, உங்கள் குறைபாடுகளை அகற்றுங்கள். இராவணன் உங்களைக் குரங்குகள் போலாக்கி விட்டான், தந்தை இப்பொழுது உங்களைத் தேவர்கள் ஆக்குகின்றார். தங்களுக்குள் ஐந்து விகாரங்களையும் கொண்டிருப்பவர்களே, குரங்குகள் எனக் கூறப்பட்டுள்ளனர். (நாரதரின் உதாரணம்). உங்களுடைய குணாதிசயங்கள் இப்பொழுது மாறுகின்றன, நீங்கள் பின்னர் தேவர்கள் ஆகுவீர்கள். இந்த ஞான ஏரியில் மூழ்குவதன் மூலம் நாங்கள் ஞான தேவதைகள் ஆகின்றோம். அவர்கள் பின்னர் இதை ஓர் ஏரியின் நீராகக் கருதி விட்டார்கள். இது ஞானத்தில் நீராடுகின்ற விடயமாகும். பாபா 5000 வருடங்களுக்கு முன்னர் செய்தது போன்று, மீண்டும் ஒருமுறை மிகச்சரியாக எங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். இதனைப் பற்றிய சந்தேகம் எதுவும் இருக்க முடியாது. தூய்மையாக்குபவராகிய தந்தையையும், பின்னர் விஷ்ணு தாமத்தையும் நினைவு செய்யுங்கள், நீங்கள் தூய்மை ஆகுவீர்கள். மக்கள் முக்தி அடைவதற்காக அதிகளவு பிரயத்தனம் செய்கின்றார்கள், ஆனால் எவருக்குமே வீட்டைப் பற்றித் தெரியாது. ஆத்மாக்கள் இரண்டறக் கலந்து விடுவதாகச் சிலரும்;, ஆத்மாக்கள் வேறு சரீரங்களை எடுப்பதில்லை எனச் சிலரும் எண்ணுகின்றார்கள். எண்ணற்ற அபிப்பிராயங்கள் உள்ளன. எவருமே தந்தையை அறியார். முழு உலகத்தினரும் கடவுள் ஸ்ரீகிருஷ்ணர் பேசியதாக நினைக்கின்றார்கள். இங்கே தந்தை கூறுகின்றார்: கடவுள் சிவனே பேசுகின்றார். இதில் பகலுக்கும், இரவுக்கும் இடையிலுள்ள வித்தியாசம் உள்ளது. அவர்கள் பெயரை முழுமையாக மாற்றி விட்டார்கள். அச்சா. பாபா, தாதா இருவரும் “இனிமையிலும், இனிமையான குழந்தைகளே” என்று கூறுகின்றனர், ஏனெனில் நீங்கள் அவர்கள் இருவரினதும் குழந்தைகள் ஆவீர்கள். இவரும் ஒரு மாணவர், நீங்களும் மாணவர்களே, இவரும் கற்கின்றார். பாரதத்தைத் தூய்மையாக்குகின்ற சேவையில் ஈடுபட்டிருப்பவர்களே, குழந்தைகள். தூய்மை ஆகாதவர்களை பாபா பார்த்தும், பார்க்காமல் இருக்கின்றார். அவர்கள் தண்டனையை அனுபவம் செய்த பின்னர் சமையல்காரர்களாக ஆகுவார்கள் (சத்திய யுகத்தில்) என அவர் உணர்கின்றார். தூய்மை ஆகுபவர்களே உலக அதிபதிகள் ஆகுவார்கள். அச்சா.

இனிமையிலும், இனிமையான, அன்புக்குரிய எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும், நினைவுகளும், காலை வந்தனங்களும். ஆன்மீகத்தந்தை, ஆன்மீகக்குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:

  1. இனிமையானவர்கள் ஆகுவதற்கு, இனிமையான தந்தையை மிகுந்த அன்புடன் நினைவு செய்யுங்கள். உண்மையான தந்தையிடம், உண்மையானவர்களாக இருங்கள். ஒரேயொரு தந்தையின் மேன்மையான வழிகாட்டல்களைப் பின்பற்றுங்கள்.
  2. முயற்சி செய்து சம்பூரணமானவர் ஆகுங்கள். பாரதத்தைத் தூய்மை ஆக்குகின்ற சேவையைச் செய்யுங்கள். எதனைப் பற்றியும் சந்தேகம் கொள்ளாதீர்கள்.
ஆசீர்வாதம்: நீங்கள் ஒரு ஞானி ஆத்மாவாக உங்களை ஞானக்கடலிலும் இந்த ஞானத்திலும் அமிழ்த்திக் கொள்வதன் மூலம், சகல பேறுகளின் சொரூபம் ஆகுவீர்களாக.
ஞானி ஆத்மாக்கள் சதா ஞானக்கடலிலும் இந்த ஞானத்திலும் அமிழ்ந்திருப்பார்கள். சகல பேறுகளின் சொரூபங்களாக அவர்கள் ஆகுவதனால் இயல்பாகவே எந்தவோர் ஆசையின் அறிவே அற்றவர்களாக இருக்கும் ஸ்திதியைக் கொண்டிருப்பார்கள். சிறிதளவேனும் தமது சுபாவம் அல்லது சம்ஸ்காரங்களில் தங்கி இருப்பவர்கள், பெயர், மதிப்பு, கௌரவத்தை எதிர்பார்ப்பார்கள். என்ன? மற்றும் ஏன்? என்ற கேள்விகளைக் கேட்பவர்களையும் உள்ளே ஒரு ரூபத்தையும் வெளியே வேறொன்றையும் வைத்திருப்பவர்களையும் ஞானி ஆத்மாக்கள் என்று அழைக்க முடியாது.
சுலோகம்: தமது வாழ்க்கைகளில் அதீந்திரிய சுகத்தையும் ஆனந்தத்தையும் அனுபவம் செய்பவர்கள் மட்டுமே இலகு யோகிகள் ஆவார்கள்.
 
---ஓம் சாந்தி---

அவ்யக்த சமிக்ஞை: தந்தை பிரம்மாவைப் போல், சம்பூரணமான, முழுமையான ஸ்திதியை அனுபவம் செய்யுங்கள்.

பிராமண வாழ்வின் இலக்கு கர்மாதீத் அடைவதாகும். இந்த இலக்கை அடைவதற்கு, குறிப்பாக உங்களுக்கு தயாராகுகின்ற சக்தியும் உள்ளடக்கும் சக்தியும் தேவை. பந்தனத்திலுள்ள ஆத்மாக்கள், அவர்கள் எங்குள்ளார்களோ, அங்கே மாத்திரமே அவர்களால் தமது பணியை மேற்கொள்ள முடியும். ஆனால் கர்மாதீத் ஆத்மாக்களால், தமது சேவைக்கான பாகத்தை எங்கிருந்தாலும் நடிக்க முடியும், ஏனெனில், அவர்கள் கர்மாதீத் அடைந்திருக்கிறார்கள். அவர்களின் வேகம் மிகவும் தீவிரமானது. அவர்களால் தாம் விரும்பிய இடத்திற்கு ஒரு விநாடியில் சென்றடைய முடியும்.

முரளி என்றால் என்ன?

முரளி என்பது பிரம்மா குமாரிகளின் தினசரி ஆன்மீக போதனை; இது ஒவ்வொரு காலையும் மதுபனில் இருந்து வெளியிடப்படுகிறது. இங்கே நீங்கள் இன்றைய முரளியைத் தமிழில் படிக்கலாம், ஆடியோ கேட்கலாம், PDF பதிவிறக்கலாம். படிப்புக்கு உதவியாக உரையை ஹைலைட் செய்யலாம் — உங்கள் குறிகள் இந்த உலாவியிலேயே பாதுகாப்பாக இருக்கும்.

Also searched astoday tamil murli · todays murli in tamil · today murli in tamil · bk tamil murli · tamil pdf murli · daily murli in tamil · daily murli tamil · baba murli tamil today · tamil murli today · brahma kumaris tamil murli · indraya murali

28 மொழிகளில் முரளி

Daily Murli · Madhuban மூலம்: மதுபன் முரளி பிரிவு இது ஒரு தனிப்பட்ட வாசிப்புச் செயலி, அதிகாரப்பூர்வ இணையதளம் அல்ல.